குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 13 ம் திகதி வெள்ளிக் கிழமை .

கபசுரக் குடிநீர் - ஆய்வு முடிவுகள் !

18.09.2021...தீ நுண்ணி மேலாண்மைக்கென(கோவிட் மேலாண்மைக்கென) தமிழக அரசும் மத்திய அரசும் பரிந் துரைத்த சித்த மருந்துகளில் தலையானது கபசுரக் குடிநீர். இதுவரை இதில் என்ன ஆய்வுகள் நடை பெற்றன? Randomised Clinical Trial செய்துள்ளீர்களா? என பல தளங்ளில் கேட்டதும், அதனாலேயே தாமதப்பட்டதும், சில நேரங்களில் ஏளனபபடுத்துதலும் கூட ஏற்பட்டதுண்டு.

இவற்றிற்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இரு முக்கிய ஆய்வுகளை மத்திய சித்த மருத்துவ ஆராய்ச்சி குழுமம் (CCRS) .  இரண்டு ஆய்வு முடிவுகளும் உலகத்தரத்தில் முன்வரிசையில் உள்ள BMC பன்னாட்டு மருத்துவ இதழில் வெளியிட்டுள்ளது. ( ref:Natarajan et al . Trials (2021)22:623, Srivatsan et al. Trials (2021) 22:57) இவ்வகையான ஆய்வுகள் மட்டுமே உலகளவில் நம் மருத்துவத்துறையின் மாண்பை எடுத்துச் செல்லும்.

 

இரண்டு ஆய்வின் முடிவுகளும் கபசுரக் குடி நீர் வைரசின் பெருக்கத்தை கட்டுப்பாடு செய்வதை சரியாக ஒப்பு நோக்கி, துல்லிய மருத்துவ கணக்கீடுகளின் படி, வெளியிப்படுத்தியுள்ளது. ஒப்பு நோக்குகையில் இதன் பணி நுட்பம் வைரஸ் பெருக்கத்தை எப்படி கட்டுப்படுத்துகிறது என விளக்குகிறது. சில நேரங்களில் சித்த மருந்துகளை Placebo effect என வசைபாடுவதுண்டு. இவ்விரு ஆய்வுகளுமே சித்த மருந்துகள் placebo அல்ல என்று நிருப்பித்துள்ளது. இந்த ஆய்வு ஒரு முக்கிய துவக்கம். இன்னும் பல படிகளைக் கடக்கும்போது சித்த மருத்துவத்தின் பல மரபு நுணுக்கங்களுக்கு அறிவியல் வெளிச்சம் கிடைப்பதும், விளிம்பு நிலையில் உள்ள மக்களுக்கு இதன் பயன் போய்ச் சேர்வதற்கும், தேவைப்படும் இடங்களில் பிற நவீனம் உள்ளிட்ட மருத்துவ முறைகளோடு ஒருங்கிணைந்து பணியாற்றவும் இவ்வாய்வுகள் வழிவகுக்கும்.

இந்த ஆய்வுகளை கடுமையான நெருக்கடியான சூழலிலும் முன்னின்று நடத்தி ஆய்வு செய்து இன்று அறிவியல் உலகில் தலை நிமிரச்செய்திட்ட

முதன்மை ஆய்வாளர்கள்  சித்தமருத்துவர். திரு நடராயன்,  சித்த மருத்துவர் திருமதி அன்பரசி மற்றும் சித்தமருத்துவர். திரு மாணிக்க வாசகம் ஆகியோர் குழு. மூவர்க்கும் அவர்களோடு இணைந்து பணியாற்றிய மருத்துவ வல்லுனர்கள்  அனைவருக்கும் வாழ்த்துக்களும் வணக்கங்களும்! மரு. மாணிக்கவாசகம் (புது தில்லி சிசிஆர்எசு ) மரு.  நடராயன் மற்றம் மரு அன்பரசி (சென்னை சிசிஆர்எஸ்)மூவரும் இன்று நம் துறை கொண்டாடப்பட வேண்டிய ஆளுமைகள்!

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.