குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, மாசி(கும்பம்) 26 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பார்ப்போரை வியப்பில் ஆழ்த்திய யாழ்.பல்கலைக்கழக மாணவனின் ஈழத்தமிழனின் அசத்தல் கண்டுபிடிப்பு!!

07.02.2021....யாழ்ப்பாணப் பல்கலைகழக கிளிநொச்சி வளாகத்தின் தொழில்நுட்ப பீட மாணவர்களினால் உருவாக்கப்பட்ட செயல்திறன் மிக்க போர்மூலா வான் மகிழூர்தி, மற்றும் உயிர்வாயுவினால் தயாரிக்கப்பட்ட மோட்டார் வண்டி உருவாக்கி வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

 

குறித்த கண்டபிடிப்புக்களை கல்வியமைச்சர் பேராசிரியர் யீ. எல் பீரிசு வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பின ரும் மன்னார், முல்லைத்தீவு மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான காதர் மசுதான், யாழ் மாவட்ட நாடாளு மன்ற உறுப்பினரும் அபிவிருத்தி குழுத் தலைவருமான அங்கயன் இராமனாதன், கல்வியமைச்சின் செயலாளர் மற்றும் பல்கலைகழக துணைவேந்தர் உட்பட பீடாதிபதிகள் பார்வையிட்டதுடன் குறித்த தொழில்நுட்ப பீட மாணவர்களின் திறமைமிக்க உருவாக்கத்திற்கு நன்றிகளையும் தெரிவித்துக் கொண்டனர். இதனை அரசு மட்டத்தில் சட்டரீதியாக அங்கிகரித்து இந்த செயல்முறை உரிமத்தின்பெறுமதி இந்த மாணவர்களுக்குரியது என்பதை உறுதி செய்க.

அமரிக்காவில் வாழ்ந்த தமிழகமாணவன் சிவா ஐயாத்துரை அவர்களின்மின்னஞ்சல் கண்டுபிடிப்பின் அடிப்படை பதியப்படாமையால்  தமிழினம் அப்பெருமைதனையும்  அதன் வருமானத்தினையும் இழந்து நிற்கின்றது இந்தக்கண்டு பிடிப்புகளிலும் இக்கதையிலும் இதுதான் நடக்கலாம்!