குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

முதுபெரும் தமிழறிஞர் புலவா் இரா. இளங்குமரன் காலமானார் தமிழறிஞா் இளங்குமரனார்

26.07.2021.......பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார்.தமிழறிஞா் புலவா் இரா. இளங்குமரனார் வயோதிகம் காரணமாக தனது 94வது வயதில் மதுரை திருநகரில் உள்ள அவரது இல்லத்தில் காலமானார்.

மறைந்த இளங்குமரனார் தமிழாசிரியர், நூலாசிரியா், பதிப்பாசிரியா், தொகுப்பாசிரியா் மற்றும் இதழாசிரியா் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொண்டவர். திருநெல்வேலி மாவட்டம் வாழவந்தாள்புரம் கிராமத்தில் 1927ஆம் ஆண்டு பிறந்த இளங்குமரனார், திருநகரில் உள்ள அரசுப் பள்ளியில் 1946ஆம் ஆணடு தமிழ் ஆசிரியராக தமது தமிழ் பணியை தொடங்கினார். சென்னை பல்கலைக்கழகத்தில் 1951ஆம் ஆண்டு புலவா் தேர்வில் முதல் வகுப்பில் தோச்சி பெற்றார்.

இளங்குமரனார் எழுதிய ‘திருக்கு கட்டுரைத் தொகுப்பு’ எனும் நூலை 1963ஆம் ஆண்டு முன்னாள் பிரதமா் நேரு வெளியிட்டார். ‘சங்க இலக்கிய வரிசையில் புானூறு’ எனும் நூலை 2003ஆம் ஆண்டு குடியரசு முன்னாள் தலைவா் அப்துல்கலாம் வெளியிட்டார். இளங்குமரனார் 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். தமிழகமெங்கும் பல்வேறு ஆராய்ச்சி படிப்பு பயின்று வரும் கல்லூரி மாணவ மாணவிகளுக்கும் உதவிகளையும், தமிழ்வழி திருமணங்களையும் நடத்தி வைத்தவர்.

இளங்குமரனார் மறைவிற்கு, தமிழறிஞர்கள் அரசியல் பிரபலங்கள் உள்ளிட்ட பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அந்த வகையில், மதுரை எம்.பி, சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், “செந்தமிழந்தணர், என் ஆசான் திருமிகு இரா.இளங்குமரனார் முதுமையால் மதுரையில் மறைந்தார். இளம்வயதிலேயே தொடக்கப்பள்ளி ஆசிரியராக வாழ்க்கைத் தொடங்கி, தானே பயின்று புலவர் பட்டம் பெற்று, உயர்நிலைப்பள்ளித் தமிழாசிரியராக, மேல்நிலைப்பள்ளி பொறுப்புத் தலைமையாசிரியராக, மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் ஆய்வறிஞராக, தமிழ்ச் சொற்பிறப்பு அகரமுதலித் திட்டத்தில் மொழியறிஞராகச் சிறக்கப்பணியாற்றிய செம்மல் அவர்.

பாவலர், சொற்பொழிவாளர், சொல்லாய்வறிஞர், எழுத்தாளர், தமிழாய்வாளர், தமிழிய வரலாற்று வரைவாளர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தமிழியக்கச் செயற்பாட்டாளர், தமிழ்நெறி பரப்புநர் எனப் பன்முகங்கொண்டவர் இளங்குமரனார். திருநகரில் பாவாணர் நூலகத்தையும் திருச்சிக்கு அருகில் திருவள்ளுவர் தவச்சாலையையும் அமைத்தவர்.

தமிழகத்தில் கலை-அறிவியல் கல்லூரி சேர இன்று முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்

அதிர்ந்து பேசா பண்பாளர், ஆய்ந்துபேசும் அறிஞர், எழுத்தாளராக வாழ்வதற்காக அரசுப்பணியைத் துறந்தவர், கண்பார்வை இழந்தாலும் தனது எழுத்துப்பணி தடைபடக்கூடாது என்பதற்காக கண்களை மூடியெழுதிப் பழகியவர். திருக்குறளுக்கு உரையை திருக்குறளிலேயே தேடவேண்டுமென வலியுறுத்திய குறளாசன். குறள்வழித் திருமணம், புதுமனை புகுவிழா என குறளியத்தை வாழ்வியல் நெறியாக வகுத்து வாழ்ந்து காட்டியவர்.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக, உலகில் முதன்முதலாகப் பெண்ணொருத்தியால் எழுதப்பட்ட இலக்கண நூலான காக்கைப்பாடினியத்தை - அது மறைந்துவிட்டது என்று தமிழறிவுலகம் கருதியவேளையில், கண்டெடுத்து தமிழ்கூறு நல்லுலகிற்கு வழங்கிய தமிழ்ப்பாட்டனார் எங்கள் இளங்குமரனார். என அவரைப்பற்றிய எண்ணங்கள் ஒவ்வொன்றும் விண்மீன்களாய் மனவானில் ஒளிவிடுகின்றன. அவரது இழப்பை மனம் ஏற்கமறுக்கிறது. ஆனால், இயற்கையின் கட்டளையை ஏற்று அவருக்கு வீரவணக்கம் செலுத்துகிறேன்.” இவ்வாறு கூறியுள்ளார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.