குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கனடாவில் வாழ்வதால் தானும் உயர்ந்து தமிழையும் உயர்த்தமுடியும்.

  09.01.கிறித்துஆண்டு2012தமிழாண்டு2042-கனடாவில் அண்மைக்காலத்தில் ஏற்பட்ட மாற்றங்களிற்கெல்லாம் முதலும் முடிவுமாய் இருப்பது ராதிகா சிற்சபைஈசன் என்ற தமிழ்ப் பெண்மணி கனடாப் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நிகழ்வேயாகும் என்பது உங்களிற் சிலருக்கு ஆச்சரியமானதாக இருக்கலாம். ஆனால், இவரது பாராளுமன்ற பிரவேசமே கனடாவில் ஏற்பட்ட பல மாறுதல்களிற்கு குறிப்பாக கனடாவின் ஆளுங்கட்சியில் ஏற்பட்ட சிறீலங்காவிற்கு எதிரான “தெரிந்தெடுக்கப்பட்ட மாற்றங்கள்” மாற்றங்கள் ஏற்படக்கூட காரணமாய் இருந்தது.

குமரிநாடு.நெற் எப்பவுமே சிற்சபைஈசனின் செய்திகளுக்கு இதைக்கருதைக் கொண்டே முன்னுரிமை கொடுத்தவருகிறது. தமிழ்த்தெசியமென்று இக்கட்டுரையில் குறிப்பிடுவது புரியவில்லை. தமிழ்த்தேசியம் வேறு அரசியல் வேறு. இதில் முழுத்தமிழர்களும் தெளிவுநிலை காணவேண்டும் என்பதும் குமரிநாட்டின் கொள்கையாகும்.

தமிழ்த்தேசியம் இலங்கைத்தமிழர்களுடன் மட்டுப்படுத்தப்பட்ட விடயமல்ல. இதுதான் தமிழ்நாட்டு அரசியலும் மலேசிய சிங்கப்பூர் மற்றும் தமிழர்கள் வெள்ளையர்காலத்தில் பரவியநாடுகளிலும் வாழும் தமிழ்த்தலைவர்கள் விட்டதவறாகும் தமதுசுற்றுவட்டத்திற்குள் தமிழ்த்தேசியத்தை நொக்குவதாகும். தமிழத்தேசியம் விடுதலைப் புலிகளை முன்னிறுத்தினால் அது எங்கும் தமிழினத்தை பின்தள்ளும் சூழ்நிலை தற்சமயம் இருப்பதை மறுத்தால் அது தவிர்ற்கமுடியாத தவறாகும். தமிழ்த்தேசியம் என்பது உலகம் முழுக்க வாழும் தமிழர்களின் வாழ்வியலாகும்.

தமிழத்தேசியம் உகில் ஏற்க்கப்பட வேண்டுமாயின்  எமது இனத்தின் தொன்மை ஆதாரங்களுடன் எடுத்தியம்பப்படவேண்டும். எமது மொழியின் தொன்மை சிறப்பு உலகமொழிகளின் வேர்ச்சொல்லாக அடிப்படையாக இருப்பதை விளங்கவைக்கவேண்டும்.  உலகம் அறிந்த ஏற்கின்ற இனமாகமொழியாக  நாம் வெளிப்படுத்தலின்றி இந்தியாவின் தேசியத்திற்குள் காலச்சாரரீதியாகவும்(சமயநெறி ரீதியாகவும்) வாழ்வியல் பண்பாட்டுரீதியாகவும் அடங்கும் இனம் என்ற தவறான மாயையை தமிழர்கள் அகற்றமுயலாத வரை தமிழ்த்தேசியம் உலகில் ஏற்றுக்கொள்ளப்படாது என்ற உண்மையை தமிழர்கள் விளங்கிக்கொள்ளவேண்டும்.

இதில் தமிழகதிராவிட அமைப்புக்களும் வெற்றிகொள்ளவில்லை அவர்கள் பிராமணிய எதிர்ப்பு தீண்டாமை எதிர்ப்பு பெண்ணிய விடுதலைபற்றிப் பரப்புரைகளில் ஈடுபட்டனரே தவிர தமிழ்த்தேசியம் என்பதை விரிவுபடுத்தவோ விளக்கவோ தவறிவந்தார்கள் அதனாலும் அவர்கள் கொள்கை இன்றும் கொள்கை அளவில் இருக்கின்றதே தவிர தமிழியநெறி தமிழர்பண்பாடு  முன்னுக்கு கொண்டுவரப்படாது.சமயப்பிரச்சனைகள் பின்தள்ளப்பட்டு இனம்மொழி என்பதானால் தமிழ்த்தேசியம் உருவாகி உலகில் இந்தியாவைவிட வேறுபட்ட நேர்எதிர்மறையான கலாச்சார வாழ்வியல் பண்பாட்டில் வேறுபட்ட இனம் இந்தியாவில் கட்டுண்ட இருக்கிறது. என்பதை திராவிடஅமைப்புகள் தமிழர்களிடமும் பெரியளவில் தெளிவுபடுத்தப்படவில்லை . அவர்கள் முயற்ச்சி எல்லாம் அரசியல் வெற்றிகளுக்காக மாற்றம் பெற்றுவிட்டன.

எனவே சிற்சபேசன் காந்திபோல் வெள்ளை இனத்தில் நிற்கின்றார் கறுப்பினத்தற்காகவும் சமூகத்தில் பாதிக்கப்படுக்ன்றவர்களுக்காகவும் உழைப்பவராக அடையாழப்படுத்தப்பட்டு இருக்கிறார். இதனால் அவரை தனிய தமிழ் அரசியல்வாதியாகவும் நாம் உலகிற்கு காட்டாது. அவரின் மென்மைத்தன்மை எல்லோரையும் கவரும் புன்நகை உலகிற்குதேவையான மனிதநேயம் மிக்கவராகக்காட்டி உலகளவில் அவரை உயர்த்த வேண்டும். அவரும் தமிழ் இனம் கனடா அவர்சார்ந்த கட்சி என்று இல்லாது( அது அவருள் இருக்கவேண்டும்) தமிழுக்காக சாதிக்கவேண்டும் என்றால் வேறுவிடையங்கள் பொதுத்தன்மைவிவகாரங்கள் முன்னிலைப் படுத்தப்படவேண்டும். இதனால் அவரின் எதிர்காலம் இறங்குநிலைக்கு பௌதிகக்காரணங்களால் மாறாது மாறாக ஏற்றம் காணும். திருவள்ளுவர் வெள்ளையர்களால் கண்டுபிடிக்கப்பட்ட தமிழர் திருவள்ளுவர் தமிழர்களால் விளங்கப்படாத மனிதர் என்பதும் ஏற்றுக் கொள்ளப்படக்கூடியவிடயம். வெள்ளையர் மத்தியில் திருவள்ளுவர் அறிமுகமாகியிருந்தால் வாழ்ந்திருந்தால் அவரின் உயர்வும் தமிழினத்தின் உயர்வும்  தமிழ்மொழியின் உயர்வும் வேறானதாவிருந்திருக்கும். ஏனெனின் திருவள்ளுவர் மனிதநேயம் பற்றியே அதிகம் சிந்தித்திருக்கிறார். இது உலகத்தற்குரியது. இதைவிளங்காது பெண்ணிய ஆணாதிக்கச் சிற்றறிவுக்குள் திருவள்ளுவரை ஆராய்பவர்களை வெள்ளையர்கள் நையாண்டிச்சிரிப்புடன் பார்ப்பதையே அறிய அறிவில்லா தவர்கள் பெண்ணிய இலக்கிய வாதிகள்..  மனிதநேயம் வளர்ந்தால் சமத்துவமானது பால்  இனம் மொழி உணர்வுகடந்து வந்துவிடும் இதுதான் கடவுள்த்தன்மை என்ற உயர்நிலை. இது எல்லாவற்றையும் கட்டுப்படுத்தும் நல்வழிப்படுத்த முனையும்.

 இனித்தொடர்து சிற்சபேசன் பற்றிய கட்டரையை வாசியுங்கள்...

இந்த உண்மையைப் முற்றிலுமாகப் புரிந்துகொள்ள சற்றே சில மாதங்கள் கால இயந்திரத்தை பின்னோக்கி திருப்பிப் பார்ப்பது இன்றியமையாததாகிறது.

அப்படி கடந்த சில மாதங்களிற்கு முன்னான சம்பவங்கள் ஆராயப்பட்டால் மாத்திரமே ராதிகா சிற்சபைஈசனின் பாராளுமன்றத் தெரிவு எவ்வளவு தூரம் கனடாவைப் புரட்டிப் போட்டிருக்கிறது என்ற உண்மையை உங்களால் உளமார ஏற்றுக் கொள்ள முடியும்.

கடந்த 2011ம் ஆண்டு மே மாதம் கனடாவில் பாராளுமன்றத் தேர்தல் இடம்பெற்ற போது எந்தக் கட்சியுமே பெரும்பாண்மைப் பலத்தைப் பெறாது என்பதையே கனடியத் தேசிய பத்திரிகைகள் எதிர்வு கூறின. அப்படியாயின் எந்த ஒரு கட்சியும் வெற்றிபெற்று பெரும்பாண்மை ஆட்சியமைக்க பல்லின சமூகத்தின் ஆதரவைப் பெற்றாலே சாத்தியம் என்றிருந்த நிலையில்,

கன்சவேட்டிவ் கட்சி தன்னை விளம்பரப்படுத்தக் கையிலெடுத்த ஆயுதம் “கப்பல் சம்பந்தமான விளம்பரம்”. அந்தக் கட்சியின் சார்பின் வெளியிடப்பட்ட விளம்பரத்தில் தமிழர்கள் கனடாவிற்கு வருகை தந்த கப்பல் விளம்பரப்படுத்தப்பட்டு இந்த மாதிரியான சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுக்க எங்களிற்கு வாக்களியுங்கள் என்று அது விளம்பரம் செய்தது. மிகவும் விமர்ச்சிக்கப்பட்ட செயல் இது.

லிபரல் கட்சி மற்றும் புதிய ஜனநாயகக் கட்சி என்பன உள்ளிட்ட பல மனித நேய அமைப்புக்களும் இந்த விளம்பரம் நேரடியாகத் தமிழர்களைத் தாக்குகிறது என்று அறிக்கைகளை விடுத்துக் கண்டித்தன. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33752

ஆட்சியில் பெரும்பாண்மைப் பலம் பெற சிற்றின வாக்குகள் தேவை என்ற நிலையிலும் கூட துணிந்து அந்தக் கட்சி சிறுபாண்மையினரை (குறிப்பாகத் தமிழரை) புறந்தள்ளி வெளியிட்ட விளம்பரங்களை தமிழ்த் தேசியத்திற்காக அர்ப்பணிப்போடு உழைக்கும் கனடியத் தமிழ்த் தேசிய மக்களவை கண்டித்து அதனை நீக்கும்படி கனடியப் பிரதமருக்கு பகிரங்க வேண்டுகோளை விடுத்தது. http://www.tamilnet.com/art.html?catid=13&artid=33737

ஆனால் எந்தவொரு வேண்டுகோளிற்கும் அந்தக் கட்சி எள்ளவிற்குக் கூட மசியவில்லை. பதிலடியாக தாங்கள் இந்த விளம்பரத்தை தொடர்ந்தும் பிரசுரிப்போம் என்று அந்தக் கட்சியின் பேச்சாளர் பகிரங்கமாகவே தமிழ்த் தேசியம் சார்ந்தவர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பதிலிறுத்தார். இதனை சகல தமிழ் ஊடகங்களும் தங்களால் இயன்றளவு பகிரங்கப்படுத்தியிருந்தன.

அதற்கும் மேலாக தமிழர்கள் வந்த கப்பலைக் காட்டியே வெற்றி பெற்ற கன்சவேட்டிவ் கட்சி, அதே கப்பலிற்கு சென்று அதில் பிரதமரும், குடிவரவு அமைச்சரும் புகைப்படம் எடுத்து வெளியிட்டு அகதிகள் குழுக்களாக வருவதை எதிர்க்கும் சட்டமூலத்தை நிறைவேற்றுவோம் என்று நிலைப்பாட்டை அந்தக் கட்சி திட்டவட்டமாக அறித்தது.

இவ்வாறெல்லாம் அறிவித்த அதே கட்சி, அந்த வாக்குறுதிகளின் பேரில் வெற்றி பெற்றதன் பின்னர், அதாவது தங்களிற்கு சிறுபாண்மையினரின் வாக்குப்பலம் தேவையில்லை என்பதை துணிந்து நிரூபித்த பின்னர், அறுதிப் பெரும்பாண்மை அரசை அமைத்த பின்னர் தன்னை ஒரு மாறுதலிற்கு உட்படுத்தியது.

ஆமாம், ஆச்சரியம் ஒன்று சந்தஞ்சந்தடியில்லாமல் நடந்தேறியது.... அந்தக் கட்சி சிறீலங்கா தொடர்பான நிலைப்பாட்டில் மனிதவுரிமை விவகாரத்தில் அக்கறையை வெளிப்படுத்தியது.
யாருக்குமே புரியாத சூத்திரம் இது.

முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் போது அணி அணியாக குளிரையும் பொருட்படுத்தாமல் சிறார் முதல் பெரியார் வரை ஈழத்தமிழினமே கனடாத் தலைநகர் சென்று மண்டியிட்டு, யாசகம் செய்து அழுது நின்ற போதும் அசையாமல் நின்ற ஒரு கட்சி. அந்தத் தேர்தலின் போது ஈழத்தமிழர்களின் கப்பலைப் பிரச்சாரத்திற்கு எடுத்த கட்சி, தாங்கள் அறுதிப் பெரும்பாண்மையோடு வெற்றி பெற்ற பிறகு, ஈழத்தமிழர்களை நோக்கி திரும்பியிருக்கிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்பட்ட மாதிரி “சிறீலங்கா மனிதவுரிமைகளை மதிக்க வேண்டும்” “மாற்றம் பெற வேண்டும்” என்று சிறீலங்காவைத் திருத்துகிற நோக்கிலான பயணிப்பில் அந்தக் கட்சி தன்மை இணைத்துக் கொண்டது என்பது ஆச்சரியம் மாத்திரமல்ல... இந்த நூற்றாண்டின் எட்டாவது அதிசயமும் கூட.

ஆனால் உண்மை யாதெனில் ராதிகா சிற்சபைஈசனின் வெற்றியே இந்த வகையான மாற்றத்திற்கு காரணம் என்கிறது ஆய்வாளர்கள் தரப்பு. ராதிகாவின் இந்த வெற்றியை உண்மையிலேயே அவரது கட்சியுட்பட யாருமே எதிர்பார்க்கவில்லை. குறிப்பாக கனடாவின் பெரிய கட்சிகளான கன்சவேட்டிவ் கட்சியும், லிபரல் கட்சியும் இந்த வெற்றியை சற்றிலும் கூட எதிர்ப்பார்க்கவில்லை. ஆனால் ராதிகாவின் வெற்றி கன்சவேட்டிவ் கட்சிக்கு பெரியதொரு பாதிப்பாக அமைந்தது.

ராதிகா வெற்றி பெற்ற தொகுதியை அண்மித்த அனைத்துத் தொகுதிகளிலும் கன்சட்டிவ் கட்சி பாராளுமன்றத் தேர்தலில் எதிர் வேட்பாளரிற்கு ஒரு கனமான போட்டியைக் கொடுத்திருந்தது. ஒரு சில தொகுதிகளில் வாக்கு வித்தியாசங்கள் சில நூறு என்றே இருந்தன. இந்நிலையில் ராதிகா சிற்சபைஈசன் வெற்றி பெற்றதன் மூலம் புதிய தலையிடி ஒன்றை கன்சவேட்டிவ் கட்சி பெற்றது.

அதாவது ராதிகாவின் பதவிக்காலத்தில் அவர் சிறுபாண்மை இனங்களிற்கு, தமிழர்களிற்கு, ஆதராவாக மேற்கொள்ளும் நடவடிக்கைகள் ராதிகாவின் தொகுதியைச் சுற்றியுள்ள தொகுதிகள் அனைத்திலும் அவர் சார்ந்த புதிய ஜனநாயகக் கட்சிக்கான ஆதரவு அலையை உருவாக்கி விடும். அது நடக்கும் பட்சத்தில் சில நூறு வாக்குகளால் தோல்வி கண்ட தொகுதிகளில் கூட அது எதிர்வரும் தேர்தலில் தாங்கள் இன்னமும் பின் தள்ளப்பட்டு விடும் என்ற நிலையை ஆளும்; கட்சி பெற்றது.

தேர்தலின் போது தமிழர்களை ஏறெடுத்தும் பார்க்காத ஒரு கட்சி தேர்தலில் பெரும்பாண்மை பெற்ற பின்பு அவர்களிடம் கரிசனை கொள்கிறது என்றால் அதில் ஏதோ விடயம் கலந்திருக்கிறது என்பதில் யாருக்குமே மாற்றுக் கருத்து இருக்க முடியாது. ஆனால் ராதிகாவினதும் புதிய ஜனநாயகக் கட்சியினதும் வளர்ச்சியே ஆளும் கட்சியன் நிலைப்பாட்டை மேலும் ஆக்கபூர்வமானதாக்கும்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் இடம்பெற்ற மாகணத் தேர்தலின் போது கூட ராதிகா சிற்சபைஈசனின் தொகுதியிலும் அவரது தொகுதியைச் சுற்றியுள்ள தொகுதிகளிலும் மத்திய அரசின் மந்திரிகள் வந்து மாகாணக் கன்சவேட்டிவ் கட்சிக்கு ஆதரவாக தொடர் பிரச்சாரங்களை மேற்கொண்டது கன்சவேட்டிவினர் எந்தளவு ராதிகாவின் வெற்றியால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பதை எடுத்துக் காட்சியது.

ஆனால் ஒரு பெரிய மாற்றத்தை தனது தெரிவின் மூலம் ஏற்படுத்திய ராதிகா சிற்சபைஈசன் தனது கடமையை மாத்திரம் செய்வதில் கவனமாய் இருக்க, ஏதோ கன்சவேட்டிவ் கட்சி தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக மாறியுள்ளது. அவர்கள் தமிழ்த் தேசியத்திற்கு ஆதரவாக வருகிறார்கள் என்றெல்லாம் அனுமானிக்கிற செயற்பாட்டில் ஒரு சாரார் ஈடுபட்டிருக்கின்றனர்.

ஆனால் உண்மை யாதெனில், ராதிகா சிற்சபைஈசன் என்ற தமிழிச்சியின் ஆதரவு அலையும், அவர் சார்ந்த கட்சி சார்பான செயற்பாடுகளுமே இன்னமும் கன்சவேட்டிவ் கட்சியை தமிழர்கள் பக்கம் திருப்பும். இப்போதும் அவர்கள் சிறீலங்காவைத் திருத்த முனைகிறார்களே தவிர தமிழர்கள் நிகழ்வுகளில் தமிழர் விழாக்களில் முழு மனதோடு கலந்து கொள்கிற நிலை இன்னமும் ஏற்படவில்லை.

கன்சவேட்டிப் கட்சியானது தமிழர்களிற்கான “ஒன்றுபட்ட இலங்கைக்குள்” ஏற்படும் தீர்வுக்கு ஆதரவானதொரு கட்சி தான். ஆனால் அவர்களிற்கு தமிழ்த் தேசியம் என்றால் வேம்பங்காய்.... எப்போதுமே கசக்கும். அதேபோல தமிழ்த் தேசியத்திற்கும் கன்சவெட்டிவ் என்றால் புரியாத புதிர். கற்பனை வளம் சார்ந்தவர்கள் எப்பொழுதுமே கனவில் திளைத்தபடியே இருப்பார்கள். ஆனால் யதார்த்தம் இவர்கள் இருவரையும் மறுதலிக்கும்.

எனவே ராதிகா சிற்சபைஈசன் சார்ந்த தொகுதிகளில் புதிய ஜனநாயகக்கட்சியின் வளர்ச்சி கண்டறியப்பட்டாலே தமிழர்களிற்கு ஆதரவானதொரு களம் உண்மையிலேயே கனடாவில் திறக்கப்படும். கன்சவேட்டிவ் கட்சிக்கு உண்மையிலேயே தமிழர்களின் பிரச்சினையில் அக்கறையிருந்தது. அது ஒன்றுபட்ட இலங்கைக்குள் தீர்வு ஏற்பட நடவடிக்கைகளையும் எடுத்தது.

பேச்சுமூலமே இலங்கையில் தீர்வு ஏற்படலாமென அது நம்பியது. ஆனால் பயங்கரவாதத்தை எதிர்த்தது. தமிழர்களின் பிரச்சினைகளைத் தீர்க்க தனது சார்பிலும் ஒரு திட்டத்தை சமர்ப்பிக்க முனைந்தது. இருந்தும் அவையெல்லாம் தமிழர் தரப்பிடம் செல்லாமல் எவ்வாறு தடுக்கப்பட்டன என்ற அதிர்ச்சிகரமான செய்தியும் விரைவில் தமிழர்களை வந்து சேரும்.

விடுதலைப்புலிகள் பலமாக இருந்த போது புலம்பெயர்ந்த தேசங்களில் மேற்கத்தைய நாடுகளிற்கான தடைகளாக ஒரு சிலர் இல்லாவிட்டால் இன்று ஈழத்தில் ஒரு தேசம் இருந்திருக்கும் என்ற நம்பிக்கை பலருக்குமே உண்டு. இதனை ஆதாரங்களுடன் மாத்திரமே வெளிக்கொணர உதவும். சாட்சியங்கள் என்றுமே மரணிப்பதில்லை. அவை நீதியினை நிலைநாட்டித் தீரும்.

அதுவரை ராதிகாவின் வெற்றியையும் அவரைச் சார்ந்த தொகுதிகளில் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவு அலையையும் மேம்படுத்தினால் தமிழர்களின் தேவையை இதர கட்சிகள் உணர்ந்து தமிழர்களுடன் உறவாட தாங்களாகவே முன்வரும்.