குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா வேண்டுகோள்

16.08.2021....ஆப்கானிசுதானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐ.நா.பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.ஆப்கானிசுதானில் தாலீபான்கள் ஆட்சியை கைப்பற்றிய நிலையில், பலர் அங்கிருந்து வெளியேறுவதற்காக விமான நிலையங்களில் குவிந்து வருகின்றனர்.

நகரப் பேருந்துகளில் ஏறுவதற்கு முண்டியடிப்பது போல், பலர் விமானத்தில் ஏற முயற்சித்து வரும் வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகின்றன. புறப்பட்ட அமெரிக்க விமானத்தில் ஏறி பயணித்த 5 பேர் நடுவானில் கீழே விழுந்து உயிரிழந்தனர்.

இதுதொடர்பாக ஐநா பாதுகாப்பு அவை அவசர ஆலோசனை நடத்தியது. இதில் பேசிய ஐநாவுக்கான ஆப்கானிசுதான் தூதர் குலாம் ஐசக்சாய், தாலீபான்கள் ஆட்சியால், லட்சக்கணக்கான மக்கள் சுதந்திரத்தை இழக்க நேரிடும் என வேதனை தெரிவித்தார்.

பள்ளிகள் மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு பெண்கள் செல்ல முடியாத மோசமான சூழல் ஏற்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இதைத்தொடர்ந்து பேசிய ஐநா பொதுச்செயலாளர் ஆண்டனியோ குட்டரேசு (Antonio Guterres), ஆப்கானிசுதானில் மக்கள் நாடு கடத்தப்படுவதை தவிர்க்க வேண்டும். பயங்கரவாத அமைப்புகளின் புகலிடமாக ஆப்கானிஸ்தான் மாறாமலிருக்க சர்வதேச சமூகத்தின் நடவடிக்கை தேவை.

ஆப்கானிசுதானில் பெண்கள், சிறுமிகளுக்கு எதிரான மனித உரிமை மீறல் கவலை அளிக்கிறது. ஆப்கானிசுதானில் தாலீபான்கள் நிதானத்தை கடைபிடிக்க வேண்டும்.

உயிர்களைப் பாதுகாப்பதற்கும் மனிதாபிமான தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கும் அனைத்துக் கட்சிகளும் குறிப்பாக தாலீபான்கள் மிகுந்த நிதானத்தைக் கடைப்பிடிக்குமாறு நான் கேட்டுக்கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.

மேலும், ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும் மக்களை மற்ற நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என அண்டோனியோ குட்ரெசு தெரிவித்துள்ளார்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.