குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 16 ம் திகதி செவ்வாய் கிழமை .

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதியத் திட்டப் பணிகள் அறிவிப்பு!

உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் புதியத் திட்டப் பணிகள் அறிவிப்பு!
[ சனிக்கிழமை, 26 நவம்பர் 2011, 08:59.12 AM GMT ]
இலங்கை அரசின் புதிய வரவு செலவுத் திட்டத்தில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர் பகுதிக்கு எல்லோரும் எதிர்பார்த்த மறுவாழ்வு பணிகளுக்காக எவ்வித தனி நிதியினையும் ஒதுக்காமல் இலங்கை அரசு பெருத்த ஏமாற்றத்தை தந்துள்ள நிலையில் ...... தமிழர்களின் பாரிய நினைவுத் தினமான எதிர் வரும் நவம்பர் 27 ந் தேதி உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் தலைமைப் பணிமனை பாதிக்கப்பட்டுள்ள தமிழ் மக்களின் மீள் வாழ்வுக்கும், பாதுகாப்புக்கும் ஏற்ற திட்டங்களை அறிவிக்க உள்ளது. உலகளாவிய தமிழர்களை ஒரேக் குடைக் கீழ் கொணரும் அளவில் ஒருங்கிணைந்த தமிழர்களுக்கான சிறப்பு பொதுக் கல்வித் திட்டம் ஒன்றினை உருவாக்கும் நோக்குடன் வரும் 2012 யூலை 7 மற்றும் 8 தேதிகளில் அனைத்துலக கல்விப் பொறுப்பாளர் திரு. துரைராஜா அவர்கள் தலைமையில் கனடாவில் கல்வி மாநாடு ஒன்றினை சிறப்பாக நடத்தவும், உலகமெங்கும் பரவி வாழும் தமிழர்கள் தங்களின் தாயகத்தில் பாதுகாப்பாக தங்கள் வாழ்வியலுக்கான வழிமுறைகளை பகிர்ந்து நிறைவேற்றிக் கொள்ள ஒன்று கூடும் நிரந்தர இடமாகவும், பண்பாட்டுச் சின்ன உறைவிடமாகவும் விளங்குமளவில் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் நடுவணகத்தை கிளிநொச்சியில் விரைவில் அமைக்க ஏற்பாடுகளை மேற்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நடந்து முடிந்த 11 வது சர்வதேச மாநாட்டில்
உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கத்தின் உலகத் தலைவராக திரு.வேல் வேலுப்பிள்ளை(அமெரிக்கா),

உலகப் பொதுசெயலாளராக திரு.துரை கணேசலிங்கம் (யேர்மனி),

உலகச் சட்டப் பொறுப்பாளராக திரு.த.கலைமணி (இந்தியா),

உலகப் பொருளாளராக திரு ராஜசூரியர் (யேர்மனி),

உலக கௌரவத் தலைவர்களாக திரு.கோவிந்தசாமி (தென் ஆப்பிரிக்கா),

திரு.சி.செல்லையா (கனடா),

உலக அறநெறியாளர்களாக திரு.மிக்கிச்செட்டி (தென் ஆப்பிரிக்கா),

பேராசிரியர் திரு.இ.பாலசுந்தரம் (கனடா),

உலகத் துணைத் தலைவர்களாக திரு.ப.கு.சண்முகம் (மலேசியா),

திரு.சு.தியாகலிங்கம் (நார்வே) ,

உலக கல்விப் பொறுப்பாளராக திரு.வி.எஸ்.துரைராஜா (கனடா),

உலக ஒழுங்கு நடவடிக்கை பொறுப்பாளராக திரு.இரா.சோமாஸ்கந்தன் (பிரிட்டன்),

உலக மனித உரிமைப் பொறுப்பாளராக திரு. ந.இ.விக்கிரமசிங்கம் (ஆஸ்திரேலியா),

உலகப் பண்பாட்டு கலைப்பிரிவுப் பொறுப்பாளராக திரு.க.ராஜமனோகரன் (பிரிட்டன்),

உலக மக்கள் செய்தி தொடர்பாளராக திரு. ஆர்.என்.லோகேந்திரலிங்கம் (கனடா)

ஆகியோர் தேர்வு செய்யப்பட்ட தலைமையிடப் பொறுப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும்
வழக்கறிஞர் திரு.த.கலைமணி
அனைத்துலக சட்டப் பொறுப்பாளர் மற்றும் இந்திய ஒன்றியத் தலைவர் உலகத் தமிழ்ப் பண்பாட்டு இயக்கம், 
2/259.காந்திதெரு வி.ஜி.பி.மனைப்பிரிவு-II உத்தண்டி சென்னை-119.
தொடர்புககு: 10919445925897 ஃ 10919444119285