குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

திருக்குறளை சீன மொழியில் வெளியிடும் தமிழகஅரசு… சர்ச்சை ஏ.ரி.எசு.பாண்டியன்.

20.09.2020.....சென்னை:உலக பொதுமறையாக கருதப்படும், திருக்குறளை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில்,  உலகின் பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு  வெளியிடப்பட்டு வருகிறது.தற்போது, இந்தியா சீனா பிரச்சினைகளுக்கு இடையே,  திருக்குறளை சீன மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடும் பணியை தமிழகஅரசு தீவிரப்படுத்தி வருகிறது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ்மொழியை உலகறிய செய்ய,  இரண்டு உலகத் தமிழ் மாநாடுகளை நடத்தி உள்ளது அதிமுக அரசு, மதுரையில்,  ஆயிரம் ஏக்கரில் தமிழ்ப் பல்கலைக்கழகமும் அமைத்து, தமிழ் மொழி வளர்ச்சிக்கு பங்காற்றி வருகிறது.

மதுரை உலக தமிழ்ச் சங்கத்தை கட்டிக்கொடுத்து, திருவள்ளுவர் பெயரில் விருது அறிவித்த, திருவள்ளுவர் பெயரில் ஒரு பல்கலைக்கழகத்தையும் நிறுவி மொழி வளர்ச்சிக்கு உதவி செய்து வருகிறது.

இந்த தமிழ்ப் பல்கலைழகம் முழுவதும், திருக்குறளை உலக மொழிகளில் மொழிபெயர்த்து வெளியிடும் பணி நடைபெற்று வருகிறது. சமீபத்தில், அரபு மொழியில் திருக்குறளை மொழி பெயர்த்து வெளியிட்டுள்ளது. இந்த நிலையில்,  தற்போது திருக்குறளை சீன மொழியிலும் மொழி பெயர்ப்பு செய்து வெளியிடும் பணியை செய்து வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இது உலக மக்கள் அனைவருக்கும், எந்தக் காலத்திற்கும், பொருந்தும் வகையில் அமைந்தமை யால், திருக்குறுள் இது உலகப் பொதுமறை என அழைக்கப்படுகிறது.

இதுவரை  உலகிலேயே அதிக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள நூல்களில் மூன்றாம் இடத்தைத் திருக்குறள் வகிக்கிறது. 18இந்திய மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ள திருக்குறள்,  இதுவரை 107க்கும் மேற்பட்ட உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.

திருக்குறளுக்கு மு. வரதராசன், மு. கருணா நிதி, சாலமன் பாப்பையா உட்பட பல தமிழ் அறிஞர்கள் அவர்களுக்கு உரிய பாணியில்  விளக்க உரைகளை எழுதியுள்ளனர். இவற்றுள் சிறப்பாகக் கருதப்படுவது டாக்டர் மு.வரதராசனார் அவர்களது நூலாகும்.

ஏற்கனவே மறைந்த குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் முயற்சியில், சீனாவின் மான்ட்ரின் மொழியில், திருக்குறள் மொழி பெயர்க்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதற்கு மறைந்த தமிழக முதல்வர் ஜெ. ஜெயலலிதா ரூ.41.70 லட்சம் நிதி ஒதுக்கி, தமிழ் பல்கலைக்கழகத்தின் வாயிலாக திருக்குறளை சீன மொழியில் மொழிப் பெயர்த்து புத்தகமாக வெளியிட 2012-ம் ஆண்டு உத்தரவிட்டார். இந்த சீன மொழி பெயர்ப்புப் பணியும் சீனா கவிஞர் யூசியிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதியில் 2014-ல் அச்சுப் பணிகள் நிறைவடைந்து புத்தக வடிவில் வெளியிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

கார்ட்டூன் கேலரி

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.