குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 28 ம் திகதி வியாழக் கிழமை .

பழந்தமிழ் எழுத்துகள்.

22.09.2020....கீழடியில் கண்ட பொருள்களில் என்னை கவர்ந்தது சிந்துவெளி எழுத்துகள்தான். மற்ற எல்லாம் எனக்கு வியப்பை தரவில்லை. கீழடி ஆய்வின் நாலாங்கட்ட ஆய்வின் மிக உயர்ந்த காணல் என்றால், தமிழி எழுத்துகளும், சிந்துவெளி எழுத்துகளும் ஒரே இடத்தில் பெறப்பட்டதுதான்.

படிக்கப்படாமல் (Un-deciphered) கிடக்கும் சிந்துவெளி எழுத்துகளுடனான உறவினை ஆய்வு செய்ய கீழடியை உலகம் இனி உற்று நோக்கும். ஆனால், சிந்துவெளி எழுத்துகள், சிந்துவெளியைத்தாண்டி, கீழடியில்தான் கிடைத்திருக்கிறதா என்றால், இல்லை என்பதே விடையாக அமைகிறது.

கீழடிக்கும் சிந்துவெளிக்கும் இடையேயான தொலைவு 2500 கி.மீ. ஆனால், கீழடியிலிருந்து கிழக்காக போனாலும், மேற்காக போனாலும், ஏறத்தாழ 16,000 கி.மீக்கும் அதிக தொலைவில் இருக்கும், ஈசுடர் தீவில் (Ester Island) சிந்துவெளி எழுத்துகள் பொ.பி 19 ஆம் நூற்றாண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டிருக்கின்றன. ஒன்றல்ல, சுமார் 100 எழுத்துகள், சிந்துவெளி படவெழுத்துகளை ஒத்திருக்கின்றன.

ஈசுடர் தீவின் எழுத்துகளுக்கு உரொங்கொரொங்கோ (Rongorongo) என்று பெயர். ஈசுடர் தீவு, பல்நேய தீவுகளில் (Polynesia) ஒன்று. இந்திய துணைக்கண்டத்தின் தென்கோடியில் இருந்து 16000+ கி.மீ தொலைவிற்கு சிந்துவெளி எழுத்துகள் எப்படிப்போயின என்பது இன்னும் அவிழ்க்கப்படாத புதிர்.

இந்திய துணைக்கண்டத்திற்குள் 2500 கி.மீ தொலைவில் சிந்துவெளி எழுத்துகள் காணப்பட்டிருப்பது பெரிய வியப்பாக, கீழடி ஆய்வில் தென்பட்டாலும், அவை எப்படி பசிபிக்கடலில் உள்ள ஈசுடர்தீவின் உரொங்கொரொங்கோ எழுத்தோடு காணப்படுகிறது என்ற கண்டறிந்தால்தான், தமிழி, சிந்துவெளி எழுத்து என்ற இரண்டின் சரியான பரிணாமமும் விளங்கும்.

பொ.மு 3000ல் இருந்து நடைபெற்ற ஆத்திரேனிய புலப்பெயர்வும் (Austranesia Migration), ஆத்திரேலிய பழங்குடிகளின் தமிழகத்தொடர்பும், ஆத்திரேலிய பழங்குடிகளின் எலும்புகள் தமிழகத்தில் கிடைத்திருக்கக்கூடிய சூழல்களும் ஒன்றோடு ஒன்று தொடர்பாக ஆயப்படவேண்டியதாகும்.

மேலும், உலகம் இன்னும் உடைக்காமல் வைத்திருக்கும் எழுத்துகளில், அல்லது உடைக்கமுடியாமல் தடுமாறுகின்ற எழுத்துகளில் இன்னொரு முக்கியமான எழுத்து பொனீசியாவின் பிபிலோசில் பெறப்பட்ட கல்வெட்டு. அதிலும், தமிழி எழுத்துகளையும், சிந்துவெளி எழுத்துகளையும் ஒத்த வரிவடிவமுடைய எழுத்துகள் காணப்படுகின்றன. இந்த பிபிலோசின் கல்வெட்டானது பொ.மு 3000-2500 ஐ சேர்ந்தது. சிந்துவெளிக்காலமும் பொ.மு.2500-1500 ஐ சேர்ந்தது.

((மேலும், படிக்கப்படாத இன்னொரு எழுத்து இலாமித்து. இதுவும் சிந்துவெளியின் சமகால எழுத்து. வரிவடிவம் வேறுபட்டாலும் மொழியமைப்பில் தென்தமிழ் மொழிக்குடும்பத்தை ஒத்தது என்றும் 25% வினைச்சொற்கள் தமிழ்மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை என்றும் ஆய்வுகள் உண்டு))

பொ.மு 3000ல் பிபிலோசில் தமிழி வரிவடிவமே காணப்படுகிறதென்றால், அது இன்னும் உடைக்கப்படாமல் இருக்கிறதென்றால், அந்தக்கல்வெட்டைப்பற்றிய முடிவு அறியப்படாமல் இருக்கிறதென்றால், அதொடு, கீழடியைப்போல சிந்துவெளி வரிவடிவமும் காணப்படுகிறதென்றால், சிந்துவெளி எழுத்துகளுக்கு பிந்தியது தமிழி எழுத்து என்றும், சிந்துவெளி விட்ட இடமும், சங்க இலக்கியம் தொட்ட இடமும் ஒன்று என்று நாம் பேசிக்கொண்டிருப்பதும் எதிர்காலத்தில் தவறாக போகக்கூடிய வாய்ப்புண்டு அல்லவா?

பாலகிருட்டிணன் (இ.ஆ.ப) போன்றோர் சிந்துவெளியில் இருந்து தமிழர் வந்தனர் என்று சொல்லிவரும் ஆராய்ச்சியில்லாத பரப்புரைகளும், சிந்துவெளியின் பட எழுத்துகளில் இருந்து தமிழி வரிவடிவம் தமிழர்களிடம் வந்தது என்ற  கருத்தியலும் வருங்காலத்தில் தவறாக போகக்கூடிய வாய்ப்புகளும் உண்டல்லவா?!

எகிப்தின் ஈரோகிளிப்பை விட்டுத்தள்ளினாலும், இன்னும் படிக்கப்படாமல் விடைதெரியாமல் இருக்கும் சிந்துவெளி படவெழுத்துகள், பொனீசியாவின் பிபிலோசு எழுத்துகள், உரொங்கோரொங்கோ என்கிற ஈசுடர் தீவின் எழுத்துகள் ஆகிய மூன்றையும் இணைக்கக்கூடிய, வரிக்கக்கூடிய கண்டுபிடிப்பாக கீழடி சிந்துவெளி எழுத்துகள் அமைந்திருப்பது ஆய்வுலகிற்கு ஆகப்பெரிய மகிழ்ச்சியும் விடிவும் ஏற்படுத்துகின்ற கண்டுபிடிப்பாகும்.

கீழடி ஆய்வுகள் தொடங்கியபோது சலசலப்புகள் ஏற்பட்டன. தில்லியை நோக்கி விரல்கள் நீண்டுகொண்டிருந்தன. எனக்கெல்லாம் எரிச்சல்தான். மண்ணையும் அதை ஆயக்கூடிய தொல்லியல் துறையையும் தமிழ்நாட்டில் வைத்துக்கொண்டு தில்லியை எதிர்பார்த்து தமிழகம் சோம்பிக்கிடக்கிறதே என்ற சினம் இருந்ததுண்டு. பதிவுகள் எழுதியதும் உண்டு. தமிழகத்தொல்லியல் துறை, வெறுமே ஒன்றிய அரசின் தொல்லியல் ஆய்வின் அஞ்சல் துறையாக இருக்கிறதே என்று வருந்திய காலம் இருந்ததுண்டு.

இன்று, கீழடியை தமிழக தொல்லியற்றுறை கையில் எடுத்து மிகச்சிறப்பான ஆய்வினை செய்தது மனதிற்கு இதமளிக்கிறது. ஆதிச்சநல்லூரை ஆய்வு செய்த ஒன்றிய தொல்லியல் துறையினர், அறிக்கை வெளியிட 16 ஆண்டுகள் ஆனது. நீதிமன்றமே கேள்வியெழுப்பியது.

கீழடியின் நான்காம் கட்ட ஆய்வை, செம்மையாக செய்து, அதன் ஆய்வறிக்கையையும் உடனே வெளியிட்டு, தமிழக தொல்லியற்றுறையை மிக உயர்ந்த இடத்திற்கு எடுத்துச்சென்றிருக்கிறார் அதன் ஆணையர் திரு.உதயச்சந்திரன் இ.ஆ.ப. அவருக்கு பாராட்டுகள். அமைச்சர் பாண்டியராசனும் அதற்கு துணையாக இருந்திருக்கிறார் என்று படித்தேன். அவருக்கும் தமிழக அரசுக்கும் பாராட்டுகள். வளர்க தமிழக தொல்லியல் துறை.

(குறிப்பு: செய்திகளும் படங்களும்,  தமிழியில் இருந்து உரோமன் பெற்றிருக்கக்கூடிய வரிவடிவ வாய்ப்பு பற்றிய எனது 2013 ஆய்வுக்கட்டுரையில் இருந்து எடுத்தவை)

அன்புடன்

நாக.இளங்கோவன்

220919

#கீழடி #keeladi #tamilnadu #tamil

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.