சுவிற்சர்லாந்தில் 'கோடைகாலத்தை காப்பாற்ற தீயநுண்ணி (கொரோனா வைரசு) நடவடிக்கைகளை கடுமையாக்க வாய்ப்புள்ளது' என அறிக்கைகள் வெளியாகியுள்ளன. நாட்டின் பெரும்பகுதிகளில், வைரசு தொற்று வீதங்கள் வீழ்ச்சியடைந்த போதிலும் இது தேவையாகவுள்ளது எனத் தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்று, வெள்ளிக்கிழமை, கூட்டாட்சி உறுப்பினர், அலைன் பெர்செட் தற்போதுள்ள சில நடவடிக்கைகளையாவது தளர்த்துவது குறித்து ஆலோசிக்கப்படவுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளதாக அறிய வருகிறது.
அடுத்த வாரத்தில் மத்திய அரசும், மாநில அரசுகளும், இது தொடர்பில் கலந்தாலோசிக்கவுள்ளது. எல்லா நடவடிக்கைகளும் தளர்த்தப்படாது எனினும், சில நடைமுறைகள் எளிதாக்கப்படக்கூடும் எனத் தெரிவித்தாலும், அவை எவையெனத் தெரிவிக்க பெர்செட் மறுத்துவிட்டார்.
“சுவிசு கூட்டாட்சி அரசு, நடவடிக்கைகள் மீதான மக்களின் விரக்தியைப் புரிந்துகொள்கிறது. நடவடிக்கைகளை எளிதாக்குவதற்கு அரசு விரும்புகிறது. நிலைமை மோசமடைவதைத் தடுக்க நாங்கள் கவனமாக இருக்க வேண்டும் என்பதில் தெளிவாக உள்ளது. எவ்வாறாயினும், விரைவில் பூட்டுதலுக்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக விதிகளை கடைபிடிக்க வேண்டும்." என அவர் மக்களிடம் வேண்டுகோள் விடுத்தார்.