குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2052

இன்று 2021, தை(சுறவம்) 21 ம் திகதி வியாழக் கிழமை .

வேதங்கள் எல்லாம் சமசகிருதத்தில் ஆயின்

இராவணன் சமசுகிருதம் கற்றாரா? 08.12.2020....எழுதப்பட்டிருப்பதை காண்கின்றோம் அப்படியிருக்க  இராவணன் சமசுகிருதம் பேசியிருக்கவேண்டும் வேதங்களை எல்லாம் கற்று தெரிந்தவன் இராவணன் உண்மையிலேயே இலங்கைத்தீவு ஈழநாடு குமரிகண்டத்தின் ஒரு பிரிவுதான் இப்படிஇருக்கையில்

இலங்கை ஆண்ட மன்னர்கள் 20000 ஆண்டுகளுக்கு முன்னதாக தமிழர்களாக இருந்திருக்கவேண்டும்........

தற்போதைய இலங்கை இராவணனைப் பற்றி என்ன கூறுகிறது வாருங்கள்விரிவாகப்பார்ப்போம்

சிங்களவெகுசனமயப்படுத்தப்படும்_இராவணன்.

 

இராவணன் பற்றிய கதைகளும் அல்லது இராவணப் புனைவுகளும் இராமாயணக் காவியம் உருவாக்கப்பட்ட இந்தியாவிலும்,

இலங்கை வாழ் சிங்கள – தமிழ் மக்கள் மத்தியில் மட்டுமன்றி இந்திய உபகண்ட நாடுகளிலும்

தாய்லாந்து,

மியான்மார்,

பாலித்தீவு

போன்ற தென் கிழக்காசிய நாடுகளிலும் பாரம்பரிய நாட்டார் கதைகள் மூலமும், இலக்கியங்களின் மூலமும், நம்பிக்கைகளின் மூலமும் செல்வாக்கு செலுத்தி வருகிறது.

மேற்கு நாட்டு நாட்டு அறிஞர்களையும் கலைஞர்களையும் கூட ஈர்க்கிறது, ஏனெனில் இதற்கு ஒரு இலக்கியக் காவியப் பெறுமதி உண்டு என்பது உண்மை.


இது மாய, மந்திர, போர், காதல், பழிவாங்குதல் மற்றும் கதாநாயக வழிபாடு என ஈர்க்கிறது.

அந்த வகையில் காவியப் பெறுமதிக்கப்பால் அதற்கென்று ஒரு நம்பகப் பெறுமதி கிடையாது. ஆனால் அக்காவியம் மக்களின் செவி வழிக்கதைகளினூடாகவும், நாடகம், கூத்து என இன்னும் பல கலை இலக்கிய வடிவங்களின் ஊடாகவும் வழிவழியாக வெகுசன செல்வாக்கை நிறுவியிருக்கிறது.


இராமாயணத்தையும், இராவணனையும் வரலாற்று, தொல்லியல் வழிமூலம் எவரும் நிறுவியது கிடையாது.

ஆனால் இன்று வரை இந்தியாவில் இந்துத்துவ பாசிச சக்திகளால் புனிதப்படுத்தப்பட்டு இராமனை தெய்வமாக கோவில் கட்டி வழிபடுவதோடு நிற்காமல் இராமனை இன்றையை இந்துத்துவ போரின் தலைமை வடிவமாகவும் கொண்டு வந்து சேர்த்திருக்கின்றனர்.


அதே இந்தியாவில் இராவணனின் உருவப்பொம்மையை தீயிட்டு கொளுத்தி இராவணனைக் கொன்ற நாளாகக் கொண்டாடுவதை இந்திய வட மாநிலங்களில் இராமலீலா என்கிற பேரில் பண்டிகையாக நெடுங்காலமாக கொண்டாடப்படுகிறது.


வெகுசனத் தளத்தில் இராமாயணமும், இராமனும், எப்படி வட இந்தியாவில் நம்பகமான கதையாக நிறுவப்பட்டுள்ளதோ அதுபோலவே இலங்கையில் இராவணன் சிங்களவர்கள் மத்தியில் சீமீபகாலமாக நம்பகமானதாக நிறுவப்பட்டுவருகிறது.

ஆனால்

இலங்கையில் சிங்களவர்கள் இராவணனைக் கொண்டாடிய அளவுக்கு இராமாயணத்தை கொண்டாட முற்பட்டதில்லை. ஏனென்றால் இராமாயணத்தில் வில்லன் “சிங்களத் தலைவன் இராவணன்”. ஆனாலும் இராமாயணத்தை தவிர்த்து இராவணக் கதைகளை நிறுவமுடியாததால் இராமாயணத்தை சில சிங்கள தொலைகாட்சி சேனல்கள் வெளியிட்டன.


இந்தியாவில் இந்தி மொழியில் வெளியான இராமாயணத் தொடரை சிங்கள டப்பிங்குடன் வெளியிட்டு வந்தார்கள் அவர்கள். அதை மீண்டும் மீண்டும் வெளியிட்டார்கள்.


அதன் பின்னர் 2018இல் இராவணன் பற்றிய மெகா தொலைகாட்சி “உரையாடல்” தொடரொன்றை சிங்கள மொழியில் “ராவண” (රාවණ) என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. இலங்கையின் இனவாத தொலைக்காட்சிச் சேனலாக இயங்கிவரும் “தெரண” என்கிற சேனலில் இந்தத் தொடர் 100 தொடர்களையும் கடந்தது.


இராவணன் பற்றிய ஊகங்களையும், புனைவுகளையும், கட்டுக்கதைகளையும் பேச பல சிங்கள வரலாற்றாசிரியர்கள், இலங்கையின் அதி பிரசித்திபெற்ற தொல்பொருள் நிபுணர்கள், பாரம்பரிய கலைஞர்கள் பலர் அழைக்கப்படுகிறார்கள்.


அவர்கள் இந்தக் கற்பிதங்களை தொழில்சார் நிபுணர்களாக (Professionals) எப்படி இது முடிகிறது என்றே நமக்குத் தோன்றும்.

பின்னர் கடந்த நவம்பரிலிருந்து தொலைகாட்சி நாடகத் தொடராக இன்னொரு “ராவண” என்கிற பேரில் தெரண தொலைக்காட்சிச் சேவையில் ஞாயிறு நாட்களில் 8.30 மணியளவில் காண்பிக்கப்பட்டு வருகிறது.


இந்த நேரம் Hi peak என்று சொல்லக்கூடிய அதிக பேர் பார்க்கக் கூடிய நேரம் என்பதால் ஒளிபரப்பு செலவும், விளம்பரக் கட்டணமும் உயர்ந்த நேரம் என்பதும் கவனிக்கத்தக்கது.


இம்மாதம் (2020 யூன் மாதம்) அது 21 வாரங்களையும் கடந்து போய்க்கொண்டிருகிறது.

துசார தென்னகோன் என்பவர் இதனை இயக்கிவருகிறார். 100 வாரங்கள் வரை எட்டுவதே தனது இலக்கு என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.


அவர் இது பற்றிய ஆய்வுகள் பல நிகழ்த்தியவர் என்கிற செய்தியுடன் தான் அதன் விளம்பரங்களும் வெளியிடப்பட்டன

இது வெளிவர முக்கிய பாத்திரம் வகித்த “தெரண” தொலைக்காட்சியின் உபதலைவரான லக்சிறி விக்கிரமகே கதையின் மூலத்தைப் பற்றி இப்படி தெரிவிக்கிறார்.


“இராவணன் ஒரு அதிசயிக்கத்தக்க அரசன். அப்பேர்பட்ட ஒரு ஒரு தலைவனைப பற்றிப் பேச வான்மீகியின் இராமாயணத்தை ஒரு

“மூலமாக” நாங்கள் பயன்படுத்தவில்லை. வால்மீகியின் இராமாயணத்தில் இராவணன் ஒரு துஷ்டனாக காண்பிக்கப்படுகிறது.

ஆனால் உண்மையில் நிகழ்ந்தது பாரதத் தரப்பை அவர் தோற்கடித்தார்.

அதனால் தான் அவர்கள் இராவணனை துஷ்டனாக காண்பிக்கிறார்கள்.” (6)

இராவணன் என்கிற திரைப்படமாகத் தயாரிப்பதே ஆரம்பத்தில் இருந்த திட்டம் என்கிறார் மேலும் அவர்.

இதைத் தவிர அரச தொலைக்காட்சி சேவையான ITNஇல் (சுயாதீன தொலைக்காட்சிச் சேவை) “இராவண புராணம்” (ராவண புராணய රාවණ පුරාණය) என்கிற ஆவணப்படத் தொடர் சென்ற ஆண்டு தொடங்கப்பட்டு 21 வாரங்கள் காண்பிக்கப்பட்டன.

இத்தொடரில் இராவணன் புலங்கியதாக சொல்லப்படும் இலங்கையின் பல பகுதிகளுக்கு பயணித்து அங்குள்ள குகைகள், மலைகள், காடுகள், நதிகள் என்பவற்றைகே காட்டி பல கதைகளை அவிழ்த்து விடுகிறார்கள்.


இங்கு உறங்கினார், குளித்தார், சீதையை மறைத்துவைத்திருந்தார், ஐந்து வானூர்திகளை வைத்திருந்தார்.

இங்கு தான் இறக்கினார், என்றெல்லாம் கதை விடுகிறார்கள். இது ஒரு அரச தொலைக்காட்சியின் சொந்த நிகழ்ச்சி என்பதை கவனிக்க.

இந்த புனைவுகளின் உச்சம் என்னவென்றால் ஒரு இடத்தில் இப்படி குறிப்பிடுகிறார்

“இராவணனின் உடல் இன்னும் பக்குவமாக இருக்கிறது.


ஆனால்


தயவு செய்து எங்கே இருக்கிறது என்று தேடப்போகாதீர்கள். அது ஆபத்தானது. அப்படிப்பட்ட முயற்சிகளில் இறங்கியவர்களுக்கு என்ன ஆனது என்பதை நாங்கள் அறிவோம் அதனால் தான் கூறுகிறோம்” என்கிறார் இந்த நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான கயான் சந்தகெலும்.

இவரின் இன்னொரு காணொளியும் காணக்கிடைத்தது அதன் தலைப்பு “இராவணன் பௌத்தனா? இந்துவா?” அதில் அவர் “புத்தருக்கு முற்பட்ட காலத்து இராவணனை” பௌத்தன் என்று நிறுவ அதிக சிரத்தை எடுக்கிறார்.


புத்தர் பௌத்தத்தைத் தந்தவர்களில் இடைப்பட்டவர் தான் என்றும் அதற்கு முன்னரே அத்தத்துவத்தை தந்துவிட்டு சென்றவர்கள் இருக்கிறார்கள் என்றும், ஆகவே இராவணன் ஒரு பௌத்தன் தான் என்றும் நிறுவ முற்படுகிறார்.


இந்திரயித்தின் கிரியோடிச்ய (ඉන්ද්‍රජිත්ගේ  ක්‍රියොඩ්ඩිශය) என்கிற தலைப்பிலான சிங்கள நூலொன்றின் விமர்சனத்தை யூடியூப் சேனலில் சமீபத்தில் கண்டேன். இந்த விமர்சனத்தைச் செய்தவர் பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி.

இராவணனின் மகன் இந்திரயித் கையாண்ட போர் நுட்பங்கள் பற்றியதாம் இந்த நூல். இது தேவநாக எழுத்து வடிவத்தில் கிடைக்கப்பெற்ற ஓலைச்சுவடியை சிங்களத்துக்கு மொழிபெயர்த்து அச்சுக்கு கொணரப்பட்ட நூல் என்று அறிமுகம் செய்கிறார்.


பேராசிரியர் லீலானந்த விக்கிரமாராச்சி பாரம்பரிய சிங்கள தற்காப்புக்கலைகளை கற்றுக் கொடுப்பதில் பிரசித்தி பெற்றவர். இலங்கை இராணுவத்துக்கு சிறப்புப் பயிற்சிகளை அவர் செய்பவர் என்பதை அவரின் இணையத்தள விபரங்களில் இருந்து அறிந்துகொள்ள முடிகிறது.

மேற்படி கூறிய அனைத்து நாடகங்களும், ஆவணப்படங்களும், உரையாடல்களும்.


நூல் விமர்சனமும் youtube இல் காணக்கிடைக்கிறது. இக்கட்டுரைக்காக அங்கிருந்துதான் அவற்றை ஆதாரத்துக்குப் பயன்படுத்திக்கொண்டேன்.

இராவணனைப் பற்றி ஒருதொகை வீடியோக்கள் சிங்களத்தில் அங்கு உள்ளன.


மேலும் சிங்களச் சூழலில் இராவணன் பற்றிய அலை மேலெழுந்திருக்கிற இந்தக் காலத்தில்; சிங்களச் சந்தையில் இராவணன் ஒரு பெரும் விற்பனைப் பண்டமாக ஆக்கப்பட்டிருப்பதைத் தான் அவதானிக்க முடிகிறது.

நன்றி வணக்கம்

நாளை இராமனின் புனை நூலிலிருந்து சில உண்மைத் தகவல்களையும் கசப்பான விடயங்களையும் எதிர்பார்ப்போம்.....

உதயா_கட்டாரிலிருந்து

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.