குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

சந்தர்ப்பத்தை சாதனையாக்கும் சூத்திரத்தை தேடாது தேர்தல் சூதாட்டத்தில் உருளுகிறது தமிழ்த் தேசியம்

14.03.2022....கட்டுரையாளர் முன்னாள் வடக்குகிழக்கு முதலமைச்சர் அ.வரதராஜா பெருமாள் 12.03.2022 யாழ் ஈழநாடு பத்திரிகையில்  வெளியானது  சிலருக்குப்பிடிக்காது தான் ஆனால்  உண்மைகள்தான்!

கடந்த 9ந்திகதி ஈழநாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான யாழ்ப்பாணத்தின் ஒருபிரபல பத்திரிகையின் உரிமையாளரின் அறிக்கையைப் பார்த்தேன். அது என்னை பின்வருமாறு எழுதத் தூண்டியது.

அரசியல் யாப்பின் 13வது திருத்தம் முறையாகவும் முழுமையாகவும் நிறைவேற்றப்படுகின்ற நிலைமையை உருவாக்கவேண்டும். அதற்கு தமிழ்க் கட்சிகள் அனைத்தும் ஒருங்கிணைந்து செயற்படவேண்டும் என நாம் கோரியபோதெல்லாம் – அதற்காக, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் உள்ளிடங்கலாக தமிழர்கள் மத்தியில் உள்ள அனைத்துக் கட்சிகளையும் இணைத்த ஒன்றுபட்ட தமிழர் அரசியல் அரங்கம் ஒன்றை உருவாக்க முயற்சித்த வேளையில்,

“தேசியம்”, “தாயகம்”, “சுயநிர்ணயஉரிமை” என்பவற்றை ஏற்காதவர்களெல்லாம் துரோகிகள், ஒட்டுக் குழுக்கள் என கடந்த 35 ஆண்டுகளாக பட்டமளித்து துள்ளிக் குதிப்பதையே தமது அரசியலாகக் கொண்டிருந்ததோடு,

- 13வது திருத்தத்தால் தமிழ் மக்களுக்கு எந்தவித பயனுமில்லை.

அது தமிழர்களின் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வுக்கு உரியவகையில் அதில் எந்தவித அதிகாரமும் இல்லை”எனவும்,

- “13வது திருத்தத்தின் மூலம் அமைந்த மாகாணசபையை ஏற்கமாட்டோம், அனுமதிக்கமாட்டோம், தும்புக் கட்டையாலும் தொடமாட்டோம்” எனவும்,

- “13வது திருத்தமும் அதன் மூலமான மாகாணசபையும் தமிழர்களின் ஒப்புதல் இல்லாமல் ஆக்கிரமிப்பு இந்தியாவால் தமிழர்கள் மீது திணிக்கப்பட்ட ஒன்று” எனவும்,

மேடை மேடையாக முழக்கங்கள் இட்டும், பத்திரிகைகளில் தலையகங்களாக வரும் வகைகளில் அறிக்கைகள் விட்டும் “எவடம் எவடம் புளியடி புளியடி என தமது தேர்தல் அரசியல் தளத்தில் தமிழ் மக்களை அழைத்துச் சென்றவர்கள் இப்போது:-

• 13வது திருத்தத்தை இல்லாமற் செய்வதற்கோ அல்லது அதனை கரைத்து விடுவதற்கோ இடமளித்து விடக் கூடாது என்கிறார்கள்:

• 13வது திருத்தத்தின் மூலம் வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை முழுமையாக நிறைவேற்ற வைப்பதற்கும், மாகாணசபையை தற்போதுள்ள அரசாங்கம் இல்லாமற் செய்து விடாமல் பாதுகாப்பதற்கும் இந்தியாவின் துணை மிகவும் அவசியமானது என்கிறார்கள்:

• அதற்கு இந்தியாவுடன் நட்பை – நல்லுறவை ஏற்படுத்திக் கொள்ளவேண்டும் – எவ்வகையிலும் தொடர்ந்து பேணவேண்டும் என்கிறார்கள்:

• இந்தியாவை விட்டால் வேறு வழியில்லை என்கிறார்கள்:

• இந்தியாவை மீறி வேறு எந்த நாடும் தமிழர்களுக்கு உதவுவதற்கு முன் வரமாட்டாது என்கிறார்கள்:

• 13வதில் இருக்கின்ற காணி அதிகாரம் மற்றும் காவல்துறை(பொலிஸ்) அதிகாரங்களை மாகாண சபை செயற்படுத்தியிருந்தால் சனநாயக வழிகளில் போராட்டங்களை நடத்தி அதற்கும் மேலாக அதிகாரங்களை கோரி பெற்றிருக்க முடியுமாம்:

• மாகாணசபைகளுக்கு முழுமையான அதிகாரங்கள் இல்லாவிட்டாலும் அதற்கு உள்ள குறைந்த பட்ச அதிகாரங்களைப் பாவித்து அரசின் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை மட்டுப்படுத்தலாம், மேலும் அடிப்படையான பொருளாதாரத் துறைகளில் ஓரளவு அபிவிருத்திகளை மேற்கொள்ளலாம்,

என்று தமது அறிக்கைகள் மூலம் 13வது திருத்தத்தினதும் மாகாண சபை முறையினதும் பயன்பாடுகளையும் அவசியத்தையும் அடுத்தடுத்து அடுக்கிறார்கள்.

• இவற்றை உணர்வதற்கு இவர்களுக்கு 35 ஆண்டுகள்(வருடங்கள்) தேவைப்பட்டிருக்கின்றதா? இவர்கள் 35 ஆண்டுகளை வீணடித்து கிடைத்த சந்தர்ப்பங்களையெல்லாம் தெரிந்தே தவறவிட்டவர்கள்.

• 5 ஆண்டுகள் மிகப் பெரும்பான்மை கொண்டவர்களாக மாகாணசபையின் ஆட்சியை வைத்திருந்தவர்கள்:

• அது மட்டுமல்லாது 5 ஆண்டுகள் நல்லாட்சி என்ற பெயரில் இலங்கை அரசாங்கத்தையே தமது செல்வாக்கின் கீழ் வைத்திருந்தவர்கள்:

• அந்தவேளை, தமிழர்களுக்கான அரசியற் தீர்வைப் பெறுவதற்கு இந்தியா தேவையில்லை என்ற வாறாக வீறாப்பு காட்டி செயற்பட்டவர்கள்:

அப்போதெல்லாம் தமிழர்கள் நினைத்துக் கூட பார்க்க முடியாத பெரும் சாதனைகளை நிகழ்த்துபவர்கள் போல கூச்சநாச்சமின்றி புலிகேசி வடிவேலு மாதிரி வேடம் கட்டி நாடகங்கள் நடத்திவிட்டு இப்போது ஒன்றும் தெரியாத பாப்பாக்களை ஊரார் ஏமாற்றிவிட்டார்கள் என்பதாக பாவனைகாட்டுகிறார்கள்.

35 ஆண்டுகளாக கைகளுக்கு எட்டிய தூரத்தில் இருந்த உண்மைகள் இப்போதுதானா இவர்கள் கண்ணுக்கும் அறிவுக்கும் பட்டிருக்கிறது?

இவற்றை இவர்கள் இப்போது கூறுவதைப் பார்க்கையில் கோமாளிகள் வேடிக்கைகாட்டுகிறார்கள் என்றுகருதுவதா? இவர்களது இப்போதைய பேச்சுக்களையும் அறிக்கைகளையும் பார்க்கையில் மீண்டும் தமது வாக்கு வேட்டைக்கு மக்கள் இன்றைய நிலையில் விழுங்கக் கூடிய இரைகளை தமது பிரச்சாரத் தூண்டில்களில் கோர்த்திருத்திருக்கிறார்கள் என்ற எண்ணமே தூக்கலாக நிற்கின்றது.

இவர்களின் வேடிக்கையானநாடகங்களைப் பார்க்கையில் இன உணர்ச்சி உசுப்பேத்தலால் தமது மூளை கரள் கட்டி கல்லாகிப் போதலும் தெரியாத அப்பாவித் தமிழ்ச் சனத்தை நினைக்கையில் தான் “கடவுளாலும் இவர்களைக் காப்பாற்றமுடியாது” என்று வேதனைப் படவேண்டியுள்ளது.

தமிழர்கள் மத்தியிலுள்ள சமூகப் பெரியவர்களும், படித்த தமிழ்ப் பிரமுகர்களும், தமிழ்ப் பத்திரிகைகளும் இந்த வாக்கு வேட்டை அரசியல் நடத்தும் போலித் தேசியக்காரர்களைப் பற்றி என்னதான் அவ்வப்போது விமர்சித்தாலும், அவர்களையே தமிழ் மக்களின் தகுதி வாய்ந்த அரசியற் பிரதிநிதிகளாகவும் தவிர்க்க முடியாத தலைவர்களாகவும் தொடர்ந்து தூக்கி நிறுத்தி விடுகிறார்கள்.

மாற்று இல்லைஎன்பார்கள்,ஆனால் மாற்றுக்கள் இங்கு வேரூன்றுவதற்குக் கூட விடுவதில்லையே, பின்னர் எப்படி அவை தலையெடுக்க முடியும்.


இவை ஒருபுறமிருக்க,

இப்போது இந்தியாவை நோக்கி பாமாலைகள் சூட்டும் தமிழ்த் தேசியங்கள் அண்மைக்காலம் வரை –


• “இந்தியா ஓர் ஆக்கிரமிப்பு நாடு”:


• “இந்தியா தனது நலன்களுக்காக தமிழர்களின் போராட்டத்தைப் பயன்படுத்திக் கொண்ட ஒரு நாடு”:


• இந்திய இராணுவத்தை அனுப்பி தமிழ்ப் பெண்களைக் கற்பழித்து, பல்லாயிரக்கணக்கில்  தமிழர்களைப் படுகொலை செய்த ஒரு நாடு”:

• புலிகள் தமிழீழ விடுதலையை சாதித்துக் கொண்டிருந்த வேளையில் இலங்கை அரசுக்கு உதவி செய்து தமிழர்களின்  போராட்டத்தை அழித்த ஒரு நாடு”


என தமது உள்ளுர்மக்கள் மன்றங்களில் குற்றச் சாட்டுப் பத்திரங்களை வாசித்து வந்தவர்கள் – தமது பத்திரிகைகளில் கட்டுரை கட்டுரையாக எழுத வைத்து வெளியிட்டவர்கள் – தமக்கிடையிலான கலந்துரையாடல்கள் மற்றும் கருத்தரங்குகளில் கொந்தளித்தவர்கள் – முகநூல்களில் தொடர்ந்து அடுக்கி வந்தவர்கள் – “இந்தியா ஒரு ஆக்கிரமிப்பு நாடு என்ற எண்ணத்தை தமிழ் மக்கள் மனங்களில் பதிவு செய்யும் எண்ணம் கொண்ட விளம்பரப் பலகைகள் யாழ்ப்பாணத்து வீதிகளின் பலசந்திகளில் இன்னமும் உள்ளன.


அப்போது இந்திய ஆமிக்காரன் விருந்துகளுக்கு அழைத்த போது மட்டுமல்ல இந்த “தமிழ்த் தேசிய”சிற்பிகள் இப்போது இந்திய தூதுவராலயம் அவரகளது கொண்டாங்களுக்கு அழைக்கிற போதும் முழங்காலில் ஓடிப்போய் முன் வரிசைகளில் அமர்ந்து கொள்கிறார்கள். இன்னமும் இவர்கள் இரட்டை முகமும் இரண்டு குணமும் கொண்ட வினோதங்கள்.


இப்போது:-

• இந்தியாதொப்புள் குடிஉறவு கொண்ட தாய்நாடாம்:


• இந்தியாவுக்கு சிங்களவர்கள் நண்பர்களாக இருக்கமாட்டார்களாம் – தமிழர்கள் தான் உண்மையான நண்பர்களாக இருப்பார்களாம்:


• இந்தியாவின் தேசியநலன்கள் மீது தமிழர்கள் தான் எப்போதும் அக்கறையாக இருப்பார்களாம்.


எனவே, 1987ம் ஆண்டுகைச் சாத்திடப்பட்ட இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ளவற்றை முழுமையாக நிறைவேற்றுவதற்கான நடவடிக்கைகளை மேற் கொள்வதோடு, இலங்கை அரசாங்கம் 13வது திருத்தத்தை முழுமையாக நிறைவேற்றுவதற்கும் மாகாணசபைத் தேர்தல்களை உடனடியாக நடத்துவதற்கும் இந்திய அரசாங்கம் அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டுமாம்.

அது இந்தியாவின் வரலாற்றுக் கடமையும் பொறுப்புமாம்.

விழுந்தவன் மீசையில் மண் ஒட்டவில்லை என்பது போல இவர்களின் வெங்காய வீறாப்புகள் வேற -

தாங்கள் சொல்கிறபடி இந்தியா தமிழர்களின் அபிலாசைகளை நிறைவேற்றும் வகையாக செயற்பட்டால் இவர்கள் சீனாவிடமிருந்து இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்களையெல்லாம் நிறுத்திவிடுவார்களாம்.

இவர்கள் தானாம் இந்தியாவின் தேசியஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கேடயங்களாம்.

கேட்பவன் கேணையனாக இருந்தால் இவர்கள் எருமைக் கடாவின் கொம்பிலிருந்தும் நெய் வடித்து விடுவதாக கதையளந்து விடுவார்கள்.

பாவம் தமிழ் மக்கள்.

“இந்திய – இலங்கை சமாதான ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள அனைத்தையும் முழுமையாக, இந்தியா அன்று அளித்த வாக்குதிகளை அர்த்தமுள்ளவைகளாக ஆக்கும் வகையில், நிறைவேற்றுவதை இந்திய அரசாங்கம் உறுதி செய்யவேண்டும்.

அது இந்தியாவின் வரலாற்றுக் கடமையும் பொறுப்பும் ஆகும்”

என்று கூறுவதற்கும் இந்தியாவை நோக்கி கேட்பதற்கும்,


இந்தியா இலங்கை அரசுடன் சமாதான ஒப்பந்தம் செய்த போது, அது பற்றி எவ்வளவுதான் சந்தேகமும் விமர்சனங்களும் இருந்த போதிலும், அதனை ஏற்று, இந்தியாவின் நட்புதேவை – இந்தியாவின் உதவி தேவை – இந்தியாவின் உறவு தேவை என்று தாங்கள் எதிர் நோக்கிய இழிவுபடுத்தல்களை, அவமானங்களை, ஆபத்துக்களை, இழப்புகளை, துரோகிப் பட்டங்களை பொருட்படுத்தாது, செயற்பட்டவர்களுக்கே உரிமையுண்டு.

இந்த போலித் தேசியங்களுக்கு எங்கே இருந்து அந்த உரிமை வருகின்றது.

ஓ! தோட்டக்காட்டான் – வடக்கத்தையான் மேட்டுக்குடி யாழ்ப்பாணத்தானின் வீட்டு வேலைக்காரன் என்ற எண்ணத்தில் இருந்துதான் அதுவருகிறதோ!


தங்களது வீட்டு வேலைகளை தங்களுக்கு ஏற்றபடி தாங்கள் சொல்லுகிற நேரத்தில் இந்தியா செய்யவேண்டும் என்ற நினைப்பில் இப்போதும் மிதக்கிறார்கள் போலிருக்கின்றது!

(இக்கட்டுரை 12-03-2022 யாழப்பாணத்தில் இருந்து வெளிவரும் ஈழநாடு பத்திரிகையில் வெளியிடப்பட்டது)

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.