அரிசி பூநகரி அரிசிச் சுவைக்கும் பொலிவுக்கும் நல்லமணத்திற்கும் வராது வணிகரின் அறியாத்தனங்கள்!!
03.02.2021.....இன்று உலகளவில் பலநாடுகளில் இலங்கைத்தமிழர்கள், தமிழகத்தமிழர்கள் வாழ்ந்து வருகின்றார்கள்.அவர்கள் எந்தநாடுகளில் வாழ்ந்தாலும் இவர்களின் உணவுவகைகளும், பயன்படுத்தப்படும் பொருட்களும்,பண்பாட்டு நிலைகளான பொருட்களும் தனித்துவமானவை.அதனால் பல பொருட்களை இந்தியாவிலிருந்தும்,தாய்லாநது,ஆபிரிக்கநாடுகளிலிருந்தும் பொருட்களை தாம்தாம் வாழும் மேற்குலக நாடுகளுக்கு இறக்கு மதி செய்கின்றார்கள். இதில் அதிகளவான பொருளாதார நன்மைபெறும்நாடாக இந்தியாவே இருக்கின்றது. இலங்கையும், இலங்கைவாழ்த் தமிழர்களும்,தமிழகமும் குறைந்தளவே பயனடைகின்றார்கள்.இந்தியாவின் தமிழகம் தவிர்ந்த மாநிலங்களும்,ஏனைய ஆசிய நாடுகளும், ஆபிரிக்நாடுகளுமே அதிகபயன் அடைகின்றன என்பதைவிளக்குவதுடன் ஏன் தமிழர்களுக்கான ஏற்றுமதி இறக்கமதி வணிகத்தின் பயனை தமிழகமும்(இந்திய அரசும்),இலங்கைத்தமிழர்களும்(இலங்கை அரசும்) அதிக பயனடையும் வகையில் எண்ணப்படவில்லை என்பதை அலசுவதாகவே இக்கட்டுரை அமைகின்றது.
இலங்கைத்தமிழர்களின் உணவுப்பழக்கங்கள் யாழ்ப்பாண மையத்தைக்கொண்டதாக அமைகின்றது ஏனெனில் பலநாடுகளில் தீவகம் உட்பட யாழ்மாவட்டத்துடன் அண்டிய மாவட்டங்களும் ஏன் கிழக்கமாகாணத்தின் உணவுமுறைகளும் ஒரே பாரம்பரியமானவையாக உள்ளது. அதனடிப்படையில் முதலாவதாக பெரும்பான்மையானவர்கள் கைக்குத்தரிசி அதாவது வெள்ளையரிசியை விடவும் பூநகரி அரிசிபோன்ற அதற்கு ஒப்பான அரிசியையும் மிகவும் விரும்பி உண்கின்றார்கள். இதற்குகாரணம். பூநகரியின் சிலஊர்களின் மண்ணின் தன்மைக்கு அதில்விளையும் நெல்லரிசி ஒருவகை சிறப்பு சுவையும்,மணமும்,அந்தஅரிசயின் தவிடு உயிர்சத்து பீ அதிகம் இருப் பதாலும் சோற்றின் பொலிவும் அதிகமாகவிருப்பதாலும் சோற்றின் அளவு சற்று பெரிதாகவும் இருந்தமையால் யாழ்ப்பாணமக்கள் பூநகரியில் நெல்வயல்களை கொண்டிருந்தமையாலும் அதற்கெல்லாம் காரணமாக யாழப்பாணத்திற்கு மிகவும் அருகில் இருந்தமையாலும் இந்தவழமை ஏற்பட்டிருந்தது. பூநகரி அரிசிக்கஞ்சியே சுவையானது நல்ல மணமுடையது என்று பேசிக்கொள்வது வழமையாகும்.இதே நெல்லினங்கள் ஏனைய இடங்களில் இருந்தாலும் பூநகரி மொட்டைக்கறுப்பன்,நாலுமொழி(கறுப்பு உமிநெல்லினம்),பச்சைப்பெருமாள்(மஞ்சலுமி)தமிழர்களின் பாரம்பரிய நெல்லின அரிசி அதாவது உவர்த்தன்மைசிறிதளவுள்ள களித்தறைகளில் பூநகரியின்வடபகுதி நிலங்களில் விளயும் அரிசி மிகவும் சுவையானது. இதனால் போருக்கு முன்னர் அங்குவாழ்ந்த மக்கள் இதற்கு நன்கு பழக்கப்பட்டிருந்தமையால் புலம்பெயர்ந்தபெயர்தநாடுகளுக்கு அவர்கள் இடம்பெயந்தமையால் பூநகரி அரிசி மாதிரியான அரிசியை கேரளமாநிலத்திலிருந்து பெற்று தவிட்டு நிறச்சாய இரசாயனத் துாள்களும் அதில் அரிசியில் சேரச்செய்து நெகிழிப்பைகளில் போத்தல்களில் அடைத்து பூநகரி மொட்டைக்கறுபன் என்ற அரிசிப்பெயருடன் அதிகளவில் விற்கப்படுகின்றது இதனால் பூநகரி பயிர்செய்கையாளர்களோ, தமிழர்களோ,இலங்கை அரசோ எந்தப்பொருளாதார நன்மையை யும் பெறவில்லை என்பது வெளிப்படையான உண்மை. இந்தியா பாக்சுதான் போன்ற நாடுகளின் வெள்ளை அரிசியான பாசுமதி அரிசியை பயன்படுத்தி நீரழிவு நோயைவரவழைக்கின்றார்கள். உண்மையான பூநகரி அரிசியை இறக்கமதி செய்தால் அங்குள்ள ஏழைவிவசாயிகள் பயனடைவதுடன் இங்கு நுகர்வோரான புலம்பெயர்தமிழர்களும் உடல்நலம்பெறுவார்கள் என்பதை உணரவேண்டும்.
இதேபோன்று காய்பிஞ்சுவகைகள்,கீரைவகைகள் இராசவள்ளிக்கிழங்கு, மரவெள்ளிக்கிழங்கு போன்றவற்றுடன். பொன்னாங்காணி,பசளி,முருங்கையிலை,வல்லாரை, குறிஞ்சா இலை,முசுட்டை இலை, வாழைப்பொத்தி,மாம்பழங்கள் என்பன தமிழகந்தவிர்ந்தமாநிலங்களிலிருந்தும்,மாம்பழங்கள் பாக்கிசுதானிலிருந்தும் தாய்லாந்துபோன்ற நாடுகளிலிருந்தும் இறக்குமதிசெய்யப் செய்யப்படுகின்றன. இலங்கையிலிரந்தும் தமிழகத்திலிரந்தும் இறக்கமதி செய்யமுடியாமல் போனதற்கான காரணங்கள் என்று பார்க்கும் போது துாய்மைக்குறைபாடு(துப்பரவுக்குறைபாடுகள்),தரக்குறைபாடுகள் நம்பகத்தன்மைகளின் குறைபாடுகள் கரணமாகவே தமழினமும்இலங்கை, இந்திய அரசுகளும் உலகளவிலான இந்த வணிகவாய்ப்பை நழுவவிட்டுள்ளன என்று சொல்லலாம்.
இது போன்றே சிவப்புப்பச்சைஅரிசி,சிவப்புப்அரிசிமா, பனங்கட்டி, சக்கரை(வெல்லம்)உழுத்தம்மா, பயற்றம்மா, உழுத்தம்பருப்பு, பயற்றம்பருப்பு,கொண்டல்கடலை,அதற்குசமனான கடலைவகைகள்,கடலைமா மற்றும்சிறுதானியவகைகள், சமையலுக்கானவாசனைவகை கள் போன்றவற்றுடன் கோவில் தேவைகளுக்கான பொருட்கள் பழவைகள், அறுகம்புல்வரை,மாவிலை,இளநீர், வரை இறக்கமதியாகின்றது. இதனால் தமிழர்களோ இலங்கையரோ எந்த நன்மையும் அடையவில்லை.இவைஎல்லாவற்றாலும்வடமாநில ங்களே நன்மை அடைகின்றன. எனவே தமிழர் பண்பாடும் தமிழர் உணவுமுறைகளும் தமிழரல்லாதவர்களுக்கு வருமானம்பெற்றுக்கொடுக் கின்றன. அடுத்து தமிழர்களின் பாரம்பரிய மணவறை முத்துமணவறைசார்ந்ததாகும் இதனை செய்யக்கூடியவர்கள் யாழ்ப்பாணத்திலும் கிழக்கு மாகாணத்திலும் உள்ளார்கள் அவர்களின் தொழில்நுட்பத்தைப்பயன்படுத்தி அவர்களிடமிருந்து அவற்றை இறக்குமதிசெய்தால் தமழினம் நன்மையடையும். தமிழர்களின் பாரம்பரியத்தை முன்னெடுக்காது வடஇந்தியமுறைகளுக்கு ஈழத்தமிழர்கள்மணவறைச் சோடனைகளை மாற்றிவிட்டு தமழினப்பற்றாளரகளென்றும், தமிழினப் பண்பாட்டுப்பற்றாளர்களென்றும் வெளிக்காட்டி வாழ்தலும் தமிழருக்கும் இலங்கைகப் பொருளா தாரத்திற்கும் தீமையாகவுள்ளது.
இதே போன்று கடலுணவுப்பொருட்கள் இலங்கையின் வடபகுதிக்கடல் உணவுப்பொருட்களுக்கு பெரும்கிராக்கி உள்ளது அதனை இலங்கைத்தமிழர்களும் இலங்கை அரசம் சரியாகப்பயன்படுத்தவில்லை என்றுதான் சொல்லக்கூடியதாக இருக்கிறது. மண்ணில்லாமல், பழுதடையாமல் ஊசிமருந்துகளை ஐரோப்பிய நாடுகளின் சட்டப்படியும், மேற்குலகநாடுகளின் சட்டப்படியும் பனிக்கட்டிகளிட்டு தரமாக அனுப்பிவை்தால் மக்கள் அவற்றை அதிகமாகக்கொள்வனவு செயத்தயாராக இருக்கின்றார்கள். இலங்கையில் தகரத்தில் அடைத்தமீன்கள் முன்பு தரமாகவும் சுவையாகவும் இருந்தன அதுபோல் இப்போது இல்லையென்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. உலகசந்தையில் இலங்கைத்தே இந்தத்தலை முறையினர் ஊடாகவே புதியதலைமுறையினருக்கும் இவற்றைப்பழக்கினால் தான் தொடர்ந்து எமது இனம் பொருளாதாரரீதியில் வெளிநாடுகளுடன் தொடர்புபட்டதாக இருக்கும் இருதரப்பினரும் நன்மையடையக்கூடிய பொருளாதார நிலையை பேணமுடியும் என்பதை ஈழத்தமிழர்களும்,தமிழகத்தமிழர்களும் உணர்ந்து செயற்படவேண்டும். இறால் நண்டுக்கு இங்குபெரும் மதிப்பிருக்கின்றது.மட்டக்களப்பு,புத்தளம், திருகோணமலை யாழ்ப்பாணம், பூநகரி,கிளிநொச்சி போன்ற பகுதிகளில் வாழும் கரையோரக்கிராம மக்களிடம் இவற்றை ஊக்கப்படுத்தி இவற்றை கொள்வனவு செய்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும்போது அவர்களுடைய வாழ்க்கைத்தரம் வளர்ச்சியடையும்.
சிறிகைத்தொழிலாக முதலீடு இல்லாத தொழிலாக வல்லாரை,முசுட்டை,குறிஞ்சா,கருவேப்பிலை முருங்கையிலைவகைகளைஏற்றுமதி செய்யலாம் (கருவேப்பிலைக்கு சில இரசாயனதெளிப்புகள் அதிகமாக இருப்பதால் சுவிற்சர்லாந்து போன்ற நாடுகள் அதற்கு தடைவிதித் துள்ளன). இதற்கு என்ன அறிவுறுத்தல் வழங்கலாம் என்றால். குறிஞ்சா இலைகளை பூச்சி புழுக்கள் இல்லாத மிகவும் நல்ல இலைகளை மட்டும் துாய்மையாக அடுக்கி காய்ந்து போகாத வண்ணம் பச்சைபனையோலையிலிட்டுக்கட்டி அனுப்பலாம் அல்லது நெகிழிப்பைகளில் அனுப்பலாம்., அடுத்து குளங்களில் வளரும் வல்லாரையை தரமான துாய்மையான இலைகளை மட்டும் பிடுங்கி துாய்மைப்படுத்தி 150 கிராம் கணக்கில் பிடிபிடியாகக்கட்டி றெயிபோம்பெட்டிகளில் அனுப்பலாம். பொதுவாகக்கீரைவகைகளை வாடாமல் இருக்க துாய்மைப்படுத்தி நன்றாக அனபினால் இந்நாட்டுச் சட்டங்கள் ஏற்றுக்கொள்வதுடன் மக்களும் விரும்பி உண்பார்கள். பொன்னாங்காணி தண்டுப்பக்கம் தடிபோன்றில்லாது இருப்பதுடன் துாய்மையாகவும் மணமற்றும் இருக்கும்படியாக பிடிகள் சரியாக அனுப்பப்படவேண்டும். மக்கள் விரும்பி வங்கும்பொருட்களையே வணிகநிலையங்கள் இறக்குமதி செய்வார்கள். என்பதை இத்தொழிலில் ஈடுபடும் ஒவ்வொருதமிழ்மகனும் எண்ணவேண்டும்.
இவ்வாறே பனம்பொருள் உற்பத்திப்பொருட்களையும் ஏற்றமதி செய்யமுற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும். பனங்கற்கண்டு (இது உடல்நலத்திற்கு ஏற்றது சக்கரையின் அளவு உடலில் கூடாது) ஏன்பனம் சீனி கூட உற்பத்தி செய்யலாம். உலகில் முதன் முதலில் பனையிலிருந்து தான் சீனி உற்பத்திசெய்தார்கள். தமிழகத்தின் தெற்குமாவட்டமான நாகபட்டினத்தில் இத்தொழிற்சாலையின் கட்டட இடிபாடுகள் இப்போதும் அங்கிருக்கின்றது. சீனியின் பயன்பாடு உலகவணிகத்தில் தேவைக்கேற்றளவு இல்லாது போகவே கரும் பிலிருந்து சீனி உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது அதற்காகவும்தான் தென்னாபிரிக்கா,கரீபியன்தீவுகளிலும்,மொறீசியசிலும் கரும்பு உற்பத்தி ஆரம்பமானது அதன் உற்பத்திக்காகவே தமிழகத்திலிருந்து அந்தநாடுகளுக்கு தமிழர்களை அழைத்துச்சென்றார்கள். இன்றோ கிழங்குவகை களிலிருந்தும் வெள்ளைநிறச்சீனிகள் உற்பத்தியாகின்றன. சீனி உற்பத்திக்கும் சீனி வணிகத்திற்கும் தமிழருக்கும். தொடர்பே இல்லாது இழந்துவிட்டோம். எனவே மீண்டு தமிழர்கள் தமக்குள்ளாவது பனம்சீனி உற்பத்தியை மீண்டும் நாடலாம். அதனால் தமிழகத்திலும்,ஈழத்திலும் உள்ள பனைவளங்களை பயன்படுத்தலாம். அழகான பனையோலையலிருந்து செய்யக்சகூடிய உற்பத்திப்பொருட்களை தரமாகவும்,உறுதியான தாகவும் உற்பத்திசெய்து வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யலாம் இதனாலும் தமிழினம் பயனடையமுடியும்.
இறுதியாக தமிழகத்தின்,ஈழத்தின் உணவுப்பொருட்களையோ ஏனைய பொருட்களையோ நல்ல தரமாகவும் வெளிநாடுகளின் சட்டமுறைகளுக்கு ஏற்பவும் இலங்கையிலிருந்தோ தமிழகத்திலிருந்தோ பொருட்களை ஏற்றுமதி செய்வதின் மூலம், தமிழர்களின் உடல் நலங்களும் பொருளாதார விருத்தியும் மேம்படும். இதகால் நேரடியாக புலம்பெயர்ந்த நாடுகளிலிருந்து பணவுதவிகளை எதிர்பார்க்கும் நிலையும் தவிர்க்கப்படும். மாம்பழங்கள், பப்பாப்பழங்கள்,வாழைப்பழங்களை இரசாயனம் அற்ற முறையிலும் பாதுகாப்பான பொதிகளிலும் ஏனைய ஆசியநாடுகள் போன்று சிறப்பான முறைகளை அறிந்து ஏற்றுமதி செய்யப்படும் போது தமிழர்களும் இலங்கை இந்திய அரசுகளும் பொருளாதார வளர்ச்சிகாணமுடியும் என்பது உறுதிபூ.
பூநகரி பொன்னம்பலம் முருகவேள்.
சுவிற்சர்லாந்து 01.02.2021