கிழிந்து விடும் என்பதால் ஆனால் அதற்கு உரியஇடத்தில் குற்றிருக்குமாப்பேர்ல் வாசிப்பார்கள் அந்த வழக்கு இருந்துள்ளது. 15 அக்டோபர், 2020 ·தமிழ் வரலாற்றில் ஒரு காலகட்டத்தில் மெய்யெழுத்துக்களின் மேல் புள்ளி வைப்பது வழக்கத்தில் இருந்ததில்லை என்பதனை நீங்கள் அறிவீர்களா?
தமிழ் இலக்கண விதியின்படி மெய்யெழுத்துகளின் மேல் புள்ளி வைக்கப்படவேண்டும். "மெய்யின் இயற்கை புள்ளியொடு நிலையல்" என்று தொல்காப்பியத்தில் கூறப்பட்டுள்ளது. புள்ளி வைக்காவிட்டால் அகரமேறியதாகிவிடும். எடுத்துக்காட்டாக, ' க் ' என்ற மெய்யெழுத்தின்மேல் உள்ள புள்ளியை நீக்கிவிட்டால் ' க ' என்ற உயிர்மெய் எழுத்தாகிவிடும்.
பழங்காலத்தில் மெய்யெழுத்துகளின்மேல் புள்ளி வைப்பதில் ஒரு சிக்கல் இருந்தது. அக்காலத்தில் எழுத்துகள் பனை ஓலையில் எழுத்தாணிகொண்டு எழுதப்பட்டன. எழுத்தாணியின் முனை கூர்மையாக இருக்கும். பனை ஓலையின்மீது எழுதும்போது கவனமாக இருக்கவேண்டும். மெய்யெழுத்துகளின்மேல் புள்ளிவைத்தால் அது பனை ஓலையை கிழித்துவிடும். ஆகையால் மெய்யெழுத்துகளின்மேல் புள்ளி வைப்பது தவிர்க்கப்பட்டது. அப்போது மெய்யெழுத்துகளும், அகர உயிர்மெய் எழுத்துகளும் வேறுபடுத்தப்படாமல் ஒரேமாதிரியாக எழுதப்பட்டன. எடுத்துக்காட்டாக, ' மன்னன்' என்பதை 'மனனன' என்றே எழுதினர். இதைப் படிப்பவர் இதை ' மன்னன் ' என்றே புரிந்துகொள்ளவேண்டும். ' இச்சை' என்பதை 'இசசை' என்றே எழுதினர். படிப்பவர் அதை 'இச்சை' என்று புரிந்துகொள்வார். காரணம் அக்காலத்தில் அவ்வாறு படிப்பது பழக்கமாகிவிட்டது.
இவ்வாறு மெய்யெழுத்துகளின்மேல் புள்ளி வைக்கப்படாமல் எழுதப்பட்டதற்கான சான்று ஒன்றைத் தருகிறேன். கீழேயுள்ள கல்வெட்டு மாங்குளம் கல்வெட்டு என்று அழைக்கப்படுகிறது. இது மதுரை மாவட்டம் மாங்குளம் என்ற ஊரில் உள்ளது. இந்த ஊரை மாங்குளம்மலை என்றும் கழுகுமலை என்றும் அழைப்பர். இந்தக் கல்வெட்டு பாண்டியன் நெடுஞ்செழியனைப்பற்றி குறிப்பிடுகிறது. அது அந்தக்காலத்தில் புழக்கத்திலிருந்த தமிழ் எழுத்துகளால் எழுதப்பட்டது. ஆனால் தொல்காப்பியத்தில் குற்று இடப்படாவிட்டால் அகரம் ஏறிவிடும் என்பது தொல்காப்பிய விதி அதைன உணர்ந்த வீரமாமுனிவர் ஓலைக்காலம் போய் தாளில் அச்சுப்பதிக்கும் காலம் வந்ததும் மீண்டும் புள்ளியிடும் முறையை கொடுவந்தார் புதிதாக அல்ல எழுத்து அதிகார முறப்படி!