குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

பேச்சாளர் பதவியிலிருந்து விலகினார் சுமந்திரன் சிறீதரனின் பதவிஆசையால் கூட்டமைப்பு கூட்டத்தில்குழப்பம்

7.10.2020..தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் சுமந்திரன் விலகியுள்ளார். அதே வேளை தனது அணிசார்பில் பேச்சாளர் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனைப் பிரேரித்ததால் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. தமிழினத்தின் கறையான்,அற்பர்,குட்டிச்சாத்தான்.

இன்று நடைபெற்ற கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் அடுத்த பேச்சாளர் தொடர்பாக முடிவெடுக்கப்படும் என ஏற்கனவே அறிவித்தபடியால் கூட்டத்தின் ஆரம்பித்திலேயே நாடாளுமன்ற உறுப்பினர் ஆபிரகாம் மதியாபரணம் சுமந்திரன் கூட்டமைப்பின் பேச்சாளர் பதவியிலிருந்து விலகுவதாக அறிவித்து, கூட்டமைப்பின் பேச்சாளர் பதவிக்கு சிறிதரனை முன்மொழிவதாகத் தெரிவித்தார். அதே வேளை செல்வம் அடைக்கலநாதன் அவர்களே அடுத்த பேச்சாளர் பதவிக்கு தெரிவுசெய்யப்படவேண்டும் என மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்தம் கருணாகரன் தெரிவித்தார். செல்வம் அடைக்கலநாதன் அவர்கள் பேச்சாளராவதைத் தாம் எதிர்ப்பதாக சுமந்திரன், சிறீதரன், சாள்சு நிர்மலநாதன், சாணக்கியன் ஆகியோர் தெரிவித்தனர்.

ஏற்கனவே தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் முடிவெடுத்தன் அடிப்படையில் செல்வம் அடைக்கலநாதனே கூட்டமைப்பின் பேச்சாளராக நியமிக்கப்படவேண்டும் என கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார். ஆயினும் சம்பந்தனின் கருத்தையும் அவமதித்து சுமந்திரன் அணி குழப்பத்தில் ஈடுபட்டதால் கூட்டம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.