குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழில் அல்லது சிங்களத்தில் தேசிய கீதத்தை பாட முடியும் அமைச்சர் வாசுதேவ தெரிவிப்பு

24.11.2011-தேசிய கீதத்தை தமிழ் மொழியில் அல்லது சிங்கள மொழியில் பாட முடியும் என தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருங்கிணைப்பு அமை ச்சர் வாசுதேவ நாணயக்கார பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். தேசிய கீதத்தை தமிழ்,சிங்கள மொழிகளில் பாடுவது என்ற நியதியில் அரசாங்கம் மாற்றத்தை ஏற்படுத்தவில்லை என அவர் குறிப்பிட்டுள் ளார். தேசிய கீதத்தை சிங்கள மொழியில் மட்டும் பாடுவதற்கு சில அதிகாரிகள் முயற்சித்த போதிலும் அரசாங்கம் இதற்கு அனுமதிக்க வில்லை என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டியுள் ளார்.

இரண்டு மொழிகளிலுமே தேசிய கீதத்தை பாடமுடியும் என்பதே அர சாங்கத்தின் நிலைப்பாடாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.