குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

ஈழம் இந்தியாவுடன் இருந்தகாலமும் பிரிந்த காலமும் கட்டுரையாளர். வேள் நாகன்

15 .09.2024  ·ஏறக்குறைய 10,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவும் ஈழமும் நிலத்தால் இணைக்கப் பட்டிருந்தன, சுமார் 6000 ஆண்டுகளுக்கு முன்பு  தொடர்ந்த கடல் மட்ட உயர்வு காரணமாக ஈழம் ஒரு தீவாகப் பரிணமித்தது.

கடல் மட்டம் தொடர்ந்து உயர்ந்து 6,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய நிலையை எட்டியது. ஈழம் ஒரு தீவாக பரிணமித்த காலம் இதுவாகும்.  4,000 முதல் 3,500 ஆண்டுகளுக்கு முன்பு, பனி உருகுவதைத் தவிர, அதிக மழை, கடல் மட்ட உயர்வுக்கு பங்களித்தது.  இது இரண்டு மீட்டர்கள் உயர்ந்து சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு தற்போதைய நிலையை எய்தியது.

கடந்த பனி யுகம் மனிதகுலத்தின் முன்வரலாற்றில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது.  சுமார் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் 100 மீட்டர் குறைவாக இருந்தது.  அடுத்தடுத்த புவி வெப்பமடைதல் மற்றும் பெரிய அளவிலான பனிக்கட்டிகள் உருகுவதால், நிலை படிப்படியாக உயரத் தொடங்கியது.

கடல் மட்டம் உயர்ந்ததால், கடலோரப் பகுதியில் உள்ள தாழ்வான நிலங்களும் வெள்ளத்தில் மூழ்கின.  இந்த நிகழ்வு ஆப்பிரிக்க, அமெரிண்டியன் மற்றும் ஆஸ்திரேலிய பழங்குடியினரின் நாட்டுப்புறக் கதைகள் மற்றும் கிரேக்க, ரோமன் மற்றும் ஹீப்ரு புராணங்கள் மற்றும் பிரளயங்களைக் குறிக்கும் தமிழருடைய குறிப்புக்களில் ஊடுருவிய பிரளயங்களின் கதைகள் அவை குறித்த தேடலுக்கு வழிவகுத்தது.

12,000 மற்றும் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு புவி வெப்பமடைதலின் அதிகரித்த விகிதம் கடல் மட்டம் கிட்டத்தட்ட 50 மீ உயர்ந்து, தாழ்வான நிலங்களை மூழ்கடித்து,  சுமார் 10,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடல் மட்டம் தற்போதைய கடல் மட்டத்தை விட சுமார் 50 மீ குறைவாக இருந்தது.   ராமேஸ்வரமும் மன்னாரும் நிலத்தால் இணைக்கப்பட்டு, இன்றைய மன்னார் வளைகுடாவில் விரிந்த நிலமானது 2,500 சதுர கி.மீ பரப்பளவில் வண்டல் படிவங்கள் மற்றும் பவளப்பாறைகளால் ஆக்கப்பட்டது.

சுமார் 14,500 ஆண்டுகளுக்கு முன்பு கடல் மட்டம் தற்போது இருப்பதை விட சுமார் 100 மீ குறைவாக தெற்கில் கடலில் இழந்த நிலத்தை, கடலோரப் பகுதியில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.

தற்போதைய மன்னார் வளைகுடா ஈழ தீபகற்பத்தை இந்தியாவுடன் இணைக்கும் 36,000 சதுர கிலோமீட்டர் நிலப்பரப்பாக இருந்தது

சுமார் 18,000 ஆண்டுகளுக்கு முன்பு, கடந்த பனி யுகத்தின் போது, ​​துருவங்களில் பனிக்கட்டிகள் மிகவும் பரந்த அளவில் பரவியது மற்றும் கடல் மட்டம் இன்று இருப்பதை விட 100 மீட்டருக்கும் அதிகமாக இருந்தது, தற்போது மன்னார் வளைகுடாவின் கீழ் அமைந்துள்ள ஒரு நிலப்பரப்பினால் ஈழ, இந்திய தீபகற்பத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.  அடுத்த 8,000 ஆண்டுகளில், புவி வெப்பமடைதல் தொடர்ந்தது மற்றும் பெரிய அளவிலான பனி மற்றும் பனிப்பாறைகள் உருகி, கடல் மட்டத்தை படிப்படியாக உயர்த்தியது மற்றும் தாழ்வான நிலங்களை மூழ்கடித்தது.  கடல் மட்டம் உயர்ந்ததால் தென்னிந்திய தீபகற்பத்தின்  ஈழத்துடன் இணைக்கும் நிலமும் தண்ணீருக்குள் சென்றது.

இந்நிலையில் பரந்த குமரிநாடு அழியவும், அத் தென்னாட்டில் வாழ்ந்த மக்களும் அவர்களின் தலைவனாகிய மன்னனும் இழந்த குமரிநாட்டுக்குப் பதிலாக அழிவுறாது நின்ற ஈழம் தொட்டு இமயம் வரையிலும் ஆப்கானில் இருந்து அசாம் வரையிலும் கைப்பற்றி ஆண்டார்கள் என்றும், பரந்த இந்தியா முழுமையையும் தங்கள் வாழிடமாகக் கொண்டார்கள் என்றும் வரலாறும் செப்புகிறது.

"நிலந்தரு திருவிற் பாண்டியன் அவையத்து

அறங்கரை நாவின் நான்மறை முற்றிய

அதங்கோட் டாசாற் கரில்தபத் தெரிந்து

மயங்கா மரபின் எழுத்துமுறை காட்டி'த்

(தொல். பாயிரம், 9. 12)

இதனை உறுதிப்படுத்துமாற் போன்று புத்த சமயக்குரவர்களின் மூன்றாவது பேரவை (மகாசங்கம்) முடிந்தபின், பிற நாடுகளில் புத்தநெறியைப் பரப்புவதற்காக ‘மாகாளி’ எனும் தேரர் காசுமீரத்திற்கும் கந்தாரத்திற்கும் (ஆப்கானித்தான்) சென்றபோது அங்கு அரவாளன்’ எனும் நாக மன்னன் ஆண்டுவந்தான் என்கிறது.இந்நாக மன்னன் மீப்பெரும் ஆற்றல் படைத்தவனாம்.  புத்தச் சமயத்தை தம் நாட்டில் பரப்புவதை அவன் மிகக் கடுமையாக எதிர்த்தானாம். அவன் தன் அரிய பேராற்றலால் பேய்மழை பெய்வித்து அதனால் வந்த பெருவெள்ளத்தால் வயற்காட்டுப் பயிர்களையெல்லாம் அவன் அழித்தானாம்.

இதைக் கேள்விப்பட்ட ‘மச்சந்திக தேரர்’ எனும் புத்தச் சமயக்குரவர் நாக மன்னனின் நாட்டுக்குத் தாமே நேரில் சென்றாராம்.  காற்றில் பறத்தல், நீர்மேல் நடத்தல் போன்ற அருஞ்செயல்களை வழியெங்கும் செய்தவாறே நாகனின் நாட்டை நோக்கி அவர் சென்றாராம்.

இதைக் கேள்வியுற்ற மன்னனும் ஏட்டிக்குப் போட்டியாய் இன்னும் பல அருஞ்செயல்களை செய்து காட்டினானாம்.  இதனால், பேய்க்காற்று வீசி இடிமழை பெய்ததாம்.  மலைமுகடுகளும் பெயர்ந்து விழுந்தனவாம்.  அத்தமிழ் மன்னன் தீயையும் புகையையும்  கக்கினானாம்.

ஆனால், தம் அரிய பேராற்றலால் அந்நாகனை அடக்கிய தேரர், புத்தநெறியில் அடிப்படைப் பாடங்களை  அவனுக்குப் புகட்டினாராம்.  இதனால், இமயமலை அடிவாரத்திலிருந்த நான்காயிரம் நாகர்களும் பிறரும் புத்தச் சமயத்தைத் தழுவினராம். நாக மன்னன் அத்தேரரைத் தன் அரியணையில் அமர வைத்து வெண்சாமரம் வீசினானாம் என்கிறது.

(மகாவம்சம் பன்னிரெண்டாம் படலம் (9-28)

அதே போன்று ஈழத்திலும் இரு நாகநாட்டு அரசர்கள் இடையே சிம்மாசனம் தொடர்பாக போர் மூண்டபோது காசிப புத்தர் என்பவர் அதே போன்ற அருஞ்செயல்களைப் புரிந்து அந்த இரு மன்னர்களுக்கு இடையே ஏற்படவிருந்த போரை நிறுத்தி அவர்களுக்கு அறநெறியை போதித்ததும் அவர்களும் தமது சிம்மாசனத்தை காசிப புத்தருக்கே அளித்து வணங்கினராம் என்கிறது.

இதனை மணிமேகலை பீடிகை கண்டு பிறப்புணர்த்திய காதை, 58 – 61

"வேகவெந்திறல் நாகநாட்டரசர் சினமா சொழித்து  மனமாசு தீர்த்தாங்கு அறச்செவி திறந்து  மறச்செவியடைத்து பிறவிப்பிணி மருத்துவன்  இருந்தறம் உரைக்கும் திருத்தாளி ஆசனம்"   என்கிறது.

இதனை

“ஜெயந்தோ நாமநாமேன தத்த ராஜா தடாஅகு நாமேன மண்டதீபோ திஅயம் தீபோ தடா அகு தடா ஜெயந்தராண்ணோசராண்ணோ கணித்தபடுச யுத்தம் உபத்திடம் ஆசிபீம்சனம் ஸட்டஹிம்சனம் கஸ்ஸபோ ஸொதாஸ பலொதென யுத்தேண பாணிணம் மகந்தம் பியசணம் திஸ்வமஹா காருணிகொமுனி தம்ஹண்ட்வா ஸட்டவிநயம் பவத்திம் ஸாஸணஸ்ஸ ஸகாடும் இமஸ்மிம் திபஸ்மிம் கருணாபலசொதிடொ விஸடிய ஸஹஸெஹி தாடிகி பரிவாரிடொ நாபஸாகம்ம அட்டஹாஸி சுபகூடம்ஹி பப்படெ என்கிறது.

” மகாவம்சம் 15:127-131

இந்த நாகநாட்டு அரசனான ஜெயந்த என்று குறிப்பிடப்பட்ட ஈழத்து பாண்டிய அரசன் சேந்தன் மாறன் நாணயம் கண்டெடுக்கப்பட்டதன் மூலமாக நாகர் என பெளத்தமத நூல்களில் விளிக்கப்பட்டோர் தமிழர்கள் என்பதும் உறுதியானது.

எனவே ஈழநாட்டிலிருந்த தமிழர்களை ‘நாகர்கள்’என்று அழைத்தை போன்றே காசுமீரத்திலும் கந்தாரத்திலும் பிற பகுதிகளிலும் ஆண்ட எல்லாத் தமிழர்களையும் ‘நாகர்’ என்று மகாவம்சமும் பிற புத்த சமய நூல்களும் உரைக்கின்றன.

எனவே புத்தர் பிறப்பதற்கு முன்பே தமிழ் மொழியும் அம்மொழிக்குரிய மண்பாண்ட எழுத்துக்களும் காணப்படுவதால் தமிழ் மொழியே ஈழம் தொட்டு இமயம் ஈறாக கோலோச்சியது என்பதும் புலனாகும்.

இதனை சங்ககால பாடல்களும்

"வடாஅது பனிபடு நெடுவரை வடக்கும்

தெனாஅது உருகெழு குமரியின் தெற்கும்’ என குறிப்பாக உரைப்பதால் குமரி நாட்டின் தென் முனையில் இருந்து இமயம் வரை தமிழர் தேசம் என்று உரைக்கிறது.

அது இன்றைய கன்னியா குமரியை குறிக்கவில்லை.கி.பி 5, ஆம் நூற்றாண்டிற்கு பிற்பட்ட காலத்திலேயே குமரி எனும் ஈழதேயத்தில் புதியதோர் அத்தியாயமாக சிங்கள மொழி தோன்றியது. எனவே சங்ககால பாடல்களில் ஏன் ஈழ பரியந்தம் இமயம் வரை என குறிப்பிடப்படவில்லை குமரி தொடக்கம் இமயம் வரை  என்று உள்ளதே என்ற கேள்விக்கு அன்றைய குமரியே ஈழம்தான் என்பது விடையாகும்.

மேலும் "கயல் எழுதிய இமய நெற்றியின்

அயல் எழுதிய புலியும் வில்லும்

நாவலம் தண்பொழில் மன்னர்

ஏவல் கேட்பப் பார்அர சாண்ட

மாலை வெண்குடைப் பாண்டியன்'

(சிலம்பு. 17: 1-5

கடவுள் நிலைஇய கல்ஓங்கு நெடுவரை

வடதிசை எல்லை இமயம் ஆக,

தென்னங் குமரியொடு ஆயிடை அரசர்

"தென்குமரி வடபெருங்கல்

குணகுட கடலா எல்லைத்

தொன்றுமொழிந்து தொழில்கேட்ப

வெற்றமொடு வெறுத்துஒழுகிய

கொற்றவர்தம் கோனாகுவை' (மதுரை.70-74)

என உரைக்கின்றன.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.