இந்த விண்கலம் கதிரவனின் வளிமண்டல மேலடுக்கை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டது. கதிரவனை பற்றி இதுவரை அறியப்படாத பல தகவல்கள் இதன் மூலம் கிடைத்திருப்பதாக நாசா அப்போது தெரிவித்தது.
குறிப்பாககதிரவனின் வெளியடுக்கை இந்த விண்கலம் சுமார் 6 ஆண்டுகளில் அதாவது 2024ம் ஆண்டு சென்று அடைந்து பூமியை தாக்கும் சூரிய புயல் எப்படி உருவாகிறது என்பதை கண்டறியும் என்றும் நாசா கூறியிருந்தது. அத்துடன் பூமியிலிருந்து சுமார் 97 மில்லியன் மைல்கள் தொலைவில் உள்ளகதிரவனின் வளிமண்டல மேல் அடுக்கை இந்த விண்கலம் படிப்படியாக நெருங்கி 2024ம் ஆண்டு சென்றடையும் என்று தெரிவித்தது.
இந்நிலையில், உலக வரலாற்றிலேயே முதல் முறையாக கதிரவனின் மேல் படலத்தை தொட்டது சோலார் ப்ரோப் விண்கலம். 2018ம் ஆண்டு செலுத்தப்பட்ட இந்த விண்கலம் அங்கு உள்ள துகள்கள் மற்றும் காந்தப் புலங்களின் மாதிரிகளை சேகரித்து கொண்டதாக நாசா தகவல் தெரிவித்திருக்கிறது.
இதனால், கதிரவனைப் பற்றி பல அறியாத முடியாத தகவல்கள் நமக்கு கிடைக்கும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளது நாசா.