குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2056

இன்று 2025, சித்திரை(மேழம்) 19 ம் திகதி சனிக் கிழமை .

கோள்களின் பெயர்க்காரணமும் பூவுலகும் இரா.திருமாவளவன் மலேசியா...

21.11.2024....தி.ஆ.2055......பண்டைத் தமிழர் தம் நுண்மாண் நுழைபுல அறிவால் ஆழமாக ஆய்வு செய்து, தமிழ் மொழியின் சொற்களை அறிவியல் சொற்களாகவே அமைத்துள்ளனர். தமிழ்ச் சொற்கள் உணர்த்தும் மெய்ப்பொருளும், அறிவியல் உண்மைகளும் சிந்திக்கச் சிந்திக்க நம்மை வியப்பில் ஆழ்த்து கின்றன. புதிய அறிவியல் காலத்தில் மேலை நாட்டு அறிவியலாளர்களின் கண்டுபிடிப்புகள் கூறும் அறிவியல் கருத்துருக்கள் (concept) பலவற்றை முன்னரே பண்டைத்தமிழர் கண்டறிந்துள்ளனர்.

அதிர்வெடிக் கோட்பாடு (Bing bang theory) எனப்படும் கோட்பாடு உணர்த்தும் ஓர் உண்மை, பேரண்டமானது விரிந்து கொண்டுள்ளது என்பதே. கண்ணுக்குப் புலப்படாத அணுக்களின் மோதலினால் பெருவெடி ஏற்பட்டு அதனின்றே பேரண்டம் உருவாகி விரிந்து கொண்டுள்ளது என்றனர்.

‘பூ’ எனும் அருந்தமிழ்ச் சொல் மலர்தல், விரிதல் எனும் பொருளை வழங்குவதாகும் இச்சொல், வாயிலிருந்து காற்றை வெளியாக்கும் போது எழும் ஓசை அடிப்படையில் உருவாகியது. வாயில் நன்றாகக் காற்றைப் புடைப்பாக அடக்கி வைத்துக் கொண்டு, பின்னர் மெல்ல ஊதுகின்ற பொழுது ‘பூ’ எனும் ஓசையே ஏற்படும். ஒரு பையில் வாயை வைத்துக் கொண்டு ஊதினால் அந்தப் பை காற்றேறிப் புடைக்கும். இதே போல்தான் பூதியில் (பலூனில்) வாயின் வாயிலாகக் காற்றை ஊதினால் அது புடைக்கும். பூ என்று ஊதுவதால் காற்று ஏறி அது புடைக் கின்றது.இதனால் பலூனுக்குத் தமிழில் ‘பூதி’ எனத் வேர்ச்சொல்லாய்வுப் பேரறிஞர் ப.அருளியார் சொல்லமைத்தார். ஆங்கிலத்தில் பலூன் balloon எனக் கூறப்படும் சொல்லுக்குப் பெல் bhel  என வேர்ச்சொல் கூறுவர். இதற்கு மிகுதல், பெரிதாதல், வீங்குதல், உருட்சிப் பொருள், தொகுப்பு எனப் பொருள் கூறப்பட்டுள்ளது.

உல் = சேரல், சேரலால் மிகுதல், மிகுதலால் பெரிதாதல், வீங்குதல் என இவ்வேருக்குப் பொருள் அமையும். பூ என ஊதுதலாலும் சேரல் கருத்தாலும் பெருமைப் பொருள் அமைவது இயல்பு. ஊதுதலை வாய்வழி நிகழும் மூச்சுக் காற்றொலியால்  ஆன சொல்லென்பார் பாவாணர்.  அதே வேளை உல் எனும் சேரல் கருத்து வழியும் மிகுதல் பொருள் நிகழும் என்பது பாவாணர் விளக்கமே.

அவ்வாறு அமைந்த சேரல் கருத்துடன் தொடர்புடையதே இந்தோ ஐரோப்பிய வேரான பெல் bhel என்பது. உல் > புல்> பல்> பல்கு,

பல்>பரு>பெரு,  பல்>பெல்> bhel

bhel- (2)

Proto-Indo-European root meaning "to blow, swell," "with derivatives referring to various round objects and to the notion of tumescent masculinity" [Watkins].

It forms all or part of: bale (n.) "large bundle or package of merchandise prepared for transportation;" baleen; ball (n.1) "round object, compact spherical body;" balloon; ballot; bawd; bold; bole; boll; bollocks; bollix; boulder; boulevard; bowl (n.) "round pot or cup;" bulk; bull (n.1) "bovine male animal;" bullock; bulwark; follicle; folly; fool; foosball; full (v.) "to tread or beat cloth to cleanse or thicken it;" ithyphallic; pall-mall; phallus.

It is the hypothetical source of/evidence for its existence is provided by: Greek phyllon "leaf," phallos"swollen penis;" Latin flos "flower," florere "to blossom, flourish," folium "leaf;" Old Prussian balsinis"cushion;" Old Norse belgr "bag, bellows;" Old English bolla "pot, cup, bowl;" Old Irish bolgaim "I swell," blath "blossom, flower," bolach "pimple," bolg "bag;" Breton bolc'h "flax pod;" Serbian buljiti"to stare, be bug-eyed;" Serbo-Croatian blazina "pillow."

An extended form of the root, *bhelgh- "to swell," forms all or part of: bellows; belly; bilge; billow; bolster; budget; bulge; Excalibur; Firbolgs.

An extended form of the root, *bhleu- "to swell, well up, overflow," forms all or part of: affluent; bloat; confluence; effluent; effluvium; efflux; fluctuate; fluent; fluid; flume; fluor; fluorescence; fluoride; fluoro-; flush (v.1) "spurt, rush out suddenly, flow with force;" fluvial; flux; influence; influenza; influx; mellifluous; phloem; reflux; superfluous.

என இந்தோ ஐரோப்பிய வேர்ச்சொல் அகரமுதலி விளக்கம் தருகின்றது.

காற்றால் ஊதுவது ‘ஊதை’ ; காற்றுக்கு‘ ஊதை’ எனும் ஒரு சொல்லும் உண்டு. காற்றேறி பெரிதான உடம்பு, ‘ஊதை உடம்பு’ என்றும் ‘ஊத்தை உடம்பு’ என்றும் சொல்லப்படும். ஊதுவது ‘ஊதி’ என்றானது.‘ஊதல்’ பகர ஒற்று ஏற்று ‘பூதல்’ ஆனது. ‘ஊது’ எனும் சொல்லின் முன்னால் ‘ப்’ சேர்ந்தால் ‘பூது’ என்றாகும். பூது > பூதம்.

‘பூதம்’ என்றால் மிகப்பெரிய உருவம் என்றும் பொருளாகும். ‘பூ’ எனும் விரிதல் பொருளில் பூது > பூதம் முதலான சொற்கள் உருவாகின. அண்டவெளி யானது எல்லையற்று அகன்று விரிந்து, கிடப்பதால், விரிந்து கொண்டிருப்ப தால் பூ> பூது> பூதம் என்றனர். எல்லையற்று புடைத்து விரிந்து கொண்டிருக் கின்ற அண்டவெளிப் பூதத்தின் கூறுகள் ஐந்தாகக் கிடப்பதைக் கண்டறிந்த தமிழ் அறிவியலாளர்கள் அவற்றை ‘ஐம்பூதங்கள்’ எனக் குறிப்பிட்டனர். நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் இயற்கையின் ஐந்து தனிமங்கள் ஐம்பூதங்கள் எனச் சொல்லப்பெற்றன. அண்ட வெளியின் விரிவுச் செயலைக் குறித்தே ‘புடை’ எனும் சொற் பொருளிலிருந்து ‘புடைவி’ என்றும் ‘புடவி’ என்றும் சொல் உருவாகியது. ‘புடவி’ என்றால் புடைத்து விரிந்து கொண்டிருக்கும் பேரண்டம் என்று பொருளாகும். இக் கருத்தையே அதிர்வெடிக் கோட்பாடு (Bigbang theory) விளக்குகின்றது.

பிற்கால அறிவியல் கண்டுபிடிப்பால் உணர்த்தப்பட்ட  கொள்கை யான இக்கண்டுபிடிப்பு அறியப்படாத பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தமிழரிடம் தமிழ்ச்சொற்கள் வாயிலாகக் காணக் கிடைத்திருப்பது விந்தையிலும் விந்தைதானே. தமிழ்ச் சொற்கள் ஒவ்வொன்றும் இவ்வாறான அறிவியல் கோட்பாடுகளையும் மெய்மங்களையும் உணர்த்துகின்ற அரிய முதுசொம்மாகும்.

நிலம், நீர், தீ, வளி, விசும்பு எனும் ஐம்பூத தனிமங்களானவை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்னால் தமிழரால் ஆய்ந்தறியப்பட்டு உணர்த்தப்பட்டவை யாகும்.

தொல்காப்பியத்தில்,

நிலம், தீ, நீர்,வளி, விசும்போடு ஐந்தும்

கலந்த மயக்கம் உலகம்

எனும் நூற்பா ஐம்பூதங்கள் கலந்த மயக்கமே இவ்வுலகம் என்கின்றது. இன்றைய அறிவியலில் பொருள்களின் நிலையை மூன்றாகப் பகுத்துச் சொல்கின்றனர். பள்ளிக் கூடங்களில் போதிக்கின்ற பொழுது, பொருள்களைத் திடப்பொருள், நீர்மப்பொருள், வளிமம் பொருள் என மூன்றாகப் பகுத்தே பயிற்றுவிப்பர். குளிர்ச்சி, வெப்பம் எனும் இயற்கையின் இருவகைத் தன்மைகளே பொருள்களின் நிலைமாற்றத்திற்குக் காரணமாகும். வெப்பமேறிய நீர் ஆவியாகிறது. ஆவியானது குளிரடைந்தால் மீண்டும் நீராகின்றது. இவ்விரு தன்மைகளே பொருள்களின் நிலை மாற்றத்திற்குக் கரணியமாக அமைகின்றன. இயற்கையின் தன்மை எங்கும் எதிலும் இருவகையாக அமைந்திருப் பதைக் கண்ட பண்டைத் தமிழர் ‘இருமை (Dualism)  ’ கொள்கையை வகுத்தனர். அன்பு-அறிவு, ஆண்-பெண், தண்மை-வெம்மை, இரவு-பகல் என இருமை தன்மைகளை நாம் பார்க்கக் காணலாம். இவ்விருமை தன்மையை உணர்த்தும் தமிழரின் அம்மை- அப்பன் கோட்பாடாகும்.

வள்ளுவப் பெருமான் திருக்குறளில் இதனை இருமை வகை என்கிறார். இவ்விருமை வகையின் கரணியமாகவே பொருள்களின் நிலைத்தன்மைகள் மாறுகின்றன. பொருள்களின் நிலைத் தன்மைகள் பொதுவாகப் பாடசாலைகளில் மூன்றாகப் பயிற்றுவிக்கப்பட்டாலும் நான்காவது ஒன்று உண்டு என்றும் அறிவியலில் சொல்லப்படுகின்றது. இதனைப் பொருளின் நான்காம் நிலை என்கின்றனர். இதற்கு ‘பிளாசுமா’ ((Plasma)) என்று பெயர். தமிழில் இதனைத் தீய்மம் எனலாம்.

தமிழர் கண்டறிந்த ஐம்பூதக் கொள்கைக்கும் பிற்கால அறிவியல் வகைப்படுத்தும் பொருள்களின் நிலைத்தன்மைக்கும் நெருங்கிய தொடர் புண்டு. தமிழர் நிலம், நீர், தீ, வளி, விசும்பு என்று கூறியவற்றையே பொருள் களின் நிலைகளாக வடிவமைத்தனர். ஆனால் விசும்பு எனச் சொல்லப்பெற்ற வெளி அல்லது ஆகாயம் இங்குச் சேர்த்துக் கொள்ளப்பட வில்லை. பண்டைத் தமிழர் வெட்டவெளியை (Space) ஒரு இயற்கை மூலமாகப் பார்த்தது வியக்கத்தக்கச் செய்தியேயாகும்.

நிலம்​>​திடம் (Solid)

நீர்​​>​நீர்மம் ((Solid)

தீ​​>​தீய்மம் (Plasma)

வளி​​>​வளிமம் (Gas)

விசும்பு​>​வெளிமம் (Space)

கிரேக்கர்கள் விசும்பினைத் தனி மூலமாகக் காணவில்லை. எனவேதான் அவர்களின் இயற்கை பூதங்கள் நான்கிலேயே நின்றுவிடும்.

தமிழர், அண்டவெளியை குறிப்பிடும்போது வெளி, காயம், விண், விசும்பு, ஏரகம் முதலான சொற்களிலேயே குறிப்பிடுகின்றனர். இவையனைத்தும் விரிந்து, பரந்து, இருண்டு கிடக்கும் அண்டம் எனும் பொருளையே உணர்த்தும். ஏர் எனும் விரிந்த வெளிப் பொருளை உணர்த்தும் சொல்லை பரந்து இயங்கிக் கொண்டிருக்கின்ற காற்றுக்கு கிரேக்கத்தில் பயன்படுத்திக் கொண்டனர். ஏர் = விரிந்த வயல் வெளி, உயர்ந்த வான் வெளி. ஏரகன் = வான்வெளி போல் விரிந்த உயர்ந்த அறிவைக் கொண்டவன் ; ஏர் (Air)

c. 1300, "invisible gases that surround the earth," from Old French air "atmosphere, breeze, weather" (12c.), from Latin aer "air, lower atmosphere, sky," from Greek aēr (genitive aeros) "mist, haze, clouds," later "atmosphere" (perhaps related to aenai "to blow, breathe"), which is of unknown origin. It is possibly from a PIE *awer- and thus related to aeirein "to raise" and arteria "windpipe, artery" (see aorta) on notion of "lifting, suspended, that which rises," but this has phonetic difficulties.

In Homer mostly "thick air, mist;" later "air" as one of the four elements. Words for "air" in Indo-European languages tend to be associated with wind, brightness, sky. In English, air replaced native lyft, luft (see loft (n.)). In old chemistry, air (with a qualifying adjective) was used of any gas.

To be in the air "in general awareness" is from 1875; up in the air "uncertain, doubtful" is from 1752. To build castles in the air "entertain visionary schemes that have no practical foundation" is from 1590s (also towers in the air; in 17c. English had airmonger "one preoccupied with visionary projects"). Broadcasting sense (as in on the air, airplay) is by 1927. To give (someone) the air"dismiss" is from 1900. Air pollution is attested by 1870. Air guitar is by 1983. Air traffic controller is from 1956. ( Online Etymology Dictionary)

இஃது air ஏர் என்பதற்கான ஆங்கில வேர்ச்சொல் விளக்கம்.

முன்செல்வது தூக்கிப் பிடிக்கின் உயர்ந்து செல்லும். எனவே ஊகாரச் சுட்டு வேரில் முன்செலல் கருத்தில் உயர்வு கருத்தும் தோன்றும் என்பார் பாவாணர். இவ்வுகரத்தின் பின்னைத் திரிபாய் எகரம் தோன்றும் என்பதும் பாவாணர் காட்டும் தெளிவே.

உ>இ>ஈ>எ>ஏ

எக்குதல் = வயிற்றுப் பக்கத்தை மேலெழுவித்தல்.

எஃகுதல் = பஞ்சை மேலெழச் செய்தல்.

எட்டுதல் = உயர்ந்து தொடுதல்.

எடுத்தல் = தூக்குதல்.

எண்ணுதல் = மேன்மேற் கருதுதல், மேன்மேல் தொகையைப் பெருக்குதல்.

எத்துதல் = மேனோக்கி வெட்டியிழுத்தல் அல்லது உதைத்தல்.

எத்து = எற்று.

எம்புதல் = எழுதல்.

எவ்வுதல் = குதித்தெழுதல்.

எழுதல் = உயர்தல், படுக்கைவிட்டெழுதல்.

எழும்புதல் = உயர்தல், படுக்கைவிட்டெழுதல்.

ஏ = உயர்ச்சி, பெருமை.

“ஏபெற் றாகும்”    (தொல். உரி. 7)

ஏங்குதல் = நுரையீரலை யெழுவித்துப் பெருமூச்சு விடுதல்.

ஏண் = உயர்ச்சி. ஏண் - ஏணி = உயரச் செல்லும் கருவி.

ஏண் - சேண் = உயர்ச்சி.

ஏண் - ஏணை = தொங்கும் தொட்டில்.

ஏத்தாப்பு (ஏத்த யாப்பு) = மேலணியும் வல்லவாட்டு.

ஏத்துதல் = உயர்த்திப் புகழ்தல், வழுத்துதல்.

ஏந்துதல் = உயரக் கையில் தாங்குதல், ஏந்தல் = குடிகளைத் தாங்கும் காவலன்.

ஏப்பம் = வயிற்றினின்று மேலெழுங் காற்று.

ஏர்தல் = எழுதல்.

ஏலுதல் = கையால் அல்லது மனத்தால் ஏந்துதல்.

ஏறுதல் = மேற்செல்லுதல்.

( வேர்ச்சொல் கட்டுரைகள் 1- பக்கம் 34, பாவாணர்)

உந்தி முன்செல்வது உயர்ச்சிப் பொருளிலும் கருத்தாய் அமைவதால் உ>எ>ஏ உயர்ச்சியைக் குறித்து ஏர் என்றாகி எழுதலையும் உயர்ச்சியையும் குறித்தது. உயர்ந்த வான் விரிந்து விண்ணைக் கிடப்பதால் ஏர் விரிவையும் குறித்தது.  இவ்வகன்ற விரி பொருளே விரிந்த வயல்வெளியையும் குறித்தது.

இதே போல் வெளி எனும் அருந்தமிழ்ச் சொல்லும் அப்படியே ஆங்கிலத்தில் Valley என வழங்குகின்றது. இரண்டு மலைகளுக்கிடையே நீரோட்ட வெளியையும் ஆற்றுப்படுகை வெளியையும் இவ்வாறு குறிப்பிடுகின்றனர். தமிழில் உள்ள காயம் எனும் சொல்லே Sky என ஆங்கிலத்தில் மாறியது. காய் எனும் கருமைப் பொருளில் அமைந்த சொல்லிலிருந்து காய் > காயம் என விண்ணுக்குச் சொல் உருவாகியது. இதனையே வடமொழியில் ஆகாயம்> ஆகாசம்> ஆகாஷ் எனத் திரித்துக் கொண்டனர்.

‘காய்’ எனும் மூலச் சொல்லிலிருந்து Sky என இலத்தினுக்குத் திரிந்து பின்னர் இச்சொல் ஆங்கிலத்திற்கு வந்தது எனலாம். ‘விசும்பு’ எனும் சொல்லும் விள்> விரி > விசி எனத் திரிந்து விசும்பு ஆகியிருக்கிறது.

“முகிலுக்கும் அது நிற்கும் வானிற்கும் விண் என்னும் பெய ருண்மையால், அப் பெயரை அடியாகக் கொண்ட விண்டு என்னும் பெயரும் திருமாலுக்கு ஏற்பட்டது.

விள்ளுதல்

= விரிதல், திறத்தல், வெளியாதல்.

விள் - விண்

= வெளி, வானம், முகில், மேலுலகம்.

விண் - விண்டு

= வெளி, வானம், முகில், திருமால், மேலுலகம்.”

எனப் பாவாணர் தம் தமிழர் மதம் எனும் நூலில் குறித்துள்ளார்.

சூரியனின் பாதையும் உலகத்தின் பாதையும் ஒன்று சேர்க்கின்ற புள்ளி ‘விழுப்புள்ளி’ எனப்படு கின்றது.

மார்ச் 21 ம், செப்டம்பர் 21 ம் இந்த விழுப்புள்ளி ஏற்படுகின்ற காலம் எனக் குறிப்பிடப்படுகின்றது. இக்காலத்தில் இரவும் பகலும் சரிசமமாக இருக்கும். இவ் விழுவப் புள்ளியே விழுவம் > விசுவம் என மாறியதாக அறிஞர்கள் சிலர் குறிப்பிடுகின்றனர். இதுவே வடமொழியில் விஷ்வம்> விஷ்ணவம் > வைஷ்ணவம் என மாறியிருக்கிறது என்பது அத்தகையார் கருத்து. ஆனால் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் விரி பொருளில் வரும் விள் எனும் சொல்லிலிருந்து விள்>விண்> விண்டு என்றாகி விண்டு(தமிழ்) > விண்ணு என மருவி விண்ணு > விஷ்ணு என வடமொழியில் திரிந்திருக்கிறது என்கிறார். பின்னர் விஷ்ணுவிலிருந்து வைஷ்ணவம் உருவாகியிருக்கிறது. இதுவே பின்னர் தமிழில் தமிழ் மரபுக்கேற்ப வைணவம் என மாறியிருக்கின்றது.

திருமால், சிவன் எனும் இரு கடவுட் படைப்பும் தமிழரின் இருமை வகை கொள்கையின் விளைவேயாகும். நீரைக் குறித்த நீர் > நீரணண்> நாரணன் வடிவும், சிவ = சிவப்பு, சிவன்> செம்மையானவன், சிவந்தவன் எனும் நெருப்பைக் குறித்த சிவ வடிவும் இருமைக் கொள்கையின் வெளிப்பாடுகளே. இவையே பின்னால் கோட்பாடுகளையுடைய சமயங்களாக உருவெடுத்தன.

தமிழரின் விண்ணியல் சார்ந்த அறிவியக்கம் விண் + ஞானம் (காண் > க்ஞான் > ஞானம், தமிழின் அறிவுக்கண்ணால் காணல், காண் க்ஞான் என வடமொழியில் மாறியது என்பார் பாவாணர்)  என விண்ணைப்பற்றிய அறிவாக (ஞானமாக) அமைந்து மிக முதிர்ந்த  விளக்கமாக உருவெடுத்தது என்பது மறுக்க முடியாத உண்மையாகின்றது.

தமிழ் ‘கோள்’ எனும் உருண்டு திரண்டு வட்ட வடிவமானது எனப் பொருள் படும். இதனைக் கோளம் என்றும் கூறுவர். கதிரவைனைச் சுற்றிக் கொண்டி ருக்கின்ற கோள்கள் அனைத்தும் வட்ட வடிவமானவை என்பது அறிவியல். இதனைப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே கண்டறிந்தது தமிழரின் அறிவு.

உல்> குல் > குள் > கொள்

உல் = வளைவுக் கருத்தில் அமைந்த வேர்ச் சொல்

கொள் = கையை வளைத்துப் பெறுதல்

கொள்> கொள்ளு கையை வளைத்துப் பெறுதல்

கொள் > கோள் = வளைத்துப் பெறுதல், கோள் எனும் சொல் பெறுகின்ற, அடைகின்ற அடைவு நிலையையும் இதனால் குறித்தது.

கொள் > கொள்கை = நாம் நம்மில் பேணிக் கொண்டிருக்கின்ற நெறிமுறை.

கொள் > கோள் = குறிக்கோள். ‘கோள்’ எனும் இச்சொல்லே ஆங்கிலத்தில் அப்படியே Goal என வழங்குகின்றது.

கோள்> கோளு = வளைந்து செல்

கோள்> கோடு = வளைவாக உள்ள வரி

கோடு > கோடல் = வளைதல், நெறிமுறை பிறழ்தல்

‘கோடு’ என்று கேட்டதுமே நம் மனத்தில் நேராக இழுக்கப் பெற்ற வரி என்றுதான் நினைப்போம். ஆனால் அந்தச் சொல் உணர்த்தும் வேர்ப் பொருள் நேர் என்று காட்டவில்லை. இதனால் இச்சொல் பிழையானது என நாம் கருதிவிடக் கூடாது. கோடு எனப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்ப தாகவே நம் பண்டைத் தமிழர் அறிவியல் நோக்குடனேயே சொல்லமைத் துள்ளனர். உருண்டை வடிவமாக விளங்குகின்ற இவ்வுலகில் ஒரு நேர்க் கோட்டினைக் கட்டாயமாக இட முடியாது. நாம் நேர்க்கோடு என்று அளந்து பார்த்துச் சொல்வதெல்லாம் ஒரு வட்டத்தின் ஒரு பகுதியையே, அதாவது வளைவின் ஒரு பகுதியையே கோடு என்கிறோம். உலகத்தில் ஓர் இடத்தில் நின்று கொண்டு ஒரு நீண்ட கோட்டினை இழுத்துக் கொண்டே வந்தால் இறுதியில் அது தொடங்கிய இடத்திற்கே தான் வரும். ஏனெனில் நம் நில உலகம் வட வடிவமானதாகும். இத்தகு அறிவியல் உண்மையை, தாம் உருவாக்கிய சொல்லுக்குள்ளேயே அமைத்திருப்பது, தமிழர்கள் மிகுந்த அறிவியல் முதிர்ச்சியுடைய இனத்தினர் என்பதையே உணர்த்துகின்றது.

இனி உலகம் எனும் சொல்லும் இத்தகு அறிவியல் கோட்பாட்டை உணர்த்தும் அரிய சொல்லேயாகும்.

உல் > உலவு = சுற்று

உல் > உலா= சுற்றுலா, வட்டமாக வளைந்து வருதல்

உல்>  உலவு> உலகு = சுழல் வட்டத்தில் சுற்றும் உலகம்

உல் > உல > உலண்டு = வட்டமாக உருண்டிருக்கும் புழு

உல் >உலகு> உலகம் = வட்டமாக இருக்கும் பூமி

உல்> உர்> உருள்> உருண்டை.

மேற்கண்ட வட்ட வடிவ பொருளையும் சுழலும் பொருளையும் குறிக்கும் வேர்ச்சொல்லே  உல் என்பதாகும். இந்த வேர்ச்சொல்லின் அடிப்படையிலேயே உலகம் எனும் சொல்லும் உருவாகியது. உலகம் உருண்டை என்பதை அறிவியல் சான்றுகளுடன் நிறுவியவர் ‘கலிலியோ’ எனும்  அறிஞராவார். ஆனால் கலிலியோ சொல்லுவதற்குப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதா கவே நம் பண்டைத் தமிழ், ‘உலகம்’ எனும் அரிய சொல்லிலேயே உலகம் உருண்டை எனும் கருத்துருவைத் செறித்துள்ளது வியந்து போற்றி உரைக்க வேண்டிய ஒரு செய்தியாகும்.

பண்டைத் தமிழர், வானை உற்று நோக்கி சூரிய மண்டலத்தைச் சுற்றி ஒன்பது கோள்கள் இருப்பதைக் கண்டறிந்துள்னர். அவ்வொன்பது கோள்களுக்கும் தமிழிலேயே பெயரமைத்திருந்தனர். ஒன்பது கோள்களையும் தன்னகத்தே ஈர்த்து வைத்திருப்பது சூரியனாகும். சூரியனுக்கு ஞாயிறு, கதிரவன், பகலவன், பரிதி முதலான அருந்தமிழ்ப் பெயர்கள் உள்ளன.  இவற்றுள் சூரியன் என்பது ஊசி போல் குத்துகின்ற சுட்டெரிக்கும் வெயிலை வீசுவதால் உருவாக்கப்பட்டச் சொல்லாகும்.

உல் > சுல்> சுலீர்

சுல் > சுலீர்> சுரீர்

சுல் >சுர் > சூர்

சுல் > சூர் > சூரி

சுல் > சூரி > சூரி +அன் = சூரியன்

சூரிய ஒளி மண்டையில் சுலீர் என்றும் சுரீர் என்றும் குத்துகிறது என மக்கள் வழக்கில் பேசுவதைக் கேட்டிருக்கலாம். சூரி என்பது பண்டை நாளில் ஓலைச் சுவடியில் துளையிடுவதற்காகப் பயன்படுத்தப்படும் துளையிடும் ஊசியாகும்.

நால்> ஞால் எனின் தொங்குதல் என்றும் நடு என்றும் பொருள்படும். நல்> நள் > நள்ளிரவு, நண்பகல் என்று சொற்கள் உருவாகியிருப்பதைக் காண்க. நல் >நய், நய் > அம் = நயம், நயம் > ஞயம். நயம் > நயன் = நடுநிலையான உண்மைத் தன்மை. நயன் > நயன்மை = நீதி. நயம்>ஞயம்> ஞாயம் = நீதி.  நல் >நால் >ஞால்> ஞாய்> ஞாயிறு=நடுவாக இருந்து இயங்கி ஏனைய கோள்கைளை ஈர்க்கும் சூரியன்.

தொல்காப்பியத்தில் ‘எல்லே இலக்கம்’ என ஒரு நூற்பா வருகின்றது. ‘எல்’ என்பது இலக்கமாகும். ‘எல்’ எனின் ஒளி எனப் பொருள்படும். ‘எல்’ எனும் வேர்ச்சொல்லிருந்து எல்லன், எல்லியன், எல்லோன் முதலான சொற்கள் உருவாகி சூரியனையே குறித்தன. இந்த எல்லியன் எனும் சொல்லே Helium என மாறியிருக்கின்றது.

தமிழின் சுல் Sul Sol Solar என ஆங்கிலத்தில் மாறியது.  சுல் > சொல் என ஒளியைக் குறித்த தமிழ் வேர் உலகில் பல்வேறு மொழிகளில் நேரடியாகவும் திரிந்தும் வழங்கி வருகின்றது.

காட்டாக :

so

Ligurian †

sol

Latin

sol

Old Icelandic language

sol

Old Swedish

sol

Old Danish

sol

Asturian

sol

Aragonese language

sol

Galician

sol

Danish

sol

Icelandic

sol

Spanish

sol

Catalan

sol

Castilian

sol

Extremaduran

sol

Valencian

sol

Balear Catalan

sol

Ladino

Sol

Fala

sol

Mirandese

sol

Portuguese

sol, sola

Norwegian

sol

Gjestal Norwegian

sol, sul

Piedmont (Piemontese)

sol (sel)

Faroe (Faroese)

sol

Swedish

sol

Nones

sol

Emiliano Carpigiano

sol

Emiliano Ferrarese

sol

Korlai

solo

Dyimini

sal

Garo

sal

Lalung

Sal

Riang

sole

Venetian

sole

Italian

sole

Neapolitan

sole

Maceratese

sole

Neapolitan-Calabrian

sole

Norman

sole

Nynorsk

sola

Norwegian

சூரியனை நடுவிடமாகக் கொண்டு இயங்கும் கதிரவ நடுவியக்கத்தை Heliocentric என்று ஆங்கிலத்தில் குறிப்பிடுவார்கள். இந்தக் கதிரவ நடுவியக்க முறையை குறிக்கும் மிக நுட்பமான அறிவியல் சொல்லே ‘ஞாயிறு’ என்ப தாகும். இன்றைய அறிவியல் உணர்த்தும் அறிவியல் கருத்துருவைத தமிழ்ச் சொற்கள் வாயிலாகப் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே தமிழர்கள் உணர்த்தியுள்ளனர் என்பது தமிழினத்தின் மிகத் தொன்மையான நுட்பமான அறிவியல் மூதறிவைக் காட்டுகின்றது.

‘சூரியன்’ எனும் சொல்லின் வேர்ச்சொல்லாக இருப்பது ‘சுல்’ என முன்னரே கண்டோம். சுல் எனும் அதே வேரடியிலிருந்து உருவாகியதே சுல்> சொல்> சொன் > சுன்>  sun, sol, solar எனும் ஆங்கிலச் சொற்களாகும்.

சூரிய மண்டலத்தில் இருக்கும் கோள்களில் சூரியனையும் சேர்த்து மொத்தம் தொண் கோள்கைளைப் பண்டைத் தமிழர்கள் கணக்கிட்டுள்ளனர். அவை, ஞாயிறு, நிலவு, செவ்வாய், அறிவன், , வியாழன், வெள்ளி, காரி, இராகு, கேது என்பன. நிலவுக்குத் தமிழில் மதி, திங்கள் எனப் பெயர்கள் உண்டு. தேய்பிறை, வளர்பிறை காலக் கட்டங்கள் முப்பது நாள்கள் பிடித்து புவியைச் சுற்றி வருகின்றமையால் கால அளவீட்டை குறிப்பிடும் ‘மதி’ எனும் அருந்தமிழ்ச் சொல்லால் நிலவு குறிப்பிடப்பட்டது. ‘மா’ எனும் ஓரெழுத்து ஒரு மொழிச் சொல்லானது பண்டை நாளில் அளவு எனும் பொருளில் பயன்படுத்தப்பட்டது. ‘மா’ எனின் பெரிய, கரிய அளவு, மாம்பழம், விலங்கு எனும் பொருள்படும். மாத்தல் என்றால் அளத்தல் என்று பொருள்.

உல் > பொருந்துதல், ஒத்தல் கருத்து வேர்.

உல்> முல்>மல்> மால் > மா = பொருத்திப் பார்த்த அளவு

மா >மான்> மானம் = அளவு

மான் >மானி = அளக்கும் கருவி.

வெப்பமானி = வெப்பத்தை அளவிடும் கருவி.

மா > மாத்தல் = அளத்தல். மா > மாத்திரை = எழுத்தைப் பலுக்க எடுக்கும் கால அளவு. ஆங்கிலத்தில் meter எனும் சொல் ‘அளவு’ எனும் பொருளில் தமிழ்ச் சொல்லான ‘மாத்திரை’ எனும் சொல்லிலிருந்து திரிந்து சென்றதாகும். இச்சொல்லின் அமெரிக்க எழுத்துக் கூட்டல் metre  என்பதாகும். கிரேக்க, இலத்தீன் போன்ற மொழிகளில் இச்சொல், அளவு எனும் பொருளிலேயே வழங்குகின்றது.

‘‘O.E.: Meter, O.fr. : Metre, L.: Metrum Gr: Metron = Measurement.

மாத்திரை Matra Metre Meter என இச்சொல் ஆங்கிலத்திற்கு மருவியது எனலாம். எனவே மாத்தல் எனும் கால அளவீட்டு பொருளிலேயே நிலவுக்கு ‘மதி’ எனும் அருந்தமிழ்ச்சொல் உருவாக்கப்பெற்றது எனலாம். இவ்வடிப்படை யிலேயே மதி >> மாத்தல் (அளத்தல் ‡வினை) . மாதம் = நிலவின் ஒரு முழுச் சுற்றின் கால அளவு என சொல்லடைவுகள் உருவாகின. ‘மாதம்’ எனும் கால அளவுச் சொல்லே month என மருவியது.

‘திங்கள்’ எனும் சொல் ஒளிவிட்டுத் திகழ்ந்து கொண்டிருப்பது எனும் பொருளில் ‘நிலவை’ குறித்ததாகும். தக தக = ஒளி வீசித்திகழ்தல்.

தக >தகு>திகு> திகள்> > திங்கள் ( நிலா)

தகு> தகு>தங்கு>தங்கம் = ஒளிர்விடும் பொன்.  நிலவுக்கு அதன் சிறப்பினால் திங்கள் எனப் பெயர் வந்தமையால் மாதத்தையும் திங்கள் என்றனர். ஞாயிற்றுக்கு அடுத்து மாதக் கால அளவுக்குப் பயன்படுத்து கின்றமையால் ஞாயிற்றுக் கிழமைக்கு அடுத்து திங்கள் கிழமை என நிலவை முன்னிறுத்தியே பெயரமைத்தனர். திங்கள் எனும் நிலவு புவியோடு மிக நெருங்கிய துணைக்கோளமாகும்.

உல் > நுல் > நுர் = ஒளி

நுல்> நில் = ஒளி

நில்> நிலா = ஒளி வீசும் மதி.

இங்கு நிலா , நிலவு எனும் சொற்களும் ஒளிப் பொருளிலேயே வழங்குகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதற்கடுத்து நெருங்கி இருப்பது ‘செவ்வாய்’ கோளே. செவ்வாய் எனும் சொல்லே இக்கோள் சிவப்பானது எனும் பொருளைக் காட்டும். இக்கோளின் மண்ணும் வானும் சிவப்பாக இருக்கின்றன என்பதை அமெரிக்கா அனுப்பிய வான் களங்கள் உறுதிப்படுத்தின. ஆனால் பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பதாகவே இக்கோளுக்குச் ‘செவ்வாய்’ எனத் தமிழர்கள் பெயரமைத் திருப்பது விந்தையிலும் விந்தையே. இக்கோள் இரும்புத் தீயதை ( Ferum oxide )  நிறைந்த கோளாக இருப்பதால் செந்நிறமாகத் தோன்றுகின்றது என்பர் அறிவியலாளர்.

Mars was named by the ancient Romans for their god of war because its reddish color was reminiscent of blood. Other civilizations also named the planet for this attribute – for example, the Egyptians called it "Her Desher," meaning "the red one." Even today, it is frequently called the "Red Planet" because iron minerals in the Martian dirt oxidize, or rust, causing the surface to look red. ( NASA )

உழவராயும் கடலோடிகளாயும் வீற்றிருந்த தமிழரின் வான் கணியர் தெளிந்த வானைப் பல காலும் ஆழ்ந்து உற்று நோக்கி ஆய்ந்து கோள்களுக்கும் உடுமண்டலங்களுக்கும் பெயரமைத்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்து புதன் எனப்படும் அறிவன் கோள் தமிழர் கண்டறிந்த புதிய  கோளாகும். புது > புதன் என இதற்குப் பெயர். அதே வேளை பிங்கல நிகண்டில் இக்கோளுக்கு அறிவன் எனும் பெயரும் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. மொழி ஞாயிறு ஞா.தேவநேயப் பாவாணர் இத்தகு நிகண்டுகளை ஆய்ந்தே இக்கோளுக்கு அறிவன் எனத் தம் நூல்களில் சொல்லாட்சி செய்தார். புத்தி எனும் சொல்லினின்றே இச்சொல் உருவாகியதாகக்  கருதுவர். புது, புத்தம், புதுமை எனுஞ் சொற்களின் வழி புதுவதைக் கண்டறியும் அறிவு புத்தி ஆகலாம். இருப்பினும் பாவாணர் வழியிலேயே நாம் புதன் என்பதற்கு அறிவன் என்றே ஆளுகின்றோம்.

பிங்கல நிகண்டில் சனிக்கோளுக்குக் ‘காரி’ எனும் பெயர் குறிப்பிடப் பட்டுள்ளது.

கல் > கருமை எனும் பொருள் வரும் வேர்ச்சொல்.

கல் > கலி =கருமை.

கருமைப் பொருளில் அமைந்த கொடுமை காலம் (கலி காலம்).

கல் > கலி> சலி > சனி என வடமொழியில் இச்சொல் கருமை பொருளில் திரிபடைந்தது. சனிக் கோளத்தைச் சுற்றி கரிய தூசு மண்டலம் சூழ்ந்திருப்பதால் இக்கோளைப் பண்டைத் தமிழர் கருமைப் பொருளில் காரி என்றனர்.

வியாழன் என்பது கோள்களிலேயே மிகப் பெரிய கோளாகும். தமிழில் வியல் எனின் பெரியது எனப்பொருள்படும். வியல் > வியலம் > வியாலம் > விசாலம் = பெரிய.

நம் தாத்தா பட்டிமார்கள் பெரிய இடத்தை விசாலமான இடம் என்று கூறுவதைக் கேட்டிருப்போம். வியாழக்கிழமையை விசாலக்கிழமை என்றும் கூறுவர். எனவே ‘வியாழம்’ என்றால் பெரிய கோள் எனவாகும். கோள்களிலேயே பெரிய கோள் என்பதால் இக்கோளுக்கு வியாழன் கோள் எனப் பெயரிடப்பட்டிருப்பதை எண்ணி நாம் வியக்காமல் எப்படி இருக்க முடியும்.

அடுத்து வெள்ளிக் கோள் வெளிறி ஒளி மிகுந்து வீசும் கோளாகும். இதனால் இது வெள்ளிக்கோள் எனப் பட்டதாம்.

ஞாயிறு ( Sun) ​=​நடுவில் நின்று ஈர்க்கும் நெருப்புக் கோளம்

திங்கள் ( Moon) ​=​ஒளிவிட்டு இரவில் தகதகவென்றிருக்கும் நிலா

செவ்வாய் ( Mars) ​​=​சிவந்து விளங்கும் கோள்

அறிவன் ( Mercury) ​=​புதுவதாக அறியப்பட்ட கோள்

வியாழன் ( Jupiter ) ​=​மிகப்பெரிய கோள்

வெள்ளி ( Venus) ​=​வெள்ளி மாழை நிறைந்த கோள்

காரி​(Saturn) ​​=​கருமைப் படலம் சூழ்ந்த கோள்

ஐயா அருளியார்

Uranus - விண்ணன்

Neptune - சேணன்

Pluto- தூரியன்

எனக் கதிரவ வட்டணையில் உள்ள ஏனைய கோள்களுக்கும் பெரிட்டது இங்குக் குறிப்பிடத் தக்கது.

இராகு , கேது என்பன ஐந்திரத்திலும் கணியத்திலும் சொல்லப் பெற்றவை

இராகு​=​கண்ணுக்குத் தெரியாமல் இருண்டிருக்கும் கோள் போன்ற புகைத் தோற்றம்

இருள்  = கருமை , இரா.  இரா > இராகு

கேது​=​சிவந்திருக்கும் தொலைவிலுள்ள கோள் போன்ற புகைத் தோற்றம்.

(சேது> கேது , சே=சிவப்பு, சேது சிவப்பு நிறம்)

இராகு, கேது எனும் இவ்விரண்டும் கண்ணுக்கு எளிமையில் புலப்படா வண்ணம் தொலைவிலிருந்தமையால் இவற்றைக் கரந்துரை கோள்கள் என்றனர். இவை அறிவியல் படி நிறுவப்படவில்லை. ஆனால் இவை நிழல் போல் தோன்றியமையால் இவற்றையும் குறித்து கரந்துறை கோள் என்றது எண்ணத்தக்கது.

 

தமிழரின் விண்ணியலைப் பற்றிய அறிவாண்மையை அவர்கள் அதற்கெனப் படைத்துள்ள சொற்களின் வாயிலாகவே நுணுகி நுணுகி ஆய்ந்து ஆய்ந்து வியந்து வியந்து போற்றலாம். அதற்குச் சொல்லாய்வு அறிவு மிகப்பேரளவு துணைபுரியும் என்பது மறுக்கொணா உண்மையாகும். வெல்க தேவநேயம்.