09,08.2021, இளைஞர்ஒதுங்கி இருப்பதும் பயந்து நடுங் குவதும் நம்மை மட்டும் அல்ல, நம்மை சார்ந்தவர் களுக் கும் தீராத துன்பத்தைக் கொடுக்கும் _ஒரு ஊரில் ஒரு இளைஞர் இருந்தார். அவர் அதிகாரிகளைக் கண்டால் பய ந்து நடுங்குவார். பிரச்னைகளில் இருந்து தப்பி ஒதுங்கு வதில்தான் அதிக கவனம் செலுத்துவார். பிரச்னைக ளில் தலையிட்டு அதற்குத் தீர்வு கண்டு முன்னேற வேண்டும் என்பதில் முனைப்பு காட்ட மாட்டார்.
வாழ்க்கையில் பிரச்னைகள் புற்றீசல் போல வந்து கொண் டு தானே இருக்கும். அதிலிருந்து தப்பித்து எங்கும் ‘ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது’ அல்லவா. ஆனால், இந்த இளைஞர் பயந்தாங்கொல்லியாக இருந்தார். தான் நினை ப்பதை மற்றவர்களிடம் சொல்வதற்கும் பயப்படுவார். இந்த தயக்கம் அவருக்கு இருக்கும் திறமையை அவரே அறிய முடியாமல் போவதற்குக் காரணமாக இருந்தது.
அந்த இளைஞர் பணிபுரிந்த இடத்தில் அவரை நம்பி முக் கிய பொறுப்புகளை கொடுப்பதற்கு முன்வர வில்லை. அவரின் இந்த தயக்கமும் பயமும் அவரை முன்னேற விடாமல் தடுத்து நிறுத்தின. தன் கருத்தை மற்றவர் களி டம் சொல்வதற்குப் பயப்படுவார். தான் ஏதேனும் தவறா கப் பேசிவிட்டால் மற்றவர்கள் என்ன நினைப்பார்கள் என்று எண்ணி பொதுவாக கூட்டத்தில் பேசுவதை தவிர்ப் பார். குடும்பத்திலும் சரி, பணிபுரியும் இடத்திலும் சரி, ஒதுங்கி இருப்பதையே விரும்புவார்.
வாய்ப்புகள் கைநழுவுகிறதா கவனமான இருங்கள்... இவர் உங்களுடனும் இருக்கலாம்!
இதுபோன்ற அச்சம் கொள்ளும் பயந்தாங்கொல்லி இயல் புகள் நம்மிடம் வெளிப்படையாகவோ, பதுங்கியோ இருந் தால், அதனை மாற்றிக் கொண்டு முன்னேற வேண்டும். சிக்கல்களில் தலையிட்டு அதனை முறையாகக் கையா ண்டு வெற்றி கொள்ள வேண்டும்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணைய தள த்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.செய்தி களை உடனுக்குடன் பெறுங்கள்.
ஒதுங்கி இருப்பதும் பயந்து நடுங்குவதும் நம்மை மட்டும் அல்ல, நம் சுற்றாத்தாருக்கும் தீராத துன்பம் கொடுப் பதாக அமைந்துவிடும். "அச்சம் தவிர்" என்று கூறுகிறார் பாரதியார்.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஐ.நா. பாதுகாப்பு சபை கவுன்சில் கூட்டம்
09,08.2021,பிரதமர் நரேந்திர மோடி கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனை நடைபெறுகிறது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று ஐ.நாவின் பாதுகாப்பு சபை கூட்டம் வீடியோ கான்பரன்சிங் முறையில் நடைபெறுகிறது.
இது குறித்து வெளியுறவுத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டம் இன்று (திங்கள் கிழமை) வீடியோ கான்பரன்சிங் மூலம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் இரசியா உள்ளிட்ட பல்வேறு நாட்டின் தலைவர்கள் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்கின்றனர்.
இநத்க் கூட்டத்தில் கடல்சார் பாதுகாப்பை மேம்படுத்துதல் மற்றும் அது தொடர்பான சர்வதேச ஒத்துழைப்பு குறித்த கருத்தரங்கில் விவாதிக்கப்பட உள்ளது.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆகசுட்டு மாதத்துக்கான தலைமைப் பொறுப்பை இந்தியா ஏற்றது. இதனால், ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் ஆலோசனைக் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் முதல் இந்தியப் பிரதமர் என்ற பெருமையைப் நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
நியூயார்க் நகரில் உள்ள ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்சு, இரசியா, சீனா ஆகிய 5 நாடுகள் நிரந்தர உறுப்பினர்களாக உள்ளன. 10 நாடுகள் தற்காலிக உறுப்பினர்களாக 2 ஆண்டுகாலம் செயல்படும். இதில் இந்தியா தற்காலிக உறுப்பினராக கடந்த சனவரி மாதத்தில் பொறுப்பேற்றது.
பாதுகாப்பு சபையின் தலைமைப் பொறுப்பை சுழற்சி முறையில் உறுப்பு நாடுகள் ஏற்றுக் கொள்வது வழக்கம், இந்நிலையில், 75ஆவது சுதந்திர தினத்தை இந்தியா கொண்டாட உள்ள நிலையில், தலைமைப் பொறுப்பை ஏற்றிருப்பது மகிழ்ச்சி அளிப்பதாக ஐ.நா. சபையின் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஐ.நா.வுக்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி பெருமிதம் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், கடல்சார் பாதுகாப்பு, அமைதிகாப்பு உள்ளிட்டவை தொடர்பான முக்கிய ஆலோசனைகளும், சிரியா உள்ளிட்ட நாடுகளின் விவகாரங்கள் குறித்த ஆலோசனைகளும் நடைபெறும் என்று டி.எசு.திருமூர்த்தி தெரிவித்திருந்தார்.
1992ஆம் ஆண்டில் ஐ.நா. பாதுகாப்பு சபை கூட்டத்தில் அப்போதைய பிரதமர் நரசிம்ம ராவ் கலந்துகொண்டார். ஆயினும், முதல் முறையாக பாதுகாப்பு சபையின் கூட்டத்துக்கு தலைமை வகிக்கும் இந்தியப் பிரதமர் என்ற பெருமையை நரேந்திர மோடி பெற்றுள்ளார்.
கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஐ.நா. பாதுகாப்பு சபைக்கு முதன்முறையாக 1950ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் இந்தியா தலைமை வகித்தது. இதனைத் தொடர்ந்து, 10ஆவது முறையாக இந்தியா தற்போது தலைமை வகிக்கிறது. இதற்கு முன்னதாக 2012ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் இந்தியா தலைமையில் ஐ.நா. பாதுகாப்பு சபை செயல்பட்டது.