இதில் பதிவாகும் மாணவர்களது கற்கைநெறிக்கு சுமார் 11 இலட்சம் ரூபா வரையான வட்டியில்லா கடனை வழங்கவும் உத்தேசிக்கப்பட்டுள்ளது. உரிய மாணவர்கள் தமது கற்கைநெறியை பூர்த்திச்செய்து தொழிலில் இணைந்துகொண்டதன் பின்னர் அக்கடன் தொகையை அடுத்து வரும் ஏழு ஆண்டுகளுக்குள் தவணை முறையில் வட்டியில்லாமல் செலுத்த முடியும். இதில் கலை, வணிகம், கணிதம் மற்றும் விஞ்ஞானத்திற்கான பாடநெறிகள் உள்ளடக்கப்பட்டுள்ளன. B.Ed கற்கை நெறியில் விஞ்ஞானம், கணிதம் மற்றும் ஆங்கிலம் ஆகிய பாடங்களை பயின்று ஆசிரிய சேவைக்குள் உள் வாங்கப்படுவோர் அக் கடனை மீள செலுத்த அவசியம் இல்லை.
மேலும் கணிணி துறையில் பல பாட பிரிவுகளுக்கு சிறப்பான பட்ட படிப்புகள் உள்ளன, 3 ஆண்டுகள் முடிவில் மடிக்கணிணி ஒன்றும் இலவசமாக வழங்கப்படும்.அத்துடன் தொழில்சார் பட்டங்களை பெற்றுக் கொடுப்பதோடு ஒவ்வொருவருக்கும் அரச, தனியார் வேலைவாய்ப்புகளை உறுதிச் செய்ய சிறப்பாக ஓர் அலுவலர் அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ளார் எனவே உங்களது பாடசாலைகளில் இருந்து வெளியேறிய மேற்படி மாணவர்களை 2021.01.31ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தவும். இது நமது மாணவர்களுக்கான அரிய சந்தர்ப்பம்.
மேலதிகத் தகவல்களுக்கு திரு.P.ஆறுமுகம் சேர் (தேசிய கல்வி நிறுவனம்) அவர்களை தொடர்பு கொள்ளவும்.
0773785134, 0724733134
சி.இரவிந்திரன்.பொதுச் செயலாளர்