குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

தில்லை “அம்பலம்’ இது அறியாத கூட்டம் தமிழருக்கு சமயம் இருபதாக ஏமாற்று!

13.07.2021.....தில்லை “அம்பலம்’இந்தியாவிலிருந்த வெள்ளையர்கள் ஆட்சி நீங்கி, இந்தியாவுக்குச் சுதந்திரம் கொடுத்துவிட்டதாக அறிவித்து விட்டு வெள்ளையர்கள் வெளியேறியபோது, இந்தியப் பார்ப்பனர்கள், அதைப் பாட்டுப் பாடிக் கொண்டாடி னார்கள் -விடுதலை! விடுதலை!!

....பள்ளருக்கும் பறையருக்கும் இங்குதீய... புலையருக்கும்

விடுதலை! விடுதலை...!என்று ஆடிப்பாடினார்கள். பெரியார் மட்டுமே சொன்னார்: “இது நமக்குவந்த சுதந்திரமல்ல - பார்ப்பான் நம்மை ஏமாற்றுகிறான்; நம்மை ஆண்ட யோக்யனான வெள்ளைக்காரன், அந்த ஆட்சியை அயோக்யப் பார்ப்பான் களி டம் மாற்றிக் கொடுத்துவிட்டுப் போகிறான் - அவ்வளவுதான்! இது தமிழருக்குச் சுதந்திர நாளல்ல, துக்கநாள்!” - என்று பிரகடனப்படுத்தினார். பெரியார் பிரகடனத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமல்ல, திரு. அண்ணாதுரை அவர்களே கூட கண்டித்தார்! மறுப்பு அறிக்கையும் வெளியிட்டார்.

“துக்கநாள் என்று பெரியார் சொல்லுவதை ஏற்க வேண்டாம்; இது தமிழர்களுக்கும் சுதந்திரநாள்தான்” - என்று நீண்ட பெரிய விளக்க அறிக்கை வெளியிட்டார், அண்ணாத்துரை! திரு. அண்ணாதுரை அவர்களின் அறிக்கை எவ்வளவு பெரிய தவறு; தந்தை பெரியார் சொன்னது எவ்வளவு ஆணித்தரமான உண்மை என்பதை இன்றைக்குச் சிதம்பரத்திலுள்ள பார்ப்பனத் தீட்சிதர்களும் உலகத்துக்கு நிரூபித்துக் காட்டிவிட்டார்கள்.

ஆறுகோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டில், சிதம்பரம், சில ஆயிரம் மக்களே வாழும் ஒரு சிறிய நகரம். இந்த நரகத்தில் உள்ள நடராயர் கோயவிலைச் சுற்றி வாழும் சில நூறு தீட்சிதப் பார்ப்பனர்கள், நாங்கள் சொல்லு வதுதான் வேதம் என்று சொல்லி ஆறுகோடித் தமிழர்களையும் அடிமைச் சூத்திரமக்களாக்கி, அவர்களின் மனித உரிமை, தன்மானம், வழிபாட்டு உரிமை, அவர்களின் மொழி, பண்பாடு, கலாச்சாரம், அரசியல் உரிமை, சட்ட உரிமை எல்லாவற்றையும் தங்கள் காலில் போட்டு மிதித்து, சாணியாக்குகிறார்கள் என்றால், இங்கே தமிழர்கள் சுதந்திரம் பெற்ற மனிதர்கள் என்று, அறிவுத் தெளிவுள்ள மக்கள் யாராவது சொல்லுவார்களா, கேட்டால், நடராஜர் கோயில், தீட்சிதர்களுக்கு உரிமையானது - உடமையானது - தனியார்க்குச் சொந்தமானது; எனவே, அடுத்தவர்கள் தலையிடக்கூடாது என்று பச்சைப் பொய்யைச் சொல்லி ஏமாற்றி, தமிழர்களை உரிமையற்றவர்களாக்கிக் கொண்டிருக்கிறார்கள்.

நடராயர் கோவிலைக் கட்ட, காணிநிலமோ, நூறு செங்கல்லோ, ஒரு சட்டிச் சாந்தோ தீட்சிதப் பார்ப்பனர்கள் தந்ததாகவோ, அதற்கு மண் சுமந்து, வானம் தோண்டி, சாந்து குழைத்து அவர்கள் வேலை பார்த்ததாகவோ கோயில் வரலாற்றில் இல்லை! வழக்கம் போல மூட - முட்டாள் சோழ மன்னர்களால் கட்டப்பட்டு, பராந்தகச் சோழன் என்ற மூட மன்னன்தான் கோயில் கருவறையின்மேல் பகுதிக்குப் பொன் வேய்ந்தான் என்றும் வரலாறு சொல்லுகிறது.

கோவில் கட்டி முடிக்கப்பட்ட பின்பு கூட, இந்தக் கோயில் பெருச்சாளிகளும், இவர்களுக்கு ஆசை நாயகிகளாக வாழ்ந்த பொட்டுக் கட்டிய தெலுங்கு நாட்டுத் தேவதாசிகள் குடும்பத்தாரும் உழைக்காமல் சாப்பிடு வதற்கெ ன்று, முதலாம் இராயராயசோழன், முதலாவது ராஜேந்திர சோழன் ஆகியோரின் மனைவிகள் - தங்கைமார்கள் பெயரில் 50 வேலி காவிரிப் பாசன அயன் நஞ்சை நிலங்கள் எழுதி வைக்கப்பட்டுள்ளன.

ஆக, இப்படித் தமிழர்களின் பொதுச் சொத்தாக உருவானதுதான் இந்த நடராஜர் கோயிலே தவிர, எங்கிருந்தோ வந்த பார்ப்பனத் தீட்சிதர்களுக்கும் இந்தக் கோவில் உரிமைக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை! இங்கே திருடித்தின்றவர்கள்தான் தீட்சிதர்கள்! இப்படி உண்மை சொல்லும்போது, இதற்கு மாற்றாகப் பார்ப்பனர்கள் தங்கள் புராணக் கற்பனைப் பொய்க் கதையைச் சொல்லுகிறார்கள்.

இந்தத் தீட்சிதர்களின் வழித்தோன்றல் கயிலையாம்! (கைலாசம்தான்!) கயிலிலிருந்த இந்தத் தீட்சிதர்கள் மூவாயிரம் பேரை, சிவபெருமானே அழைத்துக் கொண்டு பூலோகத்திலிருந்த சிதம்பரத்துக்கு வந்தாராம்! (ரெயில், பேருந்து, விமானம் இல்லாத காலத்தில் எப்படிப் பயணப்பட்டு வந்தார்களோ, பாவம்!) படைப்புப் பகவானான பிரம்மா, காசியில் ஒரு யோகம் நடத்தினாராம்! அதற்கு வடக்கே ஆட்கள் கிடைக்காததால் சிதம்பரத்திலிருந்த மூவாயிரம் தீட்சிதர்களையும் காசிக்கு (கால்நடையாக) வரவழைத்தாராம்.

காசிக்குப் போன தீட்சிதர்களை மீண்டும் சிதம்பரத்துக்கே வந்து விடும்படி சிவனார் வேண்ட, அவர்கள் திரும்பினார்களாம்! திரும்பிவந்த மூவாயிரம் தீட்சிதர்களில் ஒருவர், வழியில் காணாமல் போய் விட்டாராம்! பதறிப் போன தீட்சிதர்கள் காணாமல் போனது யார் என்று கண்டுபிடிக்க முனைந்தபோது, நடராஜப் பெருமானே முன்வந்து, யாரும் காணாமல் போகவில்லை - நான்தான் அந்த ஒருவர் என்று கூறினாராம்!

இப்படி ஒரு பொய்க் கதையைச் சொல்லி, எங்களில் ஒருவர்தான் தில்லை நடராயர்; நாங்களும் சிவ அம்சம்தான் என்று நீண்ட காலமாக மக்களை ஏமாற்றிக் கொண்டு, சிதம்பரம் கோயிலை சூழ்ச்சியாகத் தங்கள் உரிமையாக்கிக் கொண்டு, அண்ணா சொன்னதுபோல விதைக்காது விளையும் கழனியாகக் கோயில் சொத்துக்களைத் தின்று கொழுத்துக் கொண்டிருக்கிறார்கள், தீட்சிதப் பார்ப்பனர்கள்!

கோவில் சொத்தைத் திருடித்தின்று கொண்டிருப்பது மட்டுமல்ல, நாட்டுக்கும் நகருக்கும் சொந்தக்காரர்களான தமிழர்களைச் சூத்திரர்கள் என்று சொல்லி, அவர்களின் மனித உரிமை, தன்மான உரிமை, வழிபாட்டு உரிமை, மொழி உரிமை, கலாச்சார - பண்பாட்டு உரிமை அனைத்தையும் மறுத்து, உரிமையற்றவர்களாக வெளியே நிற்க வைத்தார்கள்! தமிழர்களின் தேவாரப் பாட்டைக்கூட கோவிலுக்குள் பாடக் கூடாது என்றாக்கி விட்டார்கள்.

தீட்சிதப் பார்ப்பனர்களைச் சிதம்பரத்திலே வாழவகை செய்த சோழ மன்னர்களுக்கே கூட இவர்கள் சவாலாகி விட்டார்கள்! பார்ப்பான் பண்ணையம், கேட்பார் இல்லை என்கிற நிலையில் நடராஜர் கோயிலுக்குச் சொந்தமான பல்லாயிரம் கோடிச் சொத்தும் தீட்சிதப் பார்ப்பான்களின் உடைமையாகி விட்டது. தமிழர்களின் உரிமையை - சுதந்திரத்தை நிலைநாட்டப் போராடிய நந்தனையும், வள்ளலாரையும், பெத்தான் சாம்பானையும், முத்துத் தாண்டவரையும் தீயில் எரிந்து, சோதியில் கலந்தார்கள் என்று புளுகித் தீர்த்தார்கள்!

இதன் பின்பும் தமிழர்கள் விடாமல் குரல் கொடுத்ததன் பலனாய், நடராயர் கோவில் உரிமை பற்றிய ஒரு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பகலெல்லாம் கோயிலுக்குள் தீட்சிதர்கள் எவ்வளவு அட்டகாசம் - அடாவடி செய்தாலும், அர்த்தயாமப் பூசை முடிந்து, கோயில் நடைசாத்தப்பட்ட பின்பு, சாவியை பிச்சாவரம் யமீன், நாட்டுப்பிள்ளை வீட்டில் கொண்டு போய் கொடுத்துவிட்டு, மறுநாள் காலையில் தான் மீண்டும் வந்து கோயில் சாவியை வாங்கிப் போக வேண்டும் என்று முடிவாகி, அதன்படியே நடந்து வந்துள்ளது. பின்பு, கோவில் சொத்துக்களைச் சாப்பிடுவதில் தீட்சிதர்ப் பார்ப்பனர்களுக்குள்ளேயே தகராறு ஆகி, சிலர் நீதி மன்றத்தில் 1887இல் வழக்குத் தொடர்ந்தார்கள்.

கோவில் நிலம் குத்தகை, கோவில் வேலையாட்கள் சம்பளம், கோவில் பராமரிப்பு, திருவிழாக்கள் செலவு போன்றவற்றில் பெரிய அளவில் கையாடல் நடப்பதாக எழுந்த வழக்கு அது! இந்த வழக்கில் பதில் மனுதாக்கல் செய்த தீட்சிதப் பார்ப்பனர்கள் - நடராயர் கோவில் தனியாருக்குச் சொந்தமானது என்றும், பொதுக் கோயில் அல்லாததால் யாரும் கணக்குக் கேட்க முடியாது என்றும் வாதாடினார்கள்.

வழக்கு, தென்னாற்காடு மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று, பின்பு சென்னை உயர் நீதிமன்ற விசாரணைக்குப் போனது. வழக்கு எண்.ஓ.எஸ். 7/1887. வழக்கை, நீதிபதிகள் திருவாரூர் டி. முத்துசாமி அய்யர், ù‘ப்பர்டு என்ற வெள்ளைக்காரர் ஆகிய இருவரைக் கொண்ட டிவிஷன் பெஞ்ச் விசாரித்து, 1888இல் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. நடராயர் கோவில், தீட்சிதர்களின் தனிச்சொத்து என்பதற்குச் சிறுதுளிகூட ஆதாரம் இல்லை. முற்காலம் தொட்டே இந்தக் கோவில் பொது வழிபாட்டுக்குரிய இடமாகத்தான் உபயோகத்தில் இருந்துள்ளது. - என்று திட்டவட்டமான அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனாலும், வன்முறையாகக் கோவில் தங்களுக்கு உரிமை என்று அடிதடி நடத்திக் கொண்டிருந்தார்கள்.

1922ஆம் ஆண்டில் நீதிக்கட்சி ஆட்சி காலத்தில் கோவில் மடாலயங்களின் நிர்வாகத்தை முறைப்படுத்த இந்து (தமிழ்) அறநிலையத்துறை உருவாக்கப்பட்டது. அப்போதும், சிதம்பரம் நடராயர் கோவில் தங்களுக்கே தனி உடமை என்றும், இதிலே அரசு தலையிடக்கூடாது என்றும் தீட்சிதர்கள் அரசிடம் அடாவடி செய்ததோடு, இந்தக் கோவிலுக்கு நகைகளைத் தவிர வேறு சொத்துக்கள் எதுவுமே இல்லை என்றும், வேறு கட்டளைகளோ, அதன் வழி வருவாயோ கிடையாது என்றும், எனவே இந்தக் கோயில் நிர்வாகத்தில் அரசு தலையிடத் தேவையில்லை என்றும் தங்கள் மனுவில் கூறியிருந்தார்கள்.

அப்போது, இந்து அறநிலையத்துறை தலைவராக இருந்தவர் திரு. சதாசிவ அய்யர் என்பவர். அவர் தீட்சிதர் களின் அந்த மனுவை விசாரித்து, உண்மையை உணர்ந்து 31.12.1925ல் தமது தீர்ப்பை வழங்கியுள்ளார். அவர் பார்ப்பனராக இருந்தும் கூட உண்மையைத் திரை போட்டு மறைக்க முடியாது என்பதை உணர்ந்து, தமது உத்திரவை வழங்கியுள்ளார். சிதம்பரம் நடராயர் கோயிலுக்கு ஏராளமான சொத்துகளும் வருமானமும் இருக்கிறது. தீட்சிதர்கள் சொல்லுவது உண்மைக்குப் புறம்பாக உள்ளது. சொத்துக்களுக்கும், வருமானத்துக்கும் எந்த ஒரு கணக்கோ, வரவு - செலவு விவரங்களோ கோவில் நிர்வாகிகளால் வைக்கப்படவில்லை. இவர்கள் மீது நம்பிக்கைத் துரோக நடவடிக்கை எடுக்கலாம் என்று அவரது ஆணை பிறப்பிக்கப்பட்டது.

ஆனால், வன்முறைகள் மூலம் தீட்சிதர்கள், கோவிலையும், அதன் சொத்துக்களையும் தங்கள் ஆதிக்கத்திலேயே வைத்துக் கொண்டார்கள். அரசு நிர்வாகத்தால் கூட ஒன்றும் செய்ய முடியவில்லை! ஆனாலும், தீட்சிதர் களுக் குள் ஏற்பட்ட உள்விவகாரச் சண்டை முற்றி, பலப்பல புகார்களும் வழக்குகளும் ஏற்பட்டு, அவர்களுக்குள்ளேயே குழுச் சண்டைகள் நடந்தன. அந்த முறையில் சென்னை தலைமைச் செயலகத்தில் பொறுப்பான செயலாளர் களாக இருந்த நாக வெங்கடேச தீட்சிதர் ஆகிய மூவர் உள்ளிட்ட 11 பார்ப்பனர்கள் கையொப்பமிட்டு, தில்லை நடராயர் கோவில் நிர்வாகத்தில் தீட்சிதர்கள் செய்யும் ஊழல்களையும், அநியாயங்களையும், அட்டூழியங் களையும் பட்டியலிட்டு, ஆதாரபூர்வமாக - தேதி வாரியாகப் போட்டு புகார் மனு தயாரித்து, இந்தியப் பிரதமர், தமிழக முதல்வர் எம்.யி. இராமச்சந்திரன், காஞ்சி சங்கராச்சாரியார் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள், சட்டமன்ற - நாடாளுமன்ற உறுப்பினர்கள், பத்திரிகைகள் என்று பெரிய அளவில் மனுக்களை அனுப்பி வைத்தார்கள்.

இதன் பேரில் பலவிதமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும், சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினர் (அ.தி.மு.க.) வி.வி. சாமிநாதன் அவர்கள், இந்தப் புகார் பட்டியல் அடிப்படையில் சட்டமன்றத்திலே சிதம்பரம் தீட்சிதர்கள் மீது பரபரப்பாகக் குற்றம் சாட்டிப் பேசினார். அவரது உரை 25.3.1982 நாளிட்ட சட்டமன்ற நடவடிக் கை நூலில் வெளிவந்தது.

நடராயர் கோவில் நிலங்களை யார் யார் அனுபவிக்கிறார்கள், கோயிலில் இருந்த பெரிய பெரிய தங்க நகை களெல்லாம் தீட்சிதர்களால் கொள்ளையடிக்கப்பட்ட விவரம், அம்மன் தாலியே காணாமல் போய் விட்ட அநியா யம், தங்க நகைகள் உருக்கப்பட்ட போது சுமார் 20 பவுன் திருடப்பட்ட மர்மம், நடன சபாபதியின் குஞ்சித பாதத்திலிருந்த விலை மதிப்பற்ற பல வைரக் கற்கள் காணாமல் போனது, பக்தர்கள் உண்டியலில் போட வேண்டிய சிறு சிறு நகைகளை உண்டியலில் போடக்கூடாது; படிக்கட்டிலே வையுங்கள் என்று சொல்லிச் சுருட்டிய சூழ்ச்சிகள், நடராயருக்கு இடதுபுறம் உள்ள கசுத இராயா இடுப்பிலே இருந்த ஒன்றரை பவுன் கிண்கிணி - தங்க அரைஞாணும் காணவில்லை, அரசின் கண்களில் மிளகாய்ப் பொடியைத் தூவி, கோவி லுக்குள் இரண்டு கட்டி மூசைத் தங்கமும், 26 தங்க நாணயங்களும் வைத்திருந்தது இந்து அறநிலையத் துறை ஆணைய அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்ட விவரம், கோவிலுக்குள் பரமானந்த கூபம் என்ற ஒரு கிணறு இருக்கிறது. உண்டியலில் பணம் போட விரும்பும் பக்தர்களை அந்தக் கிணற்றில் போடுமாறு இந்தப் பார்ப் பனர்கள் கூறுவார்கள். அவ்வாறு போடும் பழக்கம் உண்டு. 2, 3 மாதங்களுக்கு ஒருமுறை அவர்களுக் குள்ளேயே ஏலம் விடுவார்களாம். பொது ஏலத்திற்கு விடாமல் சில நேரங்களில் இந்தத் தீட்சிதப் பார்ப்பனர்களே ஆளை அமர்த்தி கிணற்றில் மூழ்கச்செய்து பணத்தை மூட்டைக் கட்டிக்கொண்டு சென்று விடுவார்கள். இந்தத் திருட்டை வெளியிலே சொன்ன கிருச்ணசாமி தீட்சிதரைக் கடுமையாகத் தாக்கிய வழக்கு.

இப்படி ஏராளமான மோசடிப் புகார்கள் திரு. சாமிநாதன் சட்டமன்றப் பேச்சில் உள்ளது.

ஆனாலும், தமிழக அரசாலும், இந்து அறநிலையத்துறை அதிகாரிகளாலும் நெருங்க முடியவில்லை! இந்துமத ஐதீகம் - ஆச்சாரம் - ஆகமம் என்று சொல்லி, சட்டப்பிடியிலிருந்து இந்தப் பார்ப்பனர்கள் தப்பிக் கொண்டிருக் கிறார்கள். இதனால் நடராயர் கோவிலை அரசு ஏற்க வேண்டும் என்கிற குரல் நாளுக்கு நாள் ஓங்கி ஒலிக்க ஆரம்பித்து, இதுபற்றிய கருத்தரங்கம் ஒன்று சென்னையில் நடத்தப்பட்டது.

05.10.87 அன்று, சென்னை மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான கற்பகம்மாள் திருமண மண்ட பத்தில் நடந்த அந்தக் கருத்தரங்கில் பங்கேற்ற ஆன்மீகப் பெரியார்கள் - இவர்கள் : - ம.பொ.சிவஞானம், சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதிகள் கிருச்ணசாமி ரெட்டியார், ஆர். சதாசிவம், பல்கலைக் கழக முன்னாள் துணை வேந்தர் எஸ்.வி. சிட்டிபாபு, தவத்திரு மயிலை சுந்தர்ராம் குருயி, தவத் திரு ஊரனடிகள், தொழிலதிபர் பொள்ளாச்சி நா. மகாலிங்கம், பேராசிரியர் வெள்ளை வாரணர், இந்து அறநிலைய ஆட்சித்துறை முன்னாள் ஆணையர் எம். கோபால சுப்பிரமணியம், வழக்கறிஞர் காசி விசுவநாதன், மாநிலத் தமிழாசிரியர் கழகத் தலைவர் சா. இராமானுயம், பேராசிரியர் அன்பு கணபதி, பேராசிரியர் மெ. சுந்தரம் முதலியோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினார்கள்.

முடிவில் தக்கவர்களைக் கொண்ட குழு அமைத்து, தில்லை சபாநாயகர் கோவிலின் பொது தீட்சிதர்களின் பிரதிநிதிகளைச் சந்தித்து நிலைமையை அவர்களுக்கு விளக்க வேண்டும். அவர்கள் ஒத்து வராவிடில் திருப்பதி தேவசுதானம், குருவாயூர் கோயில்களுக்குத் தனி சட்டம் கொண்டு வந்திருப்பதுபோல், சிதம்பரம் நடராசர் கோவில்களுக்கும், தமிழக அரசு நிர்வாகம், வருமானம், சுகாதாரம், வழிபட வருவோரின் வசதிகள் ஆகியவற்றையும் பேணி பாதுகாக்க தமிழக அரசு தனிச் சட்டம் கொண்டு வர வேண்டும். தேவையானால், அவசரச் சட்டம் தமிழக அரசு கொண்டு வரலாம் என்றும், ஓய்வுபெற்ற நீதிபதிகள் சதாசிவம் மற்றும் கிருச்ணசாமி ரெட்டியார் போன்றோர் கருத்து தெரிவித்தனர். இந்தக் கருத்தரங்க முடிவையும் மனுநீதி சொல்லும் சிதம்பரம் தீட்சிதர்கள் ஏற்க மறுத்து விட்டார்கள். தமிழ்நாட்டு அரசும் நச்சுப்பாம்பான பார்ப்பனர்களுக்குப் பயந்து எதுவுமே செய்யவில்லை!

இந்த நிலையில் தமிழர்களால் கட்டப்பட்ட - தமிழர்களுக்குச் சொந்தமான நடராயர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தமிழ் போற்றிப் பாடல்களான தேவாரம் - திருவாசகம் பாடல்களைப் பாடக் கூடாது என்ற தீண்டாமையை எதிர்த்து, சைவச் சிவனடியார் - ஓதுவார் ஆறுமுகசாமி உரிமைக்குரல் எழுப்பினார். அவருக்கு மனித உரிமைப் பாதுகாப்பு மையம் என்ற அமைப்பு பேராதரவு கொடுத்தது. மற்றும் மக்கள் கலை இலக்கியக் கழகம், விவசாயிகள் விடுதலை முன்னணி, புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணி, புதியசனநாயகத் தொழிலாளர் முன்னணி ஆகிய இடதுசாரி அமைப்புகளும், அந்த மாவட்ட அளவிலான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, பெரியார் திராவிடர் கழகம், பாட்டாளி மக்கள் கட்சி, திராவிடர் கழகம் போன்ற அமைப்புகளோடு முன்னாள் அறநிலையத் துறை அமைச்சர் வி.வி. சாமிநாதன் போன்ற தமிழ் உரிமைச் சிந்தனையாளர்களும் ஆதரவாக நின்றார்கள்.

இந்தப் பின்னணியோடு சிவனடியார் ஆறுமுகசாமி 2000ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் நடராயர் கோவிலுக்குள் தேவாரம், திருவாசகப் பக்திப் பாடல்களைப் பாடப் போனார். போனவரைக் கோவில் வாசலிலேயே கடுமையாகத் தாக்கி, அடித்து - நொறுக்கிக் கை எலும்பு முறிந்த நிலையில், 75 வயது முதியவரான ஆறுமுகசாமியை மருத்துவமனையில் படுக்க வைத்தார்கள்.

மேற்கண்ட அமைப்புகளின் சார்பில் நீண்ட தொடர் போராட்டத்திற்குப் பின்பு இப்போது சென்னை - உயர்நீதி மன்ற ஆணையின் அடிப்படையில், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. பிச்சாண்டி அய்.ஏ.எசு. அவர்கள் விசாரித்து அளித்த தீர்ப்பின்படியும், அதற்கு மேலொப்பமாக துறை அரசுச் செயலாளர் கொடுத்த உத்தரவின் படியும், சட்டரீதியாக நடராயர் கோவில் திருச்சிற்றம்பல மேடையில் தேவாரம் - திருவாசகம் பாட ஓதுவார் ஆறுமுக சாமி தலைமையில் மனித உரிமைக் குழுவினர் 2.3.2008ல் கோவிலுக்குள் சென்றார்கள். அப்போது தீட்சிதப் பார்ப்பனர்கள் நடந்து கொண்ட காட்டுமிராண்டிச் செயல்களே போதும், தமிழர்கள் இன்னமும் எவ்வளவு அவமானப்பிறவிகளாக வாழ்கிறார்கள் என்பதை உலகம் அறிய!

முற்றிலும் சட்டரீதியான தமிழர்களின் நடவடிக்கைக்கு, காவல்துறைகூட பாதுகாப்பும் ஒத்துழைப்பும் தரவில்லை! காவல்துறை அதிகாரிகள் முன்னிலையிலேயே தீட்சிதர்கள் பக்கா ரௌடிகளாக நடந்து கொண்டது மாத்திரமல்ல, மாவட்ட உயர் அதிகாரியையும்கூட அடித்துத் தள்ளி தங்கள் மனுதர்ம அதிகாரம், அரசு அதிகாரத்திற்கும் மேற்பட்டது என்பதைக் காட்டிக் கொண்டார்கள்.

சன்னதியை மூடினார்கள். நாய் - நரிகளைப் போல ஊளையிட்டார்கள்; சாதியைச் சொல்லித் திட்டினார்கள்; ஆறுமுகசாமியை அடித்தார்கள்; அவரது மூக்குக் கண்ணாடியைப் பிடுங்கி எறிந்து உடைத்தார்கள்; படிக்கட்டுகளிலெல்லாம் எண்ணெயை ஊற்றி, வழுக்கி விழச் செய்தார்கள்; தண்ணீர் பாட்டில்களை தமிழர்கள் மீதும், காவலர்கள் மீதும் வீசி அடித்தார்கள். போலீசாரின் தொப்பியைப் பிடுங்கி எறிந்தார்கள். அவர்களைப் பிடிக்க முனைந்த போலீஸ்காரர்களைக் கழுதைகளைப் போல கடித்துக் குதறினார்கள்... இத்தனை நடந்தும் அந்தப் பூணூல் கழுதைகளை நாலு சாத்துச் சாற்றி, காலைப் பிணைத்துப் போட்டு, சட்டத்தை நிலைநாட்டத் தமிழக அரசுப் போலீசார் தைரியமற்றுப் போனது ஆச்சரியமானது மட்டுமல்ல, பார்ப்பனர்களின் மனுதர்ம ஆதிக்கம் எவ்வளவு வலிமையாக நிமிர்ந்து நிற்கிறது என்பதையும் உணர்த்துவதாக இருந்தது.

இத்தனை கலவரத்துக்கிடையேயும் ஓதுவார் ஆறுமுகசாமி, ஒருவரி தேவாரம் பாட... அய்யோ! தீட்டாகிப் போச்சு! தீட்டுப் பண்ணிட்டான் என்று கத்தியபடி, தீட்டுக் கழிக்கும் சடங்கையும் பார்ப்பன தீட்சிதர்கள் நடத்தினார்கள்! தீட்சிதர்கள் தந்த அடி - உதைகளைப் பட்டுக் கொண்டு எல்லாரையும் கோவிலுக்கு வெளியே கொண்டு வந்து விட்டார்கள், காவல் அதிகாரிகள். இதன்பின் நாட்களில் நடந்த சம்பவங்களும் தமிழர்களை அவமானப்படுத்துவதாகவே உள்ளன.

மறுநாள் தேவாரம் பாடப்போன தமிழர்களுக்கு தீட்சிதர்கள் மாலை போட்டு, பொன்னாடை போர்த்தி கேலி செய்திருக்கிறார்கள். அதற்கும் மறுநாள் சமாதானக் கூட்டம் போட்டு, தீட்சிதர்களிடம் அனுமதி பெற்று, காலப் பூயைகள் முடிந்த பின்பு, சத்தமில்லாமல் தேவாரம் பாடலாம் என்று காவல் நிலையத்தில் ஒப்பந்தம் ஆனதாம்! அதற்குப் போலீஸ் காவல்துறையும் பாதுகாப்பும் தர மாட்டார்கள் என்பது ஒப்பந்த ‘சரத்தாம்.

இப்படி ஒரு கொடுமையைத் தமிழர்கள் இந்த 21ஆம் நூற்றாண்டிலும் அனுபவிக்கிறார்கள் என்றால், இவர்களைச் சுதந்திரம் பெற்ற மனிதர்கள் என்று புத்தியுள்ள யாராவது சொல்லுவார்களா? இந்தக் கொடுமைகளுக்குக் காரணம் சொல்லும் ஏமாற்று - மோசடிப் பார்ப்பனர்கள் நாங்கள் இந்து ஆகமவிதிகளையும், ஐதீகத்தையும் கடைப்பிடிக்கிறோம் - அவ்வளவுதான் என்கிறார்கள்.

ஆகமம் - ஐதீகம் என்பதெல்லாம் தமிழர்களுக்குத்தான் உண்டா? பார்ப்பனர்களுக்குக் கிடையாதா? உன் ஆகமப்படி கருவறைக்குள் மின்விளக்குப் போடலாமா? உன் ஆகமப்படி பார்ப்பான் கிராப் வெட்டலாமா? பாப்பாத்தி சுடிதார் போடலாமா? அடே! கோயிலை ஏர் கண்டிசன் செய்ய எந்த ஆகமவிதி - எந்தப் பிரிவு அனுமதிக்கிறது என்று சொல்லுங்கள்? பார்ப்பனர்கள் சொல்லும் இந்த ஆகமம் யாரால் எழுதப்பட்டது? பார்ப்பனர்களின் வாழ்வுக்காக, பார்ப்பனர்களால் சொல்லப்பட்டு, பார்ப்பான்களால் பிரச்சாரம் செய்யப்படுவதுதானே, இந்த ஆகமம்?

இந்தப் பார்ப்பனீய சாதித் தீண்டாமையைத்தான் இந்தியாவின் அரசியல் சட்டம் போலச் சொல்லுகிறார்கள் ஏமாற்றுப் பார்ப்பனர்கள். உண்மையில் இந்தியாவின் அரசியல் சட்டத்தில், இந்த இந்துப் பார்ப்பன, வன்கொடு மைக்கு அனுமதி இருப்பதால் தான் பார்ப்பனர்கள் இந்து ஆகம், இந்து ஐதீகம் என்று மார்தட்டுகிறார்கள். இதைத்தான் தந்தை பெரியார் அவர்கள் அரசியல் கூட்டத்தில் பார்ப்பானுக்கும், சாதி ஏற்றத்தாழ்வுக்கும் அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது என்கிற உண்மையைச் சொல்லி 1957ல் அரசியல் சட்டப்பிரிவு 372 ஆவது ஷரத்தையும், மத சுதந்திர உரிமை 25, 26 ஆவது பிரிவுகளையும் தீ வைத்து எரிக்கச் சொன்னார். 51 ஆண்டு களாகவும் அந்தச் சட்டப்பிரிவுகள் அப்படியேதான் இருக்கின்றன. வீரமணியோ, அவர் சொல்லும் பெரியார் வழி ஆட்சிக்காரர்களோ அந்தச் சட்டப்பிரிவை நீக்க ஒரு துரும்பையும் அசைக்காமல், தமிழர்களை ஏமாற்றுகிறார்கள்; தமிழர்கள் இன்னமும் சூத்திரர்களாகவே வாழ்கிறார்கள்.

இந்த நிலையிலும் வேறு மாநில, அரசுகள் சட்டம் இயற்றி, பலநூறு கோடி வருமானமுள்ள கோவில்களைக்கூட அரசுடைமையாக்க வேண்டும் என்பதே மக்கள் கோரிக்கை. அரசுடமை ஆக்குவது மட்டுமல்ல, கோவில் சொத்துக்கள் எல்லாமே தீட்சிதர் பார்ப்பனர்கள் பெயர்களிலும் 1700 ஏக்கர் நஞ்சை நிலங்கள் தீட்சிதர்களின் குடும்பங்களின் பெயரில் பரம்பரை பரம்பரையாக அனுபோகம் செய்யப்படுவதாகவும் உள்ளதையும் அரசு பறிமுதல் செய்து, கோவில் சொத்தைக் கொள்ளையடித்த தீட்சிதர்களை சமூக விரோதச் சட்டப்படி சிறையிலிட வேண்டும்.

குழந்தைத் திருமணத் தடை உள்பட, ஏராளமான சமூக நலச் சட்டங்களையும் மீறி, இந்தியாவில் குடியாட்சி நடக்கவில்லை - மனு ஆட்சியே நடக்கிறது என்று வாழும் தீட்சிதப் பார்ப்பனர்களின் வன்கொடுமையை அடக்க அரசு உடனே முன் வருமா? வராவிட்டால் மக்கள் ஆயுதம் ஏந்தும் ஆபத்து வந்துவிடும் என்று எச்சரிக்கிறோம்.

(நன்றி: நாத்திகம்)


“சிதம்பரம் கோவிலை அரசு கையப்படுத்தும்வரை போராடிக் கொண்டே இருப்பேன்!”


புவனகிரியிலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ள குமுடிமூலைதான் ஆறுமுகசாமியின் சொந்த ஊர். சிறு வயது முதலே சிவபெருமான் மீது தீவிரப் பற்றுக் கொண்டவர். ஒரு கட்டத்தில் குடும்ப வாழ்க்கையைத் துறந்துவிட்டு சந்நியாச வாழ்க்கை வாழத் தொடங்கினார். நால்வர் மடம் உள்ளிட்ட அமைப்புகள் மூலம் தெய்வத் தமிழ்ப் பணியை மேற்கொண்டார். சிதம்பரம் கோயிலில் தேவாரம் பாடச் சென்ற இவரை தமிழில் பாடக்கூடாது என்று கூறி தில்லை தீட்சிதர்கள் ஆறுமுகசாமியை அடித்து அவமானப்படுத்தி அனுப்ப, பிரச்சனை பெரிதாகி நீதிமன்றம் வரை சென்று, நீண்ட போராட்டத்துக்குப் பின், தற்போது தமிழக அரசு தமிழில் பாடலாம் என ஆணை பிறப்பித்தது.


மீண்டும் ஆறுமுகசாமி தேவாரம் பாட, கோயிலுக்குள் செல்ல முயல, தீட்சிதர்கள் தடுக்க, அதனால் ஏற்பட்ட கலவரமும், அரசு தீட்சிதர்களை கடுமையாக எச்சரித்ததும், தீட்சிதர்கள் பணிந்ததும் தமிழகம் அறியும்.


22-3-2008ஆம் நாள் ஆறுமுகசாமியின் நெடிய போராட்டம் குறித்து அவரிடமே கேட்டோம்...


சிதம்பரம் கோவிலில் தேவாரம் பாடவேண்டும் என்று உங்களுக்கு எப்படித் தோன்றியது?


சிதம்பரம் கோவில் என்பது உலகெங்குமுள்ள சைவர்களுக்குச் சொந்தமான கோவில். அங்கே கடைபிடிக்க வேண்டியது மகுடாகமம் எனும் வழிபாட்டு முறைதான். ஸ்மார்த்த பிராமணர்களான தீட்சிதர்கள் வேதாகமப்படி பூசை செய்கிறார்கள். சாதித் தீண்டாமை, மொழித் தீண்டாமையை மிகத் தீவிரமாக கடைப்பிடிக்கிறார்கள். இவற்றை எதிர்த்து 1999ஆம் ஆண்டு சிற்றம்பலத்தில் தேவாரம் பாடப்போனபோது, தீட்சிதர்கள் அடித்து உதைத்தார்கள். பல அமைப்புகள் உதவியுடன் நீதிமன்றம் வரை சென்று பல வழிகளில் போராடி வெற்றி பெற்றுள்ளேன்.


தற்போது பிரச்சனை முடிந்து விட்டது. நீங்கள் நினைத்தது நடந்து விட்டது... இல்லையா?


இல்லை. தமிழர்களுக்கும் தீட்சிதர்களுக்கும் பல ஆண்டுகளாக நடந்து வரும் இப்போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வரவேண்டும் என்றால் சிதம்பரம் கோவிலை உடனடியாக இந்து சமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். ஓதுவாரை அரசே நியமிக்க வேண்டும். நந்தனார் சென்று வழிபட்ட வழியை சுவரெடுத்து தடுத்துள்ளார்கள், அந்த வழியைத் திறக்க வேண்டும். அதற்காக என் உயிர் உள்ளவரை போராடிக் கொண்டே இருப்பேன்.


சந்திப்பு : ம.மு. தமிழ்ச்செல்வன்