குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தேனீ’ இணையத்தள ஆசிரியர்-ஈரோசு(ஸ்)யெமினி அவர்களுக்கு இறுதி மரியாதை!

24.01.2021....தி.ஆ....11.01.2052 .....உலகெங்கும் பலராலும் வாசிக்கப்பட்டு வந்த தேனீ இணையத்தின் ஆசிரியர் யெமினி அவர்கள் சேர்மனியில் காலமானார். இலங்கையில் புங்குடுதீவைப்பிறப்பிடமாவும் யாழ் இந்தவின் பழையமாணவனுமான  டாக்கடர் கணேசு அவர்களின் மகன் யெமினி அவர்கள் ஈரோசு அமைப்பிலும் இணந்திருக்கின்றார் என்பதை அவரின் மறைவின்பின்னரே பலரும் அறிகின்றோம்.

அவர்மறைவால் அவரின்  நண்பர்கள் துயரில் ஆழ்ந்திருப்பதுடன் அவரின் தன்னிகரில்லாத  தனிமனித ஆற்றலை துணிச்சலை பலரும் பாராட்டியவண்ணமுள்ளனர். அவரின் மறைவு ஒளியின்றிப்போகவில்லை காலைக்கதிரவன் போல் அவரின் எழுத்துவீச்சுக்கதிர்கள் பல திசைகளிலும் தெறிக்கின்றன சனநாயக மறுப்பிற்கு தனது நேர்மையான துணிச்சலான வெறுப்பை கருத்துவிடுதலை மூலம் வெளிக்காட்டியவர். இரசாயனதிரவவீச்சுப்போன்ற(அசிற்வீச்சுப்போன்ற)  எதிர்ப்புகளுக்கும்  அஞ்சாதவர். ஒரு சனநாயகவாதியின் இழப்பு மனிதகுலத்தில் இயற்கையின் நல்ல பகுதியை  இழப்பது போன்றது!

ஐரோப்பாவிலிருந்து சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக இணையத்தள சஞ்சிகையாக ‘ தேனீ’ வெளிவந்தது. அதன்ஆசிரியராக எனது நண்பர் செயற்பட்டார் என்பதனை அப்போதே அறிகின்றேன். ஆயுதபோராட்ட காலத்தில் முறிந்த பனையுடன் சரிந்த முற்போக்கு எண்ணங்களும் கருத்துவிடுதலைகளும் என்றுகூறலாம். இதற்கு ஒரு போராட்ட அமைப்பை மட்டும் பாரப்படுத்தவும் முடியாது. மக்கள் கூட்டத்தில் திருடர்கள் பலரிருந்தாலும் சூழ்நிலையால் ஒரு திருடன் மக்களிடம் மாட்டுப்பட்டதும்  திருடர்கள்தான் முதலில் தாம் நல்லவர்களாக  நடித்து அவனுக்கு தர்மஅடிபோடுவார்கள் இது எமது போராட்டத்தில் எப்போதும் எதிலும் நடந்ததை உணர்திருக்கின்றேன்.

இருந்தாலும் போராட்டகாலத்தில் முற்போக்காளர்களும்,எழுத்தாளர் களும்  சோர்ந்து போயிருந்தவேளையில் கனிணியையும், இணையத் தையும் ஒரு நாட்டின் எதிர்கட்சியின் பணிபோன்ற  அவரின் பணிதொடங்கியதும்  பலரும் இணைந்து தமது வாலிவதையைச்செய்திருக் கின்றனர் மறைந்திருந்துதாக்கியிருக்கின்றனர். தேனீயைபயன்படுத்தியிருக்கின்றார்கள் என்பதை உணர்கின்றேன். இருந்தாலும் அவர் பலருக்கும் தளமிட்டுக்கொடுத்தமையானது பெரும் கல்வியாளர்களாலும் இயலாத அரும்பணியென நான்கருதுகின்றேன். இன்று முல்லைத்தீவில் பெளத்தமதத்திற்கு மாறி விகாரைகளை கட்டுபவர்களைவிடவும் இவரின் கருத்துரிமை சிறப்பானது. சிலர்உண்மைக்குப் புறம்பான செய்திகளை அனுப்பியும் வெளியிட்டதை நான் நேரடியாக உணர்ந்திருக்கின்றேன்.

பூநகரியில் எனது உடன்பிறந்தவர் பூநகரி பிரதேசசபையில் தலைவராக இருந்தபோது அவர் எதிர்க்கட்சிதலைவரை வீடுபுகுந்து தாக்கினார் என்ற செய்தி வெளியாகியிருந்தது,வேறும் நிகழாத தகவல்களை வெளியிட்டிருந்ததும் நான் அறிந்து இந்த இணையத்தை அப்போதுதான் தேடிப்பிடித்தேன். அதற்கு முன் கருணா உடைவுக்காலத்திலும் தேனீ இணையம் பேசுபொருளாக இருந்தபோதும் அதனை நான் தேடிப்பார்க்க முனையவில்லை. அவரின் துணிச்சலை நேர்மையான சனநாயக கருத்துவிடுதலை எண்ணத்தை பலர் அல்ல சில தவறானவர்களும் தவறாகப் பயனபடுத்தியிருக்கலாமென உணர்கின்றேன் , இவை எழுத்துலகில் நடக்கக்கூடியன.

இருந்தபோதிலும் தனது கொள்ளையில் இறுதிவரை அவர் உறுதியாக இருந்து பல முற்போக்காளர்களை இணைதிருக்கின்றார்  இவரின் இணையத்தால் பல உள்ளங்கள் ஆற்றுகைப்பட்டிருக்கின்றன என்பதை அவரின் மறைவின்போது பல நாடுகளிலிருந்து வெளிவரும் எழுத்துகளிலிருந்து உணரமுடிகின்றது. குறுகிய காலத்தில் ஒருவரை அவரின்  தகுதியை அவருக்குள்ளிருப்பதை எடை போடக்கூடிய ஆற்றல் அவரின் பத்தாம்தர வகுப்புக்காலத்திலே  இருந்தது. அத்தகையவர்களை ஊக்கிவிக்கும் பண்பும் அதற்கான வெளிப்டைச்செயற் பாடுகளையும்  அவர் வெளிநாட்டிற்கு புலம்பெயர்ந்தபின்பும் செய்திருக்கின்றார் என்பதனை இன்று அவர்மேல் விழுந்து கொண்டிருக்கின்ற  புகழ்மாலைகள்  சுட்டிக்காட்டுகின்றன.

அவர்மறைவு தனிப்பட்ட முறையில் என்னை பைழய நினைவுகளுடன் இணைத்து வருத்தினாலும்  அவர் ஈரோசில் இருந்திருக்கின்றார், ஒரு இணையத்தை இருபத்தைந்து(25) ஆண்டுகளுக்கு மேல் இயக்கியிருப்பதால் இத்தகைய நன்மதிப்பினைப்பெற்றிருக்கின்றார் என்பதுடன் யாழ் இந்து மைந்தர்கள் உலகெங்கும் எதிர் எதிர்முனைகளிலும்  முழுமூச்சாக செயற்படுகின் றார்கள்  என்பதனையும் இவர் மூலம் உணர்கின்றேன். நண்பர் யெமினி அவர்கள் இறைநம்பிக்கையுள்ளவர் மூடநம்பிக்கைகள் அற்றவர்  எனவே அவர் தன்எழுத்துகளால் என்றும் வாழ்வார் என்று எண்ணிக்கொண்டு அவருக்கு இறுதிமரியாதை செலுத்தி நிறைக்கின்றேன்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.