சைவநெறிக்கூடத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான சைவ மும் தமிழும் போட்டிகளுக்கான மிதிப்பளிப்பு நிகழ் வானது 24.11.2024 (நேற்று) சுவிற்சலர்லாந்து பேர்ண் சிவன்கோவில் மண்டபத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
தமிழும் என்ற தலைப்பினைக்கருத்தில் கொண்டும் அதற்கேற்ற வாறும் எண்ணி கண்ணகி,இராவணன், திருவள்ளுவர் வேடங்களைத் தாங்கச்செய்த பெற்றோர் களுக்கும் ஏனைய இறைதிருவுருவங்களையும், அகத்தியர்,கண்ணப்பநாயனார் ஆண்டாள் போன்ற வேடங்களைத் தாங்கவைத்த சுவிசு நாட்டுத்தமிழ்ப் பெற்றோர்களுக்கும், பாராட்டுகளைத் தெரிவிபபதுடன், வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றோம்.
யெனீவா, சியோன், வலே (இலவுசான்) இலசத்தபோன் (நொசத்தல்) பிறிபுக், பேர்ணின் போன்ற மாநிலங்களில் இருந்தும் மாணவர்கள் பங்கெடுத்திருதார்கள்.
எதிர்வருங்காலங் களிலும் எல்லாப்பகுதியிலிருந்தும் மாணவர்களை இணைத்து வசைவமும் தமிழும் சிறுவர் களின் மனங்களில் பதிந்துதாக்கத்தை ஏற்படுத்தும் நல்ல முயற்ச்சியில் எல்லாப் பெற்றார்களும் ஈடுபட வேண்டும் என்பதனை எதிர்பார்க்கின்றார்கள் சைவநெறிக்கூடத்தினர்.
இதனைப் பெர்ண் சைவநெறிக்கூடமானது தமது உயர் நோக்கத்திற்காக பெரும்பொருட்செலவிலும் கடின மாக முயன்று நிகழ்த்திவருகின்றார்கள் என்பதை உணர்கின்றோம்.
போட்டிகளுக்காக பெற்றுக்கொள்ளும் கட்டணங்களி லும் பார்க்க சைவநெறிக்கூடம் மேலதிகமான நிதியி னையும் இதற்காக நல்கைசெய்து இதனை ஆண்டு தோறும் பலருடைய ஒத்துழைப்புடன் செயற்படுத்தி வரு வது பாராட்டத்தக்கது.
திருக்குறள், தேவாரம்,திருவாசகம் ,திருப்பல்லாண்டு, திருப்புகள், திருப்புராணங்கள்,பொருத்தமான தலைப் புகளில் பேச்சுப்போட்டிகள், திருக்கதைப்போட்டிகள், ஈழநாடு, தமிழ்ப்பெரியார்கள் பற்றிய தலைப்புகளிலும் பேச்சுகள் திருக்கதைப்போட்டிகளும் மாநிலங்கள் தோறும் போட்டிகளை நிகழ்த்த அதற்கான ஏற்பாடுகள் அனைத்தையும் அதற்கான தொண்டர் பணிகளையும் சைவநெறிக்கூடம் ஏற்பாடுசெய்து அதன் நிறைவு நிகழ்வாக இந்தப் பரிசளிப்பு நிகழவையும், திருவேடம் தாங்கல் நிகழ்வையும் நிகழ்த்திக்கொள்ளகின்றார்கள்.