குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

"கல்நெஞ்சம் கொண்ணட சிறை அதிகாரியையும் கனியாக மாற்றிய மகாத்மா".! 19.10.2020

மகாத்மா காந்தி சிறையில் இருந்த போது சு(ஸ்)மட் என்ற மகா கொடியவன் சிறைஅதிகாரியாக (யெயிலராக) இருந்தான்.எல்லாக் கைதிகளையும் எலும்பு ஒடிய அடிப்பவன். காந்தியையும் கீழே தள்ளி, காலணிக்காலணிக் காலால் பலமுறை மிதித்தான், அடித்தான்.அடிக்கும்போது எல்லோரும் ஐயோ!என்று அலறினார்கள்.ஆனால், காந்தி மட்டும் "இராம்!இராம்!!" என்று சொன்னது, அவனை மிகவே யோசிக்க வைத்தது.

அன்று முதல் காந்தியை அடிப்பதை நிறுத்தினான்.

ஆனால், காந்தியை அவ்வப்போது

உற்றுப் பார்த்தான். இலேசாகப் புன்முறுவல் காட்டினான்.

ஒரு நாள் "திரு காந்தி"! என்று கனிவாக அழைத்து,

"நான் உங்களுக்கு ஏதாவது உதவ நினைக்கின்றேன்; என்ன வேண்டும்?" என்றான்.

"ஏதாவது புத்தகம் கொடுங்கள்"  என்றார் காந்தி.

இந்தத் தொடக்கம் நட்பாக சுமட்,

"நான் உங்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தியையும், ஓரு வருத்தமான செய்தியையும், கொண்டு வந்துள்ளேன்" என்றான்.

"மகழ்ச்சி  எது? வருத்தம் எது?" என்று கேட்டார் காந்தி.

"இன்று உங்களுக்கு

விடுதலை. இது மகிழ்ச்சியான செய்தி.

ஆனால், உங்களைப் பிரிய

என்னால் முடியவில்லை.

இது வருத்தமான செய்தி" என்றான்

சுமட்.

காந்தி சொன்னார்,

"நானும் உங்களுக்கு

ஒரு பரிசு தருகிறேன்; என் நினைவாக வைத்துக் கொள்ளுங்கள்" என்று சொல்லி,

தான் சிறையில் தைத்த காலணியை  அவரிடம்  கொடுத்தார்.  ஆவலோடு அணிந்து பார்த்த சுமட் கேட்டான்,

"இவ்வளவு துல்லிமாகத் தைக்க, அளவு எப்படிக் கிடைத்தது" என்று கேட்க,

சிரித்தபடி காந்தி தனது மார்புத் துண்டை அகற்றினார்;

ஆரம்பத்தில் சுமட் காலால் உதைத்த போது ஏற்பட்ட வடுக்கள் அங்கு இருந்தன.

"இந்த வடுக்களை அளந்து தான் தைத்தேன்" என்று காந்தி சொன்னார்.

"தடால்" என்று சத்தம்; சுமட் கீழே விழுந்து காந்தியின் கால்களைப் பிடித்துக் கதறினான்.

"நான் மிருகம்! கொடிய, கேவலமான, மிருகம்!! என்னை மன்னித்து விடுங்கள்.

இனி யாரையும் அடிக்க மாட்டேன்" என்றார்.

ஒரு நிமிடத்தில், ஒரு கொடிய மிருகம்,

மென்மையான மனிதனாக மாறியது. "கல்லையும் கனியாக மாற்றலாம்" என்று  இதைத்தான் சொன்னார்களோ என்று எண்ணத் தோன்றுகிறது.

சுமட் சத்தியம் செய்தான்.

"இந்த காலணிதான் இனி எனக்குக் கடவுள்;

இதை மட்டுமே வணங்குவேன்"

என்று அப்படியே வழிபட்டான்.

நாம் நினைத்தால், யாரையும்

மன்னிக்கவும் முடியும்;மாற்றவும் முடியும்"     .....

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.