குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, கார்த்திகை(நளி) 25 ம் திகதி புதன் கிழமை .

இலங்கையில் முதல் முறையாக கதிர்வீச்சு(லேசர்) தொழில்நுட்பத்தின் மூலம் சத்திர சிகிச்சை! வெளியான முக்கிய

தகவல்.19.11.2020.....அல்பிரட்துரையப்பாவின்  மனைவி அவர்கள் ஒரு எம்.பி.பி.எசு. அவர்கள் இங்கிலாந்தில் டாக்டராக இருந்தார்  சிறுநீரகத்தில் கல் ! அறுவைச்சிக்சிக்குப்பயந்து யாழ்ப்பாணம் சட்டநாதர் கோவில்  அயலிருந்த நடராசா தமிழ் மருத்துவரை நாடினார்  வெற்றிலைசாறு , வாழைக்கிழங்குச்சாறு இவற்றுடன் மருந்தைக்கரைத்து மூன்று முறைமுறை குடித்தபின் சிறு நீர் கழியும் போது  வெள்ளை துணியில் வடிகட்டச் சொல்லி  உள்ளர். இரத்தினக்கற்கள் போன்ற  துகள்களை  வைத்தியரிடமே காட்டி மகிழ்ச்சியுடன் இங்கிலாந்துசென்றார்!

இலங்கையில் முதல் தடவையாக அதிவலு கொண்ட கதிர்வீச்சால்(லேசர்) தொழில்நுட்பத்தின் ஊடாக சத்திர சிகிச்சையொன்று களுத்துறை மாவட்ட நாகோடா பொது வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சீறுநீரகத்தில் கல்லொன்று உருவாகியிருந்த நிலையில், அந்த கல் அதிவலுக் கொண்ட லேஷர் தொழில்நுட்பத்தின் ஊடாக இன்று அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது குறித்து கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இலங்கை மருத்துவ வரலாற்றில் இவ்வாறான சத்திர சிகிச்சையொன்று முன்னெடுக்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

வைத்தியர் கலன பரண பல்லியகுருகே தலைமையிலான குழுவினர் இந்த சத்திர சிகிச்சையை மேற்கொண்டுள்ளனர். 52 வயதான ஒருவருக்கே இந்த சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த நபரின் சிறுநீரகத்தில் 4 சென்றிமீற்றர் நீளமான கல்லொன்று காணப்பட்டதாக வைத்தியர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த பாரிய கல்லை, 140 வொட் மின் வலுவில் லேசர் தொழில்நுட்பத்தின் ஊடாக, உடைத்து, சிறுநீரகத்தின் வழியாக வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது.

இதேவேளை, குறித்த நபரின் சிறுநீரகத்திலிருந்த 8 அங்குல கல்லொன்று, சுமார் 7 ஆண்டுகளுக்கு  முன்னர் சத்திர சிகிச்சை மூலம் வெளியில் எடுக்கப்பட்டிருந்தது.

இரண்டாவது தடவையாக கல்லை அகற்ற வேண்டிய நிலைமை ஏற்பட்டதை அடுத்து, புதிய தொழில்நுட்பம் இந்த சத்திர சிகிச்சைக்காக பயன்படுத்தப்பட்டதாக வைத்திய குழாம் தெரிவிக்கின்றது,

இந்நிலையில், குறித்த நோயாளர், 4 நாட்கள் முழுமையான குணமடைந்து வழமைக்கு திரும்புவார் என வைத்தியர்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.