குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 20 ம் திகதி சனிக் கிழமை .

யாழில் திடீரென்று பூதங்கள்போல் திரண்டு திரண்டுவந்த கருமேகங்கள்; வரலாறு காணாத பதிவு!

06.12.2020....யாழ்ப்பாணத்தில் கடந்த ஆறு மணித்தியாலங்களில் கடுமையான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக விசம்பு நிலை அவதான நிலையத்தினால் அறிவிக்கப்பட்டுள்ளது.இதன்படி யாழ்ப்பாணம் நகர், வலிகாமம், தென்மராட்சி உள்ளிட்ட பிரதேசங்களில் இன்று மாலை 2.30 மணி முதல் இரவு 8 மணிவரையில் 150 மில்லி மீற்றருக்கும் அதிகமான மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளது.

இன்றையநாள் கடும் வெப்பத்துடன் வெய்யில் எறித்த நிலையில் பிற்பகல் வேளையில் திடீரென்று கனதியான மேகக் கூட்டங்கள் யாழ் மாவட்டத்தை மூடியுள்ளன. இவை பூதங்கள் போல காணப்பட்டதாக ஒருவர் வர்ணித்துள்ளார். இதனைத்தொடர்ந்து ’சோ’வென பெருமழை கொட்டத்தொடங்கியது.

இதேவேளை யாழ். மாநகர எல்லை மற்றும் அதை அண்டிய பிரதேசங்களும் மாவட்டத்தின் ஏனைய பிரதேசங்களின் தாழ் நிலங்களும் அனர்த்த நிலையை எட்டியிருக்கின்றன.

தற்போது பெய்யும் மழை நள்ளிரவு வரை நீடிக்குமாயின் தாழ் நிலங்களில் உள்ள மக்கள் தமது வீடுகளை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்படும் என்பதால் விரைவான மீட்பு நடவடிக்கை அவசியம் என கூறப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.