குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திரும்பவும் எரியும் ஈழம் முள்ளி வாக்கால் காலத்திற்கு முன்னர் எழுதப்பட்டது! ஆ.இராமசாமி.

17.10.2020....திரும்பவும் இலங்கையில் நடக்கும் நிகழ்வுகள் ஒட்டு மொத்தத் தமிழர்களின் கவனத்துக்குரிய செய்திகளாக ஆகிக் கொண்டிருக்கின்றன. 1980- களில் தமிழ்நாட்டு இளைஞர்களையும் மாணவர்களையும் உணர்ச்சி வசப்பட்டவர் களாக மாற்றி அதன் வெளிப்பாடுகளை மக்கள் போராட்டமாக ஆக்கிய ஈழத்தமிழர் பிரச்சினை, திரும்பவும் தமிழ் நாட்டின் ஒட்டு மொத்தப் பிரச்சினையாக ஆகும் சாத்தியங்கள் இருக்கிறதா? எனத் தெரியவில்லை.

இந்தச் சந்தேகம் எழுவதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. ஏனென்றால் இடையில் இலங்கையில் நடக்கும் யுத்தமும் வன்முறையும் எதற்காக என்ற விவரங்களைத் தெரிந்து கொள்ளக் கூட அக்கறை காட்டாத தமிழர்கள் பிறந்து வளர்ந்து விட்டார்கள். இலங்கைப் பிரச்சினை என்றில்லாமல் எந்தத் தேசத்து அரசியல் பிரச்சினைகளிலும் அக்கறை காட்டாத இளையோர் கூட்டம் படித்தவர்களாக வெளியேறியுள்ளார்கள். அயல் தேசத்துப் பிரச்சினைகளில் மட்டுமல்ல, இந்தியாவின் அரசியல், பொருளாதார நெருக்கடிகளில் கூடத் தங்கள் கவனத்தைச் செலுத்தி, அதில் தங்களுக்கான கருத்தை உருவாக்கிக் கொண்டவர்களாகவும், அதனைத் தயக்கமின்றை வெளிப்படுத்துபவர் களாகவும் இல்லாமல் போன இளையோர் கூட்டம் உருவாகி விட்டது.

தமிழ் இளையோர்களை அரசியலற்றவர்களாக ஆக்கியதன் மூலம் தாதாக்களும் சமூக விரோதங்களில் துணிந்து இறங்கும் நபர்களும் அரசியல்வாதிகளாக வலம் வரும் சாத்தியங்கள் நேர்ந்துள்ளன. போராட்டங்கள் நடத்தி உரிமைகளைப் பெறுதல் என்பதற்குப் பதிலாகக் கட்டப் பஞ்சாயத்துக்கள் வழி எல்லாம் கைகூடி வருகின்றன.

உலகமயப் பொருளாதாரம் அரசியல், வர்த்தகம், சந்தை, ஊடகவலைப் பின்னல், பண்பாடு, காட்சித்துய்ப்பு, கருத்தோட்டம் என எல்லாவற்றையும் தருவது போலப் பாவனை செய்து கொண்டே தனி மனிதனின் எல்லையை மிகக் குறுகலான ஒன்றாக ஆக்கி விட்டது விநோதமான முரண்நிலை. தனது படிப்பு, தனக்கான வேலை, தனது வருமானத்தின் பெருக்கத்தை நுகர் பொருள் களாக வாங்கிக் குவித்துத் தனது குடும்பத்தின் சொகுசு வாழ்க்கைக்கு உத்தரவாதம் ஏற்படுத்துதல் என்று நமது நடுத்தர வயது இளைஞர்கள் ஆகி விட்டார்கள். தேசத்திற்காக வேலை செய்தல், தேசத்திற்குள் வேலை செய்தல் என்ற கூற்றுகள் எல்லாம் பத்தாம் பசலித்தனமான வார்த்தைகள் ஆகி விட்டன. சொந்த நலனுக்காக எந்த நாட்டிலும் குடியேறி அந்த நாட்டுப் பிரஜைகளாக ஆகிவிடுவதற்குப் போட்டி போடும் இந்திய / தமிழ் மனதிற்கு தனி நாடு, தாய்மொழி, தனிப் பண்பாட்டு அடையாளம் எனப் பேசி, அதற்காகக் கால் நூற்றாண்டுக் கால வாழ்க்கையைத் தொலைத்து விட்ட இலங்கைத் தமிழர்களின் துயர வரலாறும், புலம் பெயர் வாழ்வின் சோக வெளிப்பாடு களும் எவ்வளவு தூரம் விளங்கிக் கொள்ளத்தக்கன என உறுதியாகச் சொல்ல முடியாதவை.

ஆம் இலங்கைத் தமிழர்களின் போராட்டம் கால் நூற்றாண்டைத் தாண்டி விட்டது. தங்களின் சொந்த நாட்டு அரசாங்கத்தால் மொழி மற்றும் இனம் சார்ந்து ஒதுக்கப்படுகிறோம் என்ற உணர்வை இலங்கைத் தமிழர்கள் 1970 களில் உணரத் தொடங்கினார்கள். அந்த விழிப்புணர்வு சிறு சிறு போராட்டங் களாகச் சட்ட எல்லைக்குள் அப்போதே வெளிப்படத் தொடங்கின. அரசியல் அமைப்பு தந்த ஜனநாயக உரிமைகளைக் கோரிப் பெறுதல் என்று நிலைக்கு பொன்னம்பலம், அமிர்தலிங்கம் போன்றோர் தலைமை தாங்கிய காலகட்டம் 1980 களில் முடிவுக்கு வந்தது. இன ஒதுக்கல்களைக் கைக்கொண்டுள்ள சிங்கள அரசிடமிருந்து தமிழர்கள் வாழும் ஒரு தனி நாட்டை உருவாக்க வேண்டும் என்ற சிந்தனை -தனி ஈழத்தை அடைய வேண்டும் என்ற சிந்தனைக் கரு- 1980 களில் அங்கு இளைஞர்களிடம் எழுந்தது. அதற்கு அறவழியிலான போராட்டங்கள் உதவாது; தேவைப்பட்டால் ஆயுதந் தாங்கிப் போராடவும் வேண்டும் என முடிவு செய்து இளைஞர்கள் அதற்கான குழுக்களை அமைத்துக் கொண்ட ஆண்டுகள் எண்பதுகளின் தொடக்கம் .

தொடக்க நிலையிலேயே இலங்கை அரசின் கடும் அடக்குமுறையைச் சந்தித்த போதும் இளைஞர்களின் வேகம் குறையவில்லை. அவ்வேகத்தைக் கூட்டும் நிகழ்வாக அமைந்தது 1983 வெலிக்கடைச் சிறை நிகழ்வு. சிறையில் திரட்டி வைக்கப்பட்டிருந்த தமிழ் உரிமைப் போராட்டக்காரர்கள் மீது அரசின் உதவியோடு சிங்கள வன்முறையாளர்கள் கொலை வெறித்தாக்குதல் நடத்திய ஆண்டு அது. போராட்டத்தின் முன்னணித் தலைவர்களாக இருந்த தங்கதுரை, யெகன் ஆகியோர் கொல்லப் பட, எனது கண்களால் இறப்பது முன்பு தனி ஈழத்தைக் காண்பேன் எனச் சூளுரைத்திருந்த குட்டி மணியின் கண்கள் தோண்டி எடுக்கப் பட்ட அந்த நிகழ்வு நடந்த இருபத்தைந்து ஆண்டுகள் ஓடி விட்டன. ஆம் கால் நூற்றாண்டுகளாக அந்தச் சின்னஞ் சிறு தேசம் வன்முறையின் பயிற்சிக் களமாக உலக நாடுகளின் ஊடகங்களுக்குத் தீனி போட்டுக் கொண்டிருக்கிறது.

இந்த 25 ஆண்டுகளில் இலங்கைத் தமிழர்கள் நடத்தும் அந்தப் போராட்டம் அல்லது யுத்தம் பல பரிமாணங்களை அடைந்து விட்டது. சொந்த நாட்டு அரசின் அடக்கு முறையிலிருந்து விடுதலை பெறுவதற்காகத் தொடங்கிய அந்த யுத்தம் சகோதர யுத்தமாகவும், நண்பர்களோடு நடத்தும் யுத்தமாகவும் ஆனது தான் அவர்களின் பெருந்துயரம். ஈழ விடுதலையை அடையப் போகும் போரில் யார் தலைமை ஏற்பது என்ற கேள்வியின் காரணமாக ஈழத்தில் செயல்பட்ட தமிழ் இளைஞர்களின் போராட்ட அமைப்புகளான டெலோ,பிளாட், ஈபிஆர்எல்எப், எல்டிடிஇ போன்றவை தங்களுக்குள் நடத்திய சகோதர போர் முடிவதற்குள், அமைதி காக்கும் படை என்ற பெயரில் இலங்கைக்குள் நுழைந்த இந்தியப் படையின் அராயகத்தை இலங்கைத் தமிழர்கள் எதிர்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டது. நண்பர்கள்; சொந்த பந்தங்கள் எனக் கருதிய இந்தியர்களை- இந்தியாவை- துணைக்கண்ட எயமானர்கள் என்றெல்லாம் கருத வைத்தது இந்திய அமைதி காக்கும் படை என்ற பெயரில் சென்ற இந்திய படையின் செயல்கள் தான்.

என்ன பெயரில் அழைக்கப் பட்டாலும் ராணுவம் ராணுவமாகவே இருக்கும்; இருந்தது என்பதை இந்திய ராணுவம் இலங்கையில் உறுதி செய்தது. போராட்டங்களை அடக்குவதாகச் சொல்லி சாதாரண குடிமக்களிடம் நடந்து கொண்ட செயல்கள், வன்முறைகள் பற்றி ஏராளமான புனைகதைகள் இப்போது கிடைக்கின்றன. குறிப்பாகப் பெண்களிடம் இந்திய ராணுவத்தினர் நடந்து கொண்ட விதம் பற்றி இலங்கையிலிருந்து வந்த நண்பர்கள் கூறிய நிகழ்வுகள் இந்தியத் தமிழர்களின் நினைவில் கூட அச்சம் ஊட்டக்கூடியன. ஆயுதங்களைத் தேடுவதாக கூறிப் பெண்களின் மார்பகங்கள் கசக்கப் பட்டதும்ஆட்களைத் தேடுவதாகக் கூறி வீடு புகுந்து பெண்களிடம் வன்புணர்ச்சியில் ஈடுபட்டதும் தான் கோபத்தின் உச்சத்தை அடையச் செய்து போது பழிவாங்கும் எண்ணத்தில் நிறுத்தியதாக பலரும் சொல்லி யிருக்கிறார்கள். உச்சத்தை அடைந்த அந்த எண்ணம் தான் இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் உயிரைப் பறிக்கும் கண்மூடித்தனமான காரியத்தைச் செய்ய வைத்தது என்பதையும் ஈழ எழுத்தாளர்களின் கதைகளும் கவிதை களும் கட்டுரைகளும் பதிவு செய்து வைத்துள்ளன.

ராஜீவ் காந்தியின் உடல் தமிழ் மண்ணில் சிதறடிக்கப் பட்ட காட்சிகள் தான் இந்தியத் தமிழர்களின் மனவெளியிலிருந்து இலங்கைத் தமிழர்களின் சோகத்தை விலக்கி வைத்தன. இனம் சார்ந்தும், மொழி சார்ந்தும் இலங்கைத் தமிழர்களின் பால் தங்கள் உணர்வு பூர்வமான நேசத்தையும் உதவ வேண்டும் என்ற கரிசனத்தையும் காட்டி வந்த தமிழ் நாட்டுத் தமிழ் மனம் - பொதுப் புத்தி- தேசப் பற்று என்ற கருத்துருவின் பால் நகர்த்தப் பட்ட வரலாறு தொண்ணூறுகளின் வரலாறாக ஆகி விட்டது. தேசப் பற்று என்னும் கருத்துருவின் நகர்ந்தவர்கள் இலங்கைத் தமிழர்களின் எதிரிகளாக ஆகி விட்டார்கள் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் நகர்வுக்குக் சிந்தனை சார்ந்த முடிவுகள் காரணமாக இல்லாமல் அச்சம் சார்ந்த நெருக்கடிகளே பெரிதும் காரணங்களாக இருந்தன. ராஜீவ் காந்தியின் மரணத்திற்குப் பிந்திய காலத்தில் ஈழம் பற்றிய பேச்சு தடை செய்யப் பட்ட பேச்சாகவும், வெளிப்படையான ஆதரவு தண்டிக்கத் தக்க குற்றமாகவும் ஆக்கப் பட்ட நிலையில் தேசப் பற்றுக்குள் நுழைந்து பாதுகாப்பாக இருப்பதை விரும்புவது இயல்பான ஒன்று தானே. என்றாலும் இன்றும் இலங்கைப் பிரச்சினைத் தமிழ் நாட்டுத்தமிழர்களுக்கு உணர்வு பூர்வமான ஒன்றாகவே இருக்கிறது. இப்படித் தொடர்வதற்கு தமிழக அரசியல் தலைமைகள் பெரிதும் மாறிவிடவில்லை என்பது ஒரு காரணமாக இருக்கலாம்.

வெவ்வேறு நாடுகளில் வாழ்கிறவர்களை மொழி ஒன்று மட்டுமே உறவுடைய வர்களாக நினைத்துவிடச் செய்யாது. மொழியுணர்வைத் தாண்டியதாகச் சமயஞ்சார்ந்த பண்பாட்டு நடைமுறைகளும் அன்றாட வாழ்க்கைப் போக்கு களுமே மனிதக் கூட்டத்தை ஒன்றிணைக்கும் சக்தியாக இருக்கிறது என்பது நிகழ்கால உண்மைகளாக இருக்கின்றன. இலங்கைத் தமிழர்களும் இந்தியத் தமிழர்களும் வரலாற்று ரீதியாக சமய நம்பிக்கைகள், பழக்க வழக்கங்கள், சிந்தனை முறைகள், மொழிப்பயன்பாடு என ஒற்றுமைப் பட்டவர்களாக இருக்கிறார்கள் அந்த ஒற்றுமைகளே இலங்கைத் தமிழர்களின் போராட்டத்தின் பால் திரும்பத் திரும்ப தமிழ் நாட்டுத் தமிழர்களின் கவனத்தை ஈர்க்க வைக்கின்றன. இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியத் தமிழர்களுக்கும் இருக்கும் இந்தப் பின்னணியை- பண்பாட்டுத் தொடர்பை - இந்திய அரசின் கவனத்திற்குக் கொண்டு செல்ல வேண்டிய கடமை தமிழக அரசியல் கட்சிகளுக்கு இருக்கிறது. அதைச் செய்யாவிட்டால், இந்திய அரசின் இலங்கை பற்றிய கருத்துருவை மாற்ற முடியாது.

இந்தியாவின் முன்னாள் பிரதமர் இராயீவ் காந்தியின் கொலை சார்ந்த பிரச்சினையாக மட்டுமே இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையை அணுகிய காலம் முடிந்து பல ஆண்டுகள் ஆகி விட்டன. காங்கிரசு கட்சியின் பத்திரிகைத் தொடர்பாளர்களும் செயலாளர்களும் சொல்வது போல, இந்திய அரசு இலங்கைத் தமிழர் பிரச்சினையைப் பக்கத்து நாட்டின் உள்நாட்டுப் பிரச்சினையாகத் தான் பார்க்கிறது என்று சொல்வதும் உண்மையல்ல. வளர்ந்து வரும் உலகமயப் பொருளாதாரத்தின் வியாபாரப் பெருக்கத்தில் தங்களுக்குக் கிடைத்திருக்கும் ஒரு சந்தையாக இந்திய அரசும் பன்னாட்டு மூலதனக் கம்பெனிகளைத் தொடங்கியுள்ள இந்தியப் பெருமுதலாளிகளும் இலங்கையைக் கருதுகின்றார்கள் என்பதற்குப் பல ஆதாரங்கள் உள்ளன. படைத்தொழில் நுட்பம் சார்ந்த உதவிகளுக்கு அப்பால், இந்தியக் கம்பெனிகள் எண்ணெய் உற்பத்தி மின்சார உற்பத்தி, ஊடக வலைப்பின்னல் களை ஏற்படுத்துதல், கட்டுமானத் தொழில் என இலங்கையில் தொழில் கூட்டுகளைத் தொடங்கியுள்ளன. இலங்கை என்னும் இயற்கை வளம் நிறைந்த குட்டித் தேசத்தை மட்டும் அல்ல; ஆப்கானிசுதான், வங்க தேசம், நேபாளம், மலேசியா, சிங்கப்பூர் போன்ற அண்டை நாடுகளையும், அரபு நாடுகளில் சிலவற்றையும் கூட அப்படி நினைக்கவே செய்கின்றனர் இந்தியாவைத் தாய் நாடாகக் கொண்ட பன்னாட்டு முதலாளிகள் .அந்தப் போக்கைப் பயன் படுத்தித் தமிழ்ப் பெருமுதலாளிகளும் தங்களின் தொழில் வளத்தைப் பெருக்கிக் கொள்ளலாம் என்று சிந்தனையைச் செலுத்தி விடாமல் இலங்கைத் தமிழர்களோடு இந்தியத் தமிழர்களுக்கு உள்ள தொடர்பு தொப்புள் கொடி உறவு எனச் சொல்லத்தக்க உறவு என்பதை இந்திய அரசுக்கு உணர்த்த வேண்டும். இந்தத் தலைமுறைத் தமிழர்களுக்கும் அந்தக் கதையைச் சொல்ல வேண்டும். அது நடக்காத நிலையில் இந்திய அரசு இலங்கைப் பிரச்சினையில் தீவிரக் கவனம் செலுத்தும் எனச் சொல்ல முடியாது. இதுவெல்லாம் நடக்க இன்னொரு கால் நூற்றாண்டுக்காலம் இலங்கைத் தமிழர்கள் காத்திருக்க நேர்ந்தாலும் நேரலாம்.

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.