குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, புரட்டாசி(கன்னி) 8 ம் திகதி ஞாயிற்றுக் கிழமை .

இத்தனை ஆண்டுகளாக ஏமாந்து வந்த நாசா,நிலாவில் ஒருவழியாக கண்டுபிடித்து விட்டது! என்ன? எப்படி?

19,02.2021, பூமியை சுற்றி வரும் இயற்கை விண்கலம் "நேச்சுரல் சாட்டிலைட்" அதாவது (இயற்கையாக உருவான செயற்கைகோள்) என்று அழைக்கப்படும் நிலாக்கோள் ஆனது, பூமிக்கு எவ்வளவு முக்கியமானது என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விட முடியாது. ஆனால், அந்த நிலவில் நீர் ஆதாரம் இருக்கும் பட்சத்தில், அது எவ்வளவு பயன் உள்ளதாக இருக்கும் என்பதை ஒற்றை கட்டுரையில் கூறி விடலாம். ஆம், நீங்கள் நினைப்பது சரி தான். 

நிலாவில் நீர் மூலக்கூறுகள் நகர்வதை நாசா உறுதிப்படுத்தி உள்ளது. எப்போ சொல்ல வேண்டியதை எப்போ சொல்றீங்க? என்று உங்களுக்குள் எழும் கேள்வி எவ்வளவு நியாயமானதா, அதே அளவிற்கு கண்டுபிடிப்பும், இந்த கண்டுபிடிப்பினால் நமக்கு என்னென்ன நன்மைகள் ஏற்படும் என்பதும் மிகவும் நியாயமாகவே உள்ளன. நிலவில் நீர் ஆதாரம் நிலவில் நீர் சான்று இருக்கும் பட்சத்தில் எதிர்கால மனித விண்வெளி பயணங்கள் நிகழும் போது, சந்திரனின் நீர் ஆதாரம் ஆனது உயிரி எரிபொருளாகவும் அல்லது கதிரியக்க பாதுகாப்பு கருவிகளை உற்பத்தி செய்வதற்கு கூட பயன்படுத்தப்படலாம். எல்லாவற்றிற்கும் மேலாக எதிர்காலத்தில் நிகழப்போகும் தொலைதூர ஞாயிறு மண்டல ஆய்வு பயணங்களுக்கு நிலா ஒரு நிறுத்தமாக உதவும். லூனார் ரிகான்சின்சு ஆர்பிட்டர் நிலவில் நகரும் நீரின் மூலக்கூறுகள் இருப்பதை கண்டுபிடித்தது நாசாவின் லூனார் ரிகான்சின்சு ஆர்பிட்டர் (Lunar Reconnaissance Orbiter) ஆகும். இது நிலவை ஆய்வு செய்யும் நோக்கத்தின் கீழ் நிலவின் சுற்றுப்பாதைக்குள் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவினால் அனுப்பப்பட்ட ஒரு விண்கலம் என்பதும், இது நிலவின் மேற்பரப்பை மிகவும் விரிவாக ஆய்வு செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. எல்லாவற்றிற்கும் மேலாக நிலவின் மேற்பரப்பில் உள்ள நீரேற்றத்தின் அளவை ஆய்வு செய்யும் நோக்கத்தினை (இலக்கு என்றே கூறலாம்) கொண்டு உள்ளது.


யோன் கெல்லர் "இந்த ஆய்வு நிலவின் நீர் இருப்பது சார்ந்த கதையை முன்னேற்றுவதில் ஒரு முக்கிய படியாகும் மற்றும் இது சாத்தியம் ஆக எல்.ஆர்.ஓ வின் பல ஆண்டு கால உழைப்பும், சேகரிக்கப்பட்ட தரவும் தேவைப்பட்டது" என்று கூறி உள்ளார் யோன் கெல்லர், எல்.ஆர்.ஓ திட்டத்தின் துணை விஞ்ஞானி. யியோபிசிக்கல் ரிசர்ச் லெட்டர்சில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு அறிக்கையானது, நிலவில் நீர் ஆதாரம் இருப்பதை லைமன் ஆல்ஃபா மேப்பிங் ப்ராயெக்ட்டும் (LAMP) உறுதி செய்து உள்ளதாக கூறுகிறது. லேம்ப் சான் அண்டானியோவில் உள்ள தென்மேற்கு ஆராய்ச்சி மையத்தில் இருக்கும் லேம்ப் (LAMP) கருவியின் பிரின்சிபில் இன்வெசுடிகேட்டர் ஆன டாக்டர் குர்ட் ரெதர்ஃபோர்ட் கூறுகையில், "சந்திரனில் நீர் ஆதாரம் இருப்பது பற்றி நடத்தப்பட்ட ஆய்விகளில் இது ஒரு முக்கியமான புதிய முடிவு ஆகும். "நாங்கள் சமீபத்தில் லேம்ப் (LAMP) கருவியின் இரவு மற்றும் பகல் நேரங்களில் சேகரிக்கப்பட்ட ஒளிகளை ஆராய்ந்ததின் வழியாக, சில பிரதிபலிப்பு மிக்க சமிக்ஞைகளை கண்டு அறிந்தோம். அந்த சமிக்ஞைகள் ஆனது நிலவில் நீர் ஆதாரம் ஆனது துல்லியமாக எங்கே உள்ளது மற்றும் எவ்வளவு உள்ளது என்பதை கண்காணிக்க உதவுகிறது. மூலக்கூறுகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது நீண்ட காலமாகேவ, பூமியின் சந்திரன் ஆனது தண்ணீர் யில்லாத பாலைவனமாகவும் வறண்ட இடமாகவும் இருந்ததாக விஞ்ஞானிகள் நம்பினர். ஆனால் சமீபத்தில் கண்டறியப்பட்டு இருக்கும் ஆனது நிலவின் மேற்பரப்பில் சிறிய அளவிலான நீர் மூலக்கூறுகள் இருப்பதை அடையாளம் கண்டுள்ளது.


பூமத்திய ரேகைக்கு வெளியே இருப்பதாக கண்டறியப்பட்ட மேற்பரப்பு நீர் ஆனது, நிலவின் மேற்பரப்பு வெப்பமடையும் போது அதன் இயக்கத்தை (நீரோட்டத்தை அல்லது நடமாட்டத்தை) வெளிப்படுத்தி உள்ளது. பூமியின் நிழல் இதற்கு முன்னதாக "இந்த" நீர் மூலக்கூறுகள் ஆனது சூரிய மண்டலத்திலிருந்து வெளிப்பட்ட சூரிய காற்றிலிருந்த கைட்ரயன் அயனிகளின் விளைவாக உருவாகி இருக்கலாம் என்று விஞ்ஞானிகள் நம்பினார்கள். அதாவது நிலவின் மேற்பரப்பில் உள்ள நீர் ஆனது பூமியின் நிழலுக்குள் நுழைந்தால் குறைந்து மாறுபட்டது என்று அர்த்தம். ஆனால், லேம்ப்பின் ஆய்வறிக்கையின் படி, பூமியின் நிழல் மற்றும் அதன் காந்தப்புல செல்வாக்கினால் நிலவின் நீர் குறைந்துவிடவில்லை என்கிறது. தண்ணீரை மனிதர்களால் பயன்படுத்த முடியும் "நிலவில் நிலவும் நீர் சுழற்சியைப் புரிந்து கொள்வதற்கு, இந்த ஆய்வு முடிவு மிகவும் உதவுகிறது மற்றும் எதிர்காலத்தில் மனிதர்களுக்கு சந்திரனுக்கு அனுப்புவதற்கும், அது சார்ந்தபயிற்சிகளை தொடங்குவதற்கும் உதவும்" என்கிறார் கிரானைட் சயின்சு இன்சுட்டியூட்டின் மூத்த விஞ்ஞானி ஆன அமண்டா கெண்ட்ரிக்சு. "எரிபொருளை உருவாக்க அல்லது கதிர்வீச்சு கேடயம் உருவாக்க அல்லது வெப்ப மேலாண்மைக்காக, நிலவின் தண்ணீரை மனிதர்களால் பயன்படுத்த முடியும். மேற்கூறியவைகளை நாம் பூமியில் இருந்து அனுப்ப வேண்டிய அவசியம் இல்லாத பட்சத்தில், எதிர்கால விண்வெளி பயணங்கள் ஆனது மிகவும் மலிவானதாக மாறும்" என்று கூறி முத்தார் கெண்ட்ரிக்சு(ஸ்.)


Read more at: https://tamil.gizbot.com/scitech/nasa-finds-water-molecules-moving-on-the-moons-surface-021208.html?fbclid=IwAR1fWzn9ya3Wne6FcuEvqA4GS_WBJnnfqgeyHS4IdUYLtZtdTZi1qxMwvl8