குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

2011 ல் விநோதமான வழக்குகளைச் சந்தித்த சுவிசு உச்சநீதிமன்றம்

 01.01.கிறிசுஆண்டு2012தமிழாண்டு2042--2011ம் ஆண்டில் சுவிட்சர்லாந்தின் உச்சநீதிமனறம் பல விநோதமான வழக்குகளைச் சந்தித்தது. இதில் ஒன்றாக சுவிட்சர்லாந்தின் காட்டுப்பகுதிகளில் ஆபாசமாக நடந்து திரிந்தவருக்கு 100 சுவிஸ் பிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது. பல் வைத்தியர் ஒருவர் தொல்லை கொடுத்த பல்லை பிடுங்காமல் நன்றாக இருந்த கடைவாய்ப் பல்லை பிடுங்கிவிட்டார். இந்த வழக்கில் அந்த வைத்தியருக்கு நீதிபதிகள் 500 சுவிஸ் ஃபிராங்க் அபராதம் விதித்தனர். அந்தப் பணியிலிருந்தும் அவர் தற்காலிமாக நீக்கப்பட்டார்.

பியானோ இசைக்கலைஞா் ஒருவா் மேடையில் வாசிக்க நடுங்கினாலும் அவா் இசைப்பாடத்தில் தேர்ச்சி பெற்றிருந்ததால் சான்றிதழ் பெறும் தகுதியைப் பெற்றார்.

கிராபூண்டென் மாநிலத்தைச் சோ்ந்த பாதிரியார் ஒருவர் தனது திருச்சபையைச் சோ்ந்த 90 வயது முதியவர் ஒருவரிடம் நன்கொடை பெற்றதால் இனி அவா் பிரசங்கம் செய்யக்கூடாது என்று நீதிமன்றம் தடை விதித்தது.

மொழியாசிரியா், கணக்காசிரியா் போன்றோருக்குத் தரும் சம்பளத்தைத் தனக்கும் தர வேண்டும் என்று கேட்ட உடற்கல்வி ஆசிரியரின் வழக்கை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

வண்டி ஓட்டியதில் தவறிழைத்ததாக 7400 வழக்குகள் பதிவாயின. ஒருவா் காரின் முன்பகுதியில்(டாஷ் போர்டு) பூனைக்குட்டியை வைத்துக்கொண்டு கார் ஓட்டியதற்காக 2000 சுவிஸ் ஃபிராங்க் அபராதம் விதிக்கப்பட்டது.

பாதசாரியை இடித்துத் தள்ளிய சரக்குந்து ஓட்டுநருக்கு 100 சுவிஸ் ஃபிராங்க் அபராதம் விதித்த நீதிபதிகள் இந்த ஓட்டுநர் பாதையில் நடந்து சென்றவரின் கவனத்தை ஈர்த்து விலகி நடக்க எச்சரித்திருக்கலாம் என்று கூறினர். நடந்தவர் போதையில் இருந்தார், புத்தகம் வாசித்துக் கொண்டே சென்றவர் சரக்குவண்டியில் அடிபட்டு விட்டார். 

சுவிசு பண்பாட்டில் ஆர்வம் மிக்க கங்கேரியா இளைஞர்கள்

கங்கேரியா நாட்டில் வாழும் இளைஞர்கள், சுவிஸ் நாட்டின் பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் “சுவிஸ் பாயிண்ட்” என்ற கழகம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
சுவிஸ் நாட்டின் பண்பாட்டில் ஆர்வம் உள்ள இளைஞர்கள் இந்த கழகம் மூலமாக சந்தித்து பண்பாட்டு விடயங்களைப் பகிர்ந்து கொள்வர்.

ஹங்கேரிய மக்களின் பார்வையில் சுவிஸ் பண்பாடு என்பது பல மொழியினரும், பல கலாசாரத்தைச் சேர்ந்தவரும் ஓரிடத்தில் கூடி ஒற்றுமையாக வாழ்வதுதான்.

ஹங்கேரியாவில் இத்தகைய கலாச்சாரச் சூழலுக்கான வாய்ப்புகள் குறைவு. அவர்களின் பாடத்திட்டத்திலும் இந்த பன்முக கலாசாரம்(Multiculturalism) இடம்பெறவில்லை.

இதன் காரணமாக சுவிஸ் பண்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில் “சுவிஸ் பாயிண்ட்டை” ஏற்படுத்தியுள்ளனர். இந்தத் தகவலை அக்ரியா பல்கலைக்கழகத்தின் ஆசிரியர் சங்கத் தலைவியான ஆக்னெஸ் ஹேர்வாத் தெரிவித்தார்.

ஹோர்வாத் ஹங்கேரி இளைஞரின் பன்மயக் கலாசாரத்தை பற்றிக் கூறுகையில், பல மொழி, பல கலாசாரம் ஆகியவற்றை ஏற்றுக்கொள்ளும் ஆர்வமும், மனப்பக்குவமும் ஹங்கேரியாவில் உள்ள இளைஞர்களுக்கு வர வேண்டும்.

மேலும் சமூக ஒருங்கிணைப்பை இவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அன்றாட வாழ்க்கையில் இதன் தேவையை இவர்கள் உணர்வதற்கு சுவிட்சர்லாந்தின் வாழ்க்கை முன்னுதாரணமாக விளங்குகிறது என்று சுவிஸ் பாயிண்ட்டின் அவசியத்தை எடுத்துரைத்தார்.
 

 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.