குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, கார்த்திகை(நளி) 25 ம் திகதி புதன் கிழமை .

பூநகரியின் தென்பகுதியில் பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் குமுளமுனையில் காணிகளுக்குஎன்னநடந்தது?

18.10.2020...பூநகரியின் தென்பகுதியில்  பல நூற்றாண்டுகள் பழமைவாய்ந்த கிராமம் குமுளமுனை இக்கிராமத்தில் வாழும் பெரும்பாண்மையான மக்களின் பிரதான தொழில் விவசாயம் அதாவது நெற்செய்கை  இம்மக்களின் வாழ்வாதாரமும் இதுதான் இவர்களின் நெற்கணிகளின் உறுதிகள் அநுமதிப்பத்திரங்கள் கடந்தகால போர் காரணமாக   தவறவிடப்பட்டும் அழிவடைந்தும் விட்டன. இப்போது இவர்களின் பாரம்பரிய வயல் நிலங்களை பூநகரி வனவளத்துறையினர் உறுதிப்பத்திரம் இல்லை காணியின் வரைபடம் இல்லை எனவும் கூறி ஆக்கிரமித்தும் விவசாய முயற்சிகளை தடுத்தும் இப்பகுதிகளில் விவசாய முயற்சிகளில் ஈடுபடுவேரை கைதுசெய்து அரசகாணியில் அத்துமீறி நுழைந்ததாக வழக்கு தாக்கல் செய்து நீதிமன்றம் மூலம்  தண்டனையையும் வளங்கி வருகின்றனர் இது போன்ற செயல்கள் பூநகரியின் பலகிராமங்களில் நடைபெறுகின்றது இவர்களின் இச்செயல்களால் பலர் தமது வயல்நிலங்களை இழந்துள்ளனர் பலர் அச்சத்தினால் விவசாய முயற்சிகளை கைவிட்டுள்ளனர் பூநகரி வனவள பாதுகப்பு அதிகாரிகள் எமது மக்களின் வயல் நிலங்களில் வனவள பாதுகாப்பு கற்களையும் நாட்டிவருகின்றனர் இதில் இன்னும் ஒரு விடயத்தினை அறியமுடிகின்றது பூநகரி வனவளத்துறையின் பொறுப்பதிகாரி இக்கற்களை நாட்டும் ஒப்பந்தத்தை மறைமுக வேறு ஒருவரின் பெயரில் செய்துவிட்டு விடுமுறை நாட்களில் இவரது மேற்பார்வையில் மேற்கொண்டு வருவதாகவும் அறியமுடிகின்றது ஒரு வனவள பாதுகாப்பு கல் நாட்டுவதற்கு ஆயிரம் ரூபாய் ஒப்பந்தம் மூலம் பெறப்படுவதாகவும் இதில் கல் நாட்டும் வேலையாட்களுக்கு ஒரு கல்லுக்கு நாநூறு ரூபாய் வளங்கப்படுவதாகவும் அறியமுடிகின்றது இதன் காரணமாக அவர்கள் எமது மக்களின் வயல் நிலங்களில் கண்டபடி கற்களை நாட்டிவருகின்றனர் இவ்விடயத்தில் சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விவசாய அமைப்பு களுடன் தொடர்பு கொண்டு  விரைவாக நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு பாதிக்கப்பட்ட கிராம மக்கள் கேட்டுகொள்கின்றனர்

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.