குமரிநாடு.நெற்

தமிழை அறிவோம்..தமிழரை அறிவோம்..பழமைமிக்க தமிழ்ப்பண்பாட்டை அறிவோம்..

திருவள்ளுவர் ஆண்டு - 2051

இன்று 2020, ஐப்பசி(துலை) 1 ம் திகதி வியாழக் கிழமை .

கிழக்கை மையப்படுத்திய அரசியல் நகர்வு என்பது தெற்க்கைச்சார்ந்ததாக இருக்கிறது! தனித்தன்மை, தன்னாதிக்க

இழப்பு!! 25.08.2020.....‘’மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத் திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை”இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர். சு(ஸ்)டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின் ஆலோசகர் அல்லது பிள்ளையானுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒருவர். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாய் நிலத்தின் அரசியலில் அதிகமாக ஈடுபடும் ஒருவர்.

தேர்தலுக்கு முதல் நாள் மேற்படி குறிப்பை முகநூலில் எழுதினார். இங்கு அவர் யாழ் மேலாதிக்கம் என்று கருதுவது எதனை? கூட்டமைப்பையா? அல்லது மாற்று அணியையா? அல்லது  ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதத்தையா?

கூட்டமைப்பை அவர் யாழ் மேலாதிக்க வாதத்தின் பிரதிநிதியாக பார்ப்பதாக இருந்தால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் கிழக்கை சேர்ந்த சம்பந்தரே என்பதனை ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? பொதுவாக ஈழத் தமிழ்த் தலைமைத்துவம் எனப்படுவது யாழ் மையமானது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கள் இருந்தன. எனினும் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு நூதனமான புறநடையாக சம்பந்தர் தலைவராக இருந்து வருகிறார். அது ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான்.இவ்வாறு ஒரு கிழக்குத்  தலைவரே தமிழ் பிரதிநிதித்துவத்தின் தலைவராக இருக்கும் ஒரு பின்னணியில் யாழ் மேலாதிக்கம் என்று பிள்ளையானுக்கு நெருக்கமான ஒருவர் கருதுவது எதனை?

அல்லது மாற்று அணியை அவர் அவ்வாறு கூறுகிறாரா? இல்லையே அவர்கள்  யாழ்ப்பாணத்தில் தான் பலமாக இருக்கிறார்கள். வன்னி யில்கூட அவர்கள் கடந்த தேர்தலில் ஆசனம் எதையும் வெல்லவில்லை. இப்படிப் பார்த்தால் கிழக்கில் பலமற்ற மாற்று அணி யாழ் மேலாதிக்க வாதத்தை கிழக்கின் மீது திணிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியும் இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தையும் யாழ் மேலாதிக்க சிந்தனையாக அவர் கருத்துகிறாரா? இக்கேள்விகளுக்கான பதிலை அவர்தான் கூற வேண்டும். ஆனால் பிள்ளையானின் எழுச்சியை கிழக்கின் எழுச்சியாக வர்ணித்து அதை யாழ் மேலாதிக்க வாதத்துக்கு எதிராகத் திருப்புவதை எப்படி விளங்கிக் கொள்வது?

கிழக்கில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் கருணாவுக்கும் இயக்கத் தலைமைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்ட பொழுது அது தொடர்பான விசாரணைகளுக்கு என்று ஒரு மூத்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கிழக்கிற்கு அனுப்பப்பட்டார். இவர் கிழக்கில் ஏற்கெனவே பொறுப்புகளை வகித்தவர். தனது விசயத்தின் முடிவில் இவர் தன்னோடு பேசிய ஒரு ஊடகவியலாளரிடம் பின்வருமாறு சொன்னார் “ஒரு கருணா இல்லை 100 கருணாக்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் சமாதான காலத்தில் நாங்கள் கிழக்கை போதிய அளவுக்கு அபிவிருத்தி செய்யவில்லை. வடக்கில் சேரன் சோழன் பாண்டியன் என்று கடைகளை போட்ட அளவிற்கு கிழக்கை நாங்கள் கவனிக்கவில்லை. கிழக்கில் போதிய அளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவில்லை” என்று. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு 11 ஆண்டுகளின் பின்னரும்  கிழக்கில் நிலைமை அப்படித்தான் இருக்கிறதா?

அவ்வாறு கிழக்கு அபிவிருத்தி செய்யப்படாத ஒரு பின்னணியில் அபிவிருத்தியை தமது அரசியல் இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கும் கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றனவா? நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதைத்தான் நிரூபிக்கின்றனவா?

கிழக்கின் மீது வடக்கின் மேலாதிக்கத்தை அது எந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இக்கட்டுரை எதிர்க்கின்றது. ஆனால் தமிழ் தேசியம் எனப்படுவது ஒரு வடக்கு மைய சிந்தனை என்பதனையும் அது வடக்கு மையத்திலிருந்து தான் கிழக்கைப் பார்க்கிறது என்பதையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்குவது. பொதுவாக ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் திரள் ஆக்குவ துண்டு. இனம்;  மொழி;நிலம்   பொதுப் பண்பாடு; பொதுப் பொருளாதாரம் இவைதவிர அடக்குமுறை போன்றனவும் ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்கும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் நிலம் அதாவது தாயகம் இது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரள் ஆக்கும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தாயகம் எனப்படுவது வடக்கு கிழக்கு இணைந்த வரலாற்று தொடர்ச்சி மிக்க ஒரு நிலப்பரப்பு. எனவே ஈழத்தமிழர்கள் தாயகம் என்று கூறும்பொழுது அது பிரயோகத்தில் வடக்கு கிழக்கு இணைப்பையே குறிக்கிறது.

கடந்த பதினோரு ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழான தமிழ் மிதவாத அரசியலானது கிழக்கில் அபிவிருத்தி அரசியலையும் உரிமை சார் அரசியலையும் சமாந்தரமாக வெற்றிகரமாக முன்னெடுக்க தவறிவிட்டதாக கிழக்கை சேர்ந்த ஒரு பகுதி ஊடகவியலாளர்களும் அறிவாளிகளும் குற்றம்சாட்டுகிறார்கள். பிபிசி தமிழோசையில் வேலை செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த சீவகன் அண்மைக் காலங்களாக தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் குறிப்புகளைத்  தொகுத்து பார்த்தால் அது தெரிய வரும்.

கிழக்கில் மட்டுமல்ல வடக்கில் குறிப்பாக போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியிலும் போதிய அளவிற்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால் கிழக்கின் நிலைமை கொடுமையாக உள்ளது என்பதே உண்மை. அதிலும் குறிப்பாக முசுலிம்களின் வாழ்க்கை தரத்துடனும் அவர்களுடைய பட்டினங்களின்  செழிப்போடும் ஒப்பிடுகையில் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமை பயங்கரமானது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அபிவிருத்தி மைய அரசியலை நோக்கிப்  போக வேண்டும் என்ற கோரிக்கைகள் கிழக்கில் வலிமையடைந்து வருகின்றன. இது முதலாவது.

இரண்டாவது வடக்கில் இல்லாத மற்றொரு அம்சம். கிழக்கில் தமிழ் முசுலிம் உறவை பொறுத்தவரை இருதரப்பு சந்தேகங்களும் பயங்களும் உண்டு. இந்த அச்சங்களைப்  போக்கும் விதத்தில் தமிழ் அரசியல்வாதிகளிடமோ அல்லது சிவில் சமூகங்களிடமோ அல்லது ஊடகவியலார்களிடமோ பொருத்தமான தரிசனங்களோ திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்னணிக்குள் தனக்கு எதிராக போராடும் பெரிய சிறுபான்மைக்கு எதிராக சிறிய சிறுபான்மையின் ஒரு பகுதியினரை திருப்பி விடுவதில் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் வெற்றியைப் பெற்று விட்டன. கிழக்கில் தமிழ் முசுலிம் சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு மிக்க அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலம் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அங்கே இன முரண்பாடுகளை வெற்றிகரமாகக் கையாண்டு வந்துள்ளன,

இதில் ஆகப் பிந்திய உதாரணம்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலர் விவகாரம். இதுபோன்ற பல விடயங்களிலும் கூட்டமைப்பு கிழக்கு மக்களின் உணர்வுகளை அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. கடந்த தேர்தலில் கிழக்கில் கூட்டமைப்புக்கு கிடைத்த தோல்வி என்பது அதன் விளைவா?

குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு முசுலீம் தரப்புக்கு அதிகமாக விட்டுக் கொடுத்தது. மாகாண சபையை ஆளத்  தேவையான பெரும்பான்மை இருக்கத்தக்கதாக ஆட்சிப் பொறுப்பை முசுலிம்களுக்கு வழங்கியது. அதுமட்டுமல்ல வடமாகாண சபையில் ஒரே நியமன ஆசனத்தையும் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கியது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களின் பயங்களையும் சந்தேகங்களையும் நீக்கலாம் என்று முயற்சித்தது. எப்படி கூட்டமைப்பு கடந்த ஆட்சியின் போது சிங்கள மக்களின் பயங்களையும் சந்தேகங்களையும் நீக்கப் போவதாக நினைத்துக் கொண்டு அளவுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்ததோ அதைத்தான் கிழக்கில் முசுலிம்களின் விடயத்திலும் நடைமுறைப்படுத்தியது.

இப்படிப் பார்த்தால் கடந்த சில தசாப்தங்களில் முசுலிம் தலைவர்களுக்கு அதிகமாக விட்டுக்கொடுத்த ஒரு  காலகட்டமாக கடந்த கிழக்கு மாகாணசபைக் காலகட்டத்தைக் கூறலாம். அதைப்போலவே முசுலிம் தலைவர்களுக்கு அதிகம் விட்டுக்கொடுத்த ஒரு தலைவராகவும் சம்பந்தரைச் சுட்டிக் காட்டலாம்.ஆனால் இந்த விட்டுக் கொடுப்புக்கள் யாவும் அவரை அவருடைய சொந்தப் பிராந்தியத்திலேயே தோல்வியின் விளிம்புக்குக் கிட்டவாக கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றனவா? அண்மையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்  மட்டக்களப்பில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதிநிதிகள் வடக்கு மைய நோக்கு நிலையிலிருந்து கிழக்கை அணுக முடியாது என்று கூறியிருந்தார்கள். ஆனால் கிழக்கை கிழக்கின் நிலைமைகளுக்கு ஊடாக அணுகுவதாகக் கருதித்தான் சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தார். அது இப்பொழுது தோல்வியாகத் திரும்பி இருக்கிறதா?

அப்படி என்றால் இப்பொழுது சீவகன் போன்றவர்கள் எழுதுவதைப் போல கிழக்கில் அபிவிருத்தி மைய அரசியலைத்தான் முன்னெடுக்க வேண்டுமா? அபிவிருத்தி மைய அரசியல் வேறு உரிமை மைய அரசியல் வேறா?

இல்லை.அபிவிருத்தி எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம். இன்னும் ஆழமாகச்  சொன்னால் அபிவிருத்தி எனப்படுவது ஒரு கூட்டு உரிமைதான்.எதை அபிவிருத்தி செய்வது ?எப்படிச்  செய்வது? எங்கே செய்வது? யாரை வைத்துச்  செய்வது? போன்ற எல்லாவற்றையும் முடிவெடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.அவாறான அதிகாரம் இல்லாத சில அமைச்சர்கள் மூலம் முன்னெடுக்கப்படும்  அபிவிருத்தி என்பது சரணாகதி அரசியல்தான்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அபிவிருத்தி மைய அரசியலையும் உரிமை மைய அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் விளங்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் தங்களோடு சரணாகதி அரசியலை நடத்தத் தயாராக இருக்கும் தமது  முகவர்களை வைத்துதான் அரசாங்கங்கள் அபிவிருத்தியை முன்னெடுக்கும். அதாவது முகவர் மூலம் அபிவிருத்தி.

மாறாக எதிர்ப்பு அரசியலை நடத்தும் பிரதிநிதிகளோடு சேர்ந்து அபிவிருத்தியை முன்னெடுக்க மாட்டார்கள். இது மிக எளிமையான உண்மை. இந்த உண்மையின் விளக்கத்தில் வைத்துப் பார்த்தால் பிள்ளையான் எங்கே நிற்கிறார் வியாழேந்திரன் எங்கே நிற்கிறார் டக்ளசு தேவானந்தா எங்கே நிற்கிறார் அங்கயன் எங்கே நிற்கிறார் போன்றவை தெளிவாகத் பெரியவரும்.

அப்படி என்றால் உரிமைக் கோஷங்களை எழுப்பி கொண்டு வறுமையில் உழல்வதா? உரிமைக் கோஷங்களை முன்வைக்கும் அரசியல்வாதிகள் உல்லாசமாக பிரபல்யமாக வாழ்க்கையின் சகல வளங்களையும் அனுபவிக்கும்போது வாக்களித்த மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுவதா? என்ற கேள்வி வரும். அது நியாயமானதே. அதற்குரிய பதில் என்ன?

ஒரே ஒரு பதில் தான். மாகாணசபை உள்ளுராட்சி சபை போன்றவற்றை அபிவிருத்தி மைய நோக்கு நிலையிலிருந்து நிர்வகிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற அரசியலையும் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியிலான வெகுசன அரசியலையும் உரிமை மைய நோக்கு நிலையிலிருந்து கட்டமைக்கலாம். இது தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அறிஞர்களும் கருத்துருவாக்கிகளும் நிபுணர்களும் திட்ட வல்லுனர்களும் அரசியல்வாதிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் ஒன்றுகூடி சிந்தித்து ஒரு பொருத்தமான பொறிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளில் அதை எப்பொழுதோ கண்டுபிடித்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்திலும் கிழக்கில் தமிழ்-முசுலிம் உறவு தொடர்பான கிழக்கு மைய உணர்வுகளைக் கவனத்தில் எடுக்கத் தவறிய வெற்றிடத்திலும்தான் பிள்ளையானுக்கும் வியாளேந்திரனுக்கும் வெற்றிகள் கிடைத்தனவா? அதனால் தான் அம்பாறை மாவட்டத்தின் ஆசனம் கூட்டமைப்புக்கு கிடைப்பதை கருணா தடுத்தாரா?

எனவே அபிவிருத்தி மைய அரசியலை உரிமை மைய அரசியலின் ஒரு பகுதியாகவும் அதாவது கோட்பாட்டு ரீதியாகவும் அதேசமயம் நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப ஓர் உத்தியாகவும் அணுக வேண்டும்.கிழக்கை கிழக்கு மையத்திலிருந்துதான்  அணுக வேண்டும் வடக்கு மையத்திலிருந்து அல்ல. ஆனால் கிழக்கு மையத்திலிருந்து சிந்திப்பது என்பது தாயகத்துக்கு எதிரானதும் அல்ல; தமிழ் மக்களின் திரட்சியைச் சிதைப்பதும் அல்ல ; இராயபக்சக்களுக்கு சேவகம் செய்வதுமல்ல.

‘’மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை நடக்கப் போவது தேர்தல் அல்ல யாழ் மேலாதிக்கத்திற்கும் கிழக்கின் எழுச்சிக்குமான பலப்பரீட்சை”

இவ்வாறு தனது முகநூல் பக்கத்தில் எழுதியவர் எம்.ஆர்.சு(ஸ்)டாலின் ஞானம். கிழக்கில் பிள்ளையானின் ஆலோசகர் அல்லது பிள்ளையானுக்கு நெருக்கமானவர் என்று கருதப்படும் ஒருவர். பிரான்சுக்கு புலம்பெயர்ந்த பின்னரும் தாய் நிலத்தின் அரசியலில் அதிகமாக ஈடுபடும் ஒருவர்.

தேர்தலுக்கு முதல் நாள் மேற்படி குறிப்பை முகநூலில் எழுதினார். இங்கு அவர் யாழ் மேலாதிக்கம் என்று கருதுவது எதனை? கூட்டமைப்பையா? அல்லது மாற்று அணியையா? அல்லது  ஒட்டுமொத்த தமிழ் தேசியவாதத்தையா?

கூட்டமைப்பை அவர் யாழ் மேலாதிக்க வாதத்தின் பிரதிநிதியாக பார்ப்பதாக இருந்தால் கடந்த 11 ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைவராக இருப்பவர் கிழக்கை சேர்ந்த சம்பந்தரே என்பதனை ஏன் கவனத்தில் எடுக்கவில்லை? பொதுவாக ஈழத் தமிழ்த் தலைமைத்துவம் எனப்படுவது யாழ் மையமானது என்று ஒரு குற்றச்சாட்டு உண்டு. ஆயுதப் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் இதுதொடர்பாக குற்றச்சாட்டுக்கள் இருந்தன. எனினும் கடந்த 11 ஆண்டுகளாக ஒரு நூதனமான புறநடையாக சம்பந்தர் தலைவராக இருந்து வருகிறார். அது ஆயுதப் போராட்டத்தின் விளைவுதான்.இவ்வாறு ஒரு கிழக்குத்  தலைவரே தமிழ் பிரதிநிதித்துவத்தின் தலைவராக இருக்கும் ஒரு பின்னணியில் யாழ் மேலாதிக்கம் என்று பிள்ளையானுக்கு நெருக்கமான ஒருவர் கருதுவது எதனை?

அல்லது மாற்று அணியை அவர் அவ்வாறு கூறுகிறாரா? இல்லையே அவர்கள்  யாழ்ப்பாணத்தில் தான் பலமாக இருக்கிறார்கள். வன்னி யில்கூட அவர்கள் கடந்த தேர்தலில் ஆசனம் எதையும் வெல்லவில்லை. இப்படிப் பார்த்தால் கிழக்கில் பலமற்ற மாற்று அணி யாழ் மேலாதிக்க வாதத்தை கிழக்கின் மீது திணிப்பதாக எடுத்துக் கொள்ளலாமா?

அப்படியும் இல்லை என்றால் ஒட்டுமொத்த தமிழ் தேசியத்தையும் யாழ் மேலாதிக்க சிந்தனையாக அவர் கருத்துகிறாரா? இக்கேள்விகளுக்கான பதிலை அவர்தான் கூற வேண்டும். ஆனால் பிள்ளையானின் எழுச்சியை கிழக்கின் எழுச்சியாக வர்ணித்து அதை யாழ் மேலாதிக்க வாதத்துக்கு எதிராகத் திருப்புவதை எப்படி விளங்கிக் கொள்வது?

கிழக்கில் ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் கருணாவுக்கும் இயக்கத் தலைமைக்கும் இடையே முரண்பாடுகள் ஏற்பட்ட பொழுது அது தொடர்பான விசாரணைகளுக்கு என்று ஒரு மூத்த விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர் கிழக்கிற்கு அனுப்பப்பட்டார். இவர் கிழக்கில் ஏற்கெனவே பொறுப்புகளை வகித்தவர். தனது விசயத்தின் முடிவில் இவர் தன்னோடு பேசிய ஒரு ஊடகவியலாளரிடம் பின்வருமாறு சொன்னார் “ஒரு கருணா இல்லை 100 கருணாக்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனென்றால் சமாதான காலத்தில் நாங்கள் கிழக்கை போதிய அளவுக்கு அபிவிருத்தி செய்யவில்லை. வடக்கில் சேரன் சோழன் பாண்டியன் என்று கடைகளை போட்ட அளவிற்கு கிழக்கை நாங்கள் கவனிக்கவில்லை. கிழக்கில் போதிய அளவுக்கு அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுக்கவில்லை” என்று. ஆயுதப் போராட்டம் தோற்கடிக்கப்பட்டு 11 ஆண்டுகளின் பின்னரும்  கிழக்கில் நிலைமை அப்படித்தான் இருக்கிறதா?

அவ்வாறு கிழக்கு அபிவிருத்தி செய்யப்படாத ஒரு பின்னணியில் அபிவிருத்தியை தமது அரசியல் இலக்காகக் கொண்டு களத்தில் இறங்கும் கட்சிகள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கின்றனவா? நடந்து முடிந்த தேர்தல் முடிவுகள் அதைத்தான் நிரூபிக்கின்றனவா?

கிழக்கின் மீது வடக்கின் மேலாதிக்கத்தை அது எந்த வடிவத்தில் மேற்கொள்ளப்பட்டாலும் இக்கட்டுரை எதிர்க்கின்றது. ஆனால் தமிழ் தேசியம் எனப்படுவது ஒரு வடக்கு மைய சிந்தனை என்பதனையும் அது வடக்கு மையத்திலிருந்து தான் கிழக்கைப் பார்க்கிறது என்பதையும் இக்கட்டுரை ஏற்றுக்கொள்ளவில்லை.

தேசியம் எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்குவது. பொதுவாக ஒரு மக்கள் கூட்டத்தை பின்வரும் அம்சங்கள் திரள் ஆக்குவ துண்டு. இனம்;  மொழி;நிலம்   பொதுப் பண்பாடு; பொதுப் பொருளாதாரம் இவைதவிர அடக்குமுறை போன்றனவும் ஒரு மக்கள் கூட்டத்தை திரள் ஆக்கும்.

இந்த அடிப்படையில் பார்த்தால் நிலம் அதாவது தாயகம் இது ஒரு மக்கள் கூட்டத்தைத் திரள் ஆக்கும் அடிப்படை அம்சங்களில் ஒன்று. தமிழ் நோக்கு நிலையில் இருந்து பார்த்தால் தாயகம் எனப்படுவது வடக்கு கிழக்கு இணைந்த வரலாற்று தொடர்ச்சி மிக்க ஒரு நிலப்பரப்பு. எனவே ஈழத்தமிழர்கள் தாயகம் என்று கூறும்பொழுது அது பிரயோகத்தில் வடக்கு கிழக்கு இணைப்பையே குறிக்கிறது.

கடந்த பதினோரு ஆண்டுகளாக கூட்டமைப்பின் தலைமைத்துவத்தின் கீழான தமிழ் மிதவாத அரசியலானது கிழக்கில் அபிவிருத்தி அரசியலையும் உரிமை சார் அரசியலையும் சமாந்தரமாக வெற்றிகரமாக முன்னெடுக்க தவறிவிட்டதாக கிழக்கை சேர்ந்த ஒரு பகுதி ஊடகவியலாளர்களும் அறிவாளிகளும் குற்றம்சாட்டுகிறார்கள். பிபிசி தமிழோசையில் வேலை செய்த மட்டக்களப்பைச் சேர்ந்த சீவகன் அண்மைக் காலங்களாக தனது முகநூல் பக்கத்தில் எழுதி வரும் குறிப்புகளைத்  தொகுத்து பார்த்தால் அது தெரிய வரும்.

கிழக்கில் மட்டுமல்ல வடக்கில் குறிப்பாக போரினால் அதிகம் பாதிக்கப்பட்ட வன்னியிலும் போதிய அளவிற்கு அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படவில்லை. ஆனால் ஒப்பீட்டு ரீதியாகப் பார்த்தால் கிழக்கின் நிலைமை கொடுமையாக உள்ளது என்பதே உண்மை. அதிலும் குறிப்பாக முசுலிம்களின் வாழ்க்கை தரத்துடனும் அவர்களுடைய பட்டினங்களின்  செழிப்போடும் ஒப்பிடுகையில் கிழக்கு வாழ் தமிழ் மக்களின் நிலைமை பயங்கரமானது. இவ்வாறானதொரு பின்னணியில்தான் அபிவிருத்தி மைய அரசியலை நோக்கிப்  போக வேண்டும் என்ற கோரிக்கைகள் கிழக்கில் வலிமையடைந்து வருகின்றன. இது முதலாவது.

இரண்டாவது வடக்கில் இல்லாத மற்றொரு அம்சம். கிழக்கில் தமிழ் முசுலிம் உறவை பொறுத்தவரை இருதரப்பு சந்தேகங்களும் பயங்களும் உண்டு. இந்த அச்சங்களைப்  போக்கும் விதத்தில் தமிழ் அரசியல்வாதிகளிடமோ அல்லது சிவில் சமூகங்களிடமோ அல்லது ஊடகவியலார்களிடமோ பொருத்தமான தரிசனங்களோ திட்டங்களோ இருப்பதாகத் தெரியவில்லை. இவ்வாறானதொரு பின்னணிக்குள் தனக்கு எதிராக போராடும் பெரிய சிறுபான்மைக்கு எதிராக சிறிய சிறுபான்மையின் ஒரு பகுதியினரை திருப்பி விடுவதில் தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் வெற்றியைப் பெற்று விட்டன. கிழக்கில் தமிழ் முசுலிம் சமூகங்களுக்கு இடையிலான ஏற்றத்தாழ்வு மிக்க அபிவிருத்தியை ஊக்குவிப்பதன் மூலம் தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் அங்கே இன முரண்பாடுகளை வெற்றிகரமாகக் கையாண்டு வந்துள்ளன,

இதில் ஆகப் பிந்திய உதாரணம்தான் கல்முனை வடக்கு பிரதேச செயலர் விவகாரம். இதுபோன்ற பல விடயங்களிலும் கூட்டமைப்பு கிழக்கு மக்களின் உணர்வுகளை அவற்றுக்கு உரிய முக்கியத்துவத்தை கொடுத்து கவனத்தில் எடுக்க தவறிவிட்டது. கடந்த தேர்தலில் கிழக்கில் கூட்டமைப்புக்கு கிடைத்த தோல்வி என்பது அதன் விளைவா?

குறிப்பாக கடந்த கிழக்கு மாகாண சபையில் கூட்டமைப்பு முசுலீம் தரப்புக்கு அதிகமாக விட்டுக் கொடுத்தது. மாகாண சபையை ஆளத்  தேவையான பெரும்பான்மை இருக்கத்தக்கதாக ஆட்சிப் பொறுப்பை முஸ்லிம்களுக்கு வழங்கியது. அதுமட்டுமல்ல வடமாகாண சபையில் ஒரே நியமன ஆசனத்தையும் ஒரு முஸ்லிம் பிரதிநிதிக்கு வழங்கியது. இவ்வாறான செயற்பாடுகளின் மூலம் கூட்டமைப்பு முஸ்லிம் மக்களின் பயங்களையும் சந்தேகங்களையும் நீக்கலாம் என்று முயற்சித்தது. எப்படி கூட்டமைப்பு கடந்த ஆட்சியின் போது சிங்கள மக்களின் பயங்களையும் சந்தேகங்களையும் நீக்கப் போவதாக நினைத்துக் கொண்டு அளவுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்ததோ அதைத்தான் கிழக்கில் முசுலிம்களின் விடயத்திலும் நடைமுறைப்படுத்தியது.

இப்படிப் பார்த்தால் கடந்த சில தசாப்தங்களில் முசுலிம் தலைவர்களுக்கு அதிகமாக விட்டுக்கொடுத்த ஒரு  காலகட்டமாக கடந்த கிழக்கு மாகாணசபைக் காலகட்டத்தைக் கூறலாம். அதைப்போலவே முசுலிம் தலைவர்களுக்கு அதிகம் விட்டுக்கொடுத்த ஒரு தலைவராகவும் சம்பந்தரைச் சுட்டிக் காட்டலாம்.ஆனால் இந்த விட்டுக் கொடுப்புக்கள் யாவும் அவரை அவருடைய சொந்தப் பிராந்தியத்திலேயே தோல்வியின் விளிம்புக்குக் கிட்டவாக கொண்டுவந்து நிறுத்தி இருக்கின்றனவா? அண்மையில் தேர்தல் முடிவுகளுக்குப் பின்  மட்டக்களப்பில் நடந்த கட்சிக் கூட்டத்தில் பேசிய பிரதிநிதிகள் வடக்கு மைய நோக்கு நிலையிலிருந்து கிழக்கை அணுக முடியாது என்று கூறியிருந்தார்கள். ஆனால் கிழக்கை கிழக்கின் நிலைமைகளுக்கு ஊடாக அணுகுவதாகக் கருதித்தான் சம்பந்தர் அந்தளவுக்கு விட்டுக் கொடுத்தார். அது இப்பொழுது தோல்வியாகத் திரும்பி இருக்கிறதா?

அப்படி என்றால் இப்பொழுது சீவகன் போன்றவர்கள் எழுதுவதைப் போல கிழக்கில் அபிவிருத்தி மைய அரசியலைத்தான் முன்னெடுக்க வேண்டுமா? அபிவிருத்தி மைய அரசியல் வேறு உரிமை மைய அரசியல் வேறா?

இல்லை.அபிவிருத்தி எனப்படுவது ஒரு மக்கள் கூட்டத்தின் கூட்டு உரிமைகளில் இருந்து பிரிக்கப்பட முடியாத ஒரு அம்சம். இன்னும் ஆழமாகச்  சொன்னால் அபிவிருத்தி எனப்படுவது ஒரு கூட்டு உரிமைதான்.எதை அபிவிருத்தி செய்வது ?எப்படிச்  செய்வது? எங்கே செய்வது? யாரை வைத்துச்  செய்வது? போன்ற எல்லாவற்றையும் முடிவெடுப்பதற்கு அந்த மக்கள் கூட்டத்துக்கு தன்னாட்சி அதிகாரம் வேண்டும்.அவாறான அதிகாரம் இல்லாத சில அமைச்சர்கள் மூலம் முன்னெடுக்கப்படும்  அபிவிருத்தி என்பது சரணாகதி அரசியல்தான்.

இந்த விளக்கத்தின் அடிப்படையில் பார்த்தால் தமிழ் அரசியல் கட்சிகள் அபிவிருத்தி மைய அரசியலையும் உரிமை மைய அரசியலையும் சமாந்தரமாக முன்னெடுப்பதில் உள்ள நடைமுறைச் சிக்கல் விளங்கும். இன்னும் தெளிவாகச் சொன்னால் தங்களோடு சரணாகதி அரசியலை நடத்தத் தயாராக இருக்கும் தமது  முகவர்களை வைத்துதான் அரசாங்கங்கள் அபிவிருத்தியை முன்னெடுக்கும். அதாவது முகவர் மூலம் அபிவிருத்தி.

மாறாக எதிர்ப்பு அரசியலை நடத்தும் பிரதிநிதிகளோடு சேர்ந்து அபிவிருத்தியை முன்னெடுக்க மாட்டார்கள். இது மிக எளிமையான உண்மை. இந்த உண்மையின் விளக்கத்தில் வைத்துப் பார்த்தால் பிள்ளையான் எங்கே நிற்கிறார் வியாழேந்திரன் எங்கே நிற்கிறார் டக்ளசு தேவானந்தா எங்கே நிற்கிறார் அங்கயன் எங்கே நிற்கிறார் போன்றவை தெளிவாகத் பெரியவரும்.

அப்படி என்றால் உரிமைக் கோஷங்களை எழுப்பி கொண்டு வறுமையில் உழல்வதா? உரிமைக் கோஷங்களை முன்வைக்கும் அரசியல்வாதிகள் உல்லாசமாக பிரபல்யமாக வாழ்க்கையின் சகல வளங்களையும் அனுபவிக்கும்போது வாக்களித்த மக்கள் தொடர்ந்தும் துன்பப்படுவதா? என்ற கேள்வி வரும். அது நியாயமானதே. அதற்குரிய பதில் என்ன?

ஒரே ஒரு பதில் தான். மாகாணசபை உள்ளுராட்சி சபை போன்றவற்றை அபிவிருத்தி மைய நோக்கு நிலையிலிருந்து நிர்வகிக்கலாம். ஆனால் நாடாளுமன்ற அரசியலையும் தேர்தல் மைய அரசியலுக்கு வெளியிலான வெகுசன அரசியலையும் உரிமை மைய நோக்கு நிலையிலிருந்து கட்டமைக்கலாம். இது தொடர்பில் ஈழத்தமிழர்கள் மத்தியில் உள்ள அறிஞர்களும் கருத்துருவாக்கிகளும் நிபுணர்களும் திட்ட வல்லுனர்களும் அரசியல்வாதிகளும் சிவில் சமூக பிரதிநிதிகளும் ஒன்றுகூடி சிந்தித்து ஒரு பொருத்தமான பொறிமுறையைக் கண்டுபிடிக்க வேண்டும்.

கடந்த 11 ஆண்டுகளில் அதை எப்பொழுதோ கண்டுபிடித்திருக்க வேண்டும்.ஆனால் அப்படி கண்டுபிடிக்கப்படாத வெற்றிடத்திலும் கிழக்கில் தமிழ்-முசுலிம் உறவு தொடர்பான கிழக்கு மைய உணர்வுகளைக் கவனத்தில் எடுக்கத் தவறிய வெற்றிடத்திலும்தான் பிள்ளையானுக்கும் வியாளேந்திரனுக்கும் வெற்றிகள் கிடைத்தனவா? அதனால் தான் அம்பாறை மாவட்டத்தின் ஆசனம் கூட்டமைப்புக்கு கிடைப்பதை கருணா தடுத்தாரா?

எனவே அபிவிருத்தி மைய அரசியலை உரிமை மைய அரசியலின் ஒரு பகுதியாகவும் அதாவது கோட்பாட்டு ரீதியாகவும் அதேசமயம் நடைமுறை நிலைமைகளுக்கு ஏற்ப ஓர் உத்தியாகவும் அணுக வேண்டும்.கிழக்கை கிழக்கு மையத்திலிருந்துதான்  அணுக வேண்டும் வடக்கு மையத்திலிருந்து அல்ல. ஆனால் கிழக்கு மையத்திலிருந்து சிந்திப்பது என்பது தாயகத்துக்கு எதிரானதும் அல்ல; தமிழ் மக்களின் திரட்சியைச் சிதைப்பதும் அல்ல ; இராயபக்சக்களுக்கு சேவகம் செய்வதுமல்ல.

வன்னிப் பரணி

வன்னி அவலங்கள் 1-வன்னி அவலங்கள் - 2 பூநகரி.பொன்னம்பலம்.முருகவேள்.ஆசிரியர் 03.06.2009.

வன்னி அவலங்கள் 1 பூநகரி பொன்னம்பலம்.முருகவேள்ஆசிரியர்

என்றும் எவரிடமும் எதற்கும் கை ஏந்தாத மக்கள்

வாழ்ந்து வைரம் பாய்ந்த மனம்கொண்ட

நால்வகை நிலமதை நிறையப்பெற்ற வன்னியில்

தமிழ்க்கொலை செய்வோர் புகுந்தனர் இரண்டாயிரத்து நாற்பதில்.

முள்ளிவாய்க்காலின் மூன்றாம் ஆண்டு என்று துள்ளிக்குதிக்கப்போகும் தமிழ் ஊடகங்கள் கட்டுரையாளர்கள் கவிதைகார்கள் எள்ளவு ஏனும் செய்ததுண்டா?பூநகரி பொ.முருகவேள்ஆசிரியர்

சுவிசு07.05.கி.ஆ2012தமிழாண்டு2043-

இந்தமாதம் முள்ளிவாய்காலின் மூன்றாம் நினைவுக்காலம். தமிழர்களின் கனதியான உணர்வுக்காலம் தான்.

உண்மையைச்சொல்லப்போனால் அதிகமான அழைப்பிதழ்கள் வந்திருக்கும்காலம்உண்மைஇதுதான்!

ஆண்டாண்டுநடந்த சண்டையில் மாண்டு போனவர்கள் போகட்டும் அவற்றைச்சொல்லி இந்நாட்டினரானோம்.