குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 19 ம் திகதி செவ்வாய் கிழமை .

சுவிட்சர்லாந்தில் புயல்காற்று.வேகமாகவந்த தொடருந்து மீது மரம் விழுந்தது 12போர் காயம்.கட்டடப்பணியில்லை

 தன்னார்வ ஆர்வலர்களின் தேசமாக விளங்கும் சுவிஸ். 17.12.2011-சுவிட்சர்லாந்தின் மலைப்பகுதிகளில் ஜோவாகிம் என்ற புயல்காற்று மணிக்கு 150 கிலோ மீற்றர் வேகத்தில் வீசும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகி இருப்பதால், வடக்கு பிரான்ஸ் மற்றும் ஜேர்மனி வழியாக வீசும் புயல் சுவிட்சர்லாந்தின் மலைச்சிகரங்களை வெள்ளிக்கிழமை காலை தொட்டுவிடக்கூடும். பெர்னெசெ ஜுரா என்ற இடத்தில் மணிக்கு 120 கிலோ மீற்றர் வேகத்தில் நேற்றிரவு புயல்காற்று வீசியது என்று சுவிஸ் தேசிய வானிலை மையம் சுவிஸ் நியூஸ் ஏஜென்சியிடம் தெரிவித்தது. இந்தப் பகுதியில் புயல்காற்றால் கீழே விழுந்த மரத்தின் மீது வேகமாக வந்த ரயில் மோதியதில் விபத்துக்குள்ளாகி சுமார் 12 பேர் காயம்பட்டனர்.

ஜெனிவா ஏரியில் நடைபெற்ற படகுப் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. கட்டிடப் பணிகளை நிறுத்திவைக்குமாறு அரசு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். கடந்த 1999 ஆம் ஆண்டில் ஐரோப்பாவில் வீசிய லோதார் என்ற ஹரிகேன் புயலால் சுவிட்சர்லாந்துக்கு 600 மில்லியன் சுவிஸ் பிராங்க் அளவிற்கு சேதம் ஏற்பட்டது.

750 மில்லியன் மதிப்புடைய காடுகளும் அழிந்து போயின. அந்த அளவிற்கு இப்போது வீசும் ஜோவாகிம் புயலால் சேதம் ஏற்படாது என்று மீட்டியோ சுவிஸ் நிறுவனம் தெரிவித்தது.
 
தன்னார்வ ஆர்வலர்களின் தேசமாக விளங்கும் சுவிஸ்

சுவிட்சர்லாந்தில் தூய நிக்கோலசாக வேடமிட்ட பலரும் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஒவ்வொரு வருடமும் மக்கள் தொகையில் மூன்றில் ஒரு பங்கினர் இத்தகைய சேவைப் பணிகளில் ஈடுபடுவதால் தன்னார்வ ஆர்வலர்களின் தேசம் என சுவிசை அழைக்கலாம் என்று பொதுநலத்துறைக்கான சுவிஸ் செனட்டின் இயக்குநர் ஹெர்பர்ட் அம்மான் குறிப்பிட்டுள்ளார்.

சுவிஸ் நாட்டில் 25 சதவிகிதம் பேர் தன்னார்வப் பணிகளில் ஈடுபட்டதாக இணையத்தளம் மூலம் நடத்தப்பட்ட ஆய்வொன்றின் தெரியவந்துள்ளது.

சுவிஸ் மக்கள் தன்னார்வ அமைப்புகளில் இணைந்து அந்நியருக்கோ, நண்பருக்கோ அல்லது உறவினருக்கோ சுய ஆர்வத்தின் அடிப்படையில் உதவிகளை செய்து வருகின்றனர்.
 
நம்பகத்தன்மையை இழந்த கிரெடிட் சுவிசு வங்கி
சுவிட்சர்லாந்தில் உள்ள மூன்றாவது பெரிய தகுதிக் கணிப்பு நிறுவனமான ஃபிட்ச் ரேட்டிங்க்ஸ் உலகின் மிகப்பெரிய எட்டு வங்கிகள் தமது நம்பகத்தன்மையை இழந்து விட்டதாகத் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த எட்டு வங்கிகளுள் சுவிட்சர்லாந்தின் கிரெடிட் சுவிஸ் வங்கியும் ஒன்றாகும். நலிந்து போன பொருளாதார வளர்ச்சி மற்றும் கெடுபிடிகள் காரணமாக வங்கித்துறை சந்திக்கின்ற சவால்கள் அதிகரித்து வருவதால் அதன் நம்பகத்தன்மை பதிக்கப்பட்டிருப்பதாக கிரெடிட் நிறுவனம் தெரிவித்தது.

AA என்ற தகுதியை பேங்க் ஆஃப் அமெரிக்கா கார்ப்பரேஷன், பர்க்லேஸ், BNP பரிபாஸ், கிரெடிட் சிவிஸ், டியூஷே வங்கி, தி கோல்ட்மேன் சாக்ஸ் குரூப், மோர்கன் ஸ்டான்லே மற்றும் சொசைட்டி ஜெனரலே வங்கிகள் இழந்துவிட்டன.

கடன் பெற்றவர் திவாலாகிப் போன நிலையில் கொடுத்த கடனைத் திரும்பப் பெற இயலாமல் மோர்கன் ஸ்டான்லி, சொசைட்டி ஜெனரலே கிரெடிட் சுவிஸ் மற்றும் இதன் போட்டியாளரான UBS வங்கியும் உள்ளன.

யூனியன் பேங்க் ஆஃப் சுவிஸ் வங்கியும் தன் நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. கடந்த ஒக்டோபர் மாதத்திலேயே இதன் தகுதி A+ என்பதிலிருந்து A ஆகக் குறைந்துள்ளது. நவம்பர் மாத இறுதியில் பல பெரிய வங்கிகளின் தகுதிக் கணிப்பை ஸ்டாண்டர்டு அண்டு புவர் நிறுவனம் நடத்தியது.

இதனைத் தொடர்ந்து இப்போது ஃபிட்ச் ரேட்டிங்கிஸ் நிறுவனம் பெரிய வங்கிகளின் தகுதியை மறுபரிசீலனை செய்தது.
 

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.