குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2055

இன்று 2024, சித்திரை(மேழம்) 18 ம் திகதி வியாழக் கிழமை .

இரசியாவின் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வருகிறது - உலகளவில் தீயநுண்மியின் (கொரோனா) தொற்றுக்களில் இந்தியா

2 ஆம் இடம் 07.09.2020 இத்தாலியில் கோவிட் -19 புதிய தொற்றுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் ஐ.சி.யூ சேர்க்கை அதிகரிக்கலாம் ! சு(ஸ்)புட்னிக் 5 என்று பெயரிடப் பட்டுள்ள கொரோனா தடுப்பு மருந்தைத் தயாரித்துள்ள நாடான இரசியா இதன் அனைத்துக் கட்ட முக்கிய சோதனைகளும் நிறைவுற்ற நிலையில், இந்த வாரம் பொது மக்கள் பயன்பாட்டுக்கு உலகின் முதல் நாடாக இதனை அறிமுகப் படுத்தும் என்று தெரிய வருகின்றது.

இரசிய அரசின் நேரடி முதலீட்டின் கீழ் அந்நாட்டு தொற்று நோய்த் தடுப்பு நுண்ணறிவியல் ஆய்வு நிறுவனம் இந்தத் தடுப்பு மருந்தை உருவாக்கியிருந்தது.

இதேவேளை அவுசுதிரேலியாவில் உரிய கொரோனா தடுப்பு மருந்து ஒன்று பயன்பாட்டுக்கு வரும் நிலையில் அனுமதி அளிக்கப் பட்டால், 2021 ஆமாண்டு இந்தத் தடுப்பு மருந்தைப் பொது மக்களுக்கு இலவசமாக வழங்க ஒப்பந்தங்கள் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டுப் பிரதமர் ஸ்காட் மாரிசன் தெரிவித்துள்ளார். இந்தத் தடுப்பு மருந்துக்கான கணிக்கப் பட்டுள்ள விலை 1.24 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற போதும், இத்தடுப்பு மருந்து உறுதியாக அடுத்த வருட ஆரம்பத்தில் கிடைக்கும் என இப்போதே கூற முடியாது என்றும் அவர் தெரிவித்தார்.

ஆனால் தமது மருத்துவ நிபுணர்கள் அனுமதியளிக்கக் கூடிய ஒரு தடுப்பு மருந்து தயாரானால் சனவரியில் சுமார் 25 மில்லியன் அவுசதிரேலிய மக்கள் இந்தத் தடுப்பு மருந்தைப் பெறுவர் என்றும் சு)காட் மாரிசன் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது

Worldometer இணையத் தளத்தின் சமீபத்திய கொரோனா புள்ளி விபரம் :

உலகளாவிய அடிப்படையில்,

மொத்த தொற்றுக்கள் : 27 306 460

மொத்த இறப்புக்கள் : 887 681

குணமடைந்தவர்கள் : 19 381 889

ஆக்டிவ் தொற்றுக்கள் : 7 036 890

மோசமான நிலையில் உள்ளவர்கள் : 59 993

நாடளாவிய புள்ளிவிபரம் :

அமெரிக்கா : மொத்த தொற்றுக்கள் : 6 460 421 : மொத்த இறப்புக்கள் : 193 253

இந்தியா : 4 208 645 : 71 711

பிரேசில் : 4 137 606 : 126 686

இரசியா : 1 030 690 : 17 871

பெரு : 689 977 : 29 838

கொலம்பியா : 666 521 : 21 412

தென்னாப்பிரிக்கா : 638 517 : 14 889

மெக்சிக்கோ : 634 023 : 67 558

சு(ஸ்)பெயின் : 517 133 : 29 418

ஆர்யெண்டினா : 478 792 : 9859

சிலி : 422 510 : 11 592

ஈரான் : 386 658 : 22 293

பிரிட்டன் : 347 152 : 41 551

பங்களாதேச் : 325 157 : 4479

பிரான்சு : 324 777 : 30 724

சவுதி அரேபியா : 320 688 : 4081

பாகிசுதான் : 298 903 : 63345

துருக்கி : 279 806 : 6673

இத்தாலி : 277 634 : 35 541

யேர்மனி : 251 724 : 9401

கனடா : 131 895 : 9145

சீனா : 85 134 : 4634

சுவிட்சர்லாந்து : 44 401 : 2013

இலங்கை : 3123 : 12


இன்றைய புள்ளிவிபரப்படி உலகளவில் மொத்தத் தொற்றுக்கள் 2 கோடியே 73 இலட்சத்து 6 ஆயிரத்துக்கும் அதிகமாகவும், மொத்த இறப்புக்கள் 8 இலட்சத்து 87 ஆயிரத்துக்கும் அதிகமாகவும் உள்ளன. 42 இலட்சத்து 8 ஆயிரத்துக்கும் அதிகமான தொற்றுக்களுடன் இந்தியா பிரேசிலை முந்தி உலகளவில் 2 ஆவது அதிக கொரோனா தொற்றுக்கள் உடைய நாடாக மாறியுள்ளது. மேலும் உலகளவில் தற்போது தினசரி தொற்றுக்கள் மிக அதிகளவில் உள்ள நாடும் இந்தியாவாகும்.


கொரோனா பெரும் தொற்று உங்களை அணுகாது இருக்க நீங்கள் பின்பற்ற வேண்டிய அடிப்படைப் பழக்க வழக்கங்கள் குறித்து அறியப் பின்வரும் இணைப்பைப் பின்பற்றுங்கள்..


உலக சுகாதாரத் திணைக்களத்தின் கோவிட்-19 தொடர்பான சில சந்தேகங்களும் விளக்கமும்! (பகுதி 5)

 

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

 

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

 
முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.