குண்டுபோட்டுக்கொன்றொழித்தாலும்
குத்துயிராய் துடிக்கவைத்து குடல்வரை குதத்தி்ற்குள்ளால் குளறக்குளற கண்ணாடிக் கூசாக்களை (போத்தல்) குபுக்கெனச் செருகினாலும்.
குலைநடுக நிகங்களைப் பிடுங்கினாலும் குற்றுயிராய் துடடிப்போரை குரவளை கம்ம மிளகாய்த்துாள் கொட்டி குபு குபு எனப்புகை போட்டடாலும் குப்பி கடித்து செத்து மடிந்தாலும் செந்தமிழீழமென்று வீரனாய் செத்தோரை எண்ணு !மக்களிணையட்டும் தமிழர்போராட்டம் தொடர உண்ணாநோன்பிருந்த உங்களின் உயர்உத்தமன்
ஈகன் தமிழர்களின் அனேகன் திலீபன்போல்
அமைப்பையும் விஞ்சியது தமிழர் உரிமையென்று உயிர்கொடுத்த காலத்தில்
கட்சியென்று கட்டுப்படாது தமிழர் ஒருங்கிணைவு காலத்தின் கட்டாயம் என்றுணர்ந்து
கட்டமைப்பையேற்று வேட்பாளராகித்திடம்கொண்டு சங்கு அடையாளமேற்று நிற்க்கும்
அரியேந்திரனை ஏற்போம் திலீபனையெண்ணி தமிழர்நாம் சங்கிற்கு வாக்களிப்போம்.
தெற்கில் எவர்வென்றாலும் தமிழர்நாம்
கூடியிணைந்து நிற்போம்!
கட்சிகள் பலவாகினும் தமிழர் என்று நாம் ஒன்றாகி உரிமைகளை வெல்வோம்
உலகம் தமிழர்களின் உணர்வை உயர்த்திப்பார்க்க வாக்குகளை பயன்படுத்துவோம்.
தன்னல அரசியலை தமிழரிடை ஒழிப்போம், அவர்களையும் வாக்குளால் உணரச்செய்வோம்.
பூநகரி பொ.மு. சுவிற்சர்லாந்து ....... 15.09.2024