72 வயதுடைய கலைத்துறையில் பயணித்துக் கொண்டிருக்கும் ஈழத்தின் மக்கள் மனங்களில் இடம்பிடித்த பாடகியான திருமதி பார்வதி சிவபாதம் சிறந்த குணச்சித்திர நடிகைக்கான தேசிய விருது ஒன்றை பெற்றிருக்கின்றார.;
அந்தமான் நிக்கோபார்டில் பன்னாட்டு திரைப்பட விழாவில் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்காக சிறந்த குணச்சித்திர நடிகை விருதை இவர் பெற்றிருந்த அதேநேரம் இந்த திரைப்படம் இந்தியாவில் இடம்பெறும் உருவட்டி திரைப்பட விழாவில் 5 சர்வதேச விருதுகளை பெற்று இருந்தது
படத்தின் சிறந்த இயக்குனர் சிறந்த கதாசிரியர் சிறந்த தயாரிப்பாளர் சிறந்த அறிமுக இயக்குனர் சிறந்த கவர்படம் ஆகியவற்றுக்கான விருதுகைளபெற்றிருந்தது.
இதுவரை வெந்து தணிந்த திரைப்படம் பன்னாட்டு ஒருங்கிணைப்பின் விருதுகளை பெற்றிருக்கிறது தயாரிப்பாளர்களே இல்லாமல் தளம் ஒன்றில் கிட்டத்தட்ட 3 வருடங்களாக மக்களில் இருந்து சேகரித்த பணத்தின் மூலம் இந்த திரைப்படம் உருவாக்கம் பெற்று இருக்கின்றது.
இந்த திரைப்படத்தில் 150 நபர்கள் இணைந்து முதலீடு செய்து இப்படத்தை உருவாக்கி இருக்கின்றார்கள் பலரால் அறியப்பட்ட திரைப்பட செயற்பாட்டாளரான மதிசுதாவின் மூன்று வருட தொடர்ச்சியான உழைப்பின் மூலம் இந்த படத்தை ஐபோன் கைபேசியில் உருவாக்கி முடிந்து இருக்கின்றார்கள்.
ஈழத் தமிழ் திதிரைப்படத்தரப்பில் திரைப் படங்களில் காணப்படும் எதிர்மறையான விமர்சனங்களுக்கு மத்தியில் வெந்து தணிந்த காடுகள் சாதித்து காட்டிய மையத்தின் சினிமா படைப்பாளி மேலும் ஊக்குவித்து இருக்கின்றது இவர்களுக்கு தமது வாழ்த்துக்கள் உங்கள் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்ளுங்கள்
ஆனால் தமிழ்நாட்டின் எந்த ஊடகத்திலும் செய்தி பிரசுரிக்கத் தயாரில்லை என்பது, அதற்காக முயன்ற ஒவ்வொரு ஈழத்தவருக்கும் வருத்தமே. எங்கள் திரைத்துறையால் என்றைக்கும் உங்கள் வியாபாரத்துக்கு பங்கமில்லை தமிழகமே என டுவீட்டர் பக்கத்தில் டுவீட்செய்துள்ளர்கள்.