குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

ராகுல்காந்திக்கு தொடர்ந்தும் புலிகளின் அச்சுறுத்தல் இருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது..

இந்திய காங்கிரஸ் கட்சியின் பொது செயலாளர் ராகுல் காந்திக்கு எஞ்சியுள்ள தமிழீழ விடுதலைப் புலிகளின் உறுப்பினர்களால் அதிக அளவிலான அச்சுறுத்தல் இருப்பதாக இந்திய புலனாய்வு துறையினர் எச்சரித்துள்ளனர்.

ஒருபக்கத்தில் தமிழீழ விடுதலைப் புலிகள் முழுமையாக தோற்கடிக்கப்பட்டுவிட்டதாக அறிவிக்கப்பட்டு வந்தாலும் காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி மற்றும் அவரது மகன் ராகுல் காந்தி ஆகியோருக்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்திய சட்டமுறைகளின் கீழ் ராகுல்காந்திக்கு அவரது தாயார் சோனியா காந்தி மற்றும் பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு அடுத்த படியாக அதிக பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக அவருக்கு விசேட பயிற்றப்பட்ட பாதுகாப்பு குழு ஒன்றும் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.

இதன் காரணமாகவே அண்மையில் தமிழகத்திற்கான விஜயம் மேற்கொண்டிருந்த ராகுல்காந்தி நீண்ட தூர பாதைப் பயணங்களை மேற்கொள்வதை அறைமனதுடன் தவிர்த்துள்ளார்.

இதேவேளை ராகுல் மற்றும் அவரது தாயிற்கும் ஜெயிஸ் ஈ மொஹமட் போன்ற பாகிஸ்தானில் இயங்கும் தீவிரவாத அமைப்பின் அச்சுறுத்தலும் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த 2007ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்யப்பட்ட ஜெயிஸ் ஈ மொஹமட் அமைப்பின் உறுப்பினர்கள் மூவரிடம் தனித்தனியே மேற்கொண்ட விசாரணைகளில் ராகுல்காந்தி அவர்களின் முதன்மை இலக்காக காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

ராகுல்காந்தி தமிழகத்திற்கான தொடர்ந்தும் விஜயம் செய்யும் போது அவருக்கான பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தமிழக பொலிசாரும் புலனாய்வு துறையினரும் இணைந்து செயற்படவுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.