குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

வடக்கிற்குக் கிடைக்கும் / வரும் பல முதலீடுகளும், நன்கொடைகளும் வீணடிக்கப்படுகின்றன. பாடங்கள் கற்கப்ப

டுவதில்லை. 02.ஆடவை(ஆனி).திருவள்ளுவராண்டு2052..... 16.06.கி.ஆ 2021.....இவையெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்? போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாகியும், வடக்கு இன்னமும் நாட்டின் பொருளாதாரப் பட்டியல்களில் கடைசியாகக் கிடந்து உழல்கிறது வடக்கு. உலகம் முழுவதும் தலை சிறந்த நிபுணர்களாக மிளிர்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களை நாம் கொண்டிருந்தும் நமக்கு இந்த நிலைமை. வடக்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடித்து வருகிறது காரணம் மக்கள் தம்மை மேம்படுத்துவதற்காக வேறிடங்களை நோக்கிச் செல்கிறார்கள். போரின்போதும் புலம் பெயர்ந்தார்கள், இப்போதும் புலம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

· வளராத வடக்கு | வடக்கில் முதலீடு செய்வதற்கு எண்ணமுண்டா? - யெகன் அருளையா

போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாகியும், வடக்கு இன்னமும் நாட்டின் பொருளாதாரப் பட்டியல்களில் கடைசியாகக் கிடந்து உழல்கிறது வடக்கு. உலகம் முழுவதும் தலை சிறந்த நிபுணர்களாக மிளிர்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களை நாம் கொண்டிருந்தும் நமக்கு இந்த நிலைமை. வடக்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடித்து வருகிறது காரணம் மக்கள் தம்மை மேம்படுத்துவதற்காக வேறிடங்களை நோக்கிச் செல்கிறார்கள். போரின்போதும் புலம் பெயர்ந்தார்கள், இப்போதும் புலம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

-ஜெ(யெ)கன் அருளையா


சில வருடங்களுக்கு முன்னர், இலங்கையின் மிகப் பெரிய நிறுவனமொன்றின் பணிப்பாளர் ஒருவருடன் நான் பேச சந்தர்ப்பம் கிடைத்தது. யாழ்ப்பானத்தைச் சேர்ந்த, ஒய்வு நிலையை அண்மிக்கும் அவரிடம் நான் கேட்டேன் ” போர் முடிந்து பல ஆண்டுகளாகியும் ஏன் உங்கள் நிறுவனம் இன்னும் வடக்கில் முதலீடுகளைச் செய்யவில்லை” என. அதற்கு அவர் சொன்னது ” நிறுவனம் இலாபமீட்டுவதற்கு , வடக்கை விட வேறு பல இடங்கள் இருக்கின்றன”. அதில் தவறொன்றுமில்லை. பங்குச் சந்தை நிறுவனங்களின் பணிப்பாளர்கள், தமது உணர்வுகள், மனச்சாட்சிகளை விட பங்குதாரரின் இலாபத்துக்குத்தான் பொறுப்பானவர்களாக இருப்பார்கள்.


அவர் கூறுவது, அப்போதும், இப்போதும் சரியானதே – வடக்கில் இலகுவாகப் பணம் பண்ண முடியாது. வடக்கில் முதலீடு செய்பவர்கள், தம்மை முதன்மைப் படுத்தாமல் மண்ணை முதன்மைப் படுத்துவதனால் மட்டுமே வடக்கு இலகுவில் ‘பணம் பண்ணும்’ ஒரு இடமாக வடக்கு மாற்றப்படலாம்.


நான் வடக்கைப் பற்றி எழுதுவதற்குக் காரணம், அங்குதான் நான் வாழ்கிறேன், அது மட்டுமே எனக்குத் தெரிந்த இடம். ஆனால் நான் எழுதும் இவ்விடயம், இலங்கையின், நலிந்துபோன இதர மாகாணங்களுக்கும் பொருந்தும். கவனமாகக் கொடுக்கப்பட்டு, கவனமாகப் பெறப்பட்டு, கவனமாகப் பாவிக்கப்படும் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலீடுகள் அம் மாகாணங்களுக்கும் அவசியம்.


2019 இல், இலங்கை – ஒரு சொற்ப காலத்துக்கு – ‘கீழ் மத்திய வருமான (lower middle income) நாடு’ என்ற ஸ்தானத்திலிருந்து ‘உயர் மத்திய வருமான (upper middle income) நாடு என்ற ஸ்தானத்துகுத் தரமுயர்த்தப்பட்டிருந்து, பின்னர் 2020 இல், மீண்டும் ‘கீழ் மத்திய வருமான’ நாடாகத் தரம் குறைக்கப்பட்டது. மேற்கு மாகாணத்தை மையப்படுத்தியே இம் மதிப்பீடு செய்யப்பட்டிருந்தது. மேற்கு மாகாணத்தை வெளியில் எடுத்துவிட்டுப் பார்த்தால் நாடு மிகவும் மோசமான ஏழ்மை நிலையுள்ள ஒன்றாகவே பார்க்கப்படும்.


தாம் சுயமாகப் பணம் பண்ணும் நோக்கத்தை விட்டு, வடக்கை முன்னேற்றுவதற்கான முதலீடுகளை எப்படி மேற்கொள்ளலாம் எனப் பல புலம் பெயர்ந்த தமிழர்கள் என்னிடம் கேட்கிறார்கள். வட மாகாண மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கு சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொடுப்பதுவே அவர்களது முதன்மையான நோக்கம். அம் மக்கள் தமக்கான சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வதோடு, தமக்கெனப் பணம் பண்ண விரும்பும் பிற முதலீட்டாளர்களை உள்வாங்கிக்கொள்ளும்வரை அவர்களுக்கு ஆதரவு வழங்குவதே இப் புலம் பெயர் தமிழர்களது பெரு விருப்பு. ஏனைய மாகாணங்களுக்கும் இப்படியான உதவிகளைச் செய்ய விரும்பும் பலர் இருக்கலாம். எனவே இங்கு நான் எழுதுவது அவர்களுக்காகவும் தான்.


எனக்கு வரும் பல விசாரணைகளிலிருந்து நான் அறிந்து கொள்வது, அவ் விசாரணைகள் பூரணமாக அலசி ஆராயப்பட்டவையாக இருப்பதில்லை என்பதே. அவற்றில் பெரும்பாலானவை ” மக்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்” என்ற உணர்வார்ந்த நல்விருப்பின் பேறாக எடுக்கப்பட்ட முடிவுகளாக இருப்பதாகவே தெரிகிறது. பல தசாப்தங்கள் நீடித்த போர்க்காலம், அதற்குப் பின்னர் ஒரு தசாப்தம், என வடக்கு மாகாணம் ஒரு தேக்கமடைந்த பிரதேசமாகவே இருந்து வருகிறது.


2018 இல் இலங்கை மத்திய வங்கி வெளியிட்ட அறிக்கையின் பிரகாரம், (மக்களுக்கு வழங்கப்பட்ட வருடாந்த பண்டங்கள், சேவைகளின் குறியீடு (GDP)) இலங்கை மாகாணங்களின் ஏழ்மைப் பட்டியலில் இறுதியாக வருவது கிழக்கு மாகாணம், அதற்கு மேல் இருப்பது வடக்கு மாகாணம்.


முதலீடுகளைச் செய்ய விரும்புபவர்களைடமிருந்து எனக்குக் கிடைக்கும் தகவல்கள் சில:

அன்பளிப்பு: “நோர்வேயிலுள்ள ஒருவர் $10,000 டாலர்களை அன்பளிப்புச் செய்யத் தயாராகவுள்ளார். உங்களுக்கு ஏதாவது எண்ணங்கள், வழிவகைகள் தென்படுகிறதா?”


முதலீடு: “எனது கணக்காள நண்பர்கள் சிலர் இலங்கையின் ஏற்றுமதித் துறையில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள். அப்படி வடக்கில் ஏதாவது சந்தர்ப்பம் இருக்கிறதா?”


நேரம், திறமை அன்பளிப்பு: ” எங்கள் இளைய சமுதாயத்தை ஊக்குவிக்க நீங்கள் முயல்வது தெரிகிறது. உங்களுக்கு உதவி தேவைப்பட்டால். நான் எனது நேரத்தைச் செலவழித்து எமது இளையோர், தமது திறமைகளையும் கல்வித் தராதரத்தையும் முன்னேற்றுவதற்கான உதவிகளைச் செய்யத் தயாராகவிருக்கிறேன்”


சொத்து முதலீடு: “என்னிடம் அபிவிருத்தி செய்யப்படாத பல ஏக்கர்கள் நிலம் உண்டு. அங்கு நான் ஏதாவது செய்வதற்கு, உங்களுக்குத் தெரிந்த, உகந்த பங்காளிகள் யாரவாது இருக்கிறார்களா?”


கிடைக்கும் மிகக் குறுகிய தகவல்களை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனைகளை வழங்க என்னால் முடியாமலிருக்கின்றது. எனவே நான் அவர்களிடம் பல விளக்கங்களைக் கோருகிறேன். இம் முதலீடுகளைப் பெறுபவர்களைக் கண்டுபிடிப்பதில் சிரமங்களுண்டு என்பதற்காக அல்ல, இலவசமாகக் கொடுப்பது இலகு. இலவசமென்றால் அதை எடுப்பவர்களுக்குப் பஞ்சமில்லை. இலவச பணம், இலவச மடிக்கணனிகள், இலவச காணி, இலவச இயந்திரங்கள், இலவச பயிற்சி என அனைத்துமே உடனடியாகக் கைப்பற்றப்பட்டுவிடும்.

தமக்குச் செலவு ஒன்றுமில்லை என அறிந்தால் இவற்றைப் பற்றிக்கொள்வதற்கு எவரும் இரண்டு தடவைகள் யோசிக்க மாட்டார்கள்.

இலவசமாகக் கொடுக்கப்பட்ட நிலமொன்று தரிசாகக் கிடப்பதும், இயந்திரமொன்று துருப்பிடித்துக் கிடப்பதும், திறமைப் பயிற்சிகளையும், கல்விகளையும் பெற்றவர்கள் அவற்றைப் பிரயோசனப் படுதாதுள்ளமையும் நான் அறிந்தவையே. துர்ப்பாக்கியவசமாக, இலவசமாகக் கொடுக்கப்பட்ட பொருட்களும், சேவைகளும் உரிய மதிப்பைப் பெறுவதில்லை. ஒரு தேங்காய் எண்ணைத் தொழிற்சாலை தனக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட 5 இலட்சம் ரூபாய்கள் பெறுமதியான இயந்திரத்தை விடத் தனது சொந்தப் பணத்தில் வாங்கிய ஐயாயிரம் ரூபா பெறுமதியான தள்ளு வண்டிக்கே அதிக மதிப்பைத் தருகிறது.


கவனமற்றுக் கொடுக்கப்படும் எதுவும் கவனமற்றுப் பெறப்படுவதே வழக்கம். முதலீடுகளையோ அல்லது அன்பளிப்புகளையோ மேற்கொள்ள விரும்புபவர்கள் தமது நோக்கங்களைக் கவனமாகப் பரிசீலனை செய்த பின்னர், அவர்களது நோக்கம் எதிர்பார்த்த வகையில் உரிய கவனத்துடன் நிறைவேற்றப்படுமா என அறிந்து தமது காருண்ய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டுமெனவே நான் விரும்புகிறேன்.


முதலீட்டாளர்களும், நன்கொடையாளர்களும் தமது திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் தம்மைக் கேட்டுக்கொள்ளவேண்டிய சில கேள்விகளை இக் கட்டுரை பரிந்துரைக்கிறது. நன்கொடைகளையும் முதலீடுகளாக நான் கருதுவதற்குக் காரணம், பொருள் இலாபமில்லாவிடினும் அவையும் சில திருப்திகளை வழங்குகின்றன என்பதற்காகவே.

ஏன் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்?


பெறுபவர் அதை எப்படியாகப் பாவித்தாலும் சரி, அது அவருக்கு நன்கொடையாக வழஙகப்படுகிறது

இன்னுமொருவரின் ஞாபகார்த்தமாக வழஙகப்படுகிறது


உற்பத்தியை அதிகரிக்க உதவுவதன் மூலம் அவர்களது பண்டங்களை நீங்கள் வாங்க முடியும்

ஒரு சொத்தின் உரிமையாளராக வர விரும்புதல்; நிலம், விவசாய உற்பத்தியை ஊக்குவித்தல்

வடக்கின் ஒட்டுமொத்த திறமையை, வளத்தை, தரத்தை உயர்த்துதல்


ஈடுபாடுள்ள அல்லது ஈடுபாடற்ற பங்காளியாக உருவாகுவது, என்பன..

எப்படி, எந்தளவுக்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்?

நன்கொடையைக் கொடுப்பதோடு சரி, வேறெந்த தொடுப்புமில்லை


வட்டி ஒன்றுமில்லாது முதலீட்டை மட்டும் செய்தல் அல்லது ஈடாக (collateral) எதையுமே எதிர்பார்க்காது விடல். வங்கிகள் கடன் வழங்க மறுப்பவர்களுக்கும், வங்கிக் கடன்களைப்பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்பவருக்கும் கடன் வழங்கல்


ஒரு சொத்தை வாங்கி அதை எவராவது இலவசமாகப் பவித்துப் பலன்பெற அனுமதித்தல் (நிலத்தை விவசாயிக்கு குத்தகைக்கு கொடுத்தல்; பெரிய வீடொன்றை ஒரு தொழில் முனைவருக்கு வாடகைக்கு விடுதல்; சிறிய வாகனமொன்றை டாக்சி ஓட்டுனருக்கு வாடகைக்கு கொடுத்தல்)


ஆரம்ப முதலீட்டைச் செய்துவிட்டு அது இலாபமீட்டும்வரை / முதலீடு மீளப்பெறும்வரை மிக நீண்ட காலத்துக்குக் காத்திருத்தல்

ஆரம்ப முதலீட்டைச் செய்துவிட்டு முதலீடு வளரும்வை அல்லது தனது திட்டமிட்ட காலம்வரை இருந்துவிட்டு வெளியேறுதல்

ஈடுபாடுள்ள அல்லது ஈடுபாடற்ற பங்காளியாக உருவாகுவது, என்பன…


எப்படியான பெறுபேற்றை நீங்கள் உருவாக்க விரும்புகிறீர்கள்? அதை எப்படி அளவிடுவீர்கள்?

வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் எடுத்துக்காட்டாக: தொழிற்சாலை ஒன்றில் முதலிட்டு ஒரு ஆண்டின் பின்னர் அதன் பணியாளர்களின் எண்ணிக்கையை அவதானிப்பது


வருமானத்தை அதிகரிப்பது எடுத்துக்காட்டாக: ஒரு குடும்பத்துக்கு 100 கோழிக்குஞ்சுகளை அன்பளிப்புச் செய்து அக்குடும்பம் கோழிகளையும், முட்டைகளையும் விற்பனை செய்வதன் மூலம் பெறும் இலாபத்தை அவதானிப்பது


சுகாதார ரீதியில் ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்குவது எடுத்துக்காட்டாக: இலவச குடிநீர் வசதியைச் செய்து கொடுத்து சமூகத்தில் நீர் மூலம் பரவும் வியாதிகள் குறைவதை அவதானிப்பது


தொழில் முனைவர்களை ஆதரிப்பது எடுத்துக்காட்டாக: கேக் விநியோக வியாபாரி ஒருவர் பெரிய வெதுப்பி (oven) ஒன்றை வாங்க உதவி செய்வதன் மூலம் அவரது விற்பனை / இலாபம் அதிகரிப்பதை அவதானிப்பது

யார் பலன்பெறவேண்டுமென நீங்கள் விரும்புகிறீர்கள்?

கிராமிய சமூகங்கள்

பெண் தலைமைத்துவ குடும்பங்கள்

இளைய சமுதாயம்

போரினால் பாதிக்கப்பட்டவர்கள்

கூட்டுறவு சமூகம்

தொழில் முனைவர்கள்

எங்கு முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்?

ஒரு குறிப்பிட்ட கிராமம்

ஒரு குறிப்பிட்ட மாவட்டம்

ஒரு குறிப்பிட்ட சமூகம்

எந்தத் துறையில் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள்?

விவசாயம்

மீன்பிடி

உணவுற்பத்தி

தகவற் தொழில்நுட்பம், தொடர்பாடல் துறை

கல்வி

சுகாதாரம்

சுற்றுலா, ஆகியன

முதலீட்டு வழிமுறைகள்


தொழில்நுட்ப முறைகள் எடுத்துக்காட்டாக: புதிய பயிர் வகைகள், சொட்டு நீர்ப்பாசன முறைகளை அறிமுகம் செய்தல்

பயிற்சி /கல்வி எடுத்துக்காட்டாக: ஆங்கிலம் , தொழிற் கல்வி, விவசாயம்

நிலங்களும் கட்டிடங்களும்

இயந்திரங்கள்


ஆரம்ப முதலீடு (working capital)

மேலே கேட்கப்பட்ட கேள்விகள் அனைத்துக்கும் நீங்கள் இப்போது பதில்தரவேண்டிய அவசியமில்லையென்றாலும் இலக்கம் (1) ஏன் முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் (2) எப்படி, எவ்வளவு தொகையை முதலீடு செய்ய விரும்புகிறீர்கள் (3) எப்படியான பெறுபேற்றை எதிர்பார்க்கிறீர்கள் ஆகிய கேள்விகளுக்கு உங்களிடம் பதில்கள் இருக்க வேண்டும்.


முதலீடு செய்வது மட்டும் முடிவாகாது. நீங்கள் எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைத்துள்ளனவா என்பதை அறிய நீங்கள் முயற்சிக்கவும் வேண்டும். அவற்றை இன்னும் திறமையாகப் பெற்றிருக்க முடியாமா என்பதை நீங்கள் கற்றுக்கொள்வதோடு உங்கள் அனுபவங்களை மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்ளவும் வேண்டும்.


நான் இதுவரை அவதானித்ததிலிருந்து, பெரிய தர்ம நிறுவனங்கள், நிறுவன நன்கொடையாளர்கள்கூட, ஒரு வருடத்துக்குப் பின்னரேனும், தமது முதலீடுகளுக்கு என்ன நடந்தது, ஏதாவது காத்திரமாக்ச சாதித்துள்ளனவா, எதிர்பார்த்த பெறுபேறுகள் கிடைத்துள்ளனவா என மதிப்பீடு செய்வது குறைவு என்பதாகவே தெரிகிறது. அப்படி மதிப்பீடுகளைச் செய்தாலும் அவற்றை அவர்கள் வெளியிடுவதும் குறைவு.


சிலவேளைகளில் தமது எதிர்பார்ப்புகள் நிறைவேறாமை குறித்து அவர்கள் அதிருப்தியடைந்தமையும் காரணமாக இருக்கலாம். அனுபவங்கள் பொதுவெளிக்கு வருவதும் மற்றவர்கள் அதிலிருந்து கற்றுக்கொள்வதும் வெகு குறைவாகவே காணப்படுகின்றன. பெரிய நிறுவனங்கள் கூடத் தமது பெறுபேறுகளை மதிப்பீடு செய்து அறிக்கைகளை வெளியிடாமலிருப்பதும், தமது அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளாமையும் அதிருப்தியையே தருகிறது.


குறைந்தது, அவர்கள் தமது அனுபவங்களிலிருந்து எதைக் கற்றுக்கொள்ள வேண்டும்:

முதலீடு செய்து 12 மாதங்களுக்குப் பிறகு, எது திறமையுடன் செயற்பட்டிருக்கிறது, எதில் கவனம் செலுத்தியிருக்கலாம், எங்கு தவறு நடந்திருக்கிறது என ஒரு மீளாய்வு செய்யப்பட வேண்டும்.


இம் மீளாய்வின் மூலம் நீங்களும் கற்றுக்கொண்டு, அவற்றை மற்றவர்களுக்கும் பகிர்ந்து கொள்ள வேண்டும் வடக்கிற்குக் கிடைக்கும் வரும் பல முதலீடுகளும், நன்கொடைகளும் வீணடிக்கப்படுகின்றன. பாடங்கள் கற்கப்படுவதில்லை. இவையெல்லாம் எங்களுக்கு எப்படித் தெரியும்?

போர் முடிந்து ஒரு தசாப்தத்துக்கு மேலாகியும், வடக்கு இன்னமும் நாட்டின் பொருளாதாரப் பட்டியல்களில் கடைசியாகக் கிடந்து உழல்கிறது வடக்கு. உலகம் முழுவதும் தலை சிறந்த நிபுணர்களாக மிளிர்ந்துகொண்டிருக்கும் புலம் பெயர்ந்த தமிழர்களை நாம் கொண்டிருந்தும் நமக்கு இந்த நிலைமை. வடக்கு தனக்குக் கிடைத்த சந்தர்ப்பங்களை வீணடித்து வருகிறது காரணம் மக்கள் தம்மை மேம்படுத்துவதற்காக வேறிடங்களை நோக்கிச் செல்கிறார்கள். போரின்போதும் புலம் பெயர்ந்தார்கள், இப்போதும் புலம் பெயர்ந்துகொண்டிருக்கிறார்கள்.


இக் கட்டுரை ஆசிரியர் யெகன் அருளையா, இலங்கையில் பிறந்து தனது 2 வயதில் பிரித்தானியாவிற்குத் தனது பெற்றோருடன் இடம் பெயர்ந்தவர். இலண்டனில் வளர்ந்து, 1986 இல் கேம்பிரிட்ச்  பல்கலைக்கழகத்தில் இயற்கை விஞ்ஞானத்தில் பட்டம் பெற்ற அவர் இரண்டு தசாப்தஙகளுக்கு மேலாக தகவற் தொழில்நுட்பத் துறையில், அதில் பாதிக் காலம் மென்பொருள் தயாரிப்பாளராக இலஙகையிலும் வேறு நாடுகளிலும், பிரித்தானிய நிறுவனஙகளில் பணியாற்றியவர். 2015 இல் யெகன் யாழ்ப்பாணத்துக்கு நிரந்தரமாகக் குடிபெயர்ந்து அங்கு சமூக, பொருளாதாரத் திட்டங்களில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இம்மின்னஞ்சல் முகவரியானது spambots இடமிருந்து பாதுகாக்கப்படுவதால், நீங்கள் இதைப் பார்ப்பதற்கு JavaScript ஐ இயலுமைப்படுத்த வேண்டும் – தமிழாக்கம்: சிவதாசன்)


 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.