குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 19 ம் திகதி வெள்ளிக் கிழமை .

பரபரப்பை கிளப்பிய செவ்வாய் கோளின் புதிய தகவல்.! மார்சு ரேடாரில் சிக்கியது இதுதான்.!

01.10.2020....பூமியைத் தவிர உயிரினங்கள் வாழ்வதற்கு ஏதுவான அம்சங்கள் உள்ள கோள்களை விஞ்ஞானிகள் பல ஆண்டுகளாகத் தேடிக்கொண்டு இருக்கின்றனர் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. செவ்வாய் கோள் இந்த ஆராய்ச்சியின் முக்கிய கோளாக இருந்து வருகிறது. 

செவ்வாய் கோளின் அமைப்புகள், சூழ்நிலைகள் ஆகியவற்றை ஆராயப் பல விதமான செயற்கைக்கோள்கள் அதை நோக்கி பயணம் செய்து கொண்டு இருக்கின்றன. இந்நிலையில் செவ்வாய் கோளின் தென் துருவத்திற்கு அருகில் உள்ள நிலத்துக்கு அடியில் மூன்று ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

மேலும் கடந்த 2018-ம் ஆண்டு ஆய்வு ஒன்றின்போது சுட்டிக்காட்டப்பட்ட நான்காவது ஏரி ஒன்றின் இருப்பையும் விஞ்ஞானிகள் உறுதி செய்துள்ளனர்.

வெளிவந்த தகவலின்படி திரவ நிலையில் நீர் இருப்பது என்பது உயிர்களின் வாழ்க்கைக்கு இன்றியமையாதது, எனவே இந்த கண்டுபிடிப்பானது சூரிய குடும்பத்தில் வேறு எங்கும் வாழ்வதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளனாவா என்று ஆராய்ச்சி செய்து வரும் விஞ்ஞானிகளுக்கு முக்கியத்தும் வாய்ந்தஒன்றாக கருதப்படுகிறது. தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரிகள் அனைத்தும் மிகவும் உப்பத்தன்மை வாய்ந்தவை என்று கருதப்படுவதால், இது நுண்ணுயிரிகளின் உயிர் வாழ்தல் கேள்விகளை ஏழுப்பியுள்ளது, அதாவது மெல்லிய வளி மண்டலம் என்று கூறப்படும் செவ்வாய் கோளின் மேற்பரப்பில் திரவ நிலையில் நீர் இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.

கொஞ்சம் காத்திருங்க: விரைவில் அமேசான் கிரேட் இந்தியன் பெசுடிவல் விற்பனை! ஏரிகள் கண்டுபிடிக்கப்பட்டது எப்படி? அதாவது இந்த சமீபத்தி கண்டுபிடிப்பானது 2003-ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் செவ்வாய் கோளை சுற்றி வரும் ஐரோப்பிய விண்வெளி அமைப்புக்கு சொந்நமான மாசுஎன்ற ஆய்வுகலத்தின் ரேடாரில் உள்ள தரவை கொண்டு மேற்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018-ம் ஆண்டு இதே மார்சு ஆய்வுக்கலத்தின் ரேடாரை கொண்டுதான், செவ்வாய் கோளின் தென்துருவத்தின் நிலப்பரப்புக்கு 1.5கிலோமீட்டர் கீழே சுமார் 20கிலோமீட்டர் அகலமுள்ள ஏரி இருப்பதற்கான அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டறிந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆனாலும் அந்த கண்டுபிடிப்பு 2012 மற்றும் 2015-க்கு இடையில் மாசு ஆய்வுகலன் சேகரித்த 29கணிப்புகளை அடிப்படையாக கொண்டது. ஆனால் தற்போது வெளிவந்துள்ள கண்டுபிடிப்பானது 2010 மற்றும் 2019-க்கு இடையில் சேகரிக்கப்பட்ட 134 ரேடார் குறிப்பகளை கொண்ட மிகப் பெரிய தரவுத்தொகுப்பை ஆய்வு செய்ததன் மூலம் சாத்தியமாகியுள்ளது.அதன்படி 2018-ம் ஆண்டு நாங்கள் மேற்கொண்ட ஆய்வில் கிடைத்த தகவலை உறுதிசெய்தது மட்டுமின்றி, மூன்று பிரகாசமான பகுதிகளையும் நாங்கள் கண்டறிந்துள்ளோம் என இந்த ஆய்வு குழுவை சேர்ந்தவரும் இத்தாலியின் ரோமோ ட்ரோ பல்கலைக்கழகத்தின் பேராசிரியருமான எலெனா பெட்டினெல்லி கூறியுள்ளார். கண்டுபிடிக்கப்பட்டுள்ள ஏரியானது திரவ நிலையில் நீர் கொண்ட சிறிய அமைப்புகளால் சூழப்பட்டுள்ளது.

இருந்தபோதிலும் ரேடாரின் தொழில்நுட்ப பண்புகள் மற்றும் செவ்வாய் கோளின் மேற்பரப்பில் இருந்து அதன் தூரம் காரணமாக அவை ஒன்றோடொன்று இணைந்துள்ளதா என்பதை நாம் உறுதியாக கூறமுடியாது. இதற்குமுன்பு அன்டார்டிகா, கனடா மற்றும் கிரீன்லாந்திலுள்ள பனிப்பாறைகளை கொண்ட ஏரிகளை ஆய்வுசெய்ய பயன்படுத்தப்படும் முறையை தழுவி மார்சு ஆய்வுகலன் திரட்டிய தரவுகளை விஞ்ஞானிகள் பகுப்பாய்யு செய்தனர்.

தற்போது செவ்வாய் கோளில் கண்டறியப்பட்டுள்ள ஏரிகளிலுள்ள பனி உருகுவதற்கு தேவையான வெப்பம் கிடைக்காததால் அங்கு காணப்படும் நீர் உப்புகளின் அதிக செறிவுகளை கொண்டிருக்க வேண்டும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். இந்த தரவுகளை வைத்து பார்க்கும்போது செவ்வாய் கோளில் உயிர்கள் வாழ முடியமா என்பது அங்கு உள்ள நீர் ஆதாரங்கள் எவ்வளவு உப்புத்தன்மை கொண்டவை என்பதைப் பொறுத்தே அமையும் என்றும் விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்.

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.