குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

மொழிப்போர் தியாகிகள் நாள் இன்று: உயர் நீதிமன்றத்தில் தமிழ் ஒலிப்பது எப்போது?

26.01.2021.....உயிர்த் தமிழ் காக்க தம் உயிர் தந்த மொழிப்போர் தியாகிகள் தினம் இன்று. அவர்கள் எந்தக் கோரிக்கைக்காக உயிரை ஈந்தார்களோ, அந்தத் தமிழ் மொழியே பயிற்று மொழி, ஆட்சி மொழி எனும் முழக்கம் இன்னமும் முழுமையாக நிறைவேறவில்லை என்பது வரலாற்றுச் சோகம். குறிப்பாக தமிழை உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்க வேண்டும் என்ற இலட்சியம்.

"சென்னை உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்திலும் இதுவரையில் ஆங்கில மொழியே வழக்கு மொழியாக இருந்து வருகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348, உட்பிரிவு 2 உடன் இணைந்த 1963-ம் ஆண்டு ஆட்சி மொழிச் சட்டப்பிரிவு 7-ன்படி, உயர் நீதிமன்ற நடவடிக்கைகள் அனைத்தையும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்று, மாநில ஆட்சி மொழியிலேயே நடத்த மாநில அரசு உரிய நடவடிக்கை எடுத்திட வழிவகை செய்யப்பட்டுள்ளது.

நமது மாநிலத்தில் தமிழிலேயே அனைத்து நிர்வாக நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கொள்கையின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்புகள், தீர்ப்பாணைகள் உள்ளிட்ட அனைத்து நடவடிக்கைகளிலும் நமது மாநில ஆட்சி மொழியாகிய தமிழை அறிமுகப்படுத்திட தமிழக அரசு முடிவெடுத்துள்ளது. தமிழக வரலாற்றில் பொன் எழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய இம்முடிவினைச் செயல்படுத்த விரைவில் ஒப்புதல் வழங்க வேண்டுமென இந்தியக் குடியரசுத் தலைவரைக் கேட்டுக்கொள்வதென இந்தச் சட்டப் பேரவையில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது" என்று 6.12.2006ல் அன்றைய திமுக அரசு தீர்மானம் நிறைவேற்றியது.

தமிழ்நாடு சட்டப்பேரவையில் இந்தத் தீர்மானம் நிறைவேறி 14 ஆண்டுகள் ஓடிவிட்டன. இன்னமும் நடைமுறைக்கு வரவில்லை. தீர்மானம் போட்ட கையோடு குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காக நாடாளுமன்றத்துக்கு அனுப்பி வைத்தது தமிழ்நாடு அரசு. நாடாளுமன்றமோ குடியரசுத் தலைவருக்கு அனுப்பாமல், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிக்கு அனுப்பி வைத்தது. அப்போது தலைமை நீதிபதியாக இருந்த கேரளத்தைச் சேர்ந்த கே.ஜி.பாலகிருஷ்ணன் இந்தக் கோரிக்கையை ஏற்க மறுத்தார். தமிழ்நாட்டின் சட்டப்பேரவைத் தீர்மானம் கிடப்பில் போடப்பட்டது. தமிழ்நாடு அரசு மீண்டும் மீண்டும் நினைவூட்டியும் பலனில்லை.

திமுக ஆட்சி இறுதிக்கட்டத்தில் இருந்த 2010-ம் ஆண்டில் இந்தக் கோரிக்கையை வலியுறுத்தி மதுரையிலும், சென்னையிலும் 25 வழக்கறிஞர்கள் சாகும்வரையில் உண்ணாவிரதம் இருந்தார்கள். போராட்டத் தீ தமிழகம் முழுவதும் பரவியதால், அதனைக் கட்டுப்படுத்தும் விதமாக வழக்கறிஞர்கள் விரும்பினால் நீதிமன்றங்களில் தமிழில் வாதாடலாம் என்று அப்போதைய தலைமை நீதிபதி வாய்மொழி உத்தரவிட்டார். அதன் பிறகு ஒன்றிரண்டு வழக்குகள் தமிழில் நடந்தன. ஆனால், நீதிமன்றத்தின் ஒத்துழைப்பு கிடைக்காததாலும், தமிழில் வாதாடிய காரணத்திற்காகவே ஒரு வழக்கை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்ததாலும் அந்த நடைமுறை வழக்கொழிந்து போனது.

அதிமுகவின் வாக்குறுதி

வழக்கறிஞர்கள் உண்ணாவிரதம் இருந்தபோது, ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அதிமுகவின் இரண்டாம்கட்டத் தலைவர்களை மதுரைக்கே அனுப்பிவைத்தார் யெயலலிதா. அவர்கள் வழக்கறிஞர்களின் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்ததுடன், "அடுத்து வருகிற அதிமுக ஆட்சியில் நிச்சயமாகத் தமிழ் உயர் நீதிமன்ற வழக்காடு மொழியாக்கப்படும்" என்று உறுதியளித்தனர். அதன்பிறகு அதிமுக அரசு 9 ஆண்டுகள் தமிழ்நாட்டை ஆண்டுவிட்டது. இந்தக் கோரிக்கையை தமிழக அரசு நினைவுபடுத்தியபோதெல்லாம், "நாங்கள் என்ன செய்வது உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லையே?" என்ற பதிலையே மத்திய அரசு கூறிவருகிறது.

2019 பிப்ரவரியில் அதிமுகவின் சசிகலா புச்பா இந்தக் கோரிக்கையை மாநிலங்களவையில் வைத்தபோதும், அதே பதிலைச் சொன்னார் மத்திய சட்ட அமைச்சர். தமிழக சட்ட அமைச்சர் சி.வி.சண்முகமும் இதே காரணத்தைத்தான் சொல்கிறார்.

சட்டப் புத்தகங்கள் இல்லையா?

உயர் நீதிமன்றம் தவிர அனைத்துக் கீழமை நீதிமன்றங்களிலும் தமிழே வழக்கு மொழியாக இருக்கும் என்று 1976-ம் ஆண்டே தமிழ்நாடு அலுவல் மொழிச் சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டுவிட்டது. ஆனால், ஒரு முன்சீப் நீதிமன்றத் தீர்ப்பு தமிழில் எழுதப்பட்டபோது, அது சட்டப்படி தீர்ப்பே அல்ல என்று ஒரு நீதிபதி ரத்து செய்தார். இதன் விளைவாக மீண்டும் சட்டத்திருத்தம் செய்யப்பட்டு கீழமை நீதிமன்றங்களில் தமிழ்மொழி வழக்கு மொழி எனும் அந்தஸ்து உறுதி செய்யப்பட்டது.

ஆனால், இப்போதும்கூட சில வழக்கறிஞர்கள் தங்கள் மேதாவித்தனத்தைக் காட்டுவதற்காக அங்கே ஆங்கிலத்தில் வழக்காடுவதும், சில நீதிபதிகள் ஆங்கிலத்தில் தீர்ப்பு எழுதுவதும் தொடவே செய்கிறது. கேட்டால், தமிழில் போதிய சட்டப்புத்தகங்களோ, கலைச்சொற்களோ இல்லை என்கிறார்கள்.

தமிழக சட்டப்பேரவைத் தீர்மானம் போட்ட காலத்திலேயே, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் அதனைக் கொள்கையளவில் ஏற்றுக் கொண்டாலும், தலைமை நீதிபதி ஏ.பி.சா இதனை உடனடியாக நடைமுறைப்படுத்த முடியாது என்றார். "தொலைநோக்குப் பார்வையுடன் அனைத்து நிலைகளிலும் ஆராய்ந்து பார்த்து இதனை நடைமுறைப்படுத்த வேண்டும். அவசரமாக அமல்படுத்தினால் அதன் நடைமுறைச் சிக்கல்கள் ஏற்படும். தமிழில் சட்டப் புத்தகங்கள், தலைசிறந்த மொழிபெயர்ப்பாளர்கள், பயிற்சி பெற்ற தமிழ் மற்றும் ஆங்கில சுருக்கெழுத்தர்கள், தமிழ் கணினி வசதி போன்ற அனைத்து வசதிகளையும் செய்தால்தான் தமிழை ஆட்சி மொழியாக்க முடியும்" என்று தமிழக அரசுக்குக் கடிதம் எழுதினார் அவர். இதையே தான் ஆங்கிலத்துக்கு ஆதரவான வழக்கறிஞர்களும் சொல்கிறார்கள்.

பாதிப்பு மக்களுக்கு...

"வேற்று மொழியில் நடைபெறும் கோர்ட்டு நடவடிக்கைகளைப் பார்க்கப் போகும் சனங்கள், குருடன் கூத்துப் பார்க்கப் போனது போலவும், செவிடன் பாட்டுக் கேட்கப் போனது போலவும் யாதொரு பிரயோஜனமும் இல்லாமல் வீட்டுக்குத் திரும்புகிறார்கள்" என்பது ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் வேதநாயகர் சொன்னது. இது இப்போதும் அப்படியே பொருந்துகிறது.

"சட்டம் பற்றிய அறியாமை மன்னிக்கக் கூடியது அல்ல" என்கிறது சட்ட மூதுரை. அதாவது, எனக்கு இப்படியொரு சட்டம் நிறைவேற்றப்பட்டதோ, இருப்பதோ தெரியவே தெரியாது என்று பாமரர் கூட நீதிமன்றத்தில் முறையிட முடியாது. ஆனால், சட்டமோ மக்கள் மொழியில் இல்லை. படிப்பறிவு இருந்தும்கூட, நாம் சொன்ன விஷயங்களைத்தான் வழக்கறிஞர் மனுவில் கூறியிருக்கிறதா? நமது தரப்பை அவர் சரியாக நீதிமன்றத்தில் எடுத்துரைத்தாரா? நீதிபதி அதை எப்படி அணுகினார் என்பதைச் சாமானியரும் புரிந்துகொள்ள அவரவர் தாய்மொழி வழக்காடு மொழியாக வேண்டும்.

உச்ச நீதிமன்ற ஒப்புதல் தேவையா?

"தமிழ்நாடு அரசு சுட்டிக்காட்டிய அதே சட்டப்பிரிவைக் காட்டி 1961-ம் ஆண்டிலேயே மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், ராஜஸ்தான், பிகார் ஆகிய மாநிலங்களின் உயர் நீதிமன்றங்கள் தங்கள் மாநில மொழியான இந்தியை வழக்காடு மொழியாக்க விரும்பியபோது, உச்ச நீதிமன்றம் தடையேதும் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றத்தின் கருத்தைக் கேட்காமல் அந்தந்த மாநில ஆளுநர்களே அனுமதி கொடுத்தார்கள். ஆனால், தமிழ்நாடு தீர்மானத்தை மட்டும் உச்ச நீதிமன்றத்துக்கு ஏன் அனுப்ப வேண்டும்?" என்று கேள்வி கேட்கிறார் உயர் நீதிமன்றத்தில் தமிழ் போராட்டக் குழுவைச் சேர்ந்த வழக்கறிஞர் பகத்சிங்.

"கடந்த 2015-ம் ஆண்டில் டாக்டர் சுதர்சன நாச்சியப்பன் தலைமையிலான சட்டம் மற்றும் நீதிக்கான நாடாளுமன்ற நிலைக்குழு, 'உயர் நீதிமன்ற மொழியாக அந்தந்த மாநில மொழிகளை ஆக்குவதற்கு நீதித்துறையிடம் ஆலோசனை கேட்கத் தேவையில்லை' என்று தீர்மானம் நிறைவேற்றியது.

அடுத்த ஆண்டு அதாவது 19.4.2016-ல் அந்தக் குழு இதே தீர்மானத்தை நிறைவேற்றியிருக்கிறது. எனவே, இன்னமும் மத்திய மாநில அரசுகள் இந்த முடிவை உச்ச நீதிமன்றம் ஏற்கவில்லை என்று சொல்வது அர்த்தமற்றது.

இந்திய குடியரசுத் தலைவர் நீதிமன்றம் தொடர்பான நிகழ்ச்சிகளில் பங்கேற்கிற போதெல்லாம், 'நீதிபதிகள் அவரவர் தாய்மொழியில் தீர்ப்புக் கொடுங்கள்' என்று தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறார். தமிழக ஆளுநரும் அதே கருத்தை வலியுறுத்திப் பேசிவருவது தொடர்ந்து பத்திரிகைகளில் வருகின்றன. குடியரசு துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடுவும் அப்படியே பேசுகிறார். பிரதமர் மோடியும் தமிழ்மொழியின் பெருமையைப் பேச ஆரம்பித்திருக்கிறார். அப்படியானால், தமிழை வழக்காடு மொழியாக்குவதில் யாருக்கும் எந்த மனத்தடையும் இல்லை என்று தானே பொருள்?

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தீர்மானத்துக்கு ஒப்புதல் கேட்க வேண்டிய ஆளுநரும், ஒப்புதல் தர வேண்டிய குடியரசுத் தலைவரும் தாய்மொழியில் தீர்ப்பு வருவதை வரவேற்கிறார்கள். நாடாளுமன்றக் கமிட்டியும் உச்ச நீதிமன்றம் ஒரு தடையில்லை என்று சொல்லிவிட்டது. உயர் நீதிமன்றத்தில் இப்போதிருக்கிற 75 நீதிபதிகளில் 73 பேர் தமிழர்கள். ஆக, எதுவுமே தடையில்லாதபோது இந்தக் கோரிக்கை கிடப்பில் இருப்பதில் நியாயமில்லை.

எனவே, உள்துறைச் செயலகத்தின் மொழிப்பிரிவில் இருக்கிற, தமிழ்நாடு அரசின் உயர் நீதிமன்றத்தில் தமிழ் கோரிக்கையை குடியரசுத் தலைவருக்கு அனுப்பி ஒப்புதல் பெற மத்திய, மாநில அரசுகள் உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும். அதுதான் மொழிப்போர் தியாகிகளுக்கு நாம் செய்யும் உண்மையான மரியாதையாக இருக்கும். வெறும் புகழ்வார்த்தைகள் அவர்களுக்குப் பெருமை சேர்க்காது" என்றார்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.