வேற்று மொழிக்கலப்பால் மற்ற மொழியை அழிக்க வேண்டும் என்றுதிட்டமிட்ட ஆதிக்கத்தால்.. அம்மொழி மறைந்து..மறைக்கப்பட்டு இலக்கியத்தின் வெளிப்பாடாகிய பண்பாடுகுலைந்து பண்பாட்டினை வளர்த்த இனம் மங்கிப்போகிறது. 3000 ஆண்டுகளுக்கு முன்னே இத்தகையநிலை தமிழினத்திற்கும் பண்பாட்டிற்கும் உருவாக்கிய விளைவுகளைப்பார்போம்.
கி.மு-தி.மு 1500 ஆண்டளவில் கந்தார நாட்டிலிருந்துகைபர் கணவாய் வழியாக வந்து
நம் நாட்டில் புகுந்த ஆரிய இனம் இங்கு வாழ்ந்த திராவிட இனத்தோடு போராடி அவர் வாழ்வை அழித்துப் பல பகுதிகளில் குடியேறிற்று . பேரினமாய்யிருந்த திராவிடர்களைக் கொன்று வெற்றிகாண்பது எளிதானதல்லவெனக் கண்டு அவர்களோடு உறவாடி அடிமைப்படுத்தி ஆளமுற்பட்டது.
வேதங்களை இயற்றியவர்களுக்கு எழுத்துக்கலை தெரிந்திருக்கவில்லை என்று நாகரிக வரலாற்றின் ஆசிரியர் வில் டு ராண்டும் ஆரியர்கள் நாகரிக உலகோடு தொடர்பு கொள்வதற்கு முன்பாக எழுத்துக்கலை அறியாதவர்கள் என உலக வரலாற்று ஆசிரியர் எச் யி வெல்சும் எழுதியுள்ளார். பல்வேறு நாடுகளில் பரவிய ஆரியர்கள் அவர்கள் குடியேறிய நாடுகளில் வாழ்ந்த நாகரிக மக்களின் எழுத்துக்களையே பயன்படுத்தித் தங்கள் நெடுங்கணக்கை அமைத்துக்கொண்டார்கள் என அறியக்கிடைக்கிறது.
அநாசாசு எனத் தங்களால் எள்ளி நகையாடப்பட்ட திராவிடர்களின் எழுத்துக்களையும் குறியீடுகளையும் பயன்படுத்தியே தங்கள் எழுத்துக்களை அமைத்துக்கொண்டார்கள். என்று கிராசு பாதிரியார் கூறுகிறார். ஆரியர்களின் வேதங்கள் சுருதியாக எழுதாக்கிளவியாக இருந்து தலைமுறை தலைமுறையாக செவிவழியாகவே நிலவிவந்ததற்கு அவர்கள் எழுதும் முறையை அறியாமையே காரணமாகும். ஆரியருடைய முதனூலாகிய இருக்குவேதத்தில் பல தமிழ்ச் சொற்கள் அணி, இராத்திரி, கணம், பழம், பூசனை போன்றன ஆளப்பட்டுள்ளன என்பதையும் எண்ணிப்பார்கவேண்டும்.
உணவு உற்பத்திக்காக எதிர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் மனுநீதி மூலம்ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழிலில் ஈடுபடுத்தி ஏற்றம்கொண்டனர். ஆக்கம் பெற்றனர். வேதமொழியும்
வடநாட்டில் நிலவிய பிரகிருதமும் கலந்து உருவாகிய சமற்கிருதக் கலவை மொழியை திராவிடர்கள்
கற்கவேண்டியதாயிற்று .இந்திய நாகரீகத்தில் திராவிடப்பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதையேதிராவிடர் மொழியில் ஆ ரிய மயமாக்கப்பட்டனர். எனக்குறிப்பிடுகின்றார்.
அகத்தியரும் தமிழும்
ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க. ஆரிய முனிவராகிய அகத்தியர் பொதிய மலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்றகதையைப் புனைந்து தமிழர்களை இயன்றளவு
நம்ப வைத்துள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப்பேயாகும்.
பல்வேறு காலங்களில் நீண்ட இடைக்காலத்திற்கிடையில் அவ்வையார் வாழ்து பாடியதாக இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல். அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறுநாடுகளில்செய்யற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம்பெறிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக் கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் முச்சங்க வரலாறு- அவைகளின் காலக்குறிப்பு புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து- அறிவுக்குப் பொருந்தாது . உண்மைக்குப்புறம்பானது என்று மாற்றார் அறையும் போது அலமந்து போகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமிஎழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியது என்றும் சாதித்தனர்.
உணவு உற்பத்திக்காக எதிர்கொண்டு மண்ணைக் கிளறி உழவுத் தொழிலை மேற்கொள்வது பாவம் மனுநீதி மூலம்ஆரியர்கள் ஒரு சித்தாந்தத்தை உருவாக்கிக்கொண்டு அடிமைப்படுத்தப்பட்ட திராவிடர்களை அத்தொழிலில் ஈடுபடுத்தி ஏற்றம்கொண்டனர். ஆக்கம் பெற்றனர். வேதமொழியும் வடநாட்டில் நிலவிய பிரகிருதமும் கலந்து உருவாகிய சமற்கிருதக் கலவை மொழியை திராவிடர்கள் கற்கவேண்டியதாயிற்று .இந்திய நாகரீகத்தில் திராவிடப்பண்பு என்ற தம் நூலில் கில்பர்ட் சிலேட்டர் இதையேதிராவிடர் மொழியில் ஆரிய மயமாக்கப்பட்டனர். எனக்குறிப்பிடுகின்றார்.
அகத்தியரும் தமிழும்
ஆரியர் மொழி நிலை இவ்வாறிருக்க. ஆரிய முனிவராகிய அகத்தியர் பொதிய மலையில் தங்கித் தமிழுக்கு முதனூலும் இலக்கணமும் வகுத்தார் என்றகதையைப் புனைந்து தமிழர்களை இயன்றளவு நம்ப வைத்து ள்ளனர். அகத்தியர் வருகை தென்னகத்தில் ஆரியர் வருகைக் குறிப்பேயாகும். (அகத்தியர் தமிழராகினும் அவரை முன்காட்டி தமம்முடையா தை செருகும்வேலைகளை நுட்பமாகச்செய்தனர்.)
பல்வேறு காலங்களில் நீண்ட இடைக்காலத்திற்கிடையில் அவ்வையார் வாழ்து பாடியதாக இலக்கியத்தில் காட்டப்படுவதுபோல். அகத்தியரும் பல்வேறு காலங்களில் பல்வேறுநாடுகளில்செய்யற்கரிய செய்ததாக இலக்கியத்தில் இடம்பெறிருக்கிறார். ஒருவரே ஒரு மொழியையும் அப்போதே அதன் இலக்கணத்தையும் படைக்கக் கூடும் என்ற கூற்றினை ஆராயவும் தயங்கும் அறிஞர்கள் முச்சங்க வரலாறு- அவைகளின் காலக்குறிப்பு புலவர்களின் எண்ணிக்கை போன்றவற்றை நோக்குமிடத்து- அறிவுக்குப் பொருந்தாது . உண்மைக்குப்புறம்பானது என்று மாற்றார் அறையும் போது அலமந்து போகிறார்கள்.
தமிழ் இலக்கியத்தின் சிறப்பையும் அதன் விரிவையும் கண்டு பொறாது தமிழ் எழுத்து பிற்காலத்தில் அசோகரது பிராமிஎழுத்தினின்றும் கிரந்த எழுத்தினின்றும் தோன்றியது என்றும் சாதித்தனர்.
தமிழ் நெடுங்கணக்கு பழைமையானது
சிந்துவெளி எழுத்துகளிலிருந்து பிராமி எழுத்துக்கள் தோன்றியிருக்கவேண்டும் என்பது பேராசிரியர் லாங்டன். டாக்டர்கண்டர். சர்.அலச்க்சாண்டர் ஆகியோரின் முடிவாகும். தமிழ் நாட்டுக்குகை எழுத்துக்களும்பிராமி எழுத்துகட்கும் தொடர்பைக்காணலாம். இன்றைக்கு நமக்குக் கிடைத்துள்ள மிகப்பழைய தமிழ் நூலாகிய தொல்காப்பியத்தின் காலம் கி.மு அய்நூற்றுக்கு முந்தியது எனத் திட்டவட்டமாய் நிறுவி. கி.மு . எழுநூறு என்று சொல்வதற்கான சான்றுகளையும் ஆராய்ச்சியார்கள் தந்துள்ளார்கள். அத்தகைய அரிய இலக்கியம் தோன்றுவதற்கு முன் எத்தனை யெத்தனை நூல்கள் இருந்திருக்கவேண்டும் அவற்றுக்கு எவ்வளவு காலத்திற்கு முன்பாக தமிழ் நெடுங்கணக்கு ஏற்பட்டிருக்கவேண்டும் என்று சிந்திக்க மறக்கலாமா?
தமிழ் இலக்கியம் ஆரிய மயமானது
தமிழர்களின் மறைநூல் மந்திரநூல்போன்ற அரிய நூல்களைச் சமற்கிருதத்தில் மொழி பெயர்த்துக்கொண்டு. மூலநூல்களை அழித்துவிட்டு வடமொழியின்றே அவ்அரிய கருத்துக்கள்வந்தனபோலக் காட்டினார்கள். பிராமணர்கள் எனத்தாம் எழுதிய தமிழ் வரலாறு என்ற நூலில் பரிதிமாற் கலைஞர்(வி.கோ.சூரியநாராயண சாசுதிரியார்) எழுதுகிறார்.
தொன்னூல்களான தென்னூல்களெல்லாம் வடமொழியில்பெயர்க்கப்பட்டபின் அழிந்தும் அழிக்கப்பட்டும் போயின என்று தமிழர் வரலாறு என்ற தம் நூலில் ஞா.தேவநேயப்பாவாணர் விரிவாக விளக்கியுள்ளார்கள். இவ்வழிப்புப்பாணியால் இந்திய நாகரிகம் பெருமளவு ஆரியருடையது எனவும்கருதுமாறும் செய்யப்பட்டு விட்டது. அகத்தியத்தைதமிழ் முதனூல் என்றனர். தொல்காப்பியத்தமிழில் வேண்டாத சமகிருதச் சொற்களையும் ஆரியக் கருத்துக்களையும் புகுத்தினார்கள்.
திருவள்ளுவரை சீவல்லபர் என்று ஆரிராக்கியதோடு திருக்குறளின் அறத்துப்பால் வடமொழிதர்மசாத்திரத்தையும் பொருட்பால் அர்த்தசாத்திரத்தையும் காமத்துப்பால் காமசூத்திரத்தையும் தழுவின எனக் கூறவும் தலைப்பட்டனர்.
தொடரும்..
மலேசியாவில் தமிழியல் ஆறாம் பட்டமளிப்பு விழா மலரில் இருந்து பொ.முருகவேள் ஆசிரியர்.