குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

இருப்பதை இல்லை என்பதா? உணவிற்கு வரிசையில் நிற்பதா!

கஞ்சியும்,கூழும் தான் அயலக நாட்டவரின் சூப்

எங்கள் இலைவைககள்தான் அவர்களின் சலாட்

இவை இரண்டுமே இவர்களின் உணவகங்கள்

இவற்றை எண்ணும்போது நாம் உள்ளவர்களே!

 

 

முசுட்டை இலை இரும்புச்சத்துள்ள இலை

முருங்கையிலை பல பயனுள்ள இலை

சண்டியிலை தாரளம் கிடைக்குமிலை

குறிஞ்சாவினை வறுத்துண்டால் மருந்துமேயாகும்.


தாமரைக் கிழங்கு தரமான கூட்டிற்கு  ஏற்றது

வல்லாரை வாய்க்கால்கரையில் கிடைப்பது

பொன்னாங்காணியும் அப்படியே நீர்கரையில் கிடைக்கும்

குமிட்டில்,புளிக்கீரை வயல் வரப்பில் வளர்வது


துாதுவளை,அகத்தி வளவுகளுக்குள் வளரக்கூடியன

கடையில் ஆலம்(நஞ்சு) கலந்த கரட்.பீற்றுாட்

வாங்கிச் சமைச்சாத்தான் நாங்கள் வசதியாயிருக்றோம்

கே.எவ.சி,மைக்டோனாசு சென்றாலே நாங்பபணக்கார் ஆகின்றோம்


இந்த எண்ணங்களே இருந்தும் இல்லையென

எங்களை ஏங்கவைக்கின்றது பணத்தை இழந்து

கெட்ட உணவையுண்டு மருந்தை விழுங்கவைக்குது

வீட்டைச்சுற்றி நட்டுவிட்டால் கையேந்தாது சாப்பிடலாம்.


பாலைக் கறந்து வண்டிகளில் அனுப்பி விட்டு

கடைக்குப்போய் பால்மாக்கு வரிசையில் நிற்பதா?

அதிகபணத்தை இழப்பதா மாடு வளர்த்ததுநான்

பாடுபட்டது நான் பணத்தைக்கறப்பது அவனா?


ஆட்டை வளர்க்கவேணும் ஆட்டுப்பாலும் குடிக்கவேணும்

முட்டை உண்ண வேணுமென்றால் கோழிவளர்க்வேணும்

பால்வாங்க, முட்டைவாங்க கடைக்கு போகவேணும்

அதற்கு உந்துருளிவேணும்,முச்சக்கரவண்டிவேணும்

அதனை ஓட்ட எரிபொருள்வேணும்

அதற்கும் வரிசையாய் நிற்கவேணும்.


நெல்லை பெற்றதும் முழுக்க விற்காதே

உணவுக்கு வைத்து மிகுதியை மட்டும் விற்றிடு

வெள்ளை மாவெதுப்பியை(பாணை) வெறு

காலையில் பச்சை அரிசிக்கஞ்சி,பால்புக்கை உண்


மதியத்தில் குத்தரிசி உண்டு உடலைப்பேணு

பயறு,உழுந்தில் இரவு உணவுதேடுநலமாய் வாழு

குரக்கன் வரகு,கிழங்குவகை நட்டுண்டு நலம்பெறு

இல்லையென இருக்கதே அதிகபணம் இழக்காதே!

பூநகரி பொ.முருகவேள் 23.01.2022 சுவிசு

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.