குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, பங்குனி(மீனம்) 29 ம் திகதி வெள்ளிக் கிழமை .

தமிழர்_வணிக_மீட்பு !

18.09.2020..... பண்டம் மாற்று காலம் முதல், பங்கு சந்தை காலம் வரை, வணிகத்தில் கொடி கட்டி பறந்த குடி தமிழ்குடி! கடல் தோறும் தமிழர் கலங்கள்! துறைத் தோறும் தமிழ் வணிக தடங்கள்! தொன்று தொட்டு துலங்கும், வாகை வரலாறே ' தமிழர் வணிகம்'! உலகில் தமிழன் வாழாத நாடில்லை.. ஆனால் இன்றோ தமிழ கமோ பணியாக்களிடம் அடிமைகளாக இருக்கும் நிலையில் இருக்கிறோம். விதை நெல் கூட தமிழனிடம் இல்லை.

விவசாயி கையேந்தி நிற்கிறார். பட்டு முதல் பஞ்சு வரை பணியாக்களிடம் வாங்கி துணி நெய்கிறார்கள் நெசவார்கள். இப்படி அடுக்கி கொண்டே போகலாம். தொழில் வணிக வளாகம் முதல் கோவில் வரை அவர்கள் வசம் சென்று கொண்டு இருக்கிறது. அனைத்தும் அயலான் கரங்களில் இருக்கிறது. கங்கை நதிபுறத்து கோதுமை பண்டம், காவேரி வெற்றிலைக்கு மாறுகொள் வோம் என சொன்னான் பாரதி, கோதுமை வடக்கில் இருந்து வந்துவிட்டது கொடுக்கத்தான் நம்மிடம் வெற்றிலை இல்லை, வெற்றிலை கொடுக்க காவேரியே இல்லை.. வணிக வேர் அறுந்து நிற்கிறோம்... ஒரு இனத் தின் வளர்ச்சி என்பது கல்வி மட்டும் அல்ல பொருளா தாரமும் சேர்ந்தது தான். தமிழர்கள் உலகில் தலை நிமிர் ந்து நிற்க கல்வி மட்டும் போதாது; தமிழர்கள் பொருளா தாரத்திலும் தனித்து செழித்து இருக்க வேண்டும். இன் றைய உலகமயமாக்கல் நிலையில் யார் முதலாளிகள் என்ற முகவரிகள் மறைக்கப்படுகிறது. நமது வளங்கள் பிற நாடுகளால் சூறையாட படுகிறது அதற்காக கொடு க்கும் பணமும் தமிழகத்துக்கு வராமல் ஒற்றை வரியால் இந்தியாவின் கஜானாவுக்கே செல்கிறது: அக்கவுண்டில் அரிசி தந்த அண்ணாச்சிகளை அம்பானிகளும் பிக் பசார்கள் விழுங்கி நிற்கிறது. நம் அன்னைக்கு தாலி செய்து தந்த பத்தர் கடைகளை ஆலுக்காசுகள் அழித்து நிற்கிறது. பெரும் கடைகளில் கைகூப்பி வணக்கம் சொல்லும் இடங்களில் நிற்பது நம் அண்ணாச்சிகளும் பத்தர்களுமே.. நாமும் பகட்டாக நிற்கும் கடைகளை நம்பி நாகரீகம் என்ற வலையில் விழுகிறோம். இதற்கான முடிவை தீர்வை நாம் யோசிக்க வேண்டும்: படித்த தமிழன் யாருக்கோ உழைக்கிறான்; அதில் வரும் ஊதியத் தையும் யாரிடமோ இழக்கிறான். இதனை நாம் நினைத் தால் சிறிதளவேனும் மாற்ற முடியும்: எப்படி மாற்ற முடியும்? தமிழர் பொருட்களை தமிழர்கள் வாங்க வேண்டும். அப்படி வாங்கினால் தமிழர்களின் பொருளா தாரம் தானாக உயரும். தமிழ் வணிகர்களுக்கு நாம் வாழ்வு கொடுக்க வேண்டும்; ஊருதோறும்  தமிழர்  அங்காடி.கள் அமைப்பது; தமிழர் அங்காடி பொருட்களை அமேசான் போன்று வீடு தேடி வரும் படி செய்வது போன்றவற்றை செய்து தமிழ் வணிகர்களை மேம்பட செய்யவேண்டும். கர்நாடக நெல்லும்.. ஆந்திர முட்டையும் நமக்கு அடையாளம் தெரியாது ஆனால் விளையும் இடத்திலே நெல்லை விற்பது: கோழிப் பண்ணையிலே முட்டை கோழி விற்பது போன்ற நேரடி வணிகத்தை நாம் உருவாக்கினால். தமிழர்களின் வருமானம் பெருகும். Made In Tamilnadu என்ற முத்திரையை தமிழர் பொருட்களில் பதித்து. தமிழர் பொருட்கள் அடையாள படுத்த வேண்டும். அது தமிழர் வணிகத்தை சுலபமாக அடையாளப் படுத்தும். தமிழர் பொருட்களை மட்டும் தான் தமிழர்கள் வாங்க வேண்டும் என்பதல்ல இதன் நோக்கம்.. மாறாக TATA, RELIANCE, ITC பதஞ்சலி போன்ற கார்பொரேட் பொருட்களுக்கு பதிலாக தமிழர் பொருட்களை தமிழர் வாங்கலாம். இது இனவெறி தத்துவம் அல்ல; கதர் ஆடையை தான் உடுத்தவேண்டும் என்று சொன்ன காந்தியின் தத்துவமும்; காலால் முத்தி ரை உணவை வாங்கும் இசுலாமியர்களின் தத்துவதுடன் இணைத்து பார்த்தான் இதனை புரிந்துகொள்ள முடியும். வளர்ந்த நாடான அமெரிக்காவே "Buy American! Hire American!" கொள்கை திட்டமாகவே வைத்திருக்கிறது. மேலும் அமெரிக்காவிலேயே கார்பொரேட் நிறுவனங் களுக்கு எதிராக "Buy Local ! Support Local Farmers" போன்று சிறு விவசாயிகளுக்கு ஆதரவான குரல் ஒழிக்க ஆரம் பித்திருக்கிறது. உலக தரம் வாய்ந்த பொருட்களை நம்மால் தயாரிக்க முடியும், அதுவே நமது அடையாளமாக மாறும். கரங்கள் கோர்த்து சிகரம் தொடுவோம். இவண் இங்கர்சால்

 

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.