குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

உலக அன்னையர் நாள். 24.04.2022 திவ்வியா

தாய்மை போற்றும் தமிழ்கலந்த வணக்கம்!

முத்தமிழாய் மூத்தமொழியாய்,

செம்மொழியாய் திகழும் தமிழ்றிற்கு

முதல் வணக்கம்.

தாய்மார்களே! பெரியோர்களே

என்போன்ற சிறார்களே

உங்களுக்கும்  என்வணக்கம்.

நடுவர்களாக இருந்து

தமிழ்த்தொண்டாற்றம்

உங்களுக்கும் என்வணக்கம்.

இங்கிருக்கும்( இங்கே இருக்கும்)

சபையோர்களே உங்களுக்கு

என் தமிழப்பண்புகலந்த வணக்கம்.


உலக அன்னையர் நாளில்

அம்மா பற்றி பேசவுள்ளேன்.


அம்மா பெற்றெடுத்த பிள்ளைகளே

நாம் எல்லோரும்

அம்மாக்களை போற்றாமல் வாழ முடியுமா?

போற்றாமல் விட்டாலும்

அம்மாக்களின் மனம் நோகாமல்

காயப்படாமல்  இருக்க

நாம் கவனமாகப் பக்குவப்படவேண்டும்

என்பதை இங்கே கண்டிப்பாக

சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.


பறவைகள் முதல்,விலங்குகள் ஈறாக

குஞ்சுகளைக்,குட்டிகளை

பேணிக்காத்து வளர்ப்பது

போல்தான் மனிதரில்

தாய்தான் அம்மாதான்

பிள்ளைகளை ஒன்பது மாதங்களுக்கு சுமந்து

பத்தாம் மாதத்தில் பெற்றெடுத்து

பாலுடொடுவது மட்டுமா?

உறக்கம் துறந்து எங்கள் நலன்கள் காத்து

வளர்ப்பவள் தாய் அந்த அம்மாக்களுக்கு

உலகில் ஒரு நாள் என்பது

ஒரு அடையாளம் ஆனால்

உண்மையில்  எல்லா நாளும்

அம்மாக்களின் நாளே!


உணவென்றால் அம்மா!

உடையென்றால் அம்மா!!

உறக்கமென்றால் அம்மா!!!


அடுதவர் வியர்வை அதாவது மணம்

ஒருவருக்கு அருவெறுப்பு ஆனால்

அம்மா வியர்வை அல்லது மணம்

அழுகையை ஆற்றும்,அரவணைக்கும்

துாக்கத்தை வரவைக்கும்

அம்மா எங்கே எங்கள் அருகில் இல்லையே

என்ற ஏக்கத்தைப்போக்கும்

மகிழ்வைத்தரும் துாங்கவைக்கும்

இதுதான் அம்மா என்ற மந்திரத்தின்

அளக்கமுடியாத பெறமதி

என்பதை இரண்டாவதாகச்

சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.


எங்களுக்கு என்ன விருப்பம் எது விருப்பம் இல்லை

என்பது எங்களுக்கே தெரியாது

எங்கள் கடவுளாகிய அம்மாக்கு

அது தெரியும் இங்கே தான் அம்மா

கடவுளாகவும் உயர்கின்றாள்

என்பதையும் மூன்றாவதாகச்சொல்லிக்கொள்ள விரும்புகின்றேன்.


தாய் எங்களை மட்டும் வளர்ப்பவள் அல்ல

எங்கள் அப்பாக்களையும் காப்பவள்

நல்ல குடும்பம் என்ற

கோவிலையே உருவாக்குபவள்

அம்மாதான்.


அம்மா அழகாக சேலை உடுப்பவள் மட்டுமல்ல

அழகான குடும்பம் என்று மற்றவர் மதிக்கும்

குடும்பத்தைக் கட்டிக்காப்பவள்!

இருவரின் (தன்னுடையதும்,தந்தையினதும்) வருவாய்க்கு

தக்க மாதிரி குடும்பத்தை

வழிநடத்தும் சிறந்த

இயல்பான இயக்குனரும்

அம்மாதான்.


இந்த அம்மாக்களின் தங்கமான  குணங்களே

சுற்றம்,உறவுகள், அயலவர்களிடத்தில்

நல்லதொரு குடும்பம்

பல்கலைக்கழகம்  என்ற

உயர்வான குடும்பவாழ்வை

கட்டியமைக்கும் திறன்

அம்மா என்ற மந்திரத்தில்

தான் உண்டு.


திருவள்ளுவர் என்ற உலகத்தமிழறிஞர்

தமிழுக்கு தமிழ்மறை தந்த முன்னோர்

இப்படி எல்லவா சொல்லி உள்ளார்

நல்ல ஒழுக்கம்,பண்பு,திறமை உள்ள

பெண் கிடைத்தால்

உலகத்தில் இல்லாதது என்ன?

எல்லாம் கிடைக்கும்  என்றார்.


தமிழினம் பழங்காலம் தொட்டே

பெண்மைக்கு முதலிடம் கொடுக்கும்

வழமையும் பண்பும் உள்ள இனம்.

தமிழர்களில் அரசிகள், புலவர்கள்,

படைத்தளபதிகள் என்ற  உயர்நிலையில்

இருந்துள்ளார்கள். இவர்கள்

எல்லாம் மிகச்சிறந்த தாயால்

வளர்க்கப்பட்டவர்கள்

தாயப்பாலுடன் தமிழப்பண்பு

ஊட்டப்பட்டவர்கள்

எல்லா உயிர்களையும்

மதிக்கும் அன்பும் அகவுணர்வும்

புகுத்தப்பட்டவர்கள் அதனால்

ஒருகாலத்தில் தமிழ் உலகம்

உலகில் உயர்ந்திருந்து

உலகிற்கு நல்ல வாழ்க்கை முறையை

வாழ்ந்து காட்டியது!


இத்தகைய அம்மாக்கள்

உலகில் எல்ல இனமக்களிடத்திலும்

குன்றி சிறமைக்குணங்கள்

பெருகயிருப்பதாலேதான்

குடும்பங்கள் மகிழ்வின்றி

மக்கள் சிதைகின்றார்.

உலகில் எல்லாவற்றையும் விட

எல்லா வகையிலும்

உயர்ந்து நிற்கும்

அம்மாக்களை

உலகம்  உருவாக்க

அம்மாக்களை எல்லோரும் மதிக்க

உலகில் அன்னையர்நாள்

இன்றி அமையாதது

என்ற கூறி

அம்மாவைப்போற்றி

நிறைவு செய்கின்றேன்.

வணக்கம்.