இந்நிலையில், திடீரென பிரிட்டனுடன் கைகோர்த்த அவுசுதிரேலியா தனக்குத் தேவையான நீர்மூழ்கிக் கப்பல்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதனால் பிரான்சு அரசு மிகுந்த ஏமாற்றமடைந்துள்ளது.
இது குறித்து பிரான்சு நாட்டு வெளியுறவு அமைச்சர் யீன் யிவெசு லே ட்ரியன் கூறுகையில், “இது முதுகில் குத்தும் செயல். நாங்கள் அவுசுதிரேலியா மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்தோம். ஆனால் அவர்கள் துரோகம் செய்துவிட்டனர். நான் இன்று மிகவும் ஆத்திரத்தோடும், கசப்புணர்வோடும் இருக்கிறேன். நட்பு நாடுகளாக இருப்போர் ஒருவொருக்கொருவர் இத்தகைய செயலை செய்து கொள்ளக் கூடாது” என்று தெரிவித்துள்ளார்.
பிரான்சுடன் அவுசுதிரேலியா மேற்கொண்டிருந்த ஒப்பந்தம் 50 பில்லியன் அவுசுதிரேலியா டொலர் மதிப்பிலானது என்பது குறிப்பிடத்தக்கது.