குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2053

இன்று 2022, வைகாசி(விடை) 19 ம் திகதி வியாழக் கிழமை .

தமிழிசை வளம் - 2

பலப்பல தமிழிசைத்துறைச் சொற்கள் ‡ சிலம்பிலும் உரையிலும் காணப்பட்டவை. வேறு சில துறைச் சொற்கள் ‡ இயல் தமிழ் இலக்கணச் சொற்களை அடிப்படையாகக் கொண்டு ஆக்கப்பட்டவை. 1. சுவரம்:

‘சுவரம்’ எனும் சொல்லுக்குத் தமிழ் நிகண்டில் ‡ கோல், தந்திரி, நரம்பு, தந்தி, கோவை, கேள்வி எனப் பல சொற்கள் வழக்கில் இருந்தன என்று அறிகிறோம். இவற்றுளே ‘சுவரம்’ என்பதற்குக் ‘கோவை’ ‡ எனும் சொல் பெரிதும் ஏற்றது.சுவரங்கள் ஒன்றேடொன்று கோக்கப்படுவதாலும் ஒன்றோடொன்று ஒலி அலகினால் கோப்பு நிலை அடைவதனாலும் ‘கோவை’ எனும் பெயரே மிகச் சிறப்புடையது.
ஒவ்வொரு கோவையும் முதற்கோவையாகிய குரலுடன் ஓரளவு ஒலிஅமைப்பில் கோக்கப்படுவதாலும் கோவை எனும் பெயர் மிகவும் ஏற்றது.
நரம்பு எனும் பெயரும் சுவரத்திற்கு உண்டு. ஆதியில் யாழின் நரம்புகளினின்றும் சுவரங்கள் பிறந்தமையால், ஆகுபெயராக ‘நரம்பு’ என்றனர். (பிங்கலம் ‡ 1434).

2. சுவரங்கள் ஏழு:

ச, ரி, க, ம, ப, த, நி, ச
கு, து, கை, உ, இ, வி, தா, கு
குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனும் பெயர்கள் தனித் தமிழ்ப் பெயர்கள். பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் இடம் பெறுவதால், அப் பெயர்களின் தொன்மை வழக்கு அறியலாம்.
குடமுதல் இடமுறையாக் குரல், துத்தம்,
கைக்கிளை, உழை,இளி,விளரி,தாரம் என
விரி தரு பூங் குழல் வேண்டிய பெயரே
-(சிலப். 17:13)
3. பன்னிரு சுவரஸ்தானம்:

ஏழு கோவைகளுள் து, கை, உ,வி, தா ‡ எனும் ஐந்தும் (ரி,க,ம,த,நி) ஒவ்வொன்றும் இரண்டு இரண்டு வீடு பெற்றுப் பத்து வீடுகள் பெறுகின்றன. இப்பத்துடன் கு,இ, (ச.ப.) சேர்க்கப் (10+2) பன்னிரு ஸ்தானத்தைப் பண்டையோர் ‘பன்னிரு வீடு’ என்றும் ‘பன்னிரு நிலம்’ என்றும் கூறினர். இவ்வாறு ஐந்து கோவைகள் இரு வகை பெறுவதால் கோவைகள் (10+2) 12 வீடு, அல்லது 12 நிலம் பெறுகின்றன. (சிலப். 17:13 அடியார் உரை).
4. கோவை வகைகட்குப் பெயர்கள்: குறியீடு:
1. சட்சம் - சட்சம் - குரல் கு
2. ரிஷபம் -சுத்த ரிஷபம் - மென் துத்தம் மெ.து
-சதஸ்ருதி ரிஷபம் - வன் துத்தம் வ.து
3.காந்தாரம் -சாதாரண காந்தாரம் - மென் கைக்கிளை மெ.கை
-அந்தர காந்தாரம் - வன் கைக்கிளை வ.கை
4. மத்திமம் -சுத்த மத்திமம் -மெல்லுழை மெ.உ
-பிரதி மத்திமம் -வல்லுழை வ.உ.
5. பஞ்சமம் -பஞ்சமம் -இளி இ.
6. தைவதம் -சுத்த தைவதம் -மென் விளரி மெ.வி
-சதுசுருதி தைவதம் -வன் விளரி வ.வி
7. நிடாதம் -கைசகி நிடாதம் -மென் தாரம் மெ.தா
-காகலி நிடாதம் -வன் தாரம் வ.தா
குறிப்பு:
இன்று நாட்டில் ச,ரி,க,ம,ப,த,நி என்னும் குறியீடுகள் பெரிதும் வழக்கில் உள்ளமையாலும், கற்பனைக் கோவை பாடுவதற்குப் (கற்பனாஸ்வரம் பாடுவதற்குப்) பெரிதும் பயன்பட்டுவிட்டதாலும், இக்குறியீடுகளையே இப்போது பயன்படுத்தி வரலாம்.‘குறை ரிடபம்’, ‘நிறை ரிடபம்’ போன்று பெயரிடுதலும் ஏற்றவைகளே. வடமொழியில் கோமள ரிடபம், தீவிர ரிடபம், கோமள காந்தாரம் தீவிர காந்தாரம் என்று பெயரிட்டு வழங்குவது போன்றே ‡ தமிழிலும் குறை ரிடபம், நிறை ரிடபம் என்று பெயரிட்டும் வழங்கலாம்.
(அ) குறை, நிறை எனக் கோவைகள் அடைமொழி பெற்றமைக்குச் சான்று;
‘அகநிலைக் குரிய நரம்பின திரட்டி
நிறை குறை, கிழமை பெறுமன மொழிப’ ‡ (சிலப் 8:39. அடியா. உரை)
(ஆ) மேலும் ஏறிய கோவை, இறங்கிய கோவை என்னும் வழக்கும் பண்டைக் காலத்தில் இருந்தது; ஏறிய கோவை இறங்கிய கோவை எனவும் கூறி வந்தார்கள். மென்தாரம் வன்தாரம் எனக் கூறினார்கள்.
(இ) மேலும் ரி,க,ம,த,நி ‡ ஆகிய இடைநிலத்து வகையை அந்தரக் கோவைகள் ஐந்து என்றும் கூறினார்கள்.
இதுகாறும் விளக்கிய வற்றால் கோவை வகைகளை (அ) குறை கோவை, நிறை கோவை என்றும் (ஆ) ஏறிய கோவை, இறங்கிய கோவை என்றும் (இ) அந்தரக் கோவை, உயர்தரக் கோவை என்றும் வன் கோவை, மென் கோவை என்றும் கூறுவதுண்டு என அறியலாம்.
5. சுருதி: சுருதி எனும் வடசொல்லுக்கு இரு பொருள்; (1) ஒத்து (2) ஒலியின அலகு அளவு. சுது சுருதி சுவரம் என்பதை நாலு அலகுக் கோவை என்று கூறலாம். இதனைத் தமிழில் கேள்வி என்றும் சுட்டினார்கள். மேலும், நான்கு அலகினை முற்றிசை என்றும், மூவலகினைப் பற்றிசை என்றும் ஓரலகினைக் குற்றிசை என்றும் கூறினார்கள் (யாழ்நூல் 1974, ப.80). ஓரலகினைக குற்றிசை என்றமையால் ஈரலகினை நெட்டிசை என்பது போதரும். (எ‡டு: முற்றிசைத் துத்தம் = சதுசுருதி ரிடபம்)
6. ஆரோகணம்: கோவைகள் முதற் கோçவியனின்றும் தொடர் புற்று ஒரு குறித்த அளவில் உயர்ந்து செல்வதால் ‡ ஏறு நிரல் என்று கூறலாம். அதாவது உயர்ந்து செல்லும் ஒழுங்கான வரிசை என்று பொருத்தமாகப் பொருள் படுகிறது.
7. அவரோகணம்: மேற்கூறியவாறு அமைந்துள்ள கோவைகள் படிப்படியாய்க் குறைந்து இறங்கி வருவதால்‡ இறங்கு நிரல் எனலாம்.
8. ஸ்தாயி: குரல் முதல் ஏறிய தாரம் வரையில் உள்ள 12 கோவைகளின் வரிசைக் கூட்டு நிலையை ஒரு மண்டிலம் என்றனர். குரல் முதல் தாரம் வரை ஏழு கோவைக்குள் அவற்றின் வகைகளும் அடங்குகின்றமையால், 12 கோவைகள் ஆயின. மென்தார முதல் (நி 1) குரலிளி உறவு முறையில் தொடுத்துக் கொண்டு சென்றால் 12 கோவைக்கப் பின் 13 ஆவது கோவை முதலில் தொடங்கிய மென்தாரம் ஆகும். எனவே ஏழு கோவைகள் ஒரு வரிசையாகவும் அவற்றை அடுத்து 5 கோவைகள் வரிசையாகவும் 12 நரம்புகள் ஒலித்துச் செல்லுவதே மண்டிலம் எனப் பெயர் பெற்றது. ஒரு பெரும் பண்ணுக்கு ஏழு கோவைகள் தொடுப்பது வழக்கம்:
வட்டம் என்பது வகுக்கும் காலை
ஓர்ஏழ் தொடுத்த மண்டிலம் ஆகும்
(சிலப். ஆய்ச்.17 அடியா. உரை)
மண்டிலித்தல் என்பது மீண்டும் வருதல் எனப் பொருள் படுவது ‡ கு,து,கை,உ,இ,வி,தா என்னும் வரிசை மீண்டும் வந்த மண்டிலித்தலால் மண்டிலம் எனப் பெயர் பெற்றது. மண்டலம் என்பத வேறு பொருள் படுவது. மண்டல் ‡நெருங்கி அமைதல். மண்டலம் ‡நெருங்கி அமைந்தது எனப் பொருள் படுவது; மண்டலம் வேறு! மண்டிலம் வேறு)
9. ஸ்தாயி வகை: மண்டிலத்தை மூன்றாக வகுத்தனர்.
1. மத்திம ஸ்தாயி ‡ சமன் மண்டிலம்
2. மந்திர ஸ்தாயி‡மெலிவு மண்டிலம்­
3. தார ஸ்தாயி - வலிவு மண்டிலம்
10. ஸ்தாயி விரிவு: மீண்டும் ஏழு கோவைகளும் வரிசையில் வலிவ மண்டிலத்திற்கு மேலும் உயர்ந்து அமைவதை வலிவின் வலிவு மண்டிலம் என்றோ அதிவலிவு மண்டிலம் என்றோ குறித்தனர். மெலிவின் மண்டிலத்திற்கு அடுத்துக் கீழே மண்டிலம் தாழ்ந்து அமையும் போது ‡ அதை மெலிவின் மெலிவு மண்டிலம் என்றோ, அதி மெலிவு மண்டிலம் என்றோ குறித்தனர். பேரியாழிலே மெலிவு, சமன், வலிவு என்னும் மூன்று மண்டிலங்களும் நின்றன. சகோட யாழிலே 3 + 7 + 4 = 14 கோவை வீடுகள் முறையே மெலிவு, சமன், வலிவு என்னும் மண்டிலங்களில் அமைந்திருந்தன என்பார் விபுலாநந்த அடிகளார் (1974 யாழ் நூல். ப. 80).
11. தாரஸ்தாயு சட்சம் : சமன் மணடிலக் குரலின் அசைவு எண் 240 எனக் கொண்டால் , அடுத்த வலிவு மண்டிலக் குரலுக்கு ‡ அசைவு எண் 480 எனக் கண்டுபிடித்துள்ளனர். எனவே வலிவு மண்டிலக் குரல் (240+ 240 = 480) இரட்டித்து ஒலிக்கின்றதால் ‡ பண்டைத் தமிழர் ‡ இரட்டித்த குரல் என்றும் உயர் குரல் என்றும் கூறினார்கள். ஒத்த கிழமை உயர் குரல் மருதம் என்றார் அடியார்க்கு நல்லார் (சிலப். 8-39 அடியா. உரை).
12. பூர்வாங்கம் உத்தராங்கம்:
கு,து,கை,உ, (ச,ரி,க,ம) எனும் கோவைகளின் வரிசைப்பகுதியை முன்னர்ப் பாகம் (பூர்வாங்கம்) என்றனர். இ,வி,தா,க (ப,த,நி,ச்) என்னும் கோவைகளின் வரிசைப் பகுதியைப் பின்னர்ப் பாகம் (=உத்தராங்கம்) என்றனர். எட்டுக் கோவை வரிசையில் முன்னர் உள்ள 4 கோவைப் பாகத்தை முன்னர்ப் பாகம் என்றும் பின்னர் உள்ள 4 கோவைப் பாகத்தைப் பின்னர்ப் பாகம் என்றும் கூறியது மிக மிகப் பொருத்தம்,
தாரப் பாகமும் குரலின் பாகமும்
நேர்நடு வண்கிளை கொள்ள நிற்ப
முன்னர்ப் பாகமும் பின்னர்ப பாகமும்
விளரி குரலாகும் என்மனார் புலவர் ‡ சிலப்பதிகாரம்
முன்னர்ப பாகம் -ஸ்தாயியில் பூர்வாங்கம்; பின்னர் பாகம் ‡ ஸ்தாயியில் உத்தராங்கம் - என்றார் அறிவர் எசு.இராமநாதனார் (1596 சிலப். இசை நுணுக்கம். ப.38).

( இசை அறிஞர் வீ.ப.கா. சுந்தரம் எழுதிய தமிழிசை வளம் என்னும் நூலிலிருந்து..)
இடுகையிட்டது தமிழியன் நேரம் ௫:௦௬ முற்பகல் 0 கருத்துரைகள்  புதன், ௮ செப்டம்பர், ௨௦௧௦
நேர்மை நெஞ்சில் வேண்டும் அஞ்சலி கதிரவன் பாடும் இனிய பாடல்
நான் வரைந்த இரு பாடல்களுக்கு அன்புச்செல்வி அஞ்சலியும் அவர் தந்தை என் நெஞ்சம் நிறைந்த இளவல் பாடகர் கதிரவனும் பின்னிசை வழங்கிப் பாடும் பாடல் காட்சி.

இந்தத் தூய தமிழ் நெஞ்சங்களால் தமிழுக்கும் தமிழர்க்கும் என்றென்றும் நலன் கிட்டி இவர்கள் எல்லாப் புகழும் பெற உள்ளுவந்து வாழ்த்துகின்றேன்.

 

 

 

இடுகையிட்டது தமிழியன் நேரம் ௪:௫௩ முற்பகல் 0 கருத்துரைகள்  செவ்வாய், ௧ டிசம்பர், ௨௦௦௯
தமிழிசைக் கலைக் களஞ்சியம் வெளியிடப் பட்டுள்ளது

தமிழிசை வரலாற்றில் போற்றப்படும் நிலையில் அரிய கருவூலமாகத் திகழும் தமிழிசைக் கலைக் களஞ்சியம் வெளியிடப் பட்டுள்ளது. பாரதிதாசன் பல்கலைக் கழக வெளியீடாக வந்துள்ள இந்நூல் தமிழிசை தொடர்பான பன்னூற்றுக் கணக்கான ஐயங்களுக்கு சொற்களஞ்சியங்கள் வாயிலாக தெளிவான விளக்கம் தருகின்றது. தமிழிசை அறிஞர் முனைவர் வீ.ப.கா.சுந்தரம் அவர்களால் நுண்மாண் நுழைபுல அறிவு கொண்டு ஆய்ந்தமைக்கப் பெற்ற இக்கலைக் களஞ்சியம் தமிழிசை பேணும் உணர்வாளர்கள் ஒவ்வொருவராலும் படித்துப் பேணப்பட வேண்டிய ஆன்ற கருவூலமாகும். இதன் விலை மலேசிய வெள்ளி 200 ( நான்கு தொகுப்பு )


தமிழிசைக் கலைக்களஞ்சியத்தின் பயன்பாடு.

இசை கற்போர்க்கு

இந்நூலில் இன்று நடைமுறையில் வழங்கி வருங்கின்ற இசைக்கலைக் கருத்துகளும், பண்டைக் காலத் தமிழ் இலக்கிய இலக்கண நூல்களில் வழங்கி வந்த இசைக்கலைக் கருத்துகளும் தொகுத்துத் தரப்பட்டுள்ளன. இசைக்கலையே அன்றி நாட்டியம்,நடனம், நாடகம், சிற்றூர்களின் ஆடல் பாடல், இசைக் கருவிகள், தாள வகைகள் முழவு கொட்டும் முறைகள்முதலியவைகளும் விளக்கப்பட்டுள்ள, கிருதி, கீர்த்தனை, கீதம், வர்ணம், பதம், தில்லானா, சாவளி, இராகம், தானம், பல்லவி என்பவை பற்றிய தக்க விளக்கங்கள் தரப்பட்டுள்ளன. இசைநூல் இயற்றியோர் வரலாறுகள் இடம் பெற்றுள்ளன. பாடுதுறை வல்லுநர்களைப் பற்றிய செய்திகள் நூலின் இறுதியில் தொகுத்துரைக்கப் பட்டுள்ளது.

இலக்கியம் கற்போர்க்கு

இந்த நூற்றாண்டில் மொழியியல் துறையைத் தமிழ் அறிஞர்கள் கற்றுத் தேர்ந்த போதுதான், தொல்காப்பியத்தில் மொழியியல் கூறுகள் பலவும் காணப்படுகின்றன என்று அவர்களால் கண்டு பிடிக்க முடிந்தது. இதுபோலவே இந்தக் கலைக் களஞ்சியத்தால் தொல்கப்பியத்தில் ஆங்காங்கு காணப்படும் இசையியல் கூறுபாடுகள் பலவற்றைக் கண்டுபிடித்துக் காட்டமுடிந்தது. தென்னக இசையியல் தொல்காப்பியத்தில் தொடங்குதல் வேண்டும் என்று வற்புறுத்திக் காட்டுகின்றது. ஐந்து நிலப் பெரும் பண்களைத் தொல்கப்பியம் சுட்டிக் காட்டுகின்றது. பத்துப்பாட்டும், எட்டுத் தொகையும் அப்பெரும் பண்களின் ஆரோகணம் அவரொகணம் ஆகிய இரண்டையும் கண்டுபிடிக்கும் முறைகளையும் விரிவாக விளக்கியுள்ளது. தேவார திவ்ய பிரபந்த நூல்கள் அப்பண்களில் பாடல்களை இயற்றிக் காட்டியுள்ளன. தாளக் கட்டுமானங்களும் இவ்வாறே தொல்காப்பியத்தில் தொடங்கி வளர்ந்து வந்துள்ளதைத் தாள அறிவு கொண்டு கண்டு களிக்கலாகும்.

சிலப்பதிகாரம் - இசைக் கலங்கரை விளக்கம்

சிலப்பதிகாரத்தில் உள்ள இசை நுணுக்கங்களையும் மாட்சிமைகளையும் விளக்கிக் காட்டப் பல நூல்களும் உரைகளும் உதவுகின்றனபஞ்சமரபு வெண்பாக்களின் மூலமாகவும், அரும்பதவுரையாசிரியர், அடியார்க்கு நல்லார் உரைகளின் மூலமாகவும் சிலப்பதிகார இசைத்தொடர்கள் விளக்கப்பட்டுள்ளன . சிலப்பதிகாரத்தில் இசைக் குறிப்புகள் நிரம்பிய பகுதிகள் - ஆய்ச்சியர் குரவை, அரங்கேற்று காதை, கானல்வரி,வேனிற்காதை, கடலாடுகாதை , புரஞ்சேரியிருத்த காதலிமுதலியன . இவற்றைப் பன்னெடும் காலமாகக் கல்வி நிலயங்களில் பாடத்திட்டத்தில் சேர்ப்பதில்லை, கற்பிப்பதில்லை. இக்கலைக் களஞ்சியத்தை முயன்று கற்போர் சிலப்பதிகார இசை மாட்சியை இனிது விளங்கிக் கொள்ளலாம் . பண்டைய ஏழ்பெரும் பாலைகட்குரிய இன்றைய இராகங்கள் ஆய்ந்து கூறப்பட்டிருப்பதால் பழம் பாலைகளைப் பாடிக்காட்டலாம் , சிலப்பதிகாரம் என்னும் பெருங் கலங்கரை விளக்கத்தின் துணைக்கொண்டு அதற்கு முன்னர்த் தோன்றிய நூல்களிலும் பின்னர்த் தோன்றிய நூல்களிலும் காணப்படும் இசைக் குறிப்புக்கள் யாவற்றையும் கண்டு அறிந்துக்கொள்ளலாம் . பத்துப்பாட்டிலும் எட்டுத் தொகையிலும் காணப்படும் இசைக் குறிப்புக்கள் சிலப்பதிகாரக் குறிப்புகளுடன் ஆங்காங்கு ஒப்பிட்டுக் காட்டப்பட்டுள்ளன .

விளக்கும் முறைகள்

நூல் முழுவதிலும் ஆங்காங்குக் கட்டகங்கள் அமைக்கப்பட்டுள்ளன . இவற்றின் மூலமாகச் செயல்படுத்திக் காட்டி இசை இலக்கணங்கள் விளக்கப்பட்டுள்ளன . ௧௨ தான நரம்புகளை நிறுத்திப் புதிய பன்னுண்டாக்கும் பண்ணுப் பெயர்ப்பு முறைகள் விளக்கப்பட்டுள்ளன . இணை, கிளை, நட்பு, பகை என்னும் நரம்புகளைக் கண்டுபிடித்துக்கொள்ளும் முறைகள் செயல்படுத்திக் காட்டப் பட்டுள்ளன . வட்டப் பாலைகள் நேர் கட்டகங்களில் பண்ணுப் பெயர்த்து நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு ஆழமான இசை அமைப்புக்களையும், நரம்பு தொடுத்துப் பாடும் நெறிகளையும் கட்டகங்களில் செயல்படுத்தி விளக்குவதன் மூலம் தெளிவையும் திட்டத்தையும் இந்நூல் ஊட்ட முயன்றுள்ளது .

ஏழ்பெரும் பாலைகளுள் முல்லையாழ் (பெரும்பண்)

தமிழகத்தின் தொன்மைக் காலத்தில் ஏழ்பெரும் பாலைகட்கும் தலைமையாக நின்றும், ஆதி அடிப்படைப் பாலையாக நின்றும் விளங்கியது செம்பாலை. இது சங்க இலக்கியக் காலத்தில் முல்லை யாழ் (பெரும்பண்) எனப் பெயர்ப் பெற்றது . தலைமைச் சிறப்புக் கருதிப் 'பாலையாழ்' என்றும் குறிக்கப்பட்டது . பின்னர்ச் செம்பாலை எனப் பெயர்ப் பெற்றது . தலைமைச் சிறப்புக் கருதிப் ' பாலையாழ்' என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

 

 


இடுகையிட்டது தமிழியன் நேரம் ௬:௪௦ முற்பகல் 0 கருத்துரைகள்  செவ்வாய், ௧௦ நவம்பர், ௨௦௦௯
சுதா இரகுநாதனின் எல்லாம் இன்பமயம் என்ற தமிழிசையைக் கேட்போம் வாரீர்.
இடுகையிட்டது தமிழியன் நேரம் ௮:௩௧ முற்பகல் 0 கருத்துரைகள்  ஞாயிறு, ௮ நவம்பர், ௨௦௦௯
நாட்டைக் குறிஞ்சி தமிழ்ப்பண் பற்றிய விளக்கம் - சாருலத்தா மணி
நாட்டைக் குறிஞ்சி தமிழ்ப்பண் பற்றிய விளக்கம் -
சாருலத்தா மணி
இடுகையிட்டது தமிழியன் நேரம் ௬:௪௨ முற்பகல் 0 கருத்துரைகள்  தமிழ்கூறு நல்லுலகில் தமிழிசை தொடர்பாக இதோ ஒரு புதிய வலைப்பூ.

தமிழ்கூறு நல்லுலகில் தமிழிசை தொடர்பாக இதோ ஒரு புதிய வலைப்பூ.

முரல்(சுரம், பண், மெட்டு, தாளம் என்னும் நாற்கூறு கொண்ட இன்னிசை முழுவளர்ச்சி யடைந்திருந்தது.

பண் (எழுமுரல்), பண்ணியல் (அறுமுரல் ), திறம் (ஐம்முரல் ), திறத்திறம் (நான்முரல்) என நால் வகைப்பட்ட பண்கள் நரப்படைவால் 11,991 ஆகக் கணிக்கப்பட்டிருந்தன. ஆயப்பாலை, வட்டப்பாலை, சதுரப்பாலை, முக்கோணப்பாலை (திரிகோணப்பாலை) என்னும் நால்வகை முறையில் எழுபெரும்பாலைகளும் அவற்றின் கிளைகளும் திரிக்கப் பட்டன. அத்திரிவு முறைகள், முறையே முழுமுரல், அரைமுரல், கால் முரல், அரைக்கால் முரல் ஆகிய முரல் நிலைகளைத் தழுவியன என்பர். இந்நுட்பங்கள் இற்றை இசைவாணர்க்குத் தெரியாவாறு, ஆரியத்தால் மறையுண்டு போயின.

தோல் துளை நரம்பு உறை (கஞ்சம்) என்னும் நால்வகை இசைக் கருவிகளுள் சிறந்தது யாழ் என்னும் வீணை. யாழ்களுட் சிறந்தது செங்கோட்டியாழ். அதன் வழியினதே இற்றை வீணை. விண்ணெனல் = நரம்பு தெறித்தல். விண் - வீணை. தோலிற் சிறந்தது மத்தளம் (பெரியது) அல்லது மதங்கம் (மிருதங்கம்). துளையிற் சிறந்தது புல்லாங்குழல்.

மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாணர்

இத்தகு சீர்மையும் சிறப்பும் தொன்மையும் வாய்ந்த நம் இனத்தின் மொழியின் பெருமையை உணர்த்தும் தமிழிசை பற்றிய அரிய செய்திகளை இவ்வலைப்பூ வாயிலாக நாம் தெரிந்து கொள்வோமாக. தொடர்ந்து பாருங்கள்.

அன்பன்

இரா.திருமாவளவன்.