குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 27 ம் திகதி செவ்வாய் கிழமை .

கல்வி: மாநிலப்பட்டியலே தீர்வு ! மாநிலங்களுக்குரியது....அ.இராமசாமி பேராசிரியர்.

24.09.2020....கல்வி மாநிலப்பட்டியலில் இருக்கவேண்டும் எனச் சொல்வதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. முதன்மையான காரணமாக இருப்பது  மாணாக்கர்களை மையமிட்டதாகக் கல்வி அமைய வேண்டும் என்பதே. ஆசிரியர்கள் நலம், சம்பளவிகிதம் போன்றனவற்றை யெல்லாம் சிந்திப்பது கல்விபற்றிய சிந்தனை அல்ல.  பல்வேறு பண்பாட்டு நிலவியல் பின்னணிகளையும் பலமொழிகளையும் கொண்ட ஒரு நாட்டில் ஒற்றைக் கலைத்திட்டம் இருப்பது தேசிய இனங்களின் மீது அதிகாரம் செலுத்தும் வன்முறைத்தன்மையே. மாணாக்கர்களுக்கு என்னென்ன கலைத்திட்டம், பாடத்திட்டம், பயிற்றுமுறை இருக்க வேண்டுமென்பதை மாநில அரசின் அமைப்புகளே முடிவுசெய்யவேண்டும். அப்படி முடிவுசெய்யும் அமைப்புகள் பின்வரும் நிலைப்பாடுடன் சிந்திக்கவேண்டும்.

அறிவியல் புலங்களில் உலகத்தரமும் உள்ளூர் அறிவியல் பார்வையும் கலந்த விமரிசனப் பார்வையையை உருவாக்கவேண்டும்.

சமூக அறிவியலில் தேசிய, மாநிலபார்வையைக் கொண்டிருப்பதோடு சமூகத்தின் பிளவுகளை உணர்ந்து, உள்வாங்கும் மனநிலையையும் ஏற்பு மனநிலையையும் உண்டாக்கும் நோக்கத்தைக் கொண்டிருக்கவேண்டும்.

மொழிப்புலக்கல்வியில் வட்டாரத்தில் தொடங்கி, மாநில, தேச, சர்வதேச எல்லைகளுக்குள் நகரவேண்டுமெ்றும். அவரவர் மொழியில் கற்பதை உலகத்திற்குச் சொல்லப் பயன்படும் இன்னொரு மொழியைக் கற்பதை உறுதிசெய்யவேண்டும். மொழியின் வழியாகப் பலசமூகங்களையும் கலை இலக்கியங்களையும் அறிய விரும்புகிறவர்கள் கூடுதல் மொழிகளைக் கற்றுக்கொள்ள வாய்ப்புகளை ஆங்காங்கே உருவாக்கவேண்டும். எல்லாரும் அதிகமான மொழிகளைக் கற்றுக்கொள்ள வேண்டுமெனக் கட்டாயப்படுத்தக்கூடாது. இதற்கு மையப்படுத்தப்பட்ட ஒற்றைக் கல்வித்திட்டமும் தேர்வுமுறையும் தடையாக இருக்கும் என நம்புகிறேன். அதனால் தான் மாநிலப்பட்டியலுக்குக் கல்வியைக் கொண்டுவரவேண்டுமெனச் சொல்கிறோம்.

உலகின் பல்வேறு போக்குகளை நமது மொழிக்குள் கொண்டுவருவதற்காகப் பல்வேறு மொழிகளைக் கற்றுத்தரும் சிறப்பு நிறுவனங்களை ஏற்படுத்தலாம். அதேபோல் அறிவியல், சமூக அறிவியல் புலங்களில் உச்சநிலை அறிவைக் கொண்டுவரும் உயர்நிறுவனங்களை உருவாக்குவதும் தவிர்க்கமுடியாதது.

மாநிலத்துக்குள்ளேயேகூட வெவ்வேறு பல்கலைக் கழகங்களுக்கு இருக்கும் தன்னாட்சி உரிமைகளைப் போலப் பள்ளிக்கல்விக்கும் மாவட்ட வாரியான கல்வி வாரியங்கள் உண்டாக்க முடிந்தால் கல்வியின் தரமும் கற்றலில் வளர்ச்சியும் விரைவுபடுத்தப்படும் என்பதை மறுக்கமுடியாது

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.