குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 23 ம் திகதி செவ்வாய் கிழமை .

அதர்மம் அழியும் மகாபாரதம்கவசவாகனமும் கண்ணன் படமும்

அதர்மம் அழியும் மகாபாரதம்
 கவசவாகனமும் கண்ணன் படமும்
   ஒப்பாக பல்குழல்எறிகணை தாங்கி
சாரதியாக கொத்தபாய-சரத்-மகிந்த

முதலாவது பாதுகாப்பு  அமைச்சு
  அத்துலத்து முதலி
அடுத்தவர் இறைஞ்சன் விசயரத்தினா
  ஆசியாவின் பெரியநுால் நிலையம்
 எரியும்போது சிரித்தவர்கள் எங்கே இப்போ
    காணிநீரப்பாசன அமைச்சு
இனவிரோத நுணுக்கம் எங்கே
  பேசி ஏமாற்றிய தமிழ்பேசும்
 தலைவரெங்கே சுகந்திர தினநாளிலே!
    தமிழர் கொட்டம் அடக்கப் புறப்பட்ட
கொப்பேகடுவா எங்கே அவர்புகழ் எங்கே
   1994 யாழ் வீழ்ச்சி மக்கள்
வன்னிக்கு பெயர்ச்சி இராமலிங்கம்
   சிங்கக்கொடி ஏற்றி
இரத்துவத்தை மரியாதை செலுத்தி
   இருபது ஆண்டுகளுக்குள்
அவருக்கு மாவீரர்காலத்தில் அஞ்சலி
   அதர்மம் அழியும் மகாபாரதம்
 கவசவாகனமும் கண்ணன் படமும்
   ஒப்பாக பல்குழல்எறிகணை தாங்கி
சாரதியாக கொத்தபாய-சரத்-மகிந்த
   தமிழர் வீடுகளில் மாட்டுங்கள்.
வடமொழியிலும் சிங்களத்திலும் எழுதுங்கள்
  தீமை அழியும்தர்மம் வெல்லும்
அதற்காக காலந்தோறும் இரத்துவத்தை
   அத்துலத்துமுதலி கொத்தபாய
தோன்றுவர் தோன்றுவர் தமிழர்களை அழிக்க....

இராவணகாவியம் படிக்காது கம்பராமாயாணம்
   பாடமாக்கி உவாந்தியெடுக்கும் பாலபண்டிதங்கள்
தமிழ் மொழிவரலாறு தெரியாது ஆரியநுால்களுக்கு
    குடைபிடித்து பிறமதகப்பண்பாட்டில் மூழ்கிய
மூடராய் வலம்வந்து தமிழ் ஒளி ஏற்றாது இருளாகிய
   இவர்களை தமிழ்மொழியாளர் என்பது எப்படி

இந்த உணர்வு மிக்ககாலத்தில் கலக்கமின்றி
  நீங்கள் தெளியவேண்டுமென்றே
உயிர்களைக் கொடுத்தனர் உத்தமர்.
   இயக்கப்பெயர் என்றே பேசினோம்
அது என்ன என்று எண்ணினோமா?
   அதுதான் தமிழ்ப்பெயர்!
புரிகிறதா புரியாமலிருந்தது.
  அவர்களுக்கு அஞ்சலி செலுத்த
அருகதையிருக்கிறதா என்று எண்ணு!
  உன்பிள்ளைக்கு பெயர்தமிழா?
உன்கையொப்பம் உன்மொழியிலா!
  தமிழ்மொழியை அமுல்படுத்தினாயாநீ?
கலியாணக் கணையாழியில் எந்தமொழி!
  பண்பாடு பட்டிருக்கும் கேடடில்லையா?
உன்மோதிர விரலில் மாட்டியிருக்கு பாரு!
 கல்லறை சென்று கலங்காதே
உங்கள் கலக்கங்கள் குழப்பங்கள்
   தெளிந்து தமிழனாக வாழ்
அதுவே அவர்களுக்கு போதும்.
  தமிழ்வாழும் என்று மகிழ்வார்கள்.

குமரிநாடு.நெற்--தமிழர்களின் உணர்வுக்காலத்தில்.