குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

“அதிக பலம் அதிக தவறுகளுக்கு வழிசெய்யக் கூடியது.” என்ற உங்கள் அறிவுரையை இறுக பற்றி கொள்ளுங்கள்

27.11.2024....தோழர் அனுரகுமாரவுக்கும், தேசிய மக்கள் சக்திக்கும்  திறந்த மடல் ! 7 ஆண்டுகளாக வலது புறமாக பயணித்த இலங்கை நாடாளுமன்றமும் அதன் பிழைப்புவாத  அரசியலும் இப்போ  ஆட்டம் காணத் தொடங்கியுள்ளது.

 

இடது புறமாக அல்லது centre-left என்று ஐரோப்பாவில் பெரிதும் பேசப்படும் மைய இடது அரசியலில் அதாவது இடதுசாரித்துவத்திற்கு நெருக்கமான அரசியலை பின்பற்றும்,   உங்களதும் (அனுரகுமார திஸ்ஸநாயக்கா), தேசிய  மக்கள் சக்த்தியினதும் எழுச்சி தெற்காசிய அரசியலிலும், பிராந்திய, மற்றும்  பூகோள அரசியலிலும் தாக்கங்களை உண்டு பண்ணியுள்ளன.

குறிப்பாக இலங்கையில்  அரசியலை முதலீடாகக் கொண்ட பலரை இந்தப் புதிய மாற்றம்  புரட்டி எடுத்திருக்கிறது. அதிர்வை கொடுத்திருக்கிறது.

ஏறத்தாள 175 புதிய முகங்கள் நாடாளுமன்றில் பிரவேசித்துள்ளன. முதியோர் அரசியலும், வரப்பிரசாத அல்லது சலுகை அரசியலும் கேள்விக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய மாற்றத்திற்கு ஈடுகொடுக்க முடியாத பலர்  தாமாக  அரசியல் ஓய்வை அறிவித்துள்ளனர்.

ஆட்சிப் பீடம் ஏறும் அரசாங்கங்களில்,  மாறி மாறி அமர்ந்து, கட்சி தாவி, கதிரைகளை சூடாக்கிய பலரை உங்களது (அனுர) அலை – சுனாமி அடித்துச் சென்று விட்டது.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்பட்டு இருந்த அதீத வரப்பிரசாதங்கள் நாட்டு மக்கள் செலுத்தும் வரியை கொள்ளையிடுவதாக உங்கள் அரசாங்கம் (தேசிய மக்கள் சக்த்தி)  சுட்டிக்காட்டியிருக்கிறது.

அதன் அடிப்படையில் வரிவிலக்கில் வழங்கப்படும் அதி சொகுசு வாகனங்களை நாடாளுமன்ற உறுப்பினர்கள் பெறுகின்ற வரப்பிரசாதம் நிறுத்தப்படுவதாகவும், அதற்கு பதில் எரிபொருளை மீதப்படுத்தும் சிக்கன வாகனங்களை அவர்களுக்கு வழங்க உள்ளதாகவும் அறிவித்திருக்கிறீர்கள்.

இலங்கை அரசியலில்,  அரசியல்வாதிகள் தாமாக முன்வந்து ஓய்வுபெறும் நிலையை  புதிய மாற்றம் ஏற்படுத்தி இருப்பதாக, ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றபின் நீங்கள்  (அனுரகுமாரதிஸ்ஸநாயக்கா)  கூறியிருந்தீர்கள்.

அவ்வாறே தேசியபட்டியல் நாடாளுமன்ற உறுப்பினருக்கான அழைப்பை சம்பளம் போதாமை காரணமாக பேராசிரியர் ஒருவர் நிராகரித்ததாக சமூக வலைத்தளப் பதிவொன்றில் கூறப்பட்டிருந்தது.

இந்த தகவல் உண்மையானால் மாற்றத்தின் மற்றுமொரு பெறு பேறு இது. கடந்த 77 வருட கால அரசியலில் யாராவது நாடாளுமன்றத்திற்கு செல்லும் வாய்ப்பை நிராகரித்திருப்பார்களா? அதுவும் உங்கள் ஆட்சியில் நிகழ்ந்நிருக்கிறது.

குறிப்பாக இலங்கை இந்தியா போன்ற நாடுகளில் மிக உயர் பதவிகளில் நல்ல ஊதியத்தில் பணியாற்றுபவர்கள் அரசியலுக்குள்  நுழைய முண்டியடியடிக்கிறார்கள். ஏனெனில் அதந்த பதவிகளில் காணாத சுகத்தை நாடாளுமன்ற பதவிகள் வழங்குகின்றன.

அதனால் நீங்களும் உங்கள் அரசாங்கமும் (தேசிய மக்கள் சக்த்தியும்) எடுத்துள்ள தீர்மானங்கள், இனி எடுக்கப் போகும் தீர்மானங்கள், அரசியலை முதலீடாக கருதி மக்கள் சேவையை புறக்கணிப்பவர்களுக்கு நல்ல பாடமாக அமையவேண்டும்.

“பலம் துஸ்பிரயோகத்திற்கு ஆட்படக் கூடியது. அதிக பலம் அதீத துஸ்பிரயோகத்திற்கு வழிசெய்யக் கூடியது. அதனால் எமது அப்பாவி  மக்கள்  எம்மை நம்பிக் கொடுத்த பலத்தை சரியாக உணர்ந்து அவர்கள் சுதந்திரமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழ வழி செய்ய  நாம் உழைக்க வேண்டும்.” என அமைச்சர்களுக்கு அனுர அறிவுரை கூறியதாக செய்தி ஒன்றில் படித்தேன்.

உலகில் இடதுசாரித்துவத்தை தீவிரமாக பின்பற்றிய (Leftist) அல்லது மைய இடதுசாரித்துவத்தை  (centre-left) பின்பற்றிய பல கட்சிகள், அரசியல் செயற்பாட்டாளர்கள் ஆட்சிப் பீடம் ஏறிய பின், பலத்தை குவித்த பின் தீவிர வலதுசாரிகளாக அல்லது Centre right ஆகவோ மாறிய கடந்த கால வரலாறுகள் நமக்குண்டு.

இலங்கையில் கம்யூனிசக் கட்சி, லங்கா சமசமாஜக் கட்சி, நவ சமசமாஜக் கட்சி உள்ளிட்ட பல இடதுசாரிக் கட்சிகள் சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் சேர்ந்து ஆட்சி அமைத்த போதெல்லாம் கடுமையான இனவாதத்திற்கு துணைபோயிருந்தன.

1972ஆம் ஆண்டில் சிறறிமாவோ பண்டாரநாயக்காவின் ஆட்சியில் உருவாக்கப்பட்ட முதலாம் குடியரசு யாப்பை உருவாக்கியவர் இடதுசாரித் தலைவரான கலாநிதி கொல்வின் ஆர். டீ சில்வா. அதனை  இடதுசாரித் தலைவர்களான இரட்டைக் கலாநிதி என்.எம். பெரேராவும்,  பீட்டர் கெனமனும் ஆதரித்திருந்தனர்.

சந்திரிக்கா, மகிந்த, கோட்டாபய ராஜபக்ஸவின் அமைச்சரவைகளில் அங்கத்துவம் வகித்த வாசுதேவநாணயக்கார, பேராசிரியர் திஸ்ஸவித்ததாரண, இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவரான டியூ குணசேகர போன்றோரும் அந்த அரசாங்கங்களின் அனைத்து தேசவிரோத,  இனவாத நடவடிக்கைகளுக்கு துணை போயிருந்தனர்.

அதுபோல் ஆயுதப் போராட்டத்தை நடத்திய நேபாள கம்யுனிஸ்ட் கட்சி அல்லது மாவோயிஸ்ட் (Communist Party of Nepal - Maoist Centre) என அழைக்கப்படும் அரசியல் இராணுவ அமைப்பும் பின்னாளில் தடம் மாறியதாக விமர்சனங்கள் உண்டு.

1994 ம் ஆண்டு பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இந்த புரட்சிகர  அமைப்பே நேபாள மக்கள் புரட்சியினைத் தலைமைதாங்கி நடத்தியது. ஆயினும்   புரட்சியை கைவிட்டு  ஜனநாயக நீரோட்டத்தில் கலந்து ஆட்சிப் பீடம் ஏறிய பின் வலது பக்கமாக திரும்பியதாக கூறப்படுகிறது.

மன்னராட்சி இப்போ ஒழிந்துவிட்டது. ஆனால் ஜனநாயகம் அல்லது குடியரசு ஆட்சியில், பண்டிட்  எனப்படும்  பிராமணர்களை கடந்து மாவோயிஸ்டுகளால் மேல் எழ முடியவில்லை.

நேபாள காங்கிரசுடனும், தனித்தும், ஏனைய கட்சிகளுடன் இணைந்தும் பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால்  3 முறை பிரதமராக இருந்த போதும் பிராமணர்களும், உயர் குடியை சேர்ந்தவர்களும், பணம் படைத்தவர்களுமே அதிகாரத்தில் உள்ளனர்.

அதனால்தான் நேபாளிய நிர்வாக கட்டமைப்பு  (bureaucracy)   பிரசந்தா எனும் புஷ்ப கமால் தகால் தலைமையில் அமைந்த மாவோயிஸ அரசாங்கத்திற்கு ஆதரவழிக்காமையினால் அங்கு இடதுசாரித்துவம் தோலிவியடைந்ததாக சுட்டிக்காட்டப்படுகிறது.

அதுபோலவே உங்கள் ஜேவிபியின் முன்னணியான தேசிய மக்கள் சக்த்தியினதும், உங்களதும் (அனுரகுமாரவினதும்) அரசாங்கத்தை 77 வருடமாக  புரையோடிப் போயுள்ள இலங்கையின் பிரோக்கிரசி தோற்கடிக்கும் என இந்திய ஆய்வாளர்கள் சிலர் கூறுகிறார்கள்.

ஆக 77 வருடகாலமாக ஊறி – ஊதிப் பெருத்திருக்கும் அரசியல் அழுக்கை சுத்தம் செய்து பதியதொரு அரசியல் செல்நெறியை உருவாக்கும் பணியை பலத்தை மிகவும் அவதானமாக பயன்படுத்துங்கள்.

நீங்களும், உங்கள் கட்சியான தேசிய மக்கள் சக்தியும்  வலது பக்கமாக மீண்டும் திருப்பாமல் தடம்புரலாமல்,  கொள்கைகளை இறுகப் பற்றியிருப்பது காலத்தின் கட்டாயமாகும். #ஞாபகங்கள்

https://www.facebook.com/nadarajah.kuruparan.33/posts/pfbid0G1KrAn4jvaWZWew3s2fA1Jwc5iYSZvx2DQNwcdFUPHVu5mUm6bU8PTDd2UZD98Ttl - மடல் 1

தொடரும்...நடராசா. கிருபாகரன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.