தென்னிந்திய, இந்திய அரசுகளின் ஆதிக்கம்
எப்போதும் இருந்து வந்திருக்கிறது!
தென்னிலங்கையர் விரும்பினாலும்
எதிர்த்தாலும் இது நிகழ்ந்துள்ளது.
இலங்கையர் தமிழர் எதிர்த்தாலும்
இவை நிகழ்ந்துள்ளது இதுவே நடைமுறை.
உண்மையான வரலாறுகளையும் அறிந்து
இலங்கையையும் அகழ்ந்து
பொய்யின்றி ஆராய்ந்தால்
அவைதரும் விடைகள் இவைதான்.
சிலர் அழைப்பதும் சிலர் எதிர்ப்பதும்
இருந்தே வந்துள்ளது.
அழைத்தவர் வடக்கேயும்
எதிர்த்தவர் தெற்க்கேயும்
என்று பிரிந்தனர்.
மத்தியில் பொலநறுவையில்
அனுராதபுரத்தில்
வந்தவரின் தடையங்களை அழித்தனர்
இருந்தோரை மாற்றினர்.
காடுகளில் மலைகளில்
இதற்கான சான்றுகள்
இன்றும் கிடைக்கின்றன
சிந்தனையில்லாது
சிங்களம் என்பதும்
தமிழர் பெளத்தம் என்பதை
ஏற்க மறுத்து ஏமாற்று
நாளும் நடக்கின்றது.
இரு தேசமோ ஒருதேசமோ
ஈழத்தில் என்றும் நடந்திருப்பது
இதுதான் எனவே இதை எண்ணி
அரசியல் பண்ணின் அறிவு!
பூநகரி பொன்னம்பலம் முருகவேள் சுவிற்சர்லாந்து 02.02.2022