குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 25 ம் திகதி வியாழக் கிழமை .

தொல்காப்பியம் இந்திய மொழிகளின் வழிகாட்டி


27,04. 2018மக்களின் வாழ்க்கை முறைகளையும் உரிமைகளையும் கட்டுப்படுத்திக் காப்பதை அரசமைப் புச் சட்டம் என்கிறோம். மொழியின் ஒழுங்கு முறையைக்கட்டுப்படுத்திக் காப்பதை இலக்கணம் என்கி றோம். .....தமிழுக்கு மிக உயர்ந்த இலக்கணத்தை வகுத்துத் தந்தவர் தொல்காப்பியர். தொல்காப்பியர் காலத்தை வரையறுப்பதற்காகச் செம்மொழித் தமிழாய்வு நடுவண் நிறுவனம் ஒரு குழு அமைத்தது.

அக்குழுவினர் தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு. 711 என்றும், அவருடைய பிறந்த நாள் மேழ வெள்ளுவா (சித்திரை பவுர்ணமி நாள்) என்றும் வரையறுத்தனர். அதன்படி இந்த ஆண்டு ஏப்ரல் 29-ம் நாள் தொல்காப்பியர் பிறந்த நாளாகக் கருதப்படுகிறது. தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் பெருந்தொண்டாற்றிய சிறந்த தலைவர்களின் பிறந்த நாளைக் கொண்டாடுவது இயல்பான நிகழ்ச்சி. சங்க காலத்தில் மன்னன் பிறந்த நாளைப் பெருமங்கல நாள் என்றும் பொதுவாகப் பிறந்த நாளை வெள்ளணி நாள் என்றும் குறிப்பிட்டனர். தொல்காப்பியர் காலம் என்னும் நூலில் தொல்காப்பியர் பிறந்த ஆண்டு கி.மு. 865 என வரையறுக்கப்பட்டுள்ளது .

 


தொல்காப்பியம் தமிழுக்கு மட்டுமா? தொல்காப்பியருக்கு முன்பே ஐந்திரனார் தமிழுக்கு ஐந்திரம் என்னும் இலக்கண நூல் எழுதினார். பிராகிருத மொழியின் காதந்திர இலக்கணமும் பாலி மொழியின் கச்சாயண இலக்கணமும் திபெத்திய மொழியின் சன்சுப இலக்கணமும் தாம் ஐந்திர இலக்கணத்தைப் பின்பற்றியதாகக் கூறுகின்றன. ஆதலால் ஐந்திர இலக்கணம் இந்திய மொழிகள் அனைத்துக்கும் ஆரியமொழிக் கலப்புக்கு முன்பு பொது இலக்கண நூலாகத் திகழ்ந்தது. என்னும் உண்மை உறுதிப்படுகிறது. அதன் வழிவந்த தொல்காப்பிய இலக்கணக்கூறுகள் திராவிட மொழிகளில் மட்டுமல்லாமல் பிற இந்திய மொழிகளிலும் ஊடாடியுள்ளன.


‘போல’ என்று பொருள்படும் சிவணுதல் என்னும் சொல்லை தொல்காப்பியர் குறிப்பிடுகிறார். இச்சொல் குச்சர (குஜராத்தி) மொழியில் ஜேவுண் என்று வழங்கிவருகிறது. செல்லிய, உண்ணிய என்பவை செல்லுங்கள் உண்ணுங்கள் என்னும் பொருளில் சங்க காலத்தில் வழங்கிய செந்தமிழ்ச் சொல்லாட்சிகள், கன்னட மொழியில் உண்ணிய என்றும் இந்தியில் செலிய என்றும் தொல்காப்பியர் வகுத்த இலக்கணப்படியே இன்றும் வழங்கி வருகின்றன.


தொல்காப்பியர் காலத்தில் ய, வ, இடையின எழுத்துகளை இடையில் சேர்க்காமல் பேசப்பட்ட நிகழ்வுகளையும் தொல்காப்பியர் சுட்டிக்காட்டுகிறார். அம்மாவைக் குறித்த ‘ஆயி’ என்பதை ‘ஆஇ’ என்றும் ‘நாயி’ என்பதை ‘நாஇ’ என்றும் எழுதும் வழக்கம் இருந்தது. ஆரியர் வருகைக்கு முன் இந்தியா முழுவதும் தமிழ் ஒன்றே பேச்சு மொழியாகவும் எழுத்து மொழியாகவும் இருந்ததால் இந்திய மொழிகள் அனைத்திலும் தமிழிலக்கணக் கூறுகள் ஆணி வேராக ஆழப்பதிந்துவிட்டன. அதனால்தான் வட இந்திய மொழிகள் அனைத்திலும் அம்மாவை ‘ஆஇ’ என்றே எழுதுகின்றனர். வட இந்திய மொழிகள் பிராகிருதத்திலிருந்து தோன்றியவை. பிராகிருதத்துக்கு அக்காலத்தில் வட தமிழ் என்னும் பெயர் இருந்தது.


இப்பொழுதுள்ள ‘ஐ’ பல்லவர் காலத்தில் வடிவமைக்கப்பட்ட கிரந்த எழுத்தின் வடிவமாகும். தொல்காப்பியர் காலத்தில் ‘ஐ’ என்பதை ‘அஇ’ என இரண்டு உயிர்க்குறில் எழுத்துகளாக எழுதினர். இதனை தொல்காப்பியர் ‘அகர இகரம் ஐகாரமாகும்’ என எழுத்ததிகாரத்தில் குறிப்பிட்டிருக்கிறார். இதனை விளங்கிக்கொள்ளாத நச்சினார்க்கினியர் என்னும் உரையாசிரியர் பல்லவர் காலத்து ஐகார எழுத்தின் போலி என்று தவறாக உரையெழுதி விட்டார்.


இன்றும் இந்தி மொழியில் அகர இகரம் சேர்த்து ஐகாரம் எழுதப்படுகிறது. சென்னை என்பதை இந்தியில் ‘சென்னஇ’ என்று எழுதுகிறார்கள்.உலக மொழிகளில் உயிரெழுத்துகளை தனியாகவும், மெய்யெழுத்துகளை தனியாகவும் பிரித்து இலக்கணம் சொல்வதில்லை.உயிர் எழுத்துகளில் குறில் எழுத்து,நெடில் எழுத்து என்று பிரித்து பேசுவதும் உலக மொழிகளின் இலக்கணத்தில் இல்லை.தொல்காப்பியர் சொன்ன இந்த வாய்ப்பாடு திராவிட மொழிகளில் மட்டும் அல்லாமல் வட இந்திய மொழிகளிலும் காணப்படுகிறது.


சொற்களை பெயர்ச்சொல், வினைச்சொல், இடைச்சொல், உரிச்சொல் என்று 4 வகையாக பிரித்து இலக்கணம் சொல்வது தொல்காப்பியத்திலும், வட இந்திய மொழிகளிலும் தான் காணலாம். எனவே தொல்காப்பியம் இந்திய மொழிகளின் இலக்கண நூல்களுக்கு முதல் நூலாகவும், வழிகாட்டி நூலாகவும் அமைந்துள்ளது. தொல்காப்பியம் தேசிய ஒருமைப்பாட்டுக்கு வித்தாகும்; விளைச்சலுமாகும். அந்நாள் வரின் அது தமிழர்கள் மட்டுமல்லாமல் இந்திய மக்கள் அனைவரும் கொண்டாடும் நாளாக மலரும் என உறுதியாக நம்பலாம்.


-  பேராசிரியர் இரா. மதிவாணன்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.